நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 31 ஜூலை, 2020

வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட இலங்கைத் தமிழ் பெண்



அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலியான பிரியா நடேசலிங்கம் வைத்தியசாலை ஒன்றில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இலங்கையின்
ஏதிலியான பிரியா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வயிற்றுவலி காரணமாக பேர்த் நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.இந்தநிலையில் சிகிச்சைகளுக்கு பின்னர் அவர் இரண்டு நாட்கள் விருந்தகம் ஒன்றில் தங்கியிருக்க
வைத்தியர்கள் பரிந்துரைத்திருந்தனர்.எனினும், அவர் எல்லைப் படை காவலர்களால் மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்து செல்லப்பட்டதாக
டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.பிரியாவும் அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் இரண்டு மகள்மார் ஆகியோர் அவுஸ்திரேலியாவின் வரி செலுத்துவோரின் 10 மில்லியன் டொலர்களை இதுவரை வீணடித்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர்
அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார்.இந்தநிலையில் கிறிஸ்மஸ் தீவில் அவர், அவரது கணவர் மற்றும் அவரது இரண்டு
இளம் மகள்களுடன் ஒரு நாளைக்கு 20,000 டொலர் செலவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.பிரியாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் கிறிஸ்மஸ் தீவில் சிடி ஸ்கேன் மேற்கொள்ள
முடியாத நிலையில் அவர் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதியான பேர்த்தில் உள்ள வைத்தியசாலைக்கு
ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்தநிலையில் சிகிக்சைகளுக்கு
பின்னர் இரண்டு நாட்கள் விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.எனினும், புதன்கிழமை முற்பகல் மணியளவில் பிரியா கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டதாக அவரின் உறவினர்கள்
தெரிவித்துள்ளனர்.அவரின் சட்டத்தரணியுடன் பிரியா, எல்லைக்காவலர்களால் வலுக்கட்டாயமாக விமான நிலையத்துக்குஅழைத்துச்செல்லப்பட்டபோது தம்முடன் தொடர்புகொண்டதாக அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் சபையின் பேச்சாளர் ஆரன் மயில்வாகனம் ஊடகங்களுக்கு
தெரிவித்துள்ளார்.
உள்துறை திணைக்கள செய்தித் தொடர்பாளர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து பிரியா விடுவிக்கப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளார்,2018 ஆம் ஆண்டு முதல் இந்த குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


திங்கள், 27 ஜூலை, 2020

கனடாவில் திடீரென மாயமான தமிழ் இளைஞன் கண்டுபிடிப்பு

கனடாவில் காணாமல் போன 28 வயது தமிழ் இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான அதிகாரபூர்வ செய்தி அறிக்கையை ரொரன்றோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.அரூரன் ஸ்ரீதரன் என்ற 28 வயது இளைஞன் கடந்த 23-07-20.ஆம் 
திகதி பகல் 12 மணிக்கு மாயமானார்.அவர் கடைசியாக Port Union Road and Lawrence Avenue East பகுதியில் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.இதோடு அவரின் உடல்வாகு
 குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது.இந்த நிலையில் அரூரன் ஸ்ரீதரன் தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.அவர் நேற்று இரவு 10.30 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 
ரொரன்றோ பொலிஸார் தங்கள் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.மேலும், அரூரன் ஸ்ரீதரன் தொடர்பில் உதவியர்களுக்கு நன்றி என பொலிஸார் சார்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



வியாழன், 23 ஜூலை, 2020

பொலிவியாவில் நகரங்களின் வீதிகளில் குவிந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான சடலங்கள்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இறந்த 
உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, தேசிய பொலிஸ்துறை இயக்குனர் இவான் ரோஜாஸ் தெரிவித்துள்ளார்.கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மொத்தம் 191 சடலங்களும், நிர்வாகத் தலைநகர் லா பாஸில் 141 சடலங்களும், மிகப்பெரிய நகரமான
 சாண்டா குரூஸில் 68 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதில் 85 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் இறந்ததாக நம்பப்படுகிறது.மீதமுள்ளவர்கள் பிற காரணங்களால் இறந்ததாக கூறப்படுகின்றது.அதாவது ஒரு நோய் அல்லது 
வன்முறை காரணத்தால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பொலிவியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 64,135பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,328பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிரித்தானியாவில் நாய்களினால் இளம் பெண்ணுக்கு நடந்த விசித்திர மரணம்.

பிரித்தானியாவில் இரண்டு நாய்களுக்கு நடுவில் கழுத்தில் நாய்ப்பட்டை இறுக்க உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு 
பெண்ணை சிறுமி ஒருத்தி பார்த்திருக்கிறாள்.வட வேல்ஸிலுள்ள Wrexham என்ற இடத்தில் விழுந்து கிடந்த அந்த பெண்ணைக்கண்டதும், அருகில் வேலை. செய்துகொண்டிருந்த இருவரிடம் ஓடோடிச்சென்று உதவி கோரியுள்ளாள் அந்த .
சிறுமி.Deborah Mary Roberts (47) என்ற அந்த பெண்ணைக்கண்டதும் மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளார்கள் அந்த .
இருவரும்.ஆனால், மருத்துவ உதவிக்குழுவினர் வந்து எவ்வளவோ முயன்றும் Deborahவைக் காப்பாற்ற.
 முடியவில்லை.என்ன நடந்ததென்றால், இரண்டு நாய்களை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுள்ளார் Deborah.எப்படியோ நாய்களின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு Deborahவின் கழுத்தில் சுற்றியுள்ளது.
அப்போது இரண்டு நாய்களும் ஆளுக்கொரு பக்கம் இழுக்க, கழுத்து நெறிக்கப்பட்டு மூச்சுத்திணறி இறந்திருக்கிறார் Deborah. இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


புதன், 22 ஜூலை, 2020

இங்கிலாந்து விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி சோதனை வெற்றி

சீனாவின் உகானில் தோன்றி உலகம் முழுவதும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. சர்வதேச நாடுகள் முழுவதிலும் தினமும் அதிகரித்து வரும் உயிரிழப்புகளும், பாதிப்பு 
எண்ணிக்கையும் அனைவரையும் கவலை கொள்ள செய்து இருக்கின்றன.எனவே எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவாக இந்த வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவது என்ற வைராக்கியத்தில் அதற்கான ஆய்வு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரப்படுத்தி உள்ளன. 
உலக நாடுகளின் மருந்து ஆய்வு நிறுவனங்களின் பரிசோதனைக்கூடங்கள் அனைத்தும் கொரோனா என்ற ஒற்றை அரக்கனை ஒழிப்பதற்கான தடுப்பூசி எனும் ஆயுதத்தை உருவாக்குவதில் இரவு-
பகலாக உழைத்து வருகின்றன.இந்த நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஒன்றை உருவாக்கியது. இந்த தடுப்பூசி 
முதற்கட்ட சோதனைக்காக கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1000 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் பாதி பேருக்கு பரிசோதனையில் இருந்த தடுப்பூசி செலுத்தப்பட்டது.பொதுவாக இத்தகைய முதற்கட்ட சோதனையில், செலுத்தப்படுவோரின் பாதுகாப்பு மட்டும் கருத்தில் கொள்ளப்படும். ஆனால் இந்த சோதனையில் அவர்களுக்கு எத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது? 
என்பதும் ஆராயப்பட்டது.இந்த சோதனை முடிவில் பரிசோதனையில் கலந்து கொண்ட 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இரட்டை பாதுகாப்பு உருவாகியிருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவல்களை
 மருத்துவ ஆய்வு பத்திரிகையான லான்செட்டில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.இதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜென்னர் நிறுவனத்தின் இயக்குனரான டாக்டர் அட்ரியன் ஹில் கூறியிருப்பதாவது:
இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலும் 
அனைவரிடமும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கண்டுள்ளோம். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பின் இரட்டை கரங்களையும் இந்த
 தடுப்பூசி உருவாக்கி இருக்கிறது.அதாவது தொற்றுநோயைத் தடுக்கும் மூலக்கூறுகளான நடுநிலையான ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அத்துடன் உடலின் டி-செல்களில் ஒரு எதிர்வினையையும் இந்த தடுப்பூசி ஏற்படுத்துகிறது. இந்த செல்கள் கொரோனா வைரசை எதிர்த்துப் போராட உதவுகிறது.
ஏனெனில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டி-செல்லின் எதிர்வினை மற்றும் ஆன்டிபாடிகள் இருப்பது மிகவும் முக்கியமானது என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனையில் இந்த நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கலாம்.மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்த்ரா செனிகாவுடன் இணைந்து இந்த தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலக அளவில் தயாரிக்கும். ஏற்கனவே 200 கோடி டோஸ்களுக்கு ஆர்டர் கிடைத்து உள்ளது.இவ்வாறு அட்ரியன் ஹில் தெரிவித்தார்.
இதைப்போல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனையின் தலைமை ஆய்வாளர் ஆண்ட்ரூ பொல்லார்டு கூறுகையில், இந்த தடுப்பூசி பரிசோதனையில் நம்பகமான முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவித்தார். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது என்பதை அறிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.இந்த தடுப்பூசியின் 2 மற்றும் 3-ம் கட்ட பரிசோதனையும் ஏற்கனவே தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் சோதனை வெற்றி பெற்று இருப்பதன் மூலம் இந்த ஆட்கொல்லிக்கு விரைவில் கடிவாளம் போடப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

