நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 31 மே, 2020

பிரான்சில் கொரோனா தொற்றிலிருந்து பூரண விடுதலை பெற்ற பூனை

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது செல்லப்பிராணியான பூனை ஒன்று பூரண குணமடைந்துள்ளது.பாப்பிலி என்ற பெயர் கொண்ட 9 வயது பூனை 
சில வாரங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.இதனை அடுத்து அதன் உரிமையாளர் அங்குள்ள தேசிய கால்நடை பாடசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு 
பூனைக்கு எடுக்கப்பட்ட சோதனையின் முடிவில் கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து
 அந்த பூனைக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பிறகு பூரண குணம் அடைந்ததாக தெரிவித்தார்.இதற்கிடையில் தெற்குப் பகுதியில் உள்ள தூலிஸ் நகரில் 2வது பூனைக்கு கொரோனா
 தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மனிதனிடமிருந்து
 விலங்கிற்கு பரவுதல் என்பது சாத்தியமற்றது அல்ல, ஆனால் அது மிகவும் அரிதானது” என்றும்,”செல்லப்பிராணிகளால் மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு 
எந்த வழக்குகளும் இல்லை.”
 என்றும் ஆல்போர்ட் தேசிய கால்நடை பாடசாலையில் அறிவியல் பணிப்பாளர் ரெனாட் டிசியர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>சனி, 30 மே, 2020

சீனா நோக்கி கொரோனா பீதிக்கு மத்தியில்ஐரோப்பாவிருந்து பறந்த முதல் விமானம்

சுமார் 200 பயணிகளுடன் முதல் விமானம் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிழக்கே துறைமுக நகரமான தியான்ஜினில் இன்று தரையிறங்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.கொரோனா தொற்றிலிருந்து மெல்ல மீண்டது சீனா. எனினும், 
ஐரோப்பிய நாடுகள் பல தற்போது திணறிக் கொண்டிருக்கின்றன.கொரோனாவிலிருந்து மீண்டதன் பின்னர் இரண்டாவது அலை கொரோனா வைரஸ் பரவுவதால் அனைத்து வெளிநாட்டினரும் நாட்டிற்குள் நுழைய சீனா பெருமளவில் தடை 
விதித்துள்ளது.இந்தநிலையில், சுமார் 400 ஜேர்மன் மேலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது
 குடும்ப உறுப்பினர்கள் தனி விமானங்களில் சீனா திரும்பத் தொடங்கியுள்ளனர்.ஜேர்மனியின் தூதரகம் மற்றும் விமான நிறுவனமான லுஃப்தான்சா ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பிராங்பேர்ட்டிலிருந்து சீன வணிக மையங்களான தியான்ஜின் மற்றும் 
ஷாங்காய்க்கு இரண்டு விமானங்களை சீனாவில் உள்ள ஜேர்மன் வர்த்தக சபை ஏற்பாடு செய்தன.ஐரோப்பாவிலிருந்து 
சீனாவிற்கு வெளிநாட்டினரை திருப்பி அனுப்பும் முதல் விமானங்கள் இதுவாகும்.200 பயணிகளுடன் முதல் விமானம் தலைநகர் பெய்ஜிங்கிற்கு 
கிழக்கே துறைமுக நகரமான தியான்ஜினில்.30-05-20. இன்று
 தரையிறங்கும். இரண்டாவது விமானம் ஜூன் 4 வியாழக்கிழமை மதியம் ஷாங்காயில் தரையிறங்கும் என்று 
எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 27 மே, 2020

ஆண்டுக்கு விளையாட்டின் மூலம் அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனை.

உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஒரு வருடத்தில் ரூ. 284 கோடி (37.4 மில்லியன் டாலர்) வருமானம் ஈட்டியுள்ளார் 22 வயது ஒசாகா. இதன்மூலம் கடந்த 
வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ரூ. 10.64 கோடி (1.4 மில்லியன் டாலர்) அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளார் ஒசாகா.
கடந்த வருடம், உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (37) நான்காவது முறையாக 
முதலிடத்தைப் பிடித்தார். அவரது ஆண்டு வருவாய் சுமார் ரூ 207 கோடி ($29.2 மில்லியன்) என்று
 மதிப்பிடப்பட்டது. இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளார்.1990 முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டு வருகிறது. இந்த விதத்தில், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் ரூ. 284 கோடி வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் ஒசாகா. இதற்கு முன்பு 2015-ல் மரியா ஷரபோவா 225.65 கோடி வருமானம் ஈட்டியதே அதிகமாக இருந்தது. அந்தச் சாதனையை 
ஒசாகா தாண்டியுள்ளார்.
2019 ஜூன் 1 முதல் 2020 ஜூன் 1 வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டுள்ளது. இதன் முழுப் பட்டியலில் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 26 மே, 2020

மருத்துவமனை வாசலில் தனது எஜமான் இறந்தது கூடத் தெரியாமல் காத்திருக்கும் ஜீவன்

சீனாவின் வுஹான் நகர மருத்துவமனையில் உரிமையாளர் திரும்ப வருவதும் எதிர்பார்த்து 3 மாதங்களாக காத்திருந்த விசுவாசமான நாயை தற்போது காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வுஹான் மருத்துவமனை ஊழியர்களால் தற்போது Xiao Bao என பெயரிடப்பட்டுள்ள 7 வயது கலப்பின
 நாயுடன் கடந்த பிப்ரவரி மாதம் அதன் உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.ஆனால், குறித்த முதியவரால் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் 5 நாட்களுக்கு பின்னர் பரிதாபமாக பலியானார்.தமது உரிமையாளர் திரும்ப வந்து தம்மையும் அழைத்துக் கொண்டு குடியிருப்புக்கு செல்வார் என அந்த நாய் அங்கேயே காத்திருந்துள்ளது.மருத்துவமனை ஊழியர்கள் துரத்தியும் அந்த நாய் அங்கிருந்து வெளியேற மறுத்து
 வந்துள்ளது.கடந்த மூன்று மாதங்களாக அதன் உரிமையாளர் விட்டுச் சென்ற பகுதியிலேயே அந்த நாய் காத்திருந்துள்ளது.இந்த 3 மாத காலமும் மருத்துவமனை ஊழியர்களே அதற்கு
 உணவும் அளித்து வந்துள்ளனர். இந்த 
நிலையில் ஏப்ரல் 13 ஆம் திகதி ஊரடங்கு விலக்கிக் கொண்டதும் மருத்துவமனை அங்காடியும் திறக்கப்பட்டது.அது முதல் அந்த நாய் அங்காடி உரிமையாளருடன் நெருக்கமாக இருந்துள்ளது. இருப்பினும் தமது உரிமையாளரை அது காத்திருப்பதாகவே அங்காடி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, கடந்த 20 ஆம் திகதி, மருத்துவமனை 
ஊழியர்கள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த நாயை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்து நடவடிக்கை 
எடுத்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 24 மே, 2020

உலக நாடுகளுக்கு மிக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட சீனா

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா மகிழ்ச்சியான செய்தியினை வெளியிட்டுள்ளது.சீனா, கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது 
பரிசோதிக்கும் முதல்கட்ட சோதனை நடத்தியதாகவும் அது வெற்றிகரமாக நிறைவேறியதாகவும் அறிவித்துள்ளது. இது குறித்து பிரிட்டனை சேர்ந்த மருத்துவ ஆய்விதழான ‛தி லான்செட்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.அந்த இதழிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கொரோனா
 வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட சோதனையில் சீனா வெற்றியடைந்துள்ளதாக
 அறிவித்துள்ளதாகவும், இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை யார் வேண்டுமானாலும் பரிசோதித்து அறியலாம் எனவும் சீனா தெரிவித்துள்ளது.சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து மிக பாதுகாப்பானது மற்றும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதி
ர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கிறது.இந்த ஆய்வுக்காக 108 தன்னார்வலர்களை தேர்வு செய்த சீனா, அவர்களை 3 குழுவாக பிரித்து, வெவ்வேறு அளவுகளில் மருந்து செலுத்தி
 பரிசோதனை செய்யப்பட்டு 28 நாட்கள் வரை கண்காணிக்கப்பட்டனர். அவர்களது உடலில் எந்தவித தீவிரமான மாற்றங்களும் கண்டறியப்படவில்லை.தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொண்டுள்ளதே இதன் பொருளாகும். இது சார்ஸ் வைரசுக்கு 
எதிராகவும் செயல்படக்கூடியது. இந்த தடுப்பு மருந்துக்கு Ad5-nCoV என பெயரிடப்பட்டுள்ளது. முதல்கட்ட சோதனையின் வெற்றி, அடுத்தக்கட்ட சோதனைகளை தொடர வழி செய்துள்ளது என்று ஆய்விதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.முதல்கட்ட சோதனை
 மனிதர்களுக்கு வெற்றியடைந்ததால், அடுத்தக்கட்ட சோதனைக்கு 508 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்க சீனா முடிவுசெய்துள்ளது.மேலும், ShaCoVacc மற்றும் PiCoVacc ஆகிய 2 தடுப்பு மருந்துகளையும் மனிதர்களிடம் பரிசோனை
 செய்ய சீனா அனுமதி அளித்துள்ளது. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சோதனையில் சீனாவின் முதல்கட்ட வெற்றி, ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசுக்கு இன்றளவும் தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை.இந்நிலையில், உலக ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட 6 மாதங்களாக 
தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், அதிகாரப்பூர்வமாக உறுதியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையிலேயே, சீனா தற்போது மருந்து கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருப்பது உலக மக்களுக்கு
 மகிழ்ச்சியான தகவலாக 
அமைந்திருக்கிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
வெள்ளி, 22 மே, 2020

ஆபிரிக்காவில் கொரோனா வைரசால் இரண்டு நாட்களேயான பச்சிளம் குழந்தை பலி

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த உயிர்க்கொல்லி வைரஸ் உலகின் எந்தவொரு கண்டத்தையும் விட்டுவைக்கவில்லை.
 அந்த வகையில் ஆப்பிரிக்க கண்டத்தில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக தென்ஆப்பிரிக்கா 
உள்ளது.அங்கு இதுவரை 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அங்கு 330-க்கும் அதிகமானோர் உயிரை இந்த வைரஸ் பறித்துள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டில் பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தை கொரோனாவுக்கு 
பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தலைநகர் கேப் டவுனில் கொரோனா தாக்கிய கர்ப்பிணி அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.அவருக்கு
 2 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. டாக்டர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் குழந்தைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து, 
வெண்டிலேட்டர் மூலம் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த 
குழந்தை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது. இந்த தகலை உறுதிப்படுத்தியுள்ள அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அந்த குழந்தையின் தாய்க்கு இரங்கல் 
தெரிவித்துள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 18 மே, 2020

வீட்டிலிருந்தே 2021 வரை பணிபுரியலாம் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்ற நிலையில் பல நாடுகளில் உயிரிழப்புகள், பொருளாதாரச் சரிவுகள் என கொரோனா வைரஸ் பல பாதிப்புகளை 
ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற
 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீடித்துள்ளன.கொரோனாவைக் கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை அமுல்படுத்தி மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க கூறி வரும் நிலையில் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை
 வீட்டிலிருந்தே பணிபுரிய
 அனுமதி வழங்கியுள்ளன.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை ஜூன் 1 ஆம் திகதி நீடித்துள்ள அதேவேளை தற்போது வாய்ப்பு இருப்பவர்கள் இந்த ஆண்டு 
முழுவதுமே வீட்டில் இருந்து வேலை 
செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.அதேபோல் ஜூலை 6 வரை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கி இருந்த பேஸ்புக், பணியாளர்கள் விரும்பினால் 2020 முழுவதும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 17 மே, 2020

ஸ்பெய்னில் நோய்களை எதிர்த்துப் போராடி வென்று மீண்டு வந்த 113 வயதுப் பெண்மணி

ஸ்பெய்னில் மிகவும் வயதான பெண்மணி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.Maria Branyas என்ற 113 வயதான பெண்மணியே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.ஸ்பெய்ன் முடக்கப்பட்ட பின்னர் இவருக்கு கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
சில வாரங்கள் சுயமாக தனிமைப்படுத்திக்கொண்ட பின்னர், இந்த பெண்மணி குணமடைந்துள்ளார்.அவருக்கு சிறியளவிலான நோய் அறிகுறிகளே தென்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மரியா என்ற இந்த பெண்மணி 1919-1919 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட காய்ச்சல் நோய், 1936-1939 ஆம் ஆண்டுகளில் ஸ்பெய்னில் நடந்த 
சிவில் யுத்தத்தின் போது பரவிய கொடிய நோயையும் வெற்றிகரமாக எதிர்கொண்ட பெண் என்பது 
இதன் மூலம் தெளிவாகியுள்ளதாக ஊடகங்கள் கூறியுள்ளன.அவர் குணமடைந்துள்ளார். அவர் மிகவும் சிறப்பானவர். தனது அசாதாரண நிலைமை சம்பந்தமாக தெளிவுப்படுத்த
 அவர் விரும்புகிறார்” என அந்தப் பெண்மணியின் மகள் கூறியுள்ளார்.மரியா 1907 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவின் மெக்சிகோவில் பிறந்தார். இரண்டு ஆண்டுகளின் பின் அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவுக்கு சென்று முதலாம் உலகப் போர் நடைபெற்ற போது 
ஊடகவியலாளரான தனது தந்தையுடன் ஸ்பெய்னின் கிரோனா மாகாணத்திற்கு வந்துள்ளார்.மரியாவுக்கு மூன்று பிள்ளைகள். அவரது மூத்த மகனுக்கு தற்போது 86 வயது. மரியாவுக்கு 11 பேரன் பேத்திகள் உள்ளனர். இந்த பேரன், பேத்திகளுக்கும் 13 பிள்ளைகள் உள்ளனர். அவர் தற்போது 13 கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் கொள்ளுப்பாட்டி.
 எனினும்,மரியா இரண்டு தசாப்தங்களாக முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் வசித்து வந்தார்.கடந்த ஆண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த மரியா, தனக்கு வாழ வேண்டும் என்ற ஆசையை விட வேறு எந்த ஆசையும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பேரதிர்ச்சியை உலக மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோய் அடுத்த 18-24 மாதங்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் புதிய குழு ஆய்வு கணித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோயை அவ்வப்போது மீண்டும் எழுப்புவதற்கு உலகெங்கிலும் உள்ள 
அரசாங்கங்களுக்கு பரிந்துரைகள் உள்ளன.அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் தொற்று நோய் ஆராய்ச்சி
 மற்றும் கொள்கை மையம் தொற்றுநோய்களின் கடந்தகால வடிவங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு ஒன்றை நடத்தியது.இந்த ஆய்வில் டாக்டர் கிறிஸ்டின் ஏ. மூர் (சிட்ராப்பின் மருத்துவ 
இயக்குநர்), டாக்டர் மார்க் லிப்சிட்சஸ் (தொற்று நோய் இயக்கவியல் மையத்தின் இயக்குனர்,
 ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்), ஜான் எம். பாரி (பேராசிரியர் துலேன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்) மற்றும் மைக்கேல் டி. ஓஸ்டர்ஹோம் (சிட்ராப் இயக்குனர்) 
ஆகியோர் பங்குபெற்றனர்.1700-ன் தொடக்கத்தில் இருந்து
 எட்டு உலகளாவிய காய்ச்சல் தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன. 1900 முதல் நான்கு – 1918-19, 1957, 1968 மற்றும் 2009-10 ஆகிய ஆண்டுகளில்.சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற சமீபத்திய கொரோனா வைரஸ்களின் தொற்றுநோய் சார்ஸ் கோவி-2 ஜபுதிய கொரோனா வைரஸ்ஸ-லிருந்து கணிசமாக வேறுபட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் வாதிடுகின்றனர்.ஆய்வின் படி, இந்த நோய்க்கிருமிகள் இந்த தொற்றுநோயால் என்ன
 எதிர்பார்க்கலாம் என்று கணிக்க பயனுள்ள மாதிரிகளை வழங்கவில்லை. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மற்றும் கோவிட் -19 வைரஸ் இடையே வேறுபாடுகள் இருந்தபோதிலும், தொற்றுநோய்களுக்கு இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து 
உள்ளனர்.இரண்டும் முக்கியமாக சுவாசப் பாதை வழியாக பரவுகின்றன. அறிகுறி பரவுதல் இரு வைரஸ்களிலும் ஏற்படுகிறது மற்றும் 200கோடி மக்களை பாதிக்கும் மற்றும் உலகம் முழுவதும் வேக
மாக நகரும் திறன் கொண்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.உலகளாவிய மக்கள் முன்
பே நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கவில்லை, இதன் விளைவாக உலகளாவிய பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர்கள் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். எவ்வாறாயினும், கடந்தகால
 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய்களிலிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.புதிய கொரோனா வைரஸின் அடைகாக்கும் காலம் இன்ஃப்ளூயன்ஸாவை விட அதிகமாக உள்ளது மற்றும் கிடைக்கக்கூடிய தகவல்கள் அறிகுறியற்ற 
பின்னர் இன்ஃப்ளூயன்ஸாவை விட அதிகமாக உள்ளது என்று கூறுகிறது.ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி,
 கொரோனாவின் அடிப்படை இனப்பெருக்க எண்ணிக்கையும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று காய்ச்சலை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் விஞ்ஞானிகள்
 கூறியுள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 16 மே, 2020

