நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 18 ஜூன், 2013

சிறிது நேரத்தில் இறந்து விடுவீர்கள்: நடுவானில் பரபரப்பு

 
விமான பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டிருந்ததாகவும், சிறிது நேரத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்றும் பீதி கிளப்பிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரபு நாட்டில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் 116 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் ஹாங்காங் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்திருக்கிறேன். எல்லோரும் சிறிது நேரத்தில் சாக போகிறீர்கள் என்று கூறினார்.
இதனால் விமானத்தில் இருந்த பணிகள் அனைவரும் பீதியடைந்தனர். இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
எனினும் விமானத்தை நடுவழியில் தரையிறக்காமல், விமானி நியூயார்க் சென்று, லிபர்ட்டி ஏர்போர்ட்டில் தரையிறக்கினார்.
அங்கு விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள், ஆம்புலன்சில் மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். அதற்குள் விஷம் பரவி இறந்து விடுவோமோ என்ற பீதியிலேயே பயணிகள் இருந்தனர். விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு வீரர்கள் விரைந்து சென்று பீதி கிளப்பிய வாலிபரை மடக்கி அழைத்து சென்றனர்.
இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த சான் பிரான்ஸ்சிஸ்கோ பல்கலை மாணவர் மெரில் ஆமோஸ் கூறுகையில், விமானம் புறப்படும் முன்பாக ரெஸ்டாரன்டில் பயணிகள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அங்குள்ள கண்ணாடி வழியாக நீண்ட நேரம் அந்த வாலிபர் பயணிகளை பார்த்து கொண்டிருந்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்று தெரியவில்லை என்றார்.
வாலிபரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. விமான பயணிகளை உடனடியாக பரிசோதித்து பார்த்தனர், உணவில் விஷம் எதுவும் கலந்திருக்கவில்லை என்பது உறுதியானது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக