நிலாவரை .கொம்

siruppiddy
கனடா செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனடா செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஜூலை, 2022

பணியிட வெற்றிடங்கள் கனடாவில் அதிகரிப்பு விபரங்கள் இதோ

கனடாவில் தற்போது 1,001,100 வேலைக்கான வெற்றிடங்கள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை ஒன்றில் இது குறித்த விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சுகாதாரம் மற்றும் சமூக உதவித் துறைகளில் வெற்றிடங்கள் 136,800 என்ற சாதனையை எட்டியுள்ளன. கட்டுமானத் துறையில் மட்டும் 81,500 வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் உருவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது உதவியாளர் மற்றும் தொழிலாளர் பணிக்கான வெற்றிடங்கள் 97 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், தச்சரருக்கான வெற்றிடங்கள் 149.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உற்பத்தி மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் முறையே 5.3 சதவீதம் மற்றும் 12.8 சதவீதம் உயர்ந்து சாதனை 
உச்சத்தை எட்டியுள்ளன.
கனடாவில் வேலையின்மை பெருமளவில் சரிவடைந்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் தகுதியான ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் தடுமாறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1976க்கு பின்னர் கனடாவில் வேலையின்மை சதவீதம் மிகக் குறைந்த எண்ணிக்கையில், 5.1% என பதிவாகியுள்ளது. இருப்பினும் பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியிடத்தை நிரப்ப 
தடுமாறி வருகின்றன.
மக்கள் கொரோனா பரவலுக்கு பின்னர் தங்களுக்கான வேலையை தெரிவு செய்வதில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 27 மே, 2022

குரங்கு அம்மையால் கனடாவில் 16 பேருக்குபாதிப்பு உறுதி

கனடாவில்16 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிப்புக்குள்ளான 16 பேரும் அங்குள்ள கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டு, உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவதாக கனடா பொது சுகாதார துறை 
தெரவித்துள்ளது.
அவர்களிடம் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கியூபெக் மாகாணத்துக்கு பொது சுகாதார துறை சிறிய அளவில் ‘இம்வாமுனே’ தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது
குரங்கு அம்மை நோய் முதலில் ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது. முதலில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சிலருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


புதன், 17 நவம்பர், 2021

தொடர்மழையால் கனடாவில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

னடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டமையின் காரணமாகப் பலபகுதிகளில் வீதிகள் மூடப்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் ஒரு நகர மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் அப்பகுதியினூடாக செல்லும் எண்ணைக் குழாய்களும் மூடப்பட்டுள்ளன
வான்கூவருக்கு வடகிழக்கே உள்ள மெரிட் நகரத்திலேயே அங்கு வசிக்கும் 7100 பேரும் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 13 ஜனவரி, 2021

கனடாவில்கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்

கனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷெர்ப்ரூக் நகரில் இந்த சம்பவம்
 கடந்த 09-01-2021.சனின்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக
 பாவித்து நடைபயிற்சி செல்வது போல் சென்றுள்ளார். இதனை கவனித்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை 
அவரிடம் விசாரணை நடத்தினர்.
நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன். என்று பதில் அளித்தார். அரசின் அறிவிப்பை மீறியதற்காக இருவர் மீதும் அரசின் விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு கனேடிய டொலர் $ 1546 வரையில் அபராதம்
 விதிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 23 செப்டம்பர், 2020

கனடாவில் காரைத் திருடிச் சென்ற 20 வயது தமிழ் இளைஞன்.

 

கனடா பிராம்ப்டனைச் சேர்ந்த 20 வயது, தமிழ் இளைஞன் சொகுசுக் கார் ஒன்றைத் திருடிச் செல்லும் போது
 பொலிசாரினால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இது செப்டம்பர் 16 அன்று மாலை 4:30 மணிக்கு முன்பு நடந்தது. திருடப்பட்ட 2019 மெர்சிடிஸ் கார் வீட்டின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது 
திருடப்பட்டதாக பிராந்திய காவல்துறை தெரிவித்தது.முதலில் ஒரு பொலிஸ் ரோந்து கார் வாகனத்தை நிறுத்த முயன்றது, 
ஆனால் அதனால், கார்திருடரை துரத்துவது போக்குவரத்து நெரிசலான நேரத்தில் சாத்தியமாகவில்லை. மேலும் காரைத்திருடியவர் அதிகவேகமாக காரைச் செலுத்தியதால் பொலில் கெலிகாப்படர்
 வரவழைக்கப்பட்டு துரத்துதல் தொடர்ந்தது. பட்டப்பகலில் திரைப்படங்களில் வரும் துரத்தல் காட்சிகளைப்போல இது இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 5 செப்டம்பர், 2020

திருமணமாகி சில நாட்களில் கனடாவில் நடந்த கோர விபத்தில் இருவர் பலி

கனடாவில் நேற்று ஏற்பட்ட வீதி விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக ரொரோற்றோ Blue Mountains தெரிவித்துள்ளனர்.ஒன்டாரியாவின் Blue Mountains நகரில் 04-09- 2020.அன்று.இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.Oshawa மற்றும் Whitchurch-Stouffville நகரங்களை சேர்ந்த 29 வயதான இரண்டு தமிழர்களே 
உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் கஜன் தனபாலசிங்கம் என உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இவர் கடந்த 29ஆம் திகதி திருமணம் செய்து கொண்டவர் எனவும் தெரியவருகின்றது.உயிரிழந்த இருவரும் பயணித்த 
Audi sedan கார் வீதியை விட்டு வெளியேறி
 ஒரு மரத்துடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.24 வயதான வாகனத்தின் ஓட்டுநரான Whitchurch-Stouffville நகரை சேர்ந்த 24 வயது இளைஞன் Collingwoodடில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு 
செல்லப்பட்டார். பின்னர் தீவிரமான நிலையில் அவர் விமானம் மூலம் Toronto பகுதி மருத்துவமனைக்கு கொண்டு
 செல்லப்பட்டுள்ளார்.இந்த விபத்து நிகழந்த போது, வாகனத்தில் மூன்று பேர் இருந்ததாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனம் வீதியை விட்டு வெளியேற என்ன காரணம் என்பது குறித்த கால்வதுறையினரின் விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 27 ஜூலை, 2020

கனடாவில் திடீரென மாயமான தமிழ் இளைஞன் கண்டுபிடிப்பு

கனடாவில் காணாமல் போன 28 வயது தமிழ் இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான அதிகாரபூர்வ செய்தி அறிக்கையை ரொரன்றோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.அரூரன் ஸ்ரீதரன் என்ற 28 வயது இளைஞன் கடந்த 23-07-20.ஆம் 
திகதி பகல் 12 மணிக்கு மாயமானார்.அவர் கடைசியாக Port Union Road and Lawrence Avenue East பகுதியில் காணப்பட்டார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.இதோடு அவரின் உடல்வாகு
 குறித்தும் தகவல் வெளியிடப்பட்டது.இந்த நிலையில் அரூரன் ஸ்ரீதரன் தற்போது பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.அவர் நேற்று இரவு 10.30 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 
ரொரன்றோ பொலிஸார் தங்கள் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.மேலும், அரூரன் ஸ்ரீதரன் தொடர்பில் உதவியர்களுக்கு நன்றி என பொலிஸார் சார்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>



வெள்ளி, 10 ஜூலை, 2020

கன டாவில் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் எனத் தெரிவித்து மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.கனடாவின் ரொறன்ரோ
 Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி யாழ்ப்பாணம் கொற்றாவத்தையைச் சேர்ந்த தீபா சீவரட்ணம் என்ற 
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 30-ஆம் திகதி Toronto-வை
 சேர்ந்த 28 வயதான Steadley Kerr என்பவரை பொலிசார் கைது செய்தனர். அவர் மீது இரண்டாம் நிலை கொலை மற்றும் கொலை
 முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.Steadley Kerr வரும் 23-ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக Oshawa-வை சேர்ந்த ஹரி சாமுவேல்ஸ்(27) ரொறன்ரோவைச் சேர்ந்த
 விஜேந்திரன் பாலசுப்பிரமணியம்(42) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.இவர்கள் இருவர் மீதும் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்
 சுமத்தப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 5 ஜூலை, 2020

நீச்சல் குளத்தில் இருந்து கனடாவில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயது சிறுமி!

கனடாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Quebec மாகாணத்தின் Montreal நகரில் தான் இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கிய 3 வயது சிறுமி பேச்சு மூச்சின்றி
 வெளியில் எடுக்கப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு உடனடியாக சிறுமி கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக பொலிசார் கூறுகையில், சிறுமி ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கிவிட்டார் என பகல் 11 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது. பின்னர் மருத்துவ உதவி குழுவினருடன் அங்கு சென்று சிறுமியை மீட்டும் அவரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.
மரணத்தை சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து தற்போது எந்தவொரு விபரமும் எங்களிடம் இல்லை, இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளனர். இதனிடையில் Quebec மாகாணத்தில் இந்தாண்டு இதுவரையில் 35 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கடந்தாண்டு இந்த நேரம் வரையில் நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக இருந்தது
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>


வெள்ளி, 26 ஜூன், 2020

இரவு நேரத்தில் கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழ்ப்பெண்

கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ்ப்பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்
ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.
அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமாரி கடைசியாக கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு Oak St + Parliament St பகுதியில் காணப்பட்டுள்ளார் 
என தெரியவந்துள்ளது.
காணாமல் போன அன்று சசிகுமாரி Blue short sleeve pajama சட்டை மற்றும், பிங்க் pajama பேண்ட் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட சசிகுமாரி குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் 
தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


வெள்ளி, 5 ஜூன், 2020

கோரத் தாண்டவமாடும் கொரோனா கனடாவில் 139 பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய 
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த 
எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது.மேலும், 34,350பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 
வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுதவிர, 1,727பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 6 மே, 2020

கனடாவில் பெண்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் மிரட்டல்.

கனடாவில் வாடகை கொடுக்க முடியாத பெண்களை வாடகைக்கு பதில் பாலுறவுக்கு அழைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.2013ஆம் ஆண்டு, St. John’s பகுதியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தனர் Judy Whiteம் அவரது காதலரும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக
அவரது காதலர் அவரை கைவிட்டுச் செல்ல, Judyக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.வாடகை கொடுக்க முடியாத
 ஒரு நிலை ஏற்பட்டபோது, Judyயைப் பார்த்து கண்ணடித்த அவரது வீட்டு உரிமையாளர், வாடகையில் தள்ளுபடி தருகிறேன், பதிலுக்கு 
என்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.முதலில் சும்மா வேடிக்கைக்காக அவர் சொல்லுகிறார் என்று எண்ணியிருக்கிறார் Judy.
ஆனால், வீட்டு உரிமையாளர் Judyயை விட்டபாடில்லை.இந்த பிரச்சினை Judyக்கு மட்டுமல்ல… உள்ளூர் அமைப்பு ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், தங்கள் வீட்டு உரிமையாளர் வாடகைக்கு பதில் பாலுறவுக்கு
 அழைப்பதாக தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, உதவ யாருமற்ற பெண்கள், அதிலும் இளம்பெண்கள், மிகப்பெரிய செல்வந்தர்களாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களால் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்படுவதாக தொண்டு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.Judyயின் வீட்டு 
உரிமையாளர் பல நாட்கள் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஒரு நாள் மதியம் ஒரு முடிவெடுத்திருக்கிறார் அவர்.மறுநாள் காலை பெட்டி படுக்கையுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் Judy.அவருக்கு போக வேறு இடம் இருந்ததால், அவர் தப்பி விட்டார்…ஆனால் போக்கிடமற்ற பெண்களின் நிலை?

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கனடாவில் பொலிஸ் வேடத்தில் வந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு

கனடாவில் பொலிஸ் வேடத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில், பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட பெண் காவலர் குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கனடாவின் நோவா ஸ்கோடியாவின் Portapique-வில் தான் -19-04.20-ஞாயிறு அன்று இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.இந்த 
துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை பொலிசார் சுட்டு கொன்றனர். தற்போது வரை இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆகவுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லொக்டவுனில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும்
 ஆழ்த்தியுள்ளது.இதில், பெண் காவலர் Heidi Stevenson-னும் ஒருவர் ஆவார்.பின்னர் மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல்தாரியை எதிர்த்து அவர் போராடியிருக்கிறார். அப்போது தான் Heidi Stevenson சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கனடாவில் பொலிஸ் வேடத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில், பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட பெண் காவலர் குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கனடாவின் நோவா ஸ்கோடியாவின் Portapique-வில் தான், 
ஞாயிறு அன்று இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை பொலிசார் சுட்டு கொன்றனர். தற்போது வரை இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆகவுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லொக்டவுனில் உள்ள மக்களை 
பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் 
ஆழ்த்தியுள்ளது
.இதில், பெண் காவலர் Heidi Stevenson-னும் ஒருவர் ஆவார்.பின்னர் மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல்தாரியை எதிர்த்து அவர் போராடியிருக்கிறார். அப்போது தான் Heidi Stevenson சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 2 ஏப்ரல், 2020

