நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 28 ஜூன், 2017

பெண்ணொருவர்கனடாவில் மர்மமான முறையில் மரணம்!

கனடாவில் தமிழ் பெண்ணொருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
45 வயதான இரு பிள்ளைகளின் தாயான கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் என்பவரே உயிரிழந்தள்ளார்.

ஸ்காபிரோவில் அமைந்துள்ள Canbe உணவகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Canbe உணவகம் தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் அதிகாலை 1:13 மணியளவில் எரிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
Ellesmere வீதியில் அமைத்துள்ள Canbe உணவகத்திற்கு பின்புறம் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் கலைச்செல்வி கடுமையான தீக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அவசர உதவிப் பிரிவினர்
 தெரிவித்தனர்.
உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் 
காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பின் ரொரண்டோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 19 ஜூன், 2017

மீண்டும் லண்டனில் தாக்குதல் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது
இன்று அதிகாலை 12.20 மணியளவில் அனர்த்தம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக லண்டன் பெருநகர் பொலிஸ் பேச்சாளர்
 தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு அவசர சிகிச்சை பிரிவு சென்றுள்ளது. தாக்குதல் காரணமாக உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
Seven Sisters வீதியின் ஒரு பகுதி தற்போது விசாரணைக்காக மூடப்பட்டுள்ளது.
இந்த மோதல் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மசூதியில் ரமழான் நோன்பு துறக்கும் வேளையில் இந்த வெள்ளை நிற வாகனம் பாதசாரிகள் மீது பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெருமளவு முஸ்லிம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>