நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 28 நவம்பர், 2018

நாபொலி நகரில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையர்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
 இத்தாலி, நாபொலி நகரில் வாழும் இலங்கை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்நாட்டவருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில், இலங்கையர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொடூர தாக்குதலில் காயமடைந்த இலங்கையர் 
கோமா நிலைக்கு சென்றுள்ளார்
அதன் பின்னர் 3 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
 உயிரிழந்தவர், வென்னப்புவ, பொரலெஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த அஷோக பெர்ணான்டோ எனப்படும் 2 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 கடந்த வெள்ளிக்கிழமை காயமடைந்த இலங்கையினரினால் நடத்தி செல்லும் வர்த்தக இடம் மற்றும் கட்டடத்தின் உரிமையாளரான இத்தாலி நாட்டவர் மற்றும் அவரது சகோதரர் குறித்த இடம்தொடர்பான வாடகை பணத்திற்கு மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
 இலங்கையருடன் ஆரம்பத்தில் வாய்த்தகராறில் ஈடுபட்டவர்கள் பின்னர் அந்த சம்பவத்தை மோதலாக மாற்றியுள்ளனர்.
 மோதலின் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கையர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
 எனினும் அவர் அருகில் இருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தது.
மேலும், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் 
தெரிவிக்கின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 26 நவம்பர், 2018

மாப்பிள்ளை அடிக்கும் கூத்து மணமேடையில் வேறொரு பெண்ணுடன்

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்கமுடியாத நிகழ்வாகும். திருமணத்தின் போது மணமக்கள் மகிழ்ச்சியுடனே இருப்பார்கள்.அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பின்பு இருவரும் தனக்கு வந்த சொந்தத்தினை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதையும் அவதானித்திருப்போம்.
ஆனால் இங்கு மணப்பெண்ணின் பரிதாபநிலையினை நீங்களே பாருங்க… மணமேடையில் மணமகளை அருகில் வைத்துக்கொண்டு மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். இதனை அவதானித்த மணப்பெண்ணும் எதுவும் பேசாமல்
 பார்த்துக் கொண்டிருக்கிறார்
நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஆங்கிலேயர் தமிழ்ப் பெண்ணை மணந்து தமிழ்நாட்டிலேயே விவசாயத்தில்

நாம் நம் பாரம்பரியத்தை மறந்து பீட்சா, பர்கர் என பன்னாட்டு உணவுகளை தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் பிரித்தானியாவை பிறப்பிடமாகக் கொண்ட கிருஷ்ணா, தமிழ் கலாச்சாரத்தின் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் ஆர்வம் கொண்டு தமிழ் பெண்ணை திருமணம் செய்து தமிழ்நாட்டின் மருமகன் ஆனார். தற்போது புதுச்சேரி அடுத்த
 ஆரோவி பகுதியில் 6 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பாரம்பரிய இயற்கை விவசாயத்தின் மீதும், உணவின் மீதும் தீரா காதல் என்றே கூறலாம்.அந்த காதலால் தன்னுடைய நிலத்தில் விளையும் காய், பழங்களை கொண்டு இயற்கை உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது இயற்கை உணவை விரும்பி சாப்பிடும் வெளிநாட்டவர்கள் ஏராளம்.
இந்த மண்ணை இவர் தெய்வமாக
 பார்க்கிறார்.
தமிழ்நாட்டு மண்ணின் பெருமை குறித்து அவர் கூறுகையில், சென்னையில் தண்ணீர் குடிப்பதற்கு லாரி வருகிறது. இப்படி எத்தனை வருடம் இருக்கமுடியும்.
தண்ணீர் தான் மிகவும் முக்கியம். அதுமட்டுமா எந்த காய்களில் பார்த்தாலும் மருந்து இருக்கிறது. இப்படி இருக்கும் காய்களை சாப்பிடும் போது புற்றுநோய், டையாபடிஸ், உயர் இரத்த அழுத்தம் வரும்.நாம்முடைய இயற்கை வழி பின்னோக்கி சென்றுவிட்டது.
இயற்கை காய்களை சாப்பிடுங்க, தமிழ் கலாச்சாரத்தில் இருக்கும் வாழை பூ, வாழை தண்டு, சுண்டைக்காய் போன்றவை மிகவும் உடலுக்கு நல்லது, அது எல்லாம் சாப்பிடுங்க, நம்முடைய மண் தான் தெய்வம், அதை பார்த்து கொள்ள வேண்டும்.இப்போது நான் என்னுடைய தோட்டத்தில் கிடைக்கும் காய்களை சமைத்து தரும் போது அவ்வளவு ருசி இருக்கும், ஆனால் 
கடைகளில் அது இருக்காது.
மேலும், தற்போது இருப்பவர் நாம் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அது எல்லாம் ஒரு மாயை அவ்வளவு தான் வரும் போகும்.
பிரித்தானியாவில் சாப்பட்டு டேபிளில் பீர் தான் கலாச்சாரம், நான் ஒரு வெள்ளைக்காரம் எனக்கு என்ன தெரியும் என்னை விட தமிழ் நாட்டு மக்களுக்கு நிறைய தெரியும், என்னுடைய மாமனார் விவசாயி, அதை நான் மீட்டு கொண்டு வர முயற்சிக்கிறேன் 
என்று கூறியுள்ளார்.
இவர் மனைவி தற்போது என்ன செய்கிறார், அவர் பெயர் என்ன என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை
நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 22 நவம்பர், 2018

