நிலாவரை .கொம்

siruppiddy
இலங்கைச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 ஜூலை, 2022

கொழும்புத் துறைமுகத்தை திடீரென வந்தடைந்த ஜெர்மனிய போர் கப்பல்

பயர்ன் (Bayern) எனப்படும் ​ஜெர்மனியின் போர் கப்பல், நேற்றைய தினம் (17) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் நாட்டை விட்டு வௌியேறுவதற்கு முன்னதாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில்
 ஈடுபடவுள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனியின் போர் கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.
ஜெர்மனியின் பயர்ன் போர் கப்பல் 1996 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்டது.
அத்துடன், கடற்பரப்பு மற்றும் வான் பரப்பை கண்காணிப்பதற்கான வசதிகளும் அதி சக்தி வாய்ந்த ரேடார் கட்டமைப்பும் 
இதில் உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 24 ஜூன், 2022

தல்கஸ்பிடியவில் இரண்டரை வயதில் சாதனை படைத்த சிறுவன்

இலங்கை கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய எனும் ஊரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனைப் புத்தகத்தில் (International Book of Records) தனது பெயரினை பதிவு செய்து உலக சாதனை படைத்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது உலகச் சிறுவன் எனும் அந்தஸ்தையும் அவர் தனதாக்கிகொண்டார்.
ஏற்கனவே இதையே சாதனையை நிகழ்த்தி ஆசியா சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதிவு செய்த இச் சிறுவன் அண்மையில் உலக சாதனைக்கு விண்ணப்பித்ததுடன் இவரது திறமையை பரிசீலனை செய்து உலக சாதனை சிறுவனாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டதுடன் தற்போது இவருக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பன வீடு
 வந்து சேர்ந்துள்ளன.
முஹம்மட் நுஸ்கி, பாத்திமா ரஸீனா ஆகிய தம்பதிகளின் செல்வப் புதல்வனான இச்சிறுவன் இரண்டு வயதில் இச் சாதனையை நிகழ்த்தி இருப்பதுடன் தனது ஊரில் இவ்வுலக சாதனையை நிகழ்த்திய முதலாவது சிறுவனாக இருப்பது விசேட
 அம்சமாகும்.
மேலும் இந்த குழந்தை சென்ற வருடம் எ.எம்.ஆர் டோக் அமையத்தின் மூலம் சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 22 மார்ச், 2022

அமெரிக்க துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு வருகின்றார்

 

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் (Victoria Nuland) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு
 தெரிவித்துள்ளது.
அவர் இன்று மற்றும் நாளை(23) வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்புக் கொள்கை விவகாரங்களை துணைச் செயலாளர் நுலாண்ட் மேற்பார்வையிடுகிறார். 
குறித்த வருகையின் போது, ​​அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை 
சந்திக்கவுள்ளார்.
துணைச் செயலாளர் நுலாண்ட் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று வர்த்தகத்தை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 23 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சில் நடைபெறும் இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் 04 ஆவது அமர்வுக்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆகியோர் இணைத் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி திடீரென லண்டன் நோக்கிப் பயணமானார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி திடீரென்று லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் படம் எடுத்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.ஒருவருட கற்கை நெறி
 ஒன்றினைப் பூர்த்தி செய்வதற்காக அவர் லண்டனுக்குச் செல்வதாக கூறியுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளராக கடமையாற்றிவரும் வைத்தியர் தங்கமுத்து
 சத்தியமூர்த்தி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின்போது, மக்களுக்காக தொடர்ந்தும் குண்டுமழை 
நடுவில் பணியாற்றியிருந்தமை தெரிந்ததே.மேலும், இலங்கையில் ஊழலற்ற அரச அதிகாரி என்ற விருதையும் கடந்த ஆண்டு இவர் பெற்றிருந்தார்.கொரோனா காலத்தில்
 யாழ் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி சிகிச்சைமையமாக மாற்றப்பட்டதும் அங்கு அனுமதிகப்பட்டிருந்த நோயாளர்களுடன் மிகவும் கரிசனையாக பழகியிருந்தமையும்
 குறிப்பிடத்தக்கதாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 20 அக்டோபர், 2020

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் நடைபெறவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து 
கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 28ம் திகதி 
கொழும்பில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையிலேயே அவர் 
கலந்துகொள்ளவுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 3 செப்டம்பர், 2020

தீப்பற்றியெரியும் பாரிய கப்பல் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில்

 

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் 
உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.கப்பலின் எஞ்ஜின் அறையில்
 ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மீட்புப் பணிகளுக்காக இரண்டு 
கடற்படை கப்பல்கள் குறித்த 
பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சிறிய ரக விமானம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை 
தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 11 ஏப்ரல், 2019

இலங்கை கனடா இடையே முடிவான புதிய ஒப்பந்தம்

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சுக்கும் 
கனடியன் கொமர்ஷியல் கோப்ரேஷன் (Canadian Commercial Corporation) நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.
மின்சக்தி பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக குறைந்த செலவிலான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி முறைகளை கையாளும் முகமாக மகாவலி பொருளாதார வலயங்களுக்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை நிர்மாணிக்கும்
 வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு,
 மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகியன முன்வைத்த பிரேரணைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.
அதற்கமைய பல பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் இவ்வகையான மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையங்களினால் 2030 ஆம் ஆண்டளவில் இந்நாட்டு மின்சார தேவையின் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்சக்தியினால் பூர்த்திசெய்து கொள்வதற்கு
 எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் முதலாவது வேலைத்திட்டம் மகாவலி வலயத்திற்குட்பட்ட மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், சூரிய படல்கள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்கலங்களைக் கொண்டு சூரிய சக்தியை சேமிக்கும் செயற்திட்டம் Canadian Commercial Corporation நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்கு நீர்த்தேக்கத்தில் 500 ஏக்கர் அளவிலான இடத்தை பயன்படுத்த எண்ணியுள்ளதுடன், அந்த பரப்பளவு நீர்த்தேக்கத்தின் நூற்றுக்கு 4 சதவீதத்தைவிட
 குறைந்ததாகும்.
இந்த செயற்திட்டத்தை துரிதமாக நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதுடன், முதலாவதாக 10 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இந்த ஆண்டு நம்பர் மாத இறுதியில் பூர்த்தி செய்வதற்கும் 2020 செப்டெம்பர் இறுதியில் 100 மெகாவோட்ஸ் மின் உற்பத்தியை அடைவதற்கும்
 திட்டமிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
 கலாநிதி சுரேன் பட்டகொட மற்றும் Canadian Commercial Corporation நிறுவனத்தின் ஆசிய வலயத்திற்கான பணிப்பாளர் Yvonne Chin அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர 
திசாநாயக்க ஆகியோரும் மின்வலு, சக்திவலு அமைச்சின் அதிகாரிகளும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் David McKinnon மற்றும் Canadian Commercial Corporation நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 29 ஜனவரி, 2018

யாழில் இங்கிலாந்திலிருந்து சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்$

இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்த ஒருவரை தாக்கி தள்ளிவிட்டு அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடித்து சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரட்டைப்பிரஜாவுரிமை கொண்ட குறித்த நபர் கடந்த மாதம் இலங்கைக்கு வந்துள்ளார். பின்னர் யாழ். ஊர்காவற்துறையில் தங்கியிருந்து வியாபாரம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை காரைநகர் சின்னாலடி பகுதியில் குறித்த நபர் சென்றுகொண்டிருந்த போது அவரை துரத்தி வந்த மூவர் குறித்த நபரை தாக்கி, மோட்டார் சைக்களில் இருந்து தள்ளி விட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடியதுன், வெளிநாட்டு நாணயங்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையின் பெறுமதி 412,460 ரூபாய் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 27, 31, 32 வயதுகளை உடையவர்களாகும்.
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>¨



வெள்ளி, 11 டிசம்பர், 2015

புதிய சுற்றுலா அறிவுறுத்தலை பிரித்தானியா வெளியிட்டுள்ளது?

இலங்கைக்கான புதிய சுற்றுலா அறிவுறுத்தலில் பிரித்தானிய தமிழ் குழுக்களின் தடைநீக்கலையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இரண்டு குழுக்களின் தடை இலங்கையில் நீக்கப்பட்டுள்ளமை 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 20ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தலில் பிரித்தானிய தமிழ் பேரவை மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தடைநீக்கத்தை தமது சுற்றுலா அறிவித்தலில் பிரித்தானிய 
வரவேற்றுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நகர்வு பேச்சுவார்த்தைக்கு வழியை ஏற்படுத்தும் என்று பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலின்படி உலக தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய தந்தை எஸ் ஜே இமானுவேலின் இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையும் நீக்கப்பட்டுள்ளமையையும் பிரித்தானிய சுற்றுலா அறிவித்தல் சுட்டிக்காட்டியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 14 செப்டம்பர், 2015

மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

மூன்று வார காலம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரின்போது இலங்கை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ, ஜெனிவாவிற்கான இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்ஹ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பலரும் ஐ.நா மாநாட்டிற்கு இம்முறை கலந்துக்கொள்ளவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்ட் ராட் செய்ட் அல் உஷைனை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இன்றைய அமர்வின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரை நிகழ்த்தவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.

கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மீண்டும் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உள்ளக விசாரணை குறித்த ஐக்கிய அமெரிக்காவின் அறிக்கையும் இன்று அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இருவிடயங்களும் இலங்கை தொடர்பில் முக்கிய விடயங்களாக காணப்படுவதாகவும் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணை அறிக்கை இலங்கை பிரதிநிதிகளினால் இன்றைய அமர்வில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமாயின் அது மிகச் சிறந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்த மனித உரிமைகள் ஆணையகத்தினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கை குறித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டாது எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹநாமஹெவா சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் மூன்று தசாப்த யுத்தத்தின்போது இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஏற்கனவே ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விளக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 31 ஜூலை, 2015

தமிழர்கள் இன்னும் 30 ஆண்டுகளில் என்ன செய்வார்கள்???

புலம்பெயந்து வாழும் எங்களின் (மரணத்துக்கு பின்பு ) இலங்கைத் தொடர்புகள் முற்றாக அழிந்துவிடும் .
ஏனென்றால் நாங்கள் திருமணம் செய்ய பெண் எடுப்பதும், மாப்பிள்ளை எடுப்பதும் எங்களுடன் முடிவடையும், ஊருக்குப் பணம் அனுப்புவதும் எங்களுடன் முடிவடையும், இலங்கைக்கு விடுமுறையில் செல்வதும் எங்களுடன் முடிவடையும்.
அப்பப்பா, அம்மப்பா, அம்மமா, அப்பமா, மாமா, மாமி என்று நேரில் போய் பார்ப்பதும், கோவில் திருவிழாக்களுக்கு போவதும் எங்களுடன் முடிவடையும். எங்கள் ஆயுளுக்கு பின் எங்கள் பிள்ளைகள் ஏன் அங்கு போவாகள்? எம் அடுத்த சந்ததி இங்கே 
வாழ்க்கைத் துணையை தேடிக்கொள்ளும், அங்கு பணம் அனுப்ப அவர்களுக்கு யாரும் இல்லை, போன் கதைக்க யாரும் இல்லை, அவர்கள் அங்கு tour போகும்போது எதாவது ஹோட்டலில் இருந்து நிலாவரை கிணத்தையும், கீரிமலை,சிகிரியா எல்லாத்தையும் ரசித்துவிட்டு ஒரு வேற நாட்டுகாரர் மாதிரி மட்டும் enjoy பண்ணமுடியும்.
அதோடு நிறைய காசும் 1 நாள் விமானபயணம் செய்து அங்கு ஏன் போவார்கள்? அவர்களுக்கு வரும் girl அல்லது boy friend விரும்புவார்களா? என்ன கொடுமை !!!! எங்களுடன் எங்கள் பிறந்த நாடு 
மறக்கப்படுகிறது... இப்போது நாங்கள் மலேசியா,சிங்கப்பூர் வாழ் தமிழரை எப்படி பார்க்கிறோமோ அதைப்போல எங்கள் பேரப்பிள்ளைகள் இனி யாழ்ப்பாணத்தையும் ஒரு தமிழ் இனம் வாழும் இடமா உலகப்படத்தில் காட்டுவார்கள் !!
- ஆக்கம் பிரகாஸ் ... ( தவிர்க்க முடியாத உண்மை )
கீழே உள்ள முகப்புத்தக இணைப்பை லைக் செய்து எங்களையும் உங்கள் உறவாக உங்கள் முகப்புத்தகத்தில் இணைத்தக் கொள்ளுங்கள்.இந்த இணையத்தை மற்றவா்களுக்கும் பகிா்ந்து எமக்கு உற்சாகத்தைத் தாருங்கள்.சமூகத்திற்கு ஒவ்வாத தகவல்களை நாம் தந்தால் அதனை நிச்சயமாக எமக்குச் சுட்டிக் காட்டி எம்மை வழிநடத்துங்கள்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 17 ஆகஸ்ட், 2013

பிரித்தானியா இலங்கைக்கு மனிதாபிமான உதவி


இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை பிரித்தானியா வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2011ம் ஆண்டு முதல் பிரித்தானியாவால், இலங்கைக்கு 20 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் உதவியளிக்கப்பட்டுள்ளது.
உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இயற்கை மற்றும் மனிதனினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுதல், இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.