திட்டமிட்டு உலக நாடுகளை முட்டாளாக்கப் பார்க்கிறது சீனா! வெளியான தகவல்கள்

உலக நாடுகள் பலவற்றை சீன அரசாங்கம் திட்டமிட்டே ஏமாற்றியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளன.
சீனாவின் வுகானில் உருப்பெற்றதாக சொல்லப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது தொடர்பில் ஆரம்பித்திலிருந்தே அமெரிக்கா
 சந்தேகம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 640,000 என தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் பதிவு செய்துள்ளது.இதுவரை ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இந்த தரவுகள் தற்போது 
கசிந்துள்ள நிலையில் உலக நாடுகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.சீனாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 82,933 என்றே உத்தியோகப்பூர்வ கணக்குகள் வெளியிடப்பட்டன.இருப்பினும் உண்மையான 
எண்ணிக்கை மிக அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக பலர் நம்புகிறார்கள். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு 
தொழில்நுட்ப பல்கலைக்கழக தரவுத்தளம் வாயிலாக கசிந்த ஒரு தரவில்,சீனாவில் கொரோனா 
பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 640,000 என இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.சீனாவின் 230 நகரங்களில் சுமார் 100 தன்னார்வ பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.பிப்ரவரி
 தொடக்கத்தில் மற்றும் ஏப்ரல் பிற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் சீனாவில் மொத்தம் 640,000 பேர் கொரோனாவுக்கு இலக்காகியிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளானது சீனாவில் ஹொட்டல்கள், மருத்துவமனைகள், பிரபல சங்கிலி உணவு விடுதிகள் என விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.முன்னதாக பல தடவைகள் அமெரிக்கா கொரோனா தொடர்பிலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் சீனா பொய் சொல்லுகிறது என்றும், உண்மையான தகவல்களை அவர்கள் மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.இது தொடர்பில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசிய போது, உண்மையில், சீனா எங்களை முட்டாளாக்கப் பார்க்கிறது என்று கடுமையான பேசியிருந்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 7 மே, 2020

