நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 29 நவம்பர், 2013

உலகெங்கும் உள்ள தமிழாசிரியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு


உலகெங்கும் உள்ள பல நாடுகளில் தமிழ் மொழியை கற்பித்து வரும் தமிழாசிரியர்களின் நலன் கருதி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் ஒரு டிப்ளோமா கற்கை நெறியை தமிழ் நாட்டின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தோடு இணைந்து ஆரம்பித்துள்ளது.

உலகெங்கும் தமிழ் கற்பித்தலில் ஆர்வமுடைய ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் ஆகியோர் மேற்படி கற்கை நெறியில் உடனடியாக இணைந்து எதிர்காலத்தில் ஒரு தகுதி வாய்ந்த தமிழாசிரியராகும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில், சென்னைக்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தோடு இணைந்தது முன்னெடுக்கும் அரிய வாய்ப்பு இது.முழுக்க முழுக்க புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்ச்சிறார்கள், தமிழ்க் கல்வியை இலகுவாக பயிலவும், தமிழைப் பிழையின்றி பேசவும், படிக்கவும், எழுதவும் இப்பாடநெறி உதவும்.

அடிப்படை தமிழ் இலக்கணம், மட்டுப்படுத்தப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறு அத்துடன் கணனித் தமிழும், இணைய வழிக் கல்வியும் முக்கிய விடயமாகும்.
மேற்படி டிப்ளோமா கற்கை நெறியில் இணைந்து கொள்ளுவதற்கு தேவையான தகைமைகள் பின்வருமாறு அமைகின்றன.

இலங்கையில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருந்தால் இந்தப் பாடத்திட்டத்தில் நீங்கள் இணையலாம்.

முழுக்க முழுக்க புதிதாக எழுதப்பட்ட பாடத்திட்டம். புலம் பெயர் சமூகத்தில் வாழும் தமிழ்ச் சிறார்கள் இரண்டாவது, மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை படிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் இலகுவாக படிப்பதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்ட முதலாவது பாடத்திட்டம்.

இந்த கற்கை நெறியை படித்து முடிப்பவர்கள் புலம் பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். தற்போது இலங்கை, இந்தியாவில்

இருப்பவர்களும் இப்பயிற்சி நெறியை ஆரம்பிக்கத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த டிப்ளோமா கற்கை நெறியில் சேர ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை விண்ணப்பிக்குமாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளி, 22 நவம்பர், 2013

58 இலட்சம் கி.கிராம் நிறையுடன் நகர்ந்த வாகனம் : பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து
 

 

     பிரித்தானியாவில் சுமார் 58 இலட்சத்து 598 கிலோ கிராம் நிறையுடைய பாரிய ஜெனரேட்டர் ட்ரான்ஸ்போமர் ஒன்று வீதி வழியாக சரக்கு வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்டுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

 இது பிரித்தானியாவின் மிகப்பெரிய சரக்குப் போக்குவரத்து என கூறப்படுகிறது.

100 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமானதுமான ட்ரெய்லரில் (சுமார் 10 பயணிகள் பஸ்ஸுக்கு சமமானது) இந்த ட்ரான்ஸ்போமர் டிட்கொட் மின்சார நிலையத்திலிருந்து மணிக்கு 4 மீற்றர் வேகத்தில் பிரிஸ்டலிலுள்ள அவொன்மௌத் டொக்ஸுக்க கொண்டு செல்லப்பட்டுள்ளது.

                            

                              

அதிகூடுதலாக மணித்தியாலத்துக்கு 6.44 கிலோமீற்றர் எனும் வேகத்தில் மட்டுமே சென்ற இப்போக்குவரத்துக்கு 2 நாட்கள் எடுத்துள்ளது. இத்திட்டத்தினை சரக்கு போக்குவரத்து வல்லுநர்கள் அறுவர் இணைந்து 9 மாதங்களாக திட்டமிட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் பிரிஸ்டலையடைந்த இந்த ட்ரான்ஸ்போமரை அங்கிரிருந்து கடல் வழியாக கொட்டம் மின்சார நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டவுள்ளது.

இந்த ட்ரான்ஸ்போமர் ஒக்ஸ்போர்ட்ஷயரிலுள்ள டிட்கொட் மின்சார நிலையத்தில் 43 வருடங்களாக பயன்படுத்தப்பட்டதாகும். 13 மைல் தூர பயணத்தில் சிறிய கோளாறு ஏற்பட்ட போதிலும் நெரிசல்களை எதிர்கொண்டு பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் -
 

சச்சினினின் பிரியாவிடை பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் -


சச்சின் டெண்டுல்கரின் பிரியாவிடை பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என தான் விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளி கவலை வெளியிட்டுள்ளார்.

பாடசாலைக் கிரிக்கெட்டில் கம்பளியும் (349) சச்சினும் (326) இணைந்து ஆட்டமிழக்காமல் 664 ஓட்டங்களைப் பெற்றனர். இதனைத் தொடர்ந்தே சச்சினும் கம்பளியும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார்.

இருப்பினும் சச்சின் பெற்ற இடத்தினை கம்ப்ளியால் தொடர்ந்து பெறமுடியாதது துரதிஷ்டமே. இந்நிலையில் அண்மையில் சச்சின் பெரும் புகழுடன் தனது 200ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற சச்சின் டென்டுல்கரின் பிரியாவிடை பேச்சு பலரையும் மனமுருக வைத்தது.

ஆனால் சச்சினின் சிறுவயது நண்பர் கம்ப்ளியை ஆழமாக கவலையடைச்செய்துள்ளது.

இது குறித்து வினோத் கம்ப்ளி கூறுகையில், சச்சின் பிரியாவிடைப் பேச்சில் எனது பெயரும் இடம்பெற்றிருக்கலாம் என நான் விரும்புகிறேன். ஏனெனில் குறைந்தது எங்களது உலக சாதனை இணைப்பாட்டம் குறித்து குறிப்பிடுவார் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஏனெனில் அங்கிருந்துதான் நாங்கள் ஆரம்பித்தோம். அது எமது எதிர்காலத்தை திருப்பிப்போட்ட இன்னிங்ஸ். உண்மையில் நான் மிகவும் கவலையடைந்தேன் என தொலைக்காட்சி சனல் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

புதன், 13 நவம்பர், 2013

பயணத்தை தொடங்கும் ஒரு கிரகத்தை போல மங்கல்யான்


செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட மங்கல்யான் திட்டமிட்டபடி வெற்றிகரமாக 1,20,000 கி.மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற அதிநவீன விண்கலத்தை

பி.எஸ்.எல்.வி. சி25 ராக்கெட் மூலம் கடந்த 5ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன்பின் கர்நாடக மாநிலம் ஹசனை அடுத்த பையலாலு என்ற கட்டுப்பாட்டு மையத்திலிருந்து, தொலையுணர்வு சாதனங்கள் மூலம் மங்கல்யான் விண்கலத்தின் மோட்டார் 3 முறை இயக்கப்பட்டது. இதனையடுத்து நீள்வட்ட சுற்றுபாதையில் 71,636 கி.மீட்டர் உயரத்திலும் பூமியில் இருந்து குறைந்தபட்ச தூரமாக 269 கி.மீட்டர் உயரத்திலும் பறந்தவாறு மங்கல்யான் சுற்றி வந்தது.

இந்நிலையில் 4வது முறையாக மங்கல்யான் விண்கலத்தை உயர்த்தும் முயற்சி தொழில்நுட்ப காரணங்களால் நேற்று பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் இன்று காலை 5 மணி 3 வினாடிக்கு மங்கல்யானில் உள்ள லேம் மோட்டாரை 303 வினாடிகளுக்கு விஞ்ஞானிகள் இயக்கி பின்னர் நிறுத்தினர். இதன் மூலம் ஏற்கனவே திட்டிமிட்டப்படி பூமியிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் மங்கல்யான் நிறுத்தப்பட்டது. இறுதியாக 30ம் தேதி மங்கல்யானை இரண்டரை லட்சம் கிலோ மீட்டர்

 உயரத்திற்கு எட்ட வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின் மங்கல்யான் விண்கலம் ஒரு கிரகத்தை போல சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றியவாறு தனது விண் பயணத்தை தொடங்கும். விண்பயணத்தின் 300வது நாளை எட்டியபின்னரே செவ்வாய் கிரகத்தை மங்கல்யான் நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது