நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் கார் ரூ.6 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் 
விபத்தில் பலியானார். 
அவரது 25-வது நினைவு தினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் வகையைச் சேர்ந்த ஒரு கார் இங்கிலாந்தில் 28-08-2022.அன்று  ஏலத்தில் விடப்பட்டது. 
இந்த ஏலத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் பலர் கலந்து 
கொண்டனர். 
1 லட்சம் பவுண்டில் (சுமார் ரூ.93 லட்சம்) ஆரம்பிக்கப்பட்ட ஏலம், பலத்த போட்டிக்கிடையே 6 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டில் (சுமார் ரூ.6 கோடியே 10 லட்சம்) நிறைவடைந்தது. இங்கிலாந்தை சேர்ந்த நபர் காரை 
ஏலத்தில் எடுத்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் தூங்கிய எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானிகள்

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 விமானமானது சூடான் நாட்டின் கர்டொம் நகரில் இருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி  
சென்று கொண்டிருந்தது. 
அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் 37,000 அடி உயரத்தில் தானியங்கி விமானம் இயக்கியை  செலுத்தி விட்டு தூங்கி இருக்கின்றார்கள். இந்த சூழலில் அட்டிஸ் அபாபா நகருக்குள்
 நுழைந்த விமானம் தரையிறங்குவதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பையும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து பறந்து
 கொண்டே இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான கட்டுப்பாட்டு  அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் விமானிகள் கடுமையான உறக்கத்திலிருந்ததால்  கட்டுப்பாட்டு அறையின்  அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. 
இந்த சூழலில் தரையிறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பயணித்ததால் தானியங்கி விமான இயக்கி பலத்த  ஓசை எழுப்பி நின்றிருக்கின்றது. மேலும் இந்த சத்தத்தினால் தூக்கம் கலந்த விமானிகள் விமானத்தை திசை திருப்பி மீண்டும் ஓடு பாதைக்கு கொண்டு சென்று கரை இறக்கி உள்ளனர். 
விமானிகளின் தூக்கத்தால் 2.5 மணி நேரம் பயணிகள் வானில் பறந்தபடியே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  சம்பவத்தால் அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>புதன், 17 ஆகஸ்ட், 2022

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அழிந்த டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் கொண்டுவர முயற்சி

ஆஸ்திரேலியாவின் 'டாஸ்மேனியன் புலி' உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழித்தன. 
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது. 
இந்த நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். 
டாஸ்மேனியன் புலியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த சமீபத்திய திட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக 
விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் வந்துள்ளது. 
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரிவ் பாஸ்க் பேசும்போது, "இதற்காக டாஸ்மேனியன் புலியை போன்ற ஜீன் அமைப்புடைய விலங்கின் ஸ்டெம் செல்லை பிரித்து எடுக்க இருக்கிறோம். 
பின்னர் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் டாஸ்மேனியன் புலியை மீண்டும் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>