நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 15 ஜூன், 2013

கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதம் வழங் அமெரிக்கா

      
சிரிய கிளர்ச்சிப் படையினருக்கு ஆயுத உதவி வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 சிரிய பிரதமர் அசாத் அலியின் அரச படைகளுக்கும், சிரிய கிளர்ச்சிப் படையினருக்கும் இடையில் ஒரு வருடத்திற்கு மேலாக யுத்தம் நீடித்து வருகிறது.

 இந்நிலையில் அண்மைக் காலமாக சிரிய அரச படைகள் தடை செய்யப்பட்ட இராசயன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்திவருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

 இந்த அறிவிப்புக்காக சிரிய கிளர்ச்சிப் படைகள் பல நாட்கள் காத்திருந்ததுடன், அமெரிககவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது.  இந்நிலையிலேயே அமெரிக்க வெள்ளை மாளிகையின் இந்த அறிவிப்பு, சிரிய கிளர்ச்சிப் படையினருக்கு  புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

 சிரிய இராசயன ஆயுதங்களின் பாவணையில் 100-150 க்கு இடைப்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக  தகவல் வெளியாகியிருந்தது.  இந்நிலையில் அமெரிக்க அரசு சிரிய கிளர்ச்சிப் படைகளுக்கு சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் என்பவற்றை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தீவிரமடைந்துள்ள சிரிய யுத்தத்தில் 93,000 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா புள்ளிவிபரம் வெளியிட்டிருந்த அதே தினத்தில் அமெரிக்காவின் இந்த அறிவிப்ப்பு வெளியாகியுள்ளது.

 எனினும் கிளர்ச்சிப் படைகளுக்கும் ஆயுதங்கள் கொடுப்பதன் மூலம் மேலும் யுத்தம் தீவிரமடையலாமே  தவிர ஒரு நாளும் இது பிரச்சினைக்கு தீர்வாகாது என ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு முன்னரே எதிர்ப்பு வெளியிட்டு வந்தன.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக