நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 14 ஜூலை, 2018

புதிய நடைமுறை பிரித்தானியாவில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கு

பிரித்தானியாவில் வசிக்கின்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைப் பூர்வீகமாக கொண்ட பெற்றோரின் பிள்ளைகளது கடவுச் சீட்டை புதுப்பிக்கும் போது, புதிய நடைமுறை பின்பற்றப்படவுள்ளது.
அதற்கமைய கடவுச் வீட்டு புதுப்பிப்பவர்களுக்கு மரபணுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாக கடைபிடிக்கப்படவுள்ளது.
பிரித்தானிய உள்துறை செயலகத்தை மேற்கோள் காட்டி அந்த நாட்டின் ஊடகம் ஒன்று இந்த செய்திய வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தமது பிள்ளையின் கடவுச் சீட்டை புதுப்பிக்கும் போது, குறித்தப்
 பெண்ணுக்கு பிரித்தானிய குடியுரிமை இல்லாத போதும், அவரது பிள்ளைக்கு பிரித்தானிய குடியுரிமை வழங்கப்பட்டமை அவதானிக்கப்பட்டது.
அத்துடன் அவரது பிள்ளையின் தந்தையும் பிரித்தானிய குடியுரிமையைக் கொண்டவர் என்று கடவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோன்று மற்றுமொரு பெண் தொடர்பிலும்
 பதிவாகி இருந்தது.
இவ்வாறான நிலைமையால், பிரித்தானியா உள்துறை செயலகம், குடியுரிமை வழங்கப்படும் விடயத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் கொண்டுள்ளது.
இந்தநிலையில் கடவுச் சீட்டை புதுப்பிக்கும் சிறார்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மரபணுப்பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
-உலகம்,பொதுவானவை


புதன், 11 ஜூலை, 2018

புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம்

பிரிட்டனின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக ஜெரேமே ஹண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ஜெரேமே ஹண்ட் புதிய வெளியுறவு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே கையெழுத்திட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்
கொண்டு வந்த பிரெக்ஸிட் செயலாளர் டேவிட் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரெக்ஸிட் விவகாரத்தை கையாள நான் சரியான நபர் இல்லை என தெரிவித்த டேவிட், ஐரோப்பிய ஒன்றியத்துக்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது
 என குற்றம் சாட்டியிருந்தார்.
டேவிட்டின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட பிரதமர் தெரெசா மே, டொமினிக் ராப்பை அந்த இடத்தில் நியமித்தார். இதனை அடுத்து சில மணி நேரத்தில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது நினைவூட்டத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 10 ஜூலை, 2018

வரலாறு காணாத வெயிலினால் ஜேர்மனியில் ஏற்பட்ட நிலை

வறண்ட நிலங்களும் வனத்தீயும் ஒரு பக்கம், கிடைத்த வெயிலில் சூரியக் குளியல் போடும் செல்வந்தர்கள் மறுபக்கம், அறுவடை குறித்த கவலையில் விவசாயிகள் என பல தரப்பினர் மீதும் வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஜேர்மனியின்
 தட்பவெப்பநிலை.
வடகிழக்கு ஜேர்மனியில் சமீப மாதங்களாக சுத்தமாக மழையே இல்லை. சதுர மீற்றருக்கு வெறும் 50 லிற்றர் மழை மட்டுமே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இது வழக்கமான 
அளவில் பாதிதான்.
Lower Saxonyயில் காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தென்மேற்கு ஜேர்மனியில் சில நகரங்களில் பெய்த மழையால் பெரு 
வெள்ளம் ஏற்பட்டது.
நாடு முழுவதும் காட்டுத்தீயின் அபாயம் மிக அதிகமாக காணப்படுகிறது. சமீப சில வாரங்களாக 100 இடங்களில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர்.
Oder-Spree பகுதியில் பற்றிய தீயை அணைக்க 40 தீயணைப்பு வீரர்களுக்கு 13 மணி நேரம் பிடித்தது.
இதற்கிடையில் Saxony-Anhalt பகுதியில் தீயை அணைக்க தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை நீச்சல் குளங்கள் போன்ற இடங்களிலிருந்தெல்லாம் உறிஞ்சி
 வருகின்றனர்.
வறட்சி தீயை ஏற்படுத்துவதோடு விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பல விவசாயிகள் தங்கள் பயிர்களை முன் கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். வரும் மாதங்களில் பயிர்கள் விரைந்து முதிர்ச்சியடைந்து விடும் அதே நேரத்தில் மழை பற்றாக்குறை காரணமாக விளைச்சல் குறைவாகவே இருக்கும். இதற்கிடையில், ஏற்படும் திடீர் வெள்ளமோ பயிர்களை மொத்தமாக 
காலி செய்துவிடும்.
உருளைக்கிழங்கு, கரும்பு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றிற்கு கோதுமையை விட அதிகம் தண்ணீர் தேவை. ஆகவே ஜேர்மனியின் மக்காச்சோளப் பயிர்கள் அசாதாரண வறண்ட தட்பவெப்பநிலை காரணமாக பெரும் பாதிப்பை அடைந்துள்ளன.
அதீத வறட்சி மரங்களுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவற்றிலிருந்து மீள அவற்றிற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் மரங்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு என்பதால் அவை இதுபோன்று பல ஆண்டுகள் தொடர்ந்து வறட்சி நிலவினால் தட்பவெப்பநிலைக்கு ஏற்றார்ப்போல் தங்களை மாற்றிக் கொள்ளும்.
 மரங்களெல்லாம்
அழிந்து சப்பாத்திக் கள்ளி நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தவிர்க்க சில ஜேர்மன் நகரங்கள் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுமாறு தங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சனி, 7 ஜூலை, 2018

பேஸ்புக் நிறுவனர் கோடீஸ்வரர் பட்டியல்:3வது இடத்தில்

உலக பணக்காரர்கள் பட்டியலில், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது.   இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோசும், 2வது இடத்தில்,  மைக்ரோசாப்ட்
 நிறுவனத்தின் பில் கேட்ஸ் உள்ளனர். இந்த பட்டியலில்
,  தொழிலதிபர் வாரன் பப்பெட்டை பின்னுக்கு தள்ளி,  பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 5.61 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.  இது பப்பெட் சொத்தை  விட 2,565 கோடி 
ரூபாய் அதிகமாகும்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கொட்டும் மழையால் ஜப்பானில்: 20 பேர் பலி ; 50 பேர் மாயம்


ஜப்பானில் பெய்த பலத்த மழையில் சிக்கி 20 பேர் பலியாயினர். 50 க்கும் மேற்பட்டோர் மாயமாயினர். வீடுகள் உடமைகளை இழந்து பலர் தவிக்கின்றனர். 
தென் மேற்கு ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் தொடர் மழை காரணமாக பல குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. குராஷிகி, ஒக்கியாமா பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின.
 ஹிரோஷிமா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இது வரை 15 பேர் இறந்துள்ளதாக ஜப்பான் செய்தி நிறுவனமான குயோடா தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 
யமாகுஷ்சி பகுதியில் தற்போது பெய்து வரும் கன மழையால் அங்கு பெரும் பாதிப்பு வரும் என அஞ்சப்படுகிறது. இங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு
 எச்சரிக்கப்பட்டுள்ளனர். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 4 ஜூலை, 2018

கனடா செல்லத் தடைஇலங்கை அணி வீரர்கள் மூவருக்கு

இலங்கை அணி வீரர்கள் மூவருக்கு கனடாவில் இடம்பெறும் ரி- 20 போட்டிகளில் விளையாடச் செல்வதற்கு தடை 
விதிக்கப்பட்டுள்ளது.
திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுறு உதான ஆகியோருக்குக் கனடா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>