நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 29 ஆகஸ்ட், 2018

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி உருவாக்கியுள்ளார்

சீனாவைச் சேர்ந்த ஒருவர் மரத்திலான மிதிவண்டி ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில், 55 வயதான கன்சு ப்வின்விங் என்பவர் மர மிதிவண்டியினை தயாரித்துள்ளார். இதனை உருவாக்குவதற்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் இருக்கை மற்றும் கைபிடி சக்கரங்கள் என அனைத்துமே மரத்தினால் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மர சைக்கிளை 30, 000 தருவதாக கூறி, வியாபாரிகள் முன்வந்து கேட்டும் தான் விற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதற்கு காரணம் தனது கலைப்படைப்பை விற்க விரும்பவில்லை என, கன்சு ப்வின்விங் மறுத்துவிட்டார்.
கன்சு ப்வின்விங் தனது சிறுவயது முதலே தச்சு தொழில் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுப்பு இலங்கை அகதி தற்கொலை

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை வவுனியா கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நல்லதம்பி வசந்தகுமார் (வயது 45) என்ற 4 பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நவுறு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்து, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரிஸ்பேன் நகருக்கு வந்திருந்தாலும், அவருக்கு நிரந்தர வதிவிட வீசாவோ, புகலிடமோ கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பிரிஸ்பேன் லோகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த இலங்கை தமிழர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனால், அவர் மூளைச்சாவடைந்துள்ளார்.
சிகிச்சைகள் பலனளிக்காது என மருத்துவர்கள் முடிவெடுத்த பின் அவருக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5:45 மணியளவில் நல்லதம்பி வசந்தகுமார் என்ற இலங்கைத் தமிழர் உயிரிழந்துள்ளார் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிரிட்டனில் ரத்த வெள்ளத்தில் தாயும் மகளும்: கொலை

பிரிட்டனின் Birmingham அருகே Solihull பகுதியில் உள்ள சாலையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், தாயும், மகளும் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 22 மற்றும் 49 வயதுடைய தாய், மகள் இறந்த நிலையில் கிடப்பதை உறுதி செய்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,
சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு ஆண் என்பது தெரியவந்துள்ளது. தற்போது குற்றவாளியை பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கூறியதாவது;
நேற்று இரவு திடீரென பெண் ஒருவர் பயங்கரமாக கத்தும் சத்தத்தை கேட்டேன். அவர் கத்தும்பொழுது வேறு ஏதோ ஒரு மொழியில் பேசினார்.
அவர் பேசியது ஆங்கிலம் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சத்தம் கேட்டு வெளியில் வந்த பொழுது, ஒரு நபர் அந்த இடத்திலிருந்து வேகமாக ஓடினார் என்று கூறியுள்ளார்.
தற்போது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
 ஏற்படுத்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வதிவிடஅனுமதிப்பத்திரத்தைக்தை பிரான்சில் கோருவதற்கான வழிகள்

பிரான்சில் பல ஆண்டுகளாக வதிவிட உரிமைப் பத்திரம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வாழ்கையை முன்னகர்த்திச் செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர்.
இதனால் பலர் சட்டத்திற்குப் புறம்பான வகையில், இன்னொருவருடைய வதிவிட உரிமைப் பத்திரத்தில் களவாக வேலை செய்து வருகின்றனர். இனி, நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
ஒத்துழைப்பு சான்றிதழ் (Attestation de Concordance) என்பதை விளங்கிக் கொள்வதனூடாக பல வருடங்களாக
இன்னொருவருடைய வதிவிட உரிமைப் பத்திரத்தில் வேலை செய்து வந்தவர்கள்
தங்களைப் பதிவு செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்த முடிகிறது.
விசா இன்மையால் வேலையிடத்தில் தங்களுடைய உண்மையான தகவல்கள் அடங்கிய பதிவொன்றை ஏற்படுத்த முடியாமல் அவதியுறுவோர், உங்கள் வேலை நிறுவனத்தால் ‚Attestation de Concordance‘ கிடைக்கும் பட்சத்தில் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் தங்களுடைய வதிவிட அனுமதிப்பத்திரத்தைக் கோருவதற்கான வழி வகைகளை தாராளமாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
✔️ நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.
-பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இலங்கை கடவுச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
-கீழேயுள்ள படிவத்தை Download செய்து, ஆரம்பத்தில் உங்களது தகவல்களையும், ‚Cette Embauche s’est Effectuée l’identité‘ எனுமிடத்தில் நீங்கள் யாருடைய வதிவிட பத்திரத்தில் வேலை செய்கிறீர்கள் என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.
-நீங்கள் வேலை செய்யும் நிறுவன உரிமையாளரிடம் இதனை விளங்கி, அதாவது வெளிநாட்டினரின் நுழைவு-குடியமர்வு மற்றும் புகலிட உரிமைச் சட்ட விதி ‚L 313-14‘ இன் கீழ் இது ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை தெளிவுபடுத்தி சம்மதம் வாங்கிக் கொள்ளுங்கள். (En application de l’article L. 313-14 du code de l’entrée et du séjour des étrangers et du droit d’asile)
-நீங்கள் வேலை செய்வதற்காக வதிவிட உரிமைப் பத்திரம் கொடுத்த நபரிடமும் இது சம்பந்தமான விளக்கங்களைத் தயக்கமின்றித் தெரியப்படுத்துங்கள்.
-படிவத்தின் இறுதியில், கையெழுத்திட்டவர் வழங்கிய தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என்பதை உங்கள் வேலை நிறுவனம் உறுதிப்படுத்தித் தரும் (Les informations transmises par les signataires sont certifiées authentiques).
-அந் நிறுவனத்தின் கீழ் நீங்கள் தொடர்ந்து வேலை செய்யுங்கள். உங்களிடம் குறைந்தது 6-8 மாத சம்பளப்பத்திரம் இருந்தால், நீங்கள் உடனடியாகவே வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
-உங்களுக்கு ஒரு வருட வதிவிட உரிமை வழங்கப்படும்.
இத் தகவலை
உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து 
கொள்ளுங்கள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 15 ஆகஸ்ட், 2018

பாலம் இடிந்து இத்தாலியில் பலர் உயிரிழப்பு

இத்தாலியின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்த விபத்தில் இதுவரை 26 பேர் பலியானதாகவும், 15 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், பல எண்ணிக்கையிலான வாகனங்கள் 45 மீட்டர் உயரத்தில்
 இருந்து கீழே வீழ்ந்துள்ளன
இதுவரை 12 பேரை காணவில்லை என்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களின் அபயக் குரல்கள் தொடர்ந்து கேட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலி முழுவதிலும் இருந்து வந்த 300 தீயணைப்பு வீரர்கள் மோப்ப நாய்களை கொண்டும், மலையேறும் கருவிகளை கொண்டும் காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.
பாலத்தின் பிற பகுதியும் இடிந்து விழலாம் என்ற அச்சத்தில் நூற்றுகணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதிக மழைபெய்து கொண்டிருந்த சமயத்தில் பாலம் இடிந்து விழுந்துள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், பாலத்தின் பாதுகாப்பு குறித்து கேள்விகளும்
 எழுந்துள்ளன.
இந்த பாலம் இடிந்து வீழ்வதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இத்தாலியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான மொரண்டி பாலம் 1960 ஆம் ஆண்டில் 
நிர்மாணிக்கப்பட்டது.
ஏ10 என்னும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அந்த பாலம், உள்ளூர் துறைமுகங்களில் இருந்து பொருள்களை கொண்டு வருவதற்கான முக்கிய வழியாக அமைந்துள்ளது. பாலம் இடிந்த சமயத்தில் அதன் மேல் 30 தொடக்கம் 35 கார்களும், மூன்று கனரக
 வாகனங்களும் இருந்தன.
பெரிய அடுக்குமாடி கட்டடம் மற்றும் பாலத்தின் சில பகுதிகள் சரிந்து ரயில் தண்டவாளங்கள், நதி மற்றும் பண்ட சேமிப்பு கிடங்கு ஒன்றின் மீதும் வீழ்ந்துள்ளன. தரையில் இருந்த யாரும் இதில் உயிரிழக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.