இந்தியாவின் கோவேக்சின்:இதற்கிடையே இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் ஜைடஸ் கேடிலா ஆகிய 2 நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்து உள்ளன. இதில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசியை சோதிப்பதற்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 12 மருத்துவ நிறுவனங்களை ஐ.சி.எம்.ஆர். தேர்வு செய்திருந்தது.அதன்படி தடுப்பூசி பரிசோதனைக்கு முன்வரும் ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கான முன்பதிவை நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கியது. முதற்கட்ட பரிசோதனைக்கு தேர்வு செய்யப்படும் 375 பேரில் சுமார் 100 பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.இந்த முன்பதிவை முடித்து வருகிற 23- ஆம் திகதி வியாழக்கிழமை முதல்கட்ட பரிசோதனை
 தொடங்க வாய்ப்பு இருப்பதாக பரிசோதனைக்கான பொறுப்பு அதிகாரி டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்தார்.இந்த முதற்கட்ட பரிசோதனை நல்ல விளைவை அளித்தால், அடுத்ததாக 2-ம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதிலும் தடுப்பூசியின் தரம் உறுதி செய்யப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்துவிடும் என எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இங்கிலாந்தில் மேலும் 3 தடுப்பூசிகள்:ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை தவிர இங்கிலாந்தை சேர்ந்த மருந்து நிறுவனங்கள் மேலும் 3 வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை தயாரித்து உள்ளன. இந்த மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதிப்பதற்காக 
தன்னார்வலர் களை அரசு நாடியுள்ளது.இதற்காக ஆன்லைன் பதிவகம் ஒன்றை திறந்துள்ள அரசு, அதில் தடுப்பூசி பரிசோதனைக்கு விரும்பும் இங்கிலாந்து குடிமகன்கள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது. அக்டோபர் மாதத்துக்குள் 5 லட்சம் பேர் வரை இதில் பதிவு செய்வார்கள் என அரசு நம்பிக்கை
 தெரிவித்து உள்ளது.
ரஷியாவின் நிலை:இந்த நிலையில், ரஷியாவை சேர்ந்த கமாலெயா ஆய்வு நிறுவனம் 2 தடுப்பூசிகளை தயாரித்து உள்ளது. இதுவும் மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இந்த பரிசோதனை 
தடுப்பூசி ரஷியாவின் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் போடப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி இருந்தன. 
இதை சுகாதார அமைச்சகம் மறுத்து 
உள்ளது.இது குறித்து சுகாதார அமைச்சரின் உதவியாளரான குஸ்னட்சோவ் கூறுகையில், ‘கமாலெயா நிறுவனம் தயாரித்த 2 தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகள் தொடர்கின்றன. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு மட்டுமே இந்த தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்த 
பரிசோதனை முடிந்தபிறகே தடுப்பூசி பதிவு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இந்த தடுப்பூசி 
இதுவரை வர்த்தக நோக்கில் வெளியிடப்படவில்லை. மருத்துவ சோதனைகளின் கட்டமைப்புகளுக்கு வெளியே அதன் பயன்பாடு சாத்தியமற்றது’ 
என்று தெரிவித்தார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


நாட்டுமக்களுக்கு பசியைப் போக்கும் மருந்து தயாரிக்கும் வடகொரியா

வடகொரியாவில் கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் மக்களுக்கு பசியை போக்கும் மருந்து தயாரிக்கும் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது.உலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனாவால் கடும் உணவு 
பற்றாக்குறையால் தத்தளித்துவரும் வடகொரியா, பட்டினியால் வாடும் மக்களுக்கு
 அளித்த அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்கொண்டுவந்த அணுஆயுத
 நடவடிக்கைகளால் ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளன. அமெரிக்காவுடன் இருமுறை முக்கிய சர்ச்சையில் ஈடுபட்டாலும், தடையை நீக்க அவர்கள் முன்வராத காரணத்தால் வரலாற்று
 முக்கியத்துவம் வாய்ந்த டிரம்ப்-கிம் ஜாங் சந்திப்பு 
தோல்வியில் முடிந்தது.தற்போது 
கொரோனா பரவலால் எல்லைகள் மூடப்பட்டுள்ள நிலையில், வடகொரியாவில் உணவு
 பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது. பசியால் கடும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு வடகொரிய நிர்வாகம், ஒருவகை ஆமையை உணவாக கொள்ள அறிவுறுத்தியுள்ளது.மேலும், அங்குள்ள விஞ்ஞானிகள் குழு, பசியை போக்கும் மருந்து கண்டு
 பிடிக்கும் முனைப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.நாட்டின் உத்தியோகப்பூர்வ ஊடகம் ஒன்று, அரிசி, சோளம், பழம், இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறைக்கு மத்தியில் அவர்கள் என்ன 
சாப்பிட வேண்டும் என்பதை மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதில், பழைய காலத்திலிருந்தே, டெர்ராபின் எனப்படும் அந்த ஆமை வகை அதன் நல்ல சுவை மற்றும் ஏராளமான ஊட்டச்சத்து கூறுகளுக்காக உயர் ரக உணவுகளை 
தயாரிப்பதில் பயன்படுத்தப்பட்டது எனவும், இந்த உணவை மக்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஹெபடைடிஸ், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களைக் குணப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி அரசாங்க மருத்துவர்கள் உருவாக்கியுள்ள 
தேநீரானது, பொதுமக்களுக்கு பசியை தூண்டாமல், 40 நாட்களில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 21 ஜூலை, 2020

