நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 31 ஜனவரி, 2017

பாடசாலையின் வாயிலில் மாணவன் படுகொலை

நேற்று மதியம் 1.00 மணியளவில், பரிஸ் 20 இல், பிரபல பெயார்- லாச்செஸ் மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள, professionnel Charles-de-Gaulle இன் மாணவன் ஒருவர், லிசே வாசலில் வைத்துக் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளி அங்கிருந்து தப்பியோடியுள்ளான். உடனடியாக அவசரசிகிச்சைப் படையினரும், காவற்துறையினரும் வந்தும், மாணவனைக் காப்பற்றியிருக்க முடியவில்லை.
இது இளைஞர்களிற்கிடையில் ஏற்பட்ட ஒரு தகராற்றினால் நடந்த கொலை எனவும், சந்தேகத்திற்குரிய இருவர், லிசே வாசலில் காணப்பட்டதாகச் சாட்சியங்கள் தெரிவித்ததாகவும், காவற்துறையினரின் முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கத்திக்குத்திற்கு இலக்காகிய 17 வயது மாணவனின், நெஞ்சு விலாப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. சாவதற்கு முன்னர், தானே கத்தியை வெளியே பிடுங்கி உள்ளார். மேலதிக விசாரணைகள் பரிசின் காவற்துறையினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இன்னமும் கொலைக்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை எனக், காவற்துறையினரின் விசாரணைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 29 ஜனவரி, 2017

உங்களை அமெரிக்கா விரட்டினால் கனடா வாருங்கள்!?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள 7 இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான தடை உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு. தனது டுவிட்டர் கணக்கில் இப்படி கூறியுள்ளார். ” போர், தீவிரவாதம், பாதிப்புகளில் இருந்து தப்பித்து பிழைக்க வருபவர்களை கனடா மக்கள் 
வரவேற்பார்கள்.

உங்களது மத நம்பிக்கையை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளமாட்டோம். (எந்த மதத்தினராக இருந்தாலும் வரவேற்போம்). பன்முகத் தன்மையே நமது வலிமை.#welcomecanada, ” இவ்வாறு 
தெரிவித்துள்ளார்.
 அரசன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி என்பதற்கு ஏற்ப கனடா மக்கள் தங்கள் பிரதமரின் அறிவிப்பை ஒருமனதாக வரவேற்றுள்ளனர். அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களில், 1லட்சத்து 50 ஆயிரம் பேர் அவரது போஸ்டிற்கு லைக் கொடுத்துள்ளனர். அவர் உருவாக்கிய #welcometocanada என்ற ஹேஸ்டேக் கனடாவில் டிரென்டிங்கில் 
முதல் இடத்தில் இருக்கிறது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



அவசர வேண்டுகோள் பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு !!!

அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள் நீடிப்பு,பிரான்சில் நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது . அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு 
நடத்தப்பட்டது.
இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதித்தான், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீடிக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவசரகால நிலை நீடிப்பினால் போலீசார் சந்தேகிக்கும் இடங்களில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு அமுல் செய்து சுற்றி வளைப்புத் தேடுதல் நடத்தலாம் சந்தேகப்படும் யாரையும் கைது 
செய்யலாம்,
பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் இவ்விடயத்தில் முன் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ளவும் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள், ஒரு குறிப்பிட்ட பகுதி பொலிசாரின் தீவிர கண்காணிப்புப் பகுதியாக உள்ளது அதில் பாரிஸ் நகரம் முன்னுரிமை கொடுக்கப் பட்டுள்ளது,
பாரிஸ் நகரத்தின் லாச்சப்பல் பகுய்தி பல நாடுகளைச் சேர்ந்தோர் நடமாடும் பகுதி இந்தப் பகுதியில் பாரிய குற்றச் செயல்கள் பதிவாகி உள்ளதுடன் தீவிர கண்காணிப்பிலும் உள்ளனர் அங்கு பரவலாக ஈழத் தமிழ் மக்கள் வாழும் பகுதியாகும்.
அப்பகுதிக்கு தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்வதுடன் அனாவசியப் பிரச்சனைகளில் இருந்தும் தமிழ் மக்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் உங்களுக்கான விசா நடைமுறை நீண்டகாலப் போராட்டத்தில் சட்டபூர்வமாக பெறப்பட்டுள்ளது எனவே தயவுடன் தமிழ் மக்கள் எந்த வித குற்றச் செயலிலும் சம்பந்தப் படாமல் இருக்குமாறு 
வேண்டுகிறோம்,
வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில்,அதுவரை இந்த அவசரகால நிலை நீடிக்கப் பட்டுள்ளது இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் நீங்கள் சரிய குற்றத்தில் சம்பந்தப் பட்டாலும் அது உங்களது எதிர் காலத்துக்கு கேள்விக்குறியாக அமைந்துவிடும்.
முடிந்தவரை அனாவசியமாக ஓன்று கூடுதல்,சிறு கலவரங்கள்.சிறு ஆயுதப் பிரயோகம்.அச்சுறுத்தல் கற்பழிப்பு ஆட்கடத்தல்களில் பங்கு கொள்ளல்,மதுபான நிலையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் குழப்பம் விளைவித்தல் என்பன சாதாரண நேரத்தில் நடப்பதைவிட அவசர கால நிலையில் நடந்தால் 1/3 என்ற வீதத்தில் குற்றவியலில் நீங்களும் உள்ளடக்கப்படுவீர்கள்.
அப்படி உள்ளடக்கப் படும் பொது சில நேரங்களில் உங்களது பிணை மனு கூட நிராகரிக்கப் பட்டு நீண்டகாலம் சிறையில் இருக்க நேரிடும் நாடுகடத்தப் பாடவும் கூடும் விசாவுக்கு விண்ணப்பித்தோர்,அகதியாகப் பதிந்தோர்.பதிய இருப்போர்கள், இவ்விடயத்தை
 கவனிக்கவும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 26 ஜனவரி, 2017

ஏழு நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடைஉத்தரவு !!

அமெரிக்காவிற்குள் நுழைய 7 நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு தடை : டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு !!
அமெரிக்காவில் புகலிடம் கோரி வரும்ஏழு நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக தடை விதிக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது அமெரிக்காவில் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பேன் எனவும், மெக்ஸிகோ மற்றும் அமெரிக்க எல்லையில் சுவரை எழுப்புவேன் எனவும் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் முதற்கட்டமாக மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பணிகளுக்கு டொனால்ட் டிரம்ப் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ரைட்டர் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவில் புகலிடம் கோர ஏழு நாடுகளுக்கு டிரம்ப் தற்காலிகமாக தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சிரியா, ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த அகதிகளுக்கு டிரம்ப் உடனடியாக தடை விதிக்க உள்ளதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளன.
டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
‘சர்வதேச அளவில் அமெரிக்கா மீது ஒருவித அச்சத்தையும் அதிருப்தி நிலையையும் இந்த உத்தரவு ஏற்படுத்தி விடும்’ என கடும் விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 20 ஜனவரி, 2017

மனைவிக்கு நேர்ந்த அவலம் கொலை செய்து சூட்கேஸில் அடைத்த கணவன்?

லண்டன் - லீசெஸ்டர்ஷயர், எவிங்டன் என்ற இடத்தில் இந்திய வம்சாவளிப் பெண் ஒருவரின் சடலத்தை பயணப்பை (சூட்கேஸ்) ஒன்றில் அடைத்த குற்றச்சாட்டுக்காக குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரண் டோடியா (46) என்ற பெண்ணையே கொலை செய்து அவரின் உடலை பயணப்பையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளது.
கிரண் டோடியாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர் கடந்த 17 வருடங்களாக லண்டனில் பணியாற்றி வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எவிங்டன் என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் பயணப்பை ஒன்று இருப்பதைக்கண்டு அந்த நாட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நாட்டு பொலிஸார் குறித்த பெண்ணின் சடத்தை பயணப்பையிலிருந்து எடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கிரணின் கணவர் அஷ்வின் டோடியாவை (50) லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர் என செய்தி வெளியாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 8 ஜனவரி, 2017

கனேடிய பொலிஸாரிடம் 200,000 டொலர் மோசடிசெய்து சரணடைந்த இலங்கை தம்பதியினர்

பண மோசடியில் ஈடுபட்ட இலங்கை தம்பதி கனடா பொலிஸில் சரணடைந்துள்ளதாக செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
கணவன் – வயது 57, மனைவி வயது – 54 ஆகியோரே போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர்.
2015ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் முதல் தடவை விண்ணப்பித்து பெருந்தொகை ரொக்க பணத்தை கடன் பெற்றனர்.
இதே போல 200,000 டொலர்களை புதிதாக விண்ணப்பித்து கடன் பெற்ற நிலையிலேயே மாட்டிக் கொண்டுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் உண்மையான ஆவணங்களை காண்பித்து சட்ட நடவடிக்கை எடுத்தார்.
இருவரின் புகைப்படங்களையும் பொலிஸார் வெளியிட்ட நிலையிலேயே வேறு வழி இல்லாமல் இவர்கள் சரணடைந்தனர்.
பின்ஞ் அவனியூ வேஸ்ட் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 24ம் திகதி இடம்பெறவுள்ளது.
5000 டொலர்களுக்கு மேல் மோசடி செய்ததாக 
வழக்கிடப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 4 ஜனவரி, 2017

யோகி ஆரூடம் நடப்பாண்டில் உலகத்தில் ஏற்படவுள்ள ஆபத்துக்கள்!

2017ஆம் ஆண்டு உலகில் நடக்கவுள்ள விசேட சம்பவங்கள் தொடர்பில் இந்தியாவில் வாழும் பிரித்தானிய நாட்டு யோகி ஒருவர் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.
அவரால் வெளியிடப்பட்டுள்ள ஆரூடங்களில் 65 வீதமானவைகள் சரியாக நடந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஆரூட பட்டியல் பின்வருமாறு,
நிதி முறைக்கேடு தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கமைய ஹிலரி கிளின்டன் அரசியலில் இருந்து 
ஓய்வு பெறுவார்.
டென்மார்க் மற்றும் இத்தாலி, ஐரோப்பாவில் இருந்து விலகும். இத்தாலி பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.
ஐரோப்பா மற்றும் உலகம் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். (ரோம், மெட்ரீட், பர்லின், பரிஸ் மற்றும் பரகுவே நாடுகளுக்கு கடுமையான அழுத்தம் ஏற்படும்) 
ஜேர்மனியின் பாரிய கட்டடங்கள் தீ விபத்தினால் அழிந்து போகும்.
உலக பொருளாதார நெருக்கடியில் பிரித்தானியா, இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா தப்பித்து விடும்.
அமெரிக்காவினுள் அரசியல் கருத்து முரண்பாடு பாரிய அளவில் அதிகரிக்கும்.
அமெரிக்காவில் பாரிய வறட்சி ஏற்படும். ஐரோப்பா வெள்ளத்தினால் பாதிப்பேற்படும்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தினுள் பாரிய தீ விபத்தொன்று ஏற்படும்.
ஆப்கானிஸ்தானில் மோதல் அதிகரிக்கும்.
ஜஸ்லாந்தின் எரிமலையில் வெடிப்பேற்படும். நேர்வோயின் வானத்தில் நச்சு வாயு நிறையும்.
விண்வெளி கணினி தரவுகளை திருடுவது குறித்து சீனா அமெரிக்காவுக்கு இடையில் மோதல் ஏற்படும்.
சர்ச்சைக்குரிய சீன கடல் எல்லைக்காக ஜப்பான் ஆயுதத்தை கையில் எடுக்கும்.
வடகொரிய தலைவர் கிம் ஜோ உன்னின் அதிகாரம் குறைக்கப்படும்.
டிசம்பர் மாதம் காஷ்மீர் வடக்கு எல்லை உரிமைக்காக இந்திய சீனாவுக்கு இடையில் நெருக்கடி நிலை ஏற்படும்.
ஷேக்ஸ்பியரின் உடற்பாககங்கள் கண்டுபிடிக்கப்பட்ட கதை பொய்யாகும். அவரது உண்மையான கல்லறை கண்டுபிடிக்கப்படும்.
ஐரோப்பிய பாடசாலைகள் சிலவற்றிற்கு தீவிரவாதிகளின் தாக்குதல் மேற்கொள்ளப்படும்.
அமெரிக்க மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இரகசிய உறவு கட்டியெழுப்பப்படும். சிரியா இரண்டுப்படும். ஒகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா பொருளாதாரத்தில் வீழ்ச்சியான நிலை ஏற்படும்.
ரோம் பாப்பாண்ட வரை இலக்கு வைத்து மற்றுமொரு தாக்குதல் மேற்கொள்ளப்படும். முயற்சி தோல்வியடையும். நவீன சினிமா தொழில்நுட்பம் உருவாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 3 ஜனவரி, 2017

பிக் அப் ட்ரக் மினி வேன் – மோதியதில் 25 பேர் பல!

தாய்லாந்தில், மினி வேன் ஒன்றும் பிக் அப் ட்ரக் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்தின் கிழக்கு மாகாணத்தின் சோன்புரியில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்தது.
விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களிலும் ஆட்கள் நிறைந்திருந்ததாகவும், வளைவு ஒன்றில் திரும்பிய மினி வேன் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து, எதிரே வந்த பிக் அப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் 
தெரிவித்தனர்.
வாகனங்கள் மோதிய அதிர்ச்சியில் சிலரும், விபத்தினால் ஏற்பட்ட தீயில் கருகி மற்றவர்களுமாக 25 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களுள் இரண்டு கைக்குழந்தைகளும் அடக்கம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
6