விமான நிலைய சோதனைக்கு முன்பும் பின்பும் பயணிகள் இரண்டு முறை கை கழுவ வேண்டும்

விமானப் பணிப்பெண்களின் அழகிய புன்னகை இனியில்லை கடலில் குளித்து விட்டு கடற்கரையில் ஓய்வு எடுப்பவர்கள் கூட இனிமேல் கண்ணாடித் திரைகள் மூலம் பிரிக்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும்.விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் முன்பு இரத்தப் பரிசோதனைக்கு
 உட்படுத்தப்படுவோம். இது சற்று அச்சுறுத்தலாக இருந்தாலும், உண்மையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுடன் பயணிகளை பாதுகாப்பாக 
உணரச் செய்ய சில பயண நிறுவனங்கள் புதிதாக பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றன.சர்வதேச அளவிலான பயணம் குறித்து நாம் விரைவாக 
திட்டமிடுகிறோம் என்று கூட பலருக்குத் தோன்றலாம். ஆனால் அதுவும் உண்மைதான்’ என்கிறது ஆர்ஜென்டினா விமானப் போக்குவரத்து சேவை.தனது விமானப் போக்குவரத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இயக்கும் திட்டமில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த
 முறை விடுமுறை
 நாள் பயணத்திற்கு தான் எந்த முன்பதிவும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், இனிமேல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டால் மக்கள் என்னென்ன மாற்றங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பது சிந்திக்கப்பட வேண்டியதாகும்.விமான நிலையங்களில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் 
என்பதை இங்கு பார்ப்போம்.
அமெரிக்காவில் விமான நிலைய சோதனைக்கு உட்படுத்தப்படும் முன்பும் பின்பும் பயணிகள் இரண்டு முறை விமான நிலையத்திலேயே கை கழுவ வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதுவும் 20 செச்கன்களுக்கு கை கழுவுவது அவசியம் என்றும் அமெரிக்க
 போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.உலகில் உள்ள பல 
விமான நிலையங்களில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் முழுவதும் ‘ஹான்ட் சனிட்டைசர்கள்’ பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்படுவார்கள்.சில நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் முழு உடலையும் கிருமிநாசினி சாதனத்தால் சுத்தம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அதாவது
 உடலின் தோல் மற்றும் ஆடை மீது உள்ள கிருமிகளை முழுவதும் அகற்ற புதிய கருவிகளை உருவாக்கி வருகின்றனர். மேலும் ஒருவரின் ஆடை மற்றும் அவரின் தோல் மீது உள்ள கிருமியை ஒழிக்க 40 செக்கன்கள் மட்டுமே 
ஆகும். அவ்வாறு இந்த நடைமுறையை பின்பற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு
 வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.மேலும், புற ஊதா ஒளியால் நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து அவற்றை அழிக்க தானியங்கி ரோபோக்களையும் பயன்படுத்தப் போவதாக விமானநிலையமொன்று அறிவித்துள்ளது.விமான நிலையத்தில் பயணச்சீட்டுஇ இருக்கை எண் பெற எலக்ட்ரோனிக் இயந்திரங்கள் உள்ள
 விமான நிலையங்கள் அந்த இயந்திரங்களையே நாள்தோறும் முழுமையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. தேவையற்ற தொடர்புகளை
 தவிர்க்க இயந்திரங்களை முழுமையாக பயன்படுத்த எலக்ட்ரோனிக் இயந்திரங்கள் உதவும்.ஏற்கனவே விமான நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட உடல் வெப்பம் அறியும் கருவிகளால் பயனில்லை என ‘இன்ட்ரீபிட்’ பயண நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் தொர்ந்டோன் 
கூறுகிறார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>புதன், 6 மே, 2020

கனடாவில் பெண்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் மிரட்டல்.