அவுஸ்திரேலியாவில் நடுக்கடலில் எதிர்பாராமல் நடந்த கோர விபத்து

அவுஸ்திரேலியாவில் பயங்கரமான மீன்பிடி படகு விபத்துக்குப் பிறகு இளைஞர் ஒருவர் தனது பெற்றோரின் உடல்களை விட்டுவிட்டு, சுறா பாதிப்புக்குள்ளான கடல் வழியாக நீந்தி கரை சேர்ந்த சம்பவம் வெளியாகியுள்ளது.அவுஸ்திரேலிய
 கடற்பகுதியில் தங்கள் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான நிலையில் தாயார் ஜான் மற்றும் தந்தை பாப் ஆகியோரின் உடல்களை கைவிட வேண்டும் என்ற வேதனையான
 முடிவை ரியான் ஓஸ்ட்ரிக் என்ற இளைஞர் எதிர்கொண்டுள்ளார்.தொடர்ந்து 
இளைஞர் ரியான் மற்றும் அவரது காதலி கலினா ஆகியோர் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கரைக்கு நீந்தினர்.இந்த
 விவகாரம் தொடர்பில் பேசிய அதிகாரி ஒருவர், இளைஞர்கள் இருவரும் கண்டிப்பாக பல மணி நேரம் சுறா பாதிப்பு மிகுந்த அந்த கடலில் நீந்தியிருப்பார்கள் என்றார்.
ஆக்ரோஷமான அலைகளில் சிக்கி இவர்களின் மீன்பிடி படகு கவிழந்த நிலையில், அதில் இருந்த இளைஞர்கள் இருவரும் நீர்பரப்புக்கு மீதே வந்துள்ளனர்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக 70 வயதினை
 கடந்த அந்த தம்பதி கடற்பரப்பிற்கு 
மேலே வந்தபோது, அவர்கள் சுயநினைவை இழந்துள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இளைஞர் ரியான் தமது பெற்றோரின் உயிரை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போகவே,இறுதியில் தங்கள் உயிரை காக்கும் முயற்சியில் சுமார் 3 கிலோமீற்றர் தொலைவு நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
கடலுக்குள் செல்ல திட்டமிட்டதும் படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் கருதியதாக கூறியுள்ள ஓஸ்ட்ரிக் குடும்பத்தார்,ஆனால் படகு கவிழ்ந்த நிலையில், தங்களால் அந்த பாதுகாப்பு கருவிகளை பயன்படுத்த முடியாமல் போனது என்கின்றனர்.இந்த விபத்து தங்களை முழுமையாக உலுக்கியுள்ளது என கூறும் ஓஸ்ட்ரிக் குடும்பத்தினருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆறுதலாக பேசி வருகின்றனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




அவுஸ்திரேலியாவில் குடும்பத்துடன் அரசியல் தஞ்சம் கோரிப் போராடும் ஈழத்துப் பெண்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்ற நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் பெண்ணான பிரியாவின் உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.இதையடுத்து பிரியா தற்போது மேற்கு 
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள எஸ்.பி.எஸ். தமிழ்செய்தியை மேற்கோள் காட்டி ஊடகங்கள்
 செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சுமார் 3 வாரகாலமாக கடுமையான சுகவீனமடைந்து இருந்த நிலையிலேயே, இன்றைய தினம் மருத்துவமனைக்கு
 அவர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கிறிஸ்மஸ் தீவில் அவருக்கு தேவையான மருத்துவ
 சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும், கடுமையான போராட்டங்களின் பின்னரே 
அவரை சிகிச்சைக்காக பேர்த் மருத்துவமனக்கு
 கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் இணங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


திங்கள், 20 ஜூலை, 2020

உலக சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரிப்பு

தங்கநகைப் பிரியர்களுக்கு தொடர்ந்து காத்திருக்கும் ஏமாற்றம் உலக சந்தையில் மீண்டும் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய இதுவரையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1808 .58 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுவதாக 
குறிப்பிடப்படுகின்றது.நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது நூற்றுக்கு 0.7 வீதம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக
 பரவுவதனால், அதன் தாக்கம் தங்கத்தின் மீது செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த வாரம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 1 இலட்சத்திற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


வெள்ளி, 10 ஜூலை, 2020

குயின்ஸ்லாந்தில் தன்னைக் கடித்த விஷப்பாம்புடன் போராடி மீண்ட இளைஞ

காரில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த சமயம் தன்னைக் கடித்த விஷப்பாம்புடன் இளைஞர் போராடி மீண்டுள்ளார்.ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் நெடும்சாலையில் 27 வயதுள்ள ஒரு இளைஞர் காரில் சென்றபோது அந்தக் காரில் அதிக விஷம் நிறைந்த 
பாம்பு ஒன்று அந்த இளைஞரை கடித்துள்ளது. உடனே அந்த இளைஞர் சுதாரித்துக்கொண்டு, வெளிவர முயற்சி செய்துள்ளார். ஆனால், பாம்பு அவரின் காலை சுற்றி வளைத்து அவர் உட்கார்ந்திருந்த
 சீட்டையும் தாக்கி உள்ளது. எனவே, அவருக்கு
 வாகனத்தை நிறுத்தவும் வழியில்லை தப்பிக்கவும் வழியில்லை. இதனால், அவர் வைத்திருந்த கத்தி மாற்றும் சீட் பெல்ட் உதவியுடன் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காரில் பாம்புடன் சண்டையிட்டு
 போராடியுள்ளார்.அவரது வேகத்தை பார்த்த 
காவலர்கள் அவரை சுற்றி வளைத்து காரை நிறுத்தி உள்ளனர். காவலர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி, மருத்துவமனைக்குத்தான் இவ்வளவு வேகமாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். பின்னர் காவலர்கள் அவருக்கு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு காவலர்கள் காரை சோதனை மேற்கொண்ட போது, பாம்பு
 காரின் பின்பகுதியில் இருந்ததை கண்டறிந்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்றை குயின்ஸ்லாந்து போலீஸ்அதிகாரிகள் 
வெளியிட்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>>