நாட்டில் இணையத்தின் மூலம் ஆவணங்களை உடன் பெறலாம்

இலங்கையில் முதன் முறையாக இணையத்தின் மூலம் முக்கிய ஆவணங்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
நாட்டின் எல்லாப் பாகங்களிலும் இருந்து மக்கள் தங்களின் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்
 தெரிவித்துள்ளார்.
 பொது மக்கள் இதற்கான விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வதற்கான கட்டணத்தினை செலுத்தி உடனடியாக பிரதிகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 கால விரயத்தினையும் பண விரயத்தினையும் தவிர்க்கும் முகமாக அரசாங்கம் இவ்வாறான செயற்திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணையக் கணினி வசதியின் ஊடாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த வசதிகளை பொது மக்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளார்.
 1960 ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையான பதிவுகளை எதிர்வரும் 29ம் திகதி முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் பெற்றுக்
 கொள்ள முடியும்.
 தற்போது அந்த அந்தப் பிரதேச செயலகப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் விவாக, பிறப்பு, இறப்பு பதிவுகளை மாத்திரமே பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி நடைமுறையில் உள்ளமை 
குறிப்பிடத்தக்கது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு கனடாவில் அதிகரிப்பு

கனடாவில் தேசிய படுகொலை விகிதம் கடந்த ஒரு தசாப்தத்தில் இல்லாத வகையில் கடந்த ஆண்டு கடுமையான அதிகரிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறை கும்பல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடுகளின் அதிகரிப்பே இப்படுகொலை அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது


அமீரகத்தில் காதலனை வெட்டி பிரியாணி சமைத்து சாப்பிட்ட காதலி

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் ஒருவர் தனது காதலனை வெட்டி பிரியாணியாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொராக்கோவை சேர்ந்த பெண் ஒருவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் வேலை பார்த்து வந்த மொராக்கோ நாட்டை சேர்ந்த வாலிபருடன்
 காதல் ஏற்பட்டது.
இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அந்த வாலிபர் தனது காதலியிடம் வேறு ஒரு பெண்ணை திருமணம்
 செய்யவிரு ப்பதாக கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண், காதலனை வெட்டிக் கொன்று அதில் பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளார். பின்னர் காதலனின் மற்ற உடல் பாகங்களை நாய்க்கு போட்டுள்ளார்.
இதனையறிந்த போலீஸார் அந்த சைக்கோ பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 20 நவம்பர், 2018

சமூக வலைத்தளங்கள் உலகம் முழுதும் முடங்கியது

உலக புகழ் பெற்ற பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பல நாடுகளில் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் வலைத்தளங்களே இவ்வாறு முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான காரணம் என்ன என இதுவரையில் தகவல் வெளியாகவில்லை.
எனினும் பேஸ்புக் நிறுவனம் இது தொடர்பில் இதுவரையில் அறிக்கை ஒன்றையும் வெளியிடவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் இந்த வலைத்தளங்கள் முடங்கியுள்ளதாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.


வியாழன், 8 நவம்பர், 2018

கண்ணீரில் மூழ்கடித்த இந்தோனேஷிய விமான விபத்து திட்டமிட்ட சதியா

உலக மக்களை கண்ணீரில் மூழ்கடித்த இந்தோனேசிய விமான விபத்தானது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்ற தகவல் கசியத்துவங்கியுள்ளன.189 பேரை பலிவாங்கிய போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் தொடர்பில் அதிகாரிகள் தரப்பில் ஏற்பட்ட கடும்
 அக்கறையின்மையே
 முக்கிய காரணம் எனவும் தெரியவந்துள்ளது.குறித்த விமானத்தின் Flight Data Recorder-ல் பதிவான தகவல்களின் அடிப்படையிலேயே விமான விபத்து தொடர்பான காரணிகள் அம்பலமாகியுள்ளன.
மட்டுமின்றி விபத்தில் மர்மம் இருப்பதாக 
பயணிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.இத்தனை பிரச்னைகள் இருந்து குறித்த விமானத்தை ஏன் பயணத்திற்கு அனுமதித்தீர்கள் என்ற கேள்வியும் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் வேகத்தை காட்டும் கருவியானது தொடர்புடைய விமானத்தின் கடந்த 4 பயணங்களிலும் கோளாறாக இருந்தது என தெரியவந்துள்ளது.மேலும், விபத்துக்குள்ளான 
விமானத்தின் CVR எனப்படும் Cockpit Voice Re
corder இதுவரை நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.விமானம் புறப்பட்டு வெறும் 13 நிமிடங்களிலையே 
விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்துள்ளது.இச்சமயம் விமானிகள் பேசிக்கொண்ட உரையாடல்கள் பதிவான கருவி கிடைக்கும் எனில் விபத்துக்கான முக்கிய ஆதாரம் சிக்கும் 
என கூறப்படுகிறது.
இதனிடையே 737 போயிங் விமானத்தின் வேகத்தை காட்டும் கருவியில் கோளாறு இருப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு போயிங் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.
சர்வதேச அளவில் இதுவரை போயிங் நிறுவனம் 219 விமானங்களை கைமாறியுள்ளனர். மேலும் அடுத்த சில ஆண்டுகளில் மொத்தம் 4,564 விமான கட்டுமானங்களுக்கான ஒப்புதலையும் பல்வேறு நிறுவனங்களில் இருந்தும்
 பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் சேவையை துவங்கிய போயிங் 737 மாக்ஸ் ரக விமானம் விபத்தில் சிக்குவது இது முதல் 
முறையாகும்.