கனடாவில் வாடகை கொடுக்க முடியாத பெண்களை வாடகைக்கு பதில் பாலுறவுக்கு அழைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.2013ஆம் ஆண்டு, St. John’s பகுதியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தனர் Judy Whiteம் அவரது காதலரும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக
அவரது காதலர் அவரை கைவிட்டுச் செல்ல, Judyக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.வாடகை கொடுக்க முடியாத
 ஒரு நிலை ஏற்பட்டபோது, Judyயைப் பார்த்து கண்ணடித்த அவரது வீட்டு உரிமையாளர், வாடகையில் தள்ளுபடி தருகிறேன், பதிலுக்கு 
என்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.முதலில் சும்மா வேடிக்கைக்காக அவர் சொல்லுகிறார் என்று எண்ணியிருக்கிறார் Judy.
ஆனால், வீட்டு உரிமையாளர் Judyயை விட்டபாடில்லை.இந்த பிரச்சினை Judyக்கு மட்டுமல்ல… உள்ளூர் அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், தங்கள் வீட்டு உரிமையாளர் வாடகைக்கு பதில் பாலுறவுக்கு
 அழைப்பதாக தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, உதவ யாருமற்ற பெண்கள், அதிலும் இளம்பெண்கள், மிகப்பெரிய செல்வந்தர்களாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களால் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படுவதாக தொண்டு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.Judyயின் வீட்டு 
உரிமையாளர் பல நாட்கள் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஒரு நாள் மதியம் ஒரு முடிவெடுத்திருக்கிறார் அவர்.மறுநாள் காலை பெட்டி படுக்கையுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் Judy.அவருக்கு போக வேறு இடம் இருந்ததால், அவர் தப்பி விட்டார்…ஆனால் போக்கிடமற்ற பெண்களின் நிலை?

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>ஞாயிறு, 3 மே, 2020

போயிங் கொரொனாவின் எதிரொலி 16 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்கின்றது

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் 16 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் போயிங் 777, மற்றும் 787, டிரிம்லைனர் 
உள்ளிட்ட பல்வேறு ரக பயணிகள் விமானத்தை
 தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.தற்போது அமெரிக்காவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து உற்பத்தி நிறுத்தப்பட்டது. விமான பயணத்தின்
 தேவையும் குறைந்தது. கடந்த முதல் காலாண்டில் இந்நிறுவனத்திற்கு 1.7 பில்லியன் டொலர் வருவாய் இழப்பு 
ஏற்பட்டதாகவும், மேலும் விமான தயாரிப்புக்கான பணிகள் நிறுத்தப்பட்டதால், கடும் பொருளாதார 
நெருக்கடியில் உள்ளது. இதையடுத்து 16 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும், உற்பத்தியையும் சற்று குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஒரேயடியாக அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை ரத்துச் செய்யத் திட்டம்

அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் சூழல் ஏற்படவில்லை என்றால், ரத்து செய்யப்படும் என அதன் தலைவர் யோஷிரோ மோரி (Yoshiro Mori ) தெரிவித்திருக்கிறார்.-
ஜூலை மாதம் நடக்கவிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கமும், ஜப்பான் அரசும் கடந்த மாதம் அறிவித்தன. இந்த
 நிலையில், ஜப்பானின்.
 விளையாட்டு நாளிதழான நிக்கான் ஸ்போர்ட்சுக்கு (Nikkan Sports) யோஷிரோ மோரி அளித்த பேட்டியில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் ஒலிம்பிக் ரத்து செய்யப்படும் என்று 
மறைமுகமாக கூறினார்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>