கன டாவில் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்து மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.கனடாவின் ரொறன்ரோ
 Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைச் சேர்ந்த தீபா சீவரட்ணம் என்ற 
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி Toronto-வை
 சேர்ந்த 28 வயதான Steadley Kerr என்பவரை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது இரண்டாம் நிலை கொலை மற்றும் கொலை
 முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.Steadley Kerr வரும் 23-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக Oshawa-வை சேர்ந்த ஹரி சாமுவேல்ஸ்(27) ரொறன்ரோவைச் சேர்ந்த
 விஜேந்திரன் பாலசுப்பிரமணியம்(42) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.இவர்கள் இருவர் மீதும் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்
 சுமத்தப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 8 ஜூலை, 2020

உலகை 6 மாதங்களாக ஆட்டுவிக்கும் கொரோனா வைரஸைச் சுற்றி விலகாத 5 மர்மங்கள்

2020 ஆம் ஆண்டின் பாதிக்கும் மேல் கடந்துவிட்டது மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் சமீபத்தில் உலகளவில் 1.10 கோடியை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து 
வருவதாகத் தெரியவில்லை. உலகெங்கிலும் உள்ள 50 சதவீதத்திற்கும் அதிகமான 
நோயாளிகள் (60 லடசத்துக்கும் அதிகமானவர்கள்) ஆபத்தான தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனர், அதே நேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன், அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக 
இந்தியா மூன்றாவது 
இடத்தில் உள்ளது.கடந்த ஆண்டு சீனாவின் உகானில் முதன்முதலில் வெடித்த இந்த கொரோனா வைரசுக்கு 
தேவையான சிகிச்சைகளையோ தடுப்பூசிகளோ கண்டறியப்படவில்லை. இந்த கொரோனா வைரஸ் உருவானதில் இருந்து அதனுடன் தொடர்புடைய பல மர்மங்கள் உருவாகி உள்ளன.விஞ்ஞான இதழான நேச்சரில் கொரோனா வைரஸுடன் இணைக்கப்பட்ட ஐந்து மர்மங்களுக்கான
 பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என கூறி உள்ளது.இதுவரை, விஞ்ஞானம் வைரஸ் “உயிரணுக்களில் எவ்வாறு நுழைகிறது மற்றும் கடத்துகிறது, சிலர் அதை 
எவ்வாறு எதிர்த்துப் போராடுகிறார்கள், இறுதியில் மற்றவர்களை 
அது எப்படிக் கொல்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு பயனளிக்கும் மருந்துகளை
 அடையாளம் கண்டுள்ளனர், மேலும் பல சாத்தியமான சிகிச்சைகள் செயல்பாட்டில் உள்ளன.
விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 200 சாத்தியமான தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளனர் – அவற்றில் எதாவது 
இந்த ஆண்டு இறுதிக்குள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறி உள்ளது.இருப்பினும், இந்த நோயைப் பற்றி 
ஆராய்ச்சியாளர்களிடம் இன்னும் பதில்கள் இல்லாத சில முக்கிய கேள்விகளை பத்திரிகை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது அதன் விவரம் வருமாறு:-ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அறிகுறிகளை கொடுப்பதற்கு
 என்ன காரணம்?
குழந்தைகள் மற்றும் முதியவர்கள், குறிப்பாக நாட்பட்ட நோய் உள்ளவர்கள் வைரஸால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் நோயின் தீவிரத்தை அனுபவிக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த 
உண்மை, இருப்பினும், வைரசுக்கு 
மக்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான அறிகுறிகளை கொடுப்பதற்கு என்ன காரணம் என்பதை 
இன்னும் புரிந்து கொள்ள வேண்டும்.நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை என்ன, அது எவ்வளவு காலம் நீடிக்கும்?- கொரோனா 
வைரஸ் நோய்க்கான நோய் எதிர்ப்பு சக்தி எப்படி இருக்கும், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை 
தீர்மானிக்க நோயெதிர்ப்பு நிபுணர்களும் முயற்சித்து
 வருகின்றனர். சார்ஸ் கோவ்-2 க்கு எதிரான நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளின் அளவு தொற்றுநோய்க்குப் பின்னர் சில வாரங்களுக்கு அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, ஆனால், பின்னர் அவை பொதுவாகக் குறையத் தொடங்குகின்றன. ஆறு மாத கொரோனா வைரஸ் மர்மத்தை 
கண்டறிய விஞ்ஞானிகள் இன்னும் ஓடுகிறார்கள்.வைரஸ் கவலைப்படக்கூடிய பிறழ்வுகளை உருவாக்கியதா?- கடந்த ஆண்டு சீனாவில் முதன்முதலில் வடிவம் பெற்ற கொரோனா வைரஸ் பின், கண்டம் முழுவதும் பயணித்ததால், வைரஸின் பிறழ்வைச் சுற்றியே பல ஊகங்கள் உள்ளன.ஒரு தடுப்பூசி எந்த அளவு நன்றாக 
வேலை செய்யும்?
வளர்ந்து வரும் வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு கொரோனா தடுப்பூசி வெகுஜனங்களுக்கு வேண்டாம் என்று நம்புகிறது, ஏனெனில் பெரும்பாலான மக்கள் தொற்றுநோயிலிருந்து சொந்தமாக மீண்டு வருகிறார்கள். இந்த தடுப்பூசி முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் இணை நோயுற்றவர்கள் போன்ற சமூகத்தின் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மட்டும் பயன்படலாம். ஆனால் வைரஸுக்கு எதிராக இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் 
மதிப்பிடப்படவில்லை.
வைரஸ் எதில் இருந்து தோன்றியது?- இது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. வவ்வால்கள் முதல் எறும்பு திண்ணிகள் வரை, சீனாவில் பிறந்த வைரஸின் தோற்றம் பற்றிய கோட்பாட்டைச் சுற்றி பல ஊகங்கள் எழுந்துள்ளன.சீனாவில் வவ்வால்களில் இருந்து எடுக்கப்பட்ட 1,200 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ்களின் விரிவான பகுப்பாய்வு, புதிய கொரோனா வைரஸின் தோற்றம் யுனானில் உள்ள வவ்வால்களையும் சுட்டிக்காட்டுகிறது,” என்று அதில் 
கூறப்பட்டு உள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>



ஞாயிறு, 5 ஜூலை, 2020

நீச்சல் குளத்தில் இருந்து கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுமி!

கனடாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Quebec மாகாணத்தின் Montreal நகரில் தான் இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கிய 3 வயது சிறுமி பேச்சு மூச்சின்றி
 வெளியில் எடுக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு உடனடியாக சிறுமி கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், சிறுமி ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கிவிட்டார் என பகல் 11 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது. பின்னர் மருத்துவ உதவி குழுவினருடன் அங்கு சென்று சிறுமியை மீட்டும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
மரணத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து தற்போது எந்தவொரு விபரமும் எங்களிடம் இல்லை, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர். இதனிடையில் Quebec மாகாணத்தில் இந்தாண்டு இதுவரையில் 35 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கடந்தாண்டு இந்த நேரம் வரையில் நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக இருந்தது
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


பட்டப்பகலில் லண்டனில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்:

லண்டனில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டி 20 வயது மதிக்கத்தக்க இளைஞன் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Islington-ல் இருக்கும் Roman Way பகுதியில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அப்பகுதிக்கு 
உடனடியாக விரைந்துள்ளனர்.
ஆனால், பொலிசார் அவரை காப்பாற்ற 
முயல்வதற்குள் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற்பகல் 3 மணிக்குப் பிறகு, அங்கிருக்கும் விளையாட்டு மைதானம் அருகே துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக அருகில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த 
நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த 
சம்பவத்தை நேரில் கண்ட எவரும், வீடியோ அல்லது புகைப்படங்கள் இருந்தால், அது பொலிசாருக்கு உதவியாக
 இருக்கும் என்பதால், அப்படி எதுவும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும் படியும், குற்றங்களைத் தடுக்கவும் கண்டறியவும் உதவுவதில் பொதுமக்களுக்கு பெரும் பங்கு உண்டு என்று
 குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் சீனாவில் கொடூரம்

சீனாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அந்த சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் ஜின்ஜியாங் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்த வருகின்றனர். உய்குர் பிரிவு இஸ்லாமியர்களான இவர்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்க்ளுக்கு சீன அரசு கட்டாயமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்துவருது தற்போது 
வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அட்ரியன் ஜென்ஸ் என்ற நிபுணர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சீனாவின் மோசமான இந்த செயல் குறித்து ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என்ற சர்வதேச அளவில் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இந்த ஆய்வறிக்கையில் உள்ளவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று சீனா மறுத்து வருகிறது. ஆனால், தங்களுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளால் தங்களின் மாதவிடாய் நின்றுபோனதாக, ஜின்ஜியாங்கில் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் சிலர் 
தெரிவிக்கின்றனர்.
தாங்கள் உட்கொண்ட கருத்தடை மருந்துகளால், எதிர்பாராதவிதமாக உதிரப்போக்கு ஏற்பட்டதாக, பெண்கள் கூறுவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று குழந்தைகள் அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுத்த பெரும்பாலான பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்றும், ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உய்குர் இஸ்லாமியர்களை நன்னடத்தை முகாம்களில் தங்கவைத்திருப்பதாக சீனா மீது ஏற்கெனவே கடுமையான 
குற்றச்சாட்டு உள்ளது.
இந்த முகாம்களில் உய்குர் இஸ்லாமியர்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்கள் 10 லட்சம் பேர் வரை அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டை ஆரம்பத்தில் மறுத்துவந்த சீனா, ஜின்ஜியாங் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பயங்கரவாதத்தை ஒழிக்க தே
வையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக முகாம்கள் அமைக்கப்பட்டதை பின்னர் ஒப்புக்கொண்டது. 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், ஜின்ஜியாங்கில் உள்ள குழந்தைகள், அவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற சீனாவின் கொடுஞ்செயல் வெளி உலகிற்கு தெரிய வந்தது.
இஸ்லாமிய சமூகத்தினரிடம் இருந்து அவர்களின் குழந்தைகளை பிரித்து வளர்ப்பதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் அந்த ஆய்வின் மூலம் தெரியவந்தது. மனிதாபிமானமற்ற இவ்வாறான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக நாடுகள் அமெரிக்காவுடன் கைகோர்க்க வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பேயோ சர்வதேச நாடுகளுக்கு அழைப்புவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


புதன், 1 ஜூலை, 2020

பிரான்ஸில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இலங்கைத் தமிழ் யுவதி

பிரான்ஸில் இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார்.பொண்டி மாநகரசபைத்தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார்.இந்த நிலையில், வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்
.இதேவேளை இம் முறை பிரான்ஸில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தல்களில் Ile de France பிராந்தியத்தில் பல 
இடங்களில் எம்மவர்களும் மாநகரசபை 
உறுப்பினர் பதவிகளுக்காக களம் இறங்கி இருந்தனர்.இந்த நிலையில், புலம்பெயர் தேசத்தில் எமது இளைய தலைமுறையினர் எம் தேசியத்தின் பாதைக்கு உரமுட்ட வேண்டும் என்றும் 
சமூக ஆர்வலர்கள் பலரும் கூறியுள்ளனர்.மேலும், தமிழுக்கும் தமிழினத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் உங்கள் சேவை தொடரட்டும் என்றும் அவர்கள் வாழ்த்துக்களையும் 
கூறியுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>