யாழ் பெண்னை கனடாவில் படுகொலை செய்த 28 வயதான நபர் கைது

கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதாக
 Steadley Kerr என்பர் 31-03-2020-நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.கடந்த 13ஆம் திகதி Scarboroughவில் 38 வயதான தீபா சீவரத்னம், அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த வன்முறையின் போது 
தீபாவின் தாயார் பாரிய காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபர்
 ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.படுகொலை செய்யப்பட்ட தீபா சீவரட்னம் யாழ்ப்பாணம் கொற்றாவத்தை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 20 மார்ச், 2020

கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தற்காலிக உதவி திட்டத்தை அறிவித்தது

கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தாக்கம் காரணமாக வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுக்கு மற்றும் வேலை இல்லாதவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வாரத்திற்கு 573 டாலர் வரை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டம் யார் யாருக்கு பொருந்தும் என்று பார்ப் போமானால் கொரோனா வைரஸ் 
தாக்கம் உள்ளவர்கள், வைரஸின் அறிகுறி உள்ளவர்கள்,கொரோனா வைரஸ் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு இந்த திட்டம் மூலம் உதவித் தொகை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொழிலாளர்களுக்கான தற்காலிக உதவி திட்டம் (PATT or Programme d’aide temporaire aux travailleurs) என்று அழைக்கப்படும். இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த 150 மில்லின் நிதி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 5 நவம்பர், 2019

கனடாவில் நடந்த பாரிய கார்த் திருட்டு வசமாக மாட்டிய ஈழத்து தமிழர்கள்

கனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்து
 செல்ல முயன்றபோது, 
வாகனத்தின் உரிமையாளர் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து, இரண்டு தமிழ் இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் எமகாதக 
திருட்டில் ஈடுபட்ட
 விடயம் அம்பலமானது.நமது ஊர்களில் சங்கக்கடைகளில் நிவாரணத்திற்கு வரிசையில் முந்திக்கொள்ள அடிபிடிப்பட்ட நினைவு உங்களிற்கிருக்கும். கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, 
இழுத்து செல்லும் 
நிறுவனங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான். விபத்தொன்று நடந்தால், அந்த வாகனத்தை இழுத்துச் செல்ல பல நிறுவனங்களின் வாகனங்கள் அங்கு பாய்ந்து விழுந்து வரும்.
ஸ்கார்பாரோவைச் சேர்ந்த கபிலன் விக்னேஸ்வரன் (24), நகுல் விக்னேஸ்வரன் (30) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமொன்றை நடத்தியுள்ளனர்.அண்மையில், கனடாவின் ஈஸ்ட் எக்லிண்டன் அவென்யூ 
மற்றும் வார்டன் அவென்யூ அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளர், வாகனத்தை இழுத்துச் செல்ல நிறுவனமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்குள் அந்த 
பகுதிக்கு வந்த தமிழ் சகோதரர்கள் தமது இழுத்து செல்லும் வாகனத்தில், விபத்திற்குள்ளான வாகனத்தை கொழுவியுள்ளனர்.
வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அதை பொருட்படுத்தாமல் இழுத்துச் சென்றனர். இது குறித்து வாகன உரிமையாளர், பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.மான்வில் வீதியில் உள்ள 
கபி ஓட்டோ இன்க் 
நிறுவனத்திற்கு அந்த கார் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை நடத்தினர். ஆரம்பத்தில் அங்கு பொலிசார் உள்நுழைய, உரிமையாளர்கள்
 எதிர்ப்பு தெரிவித்தாக 
கூறப்படுகின்றது.பொலிசார் அங்கு நடத்திய சோதனையில், திருடப்பட்ட இரண்டு விலை உயர்ந்த சொகுசுக்கார்கள் அங்கு மீட்கப்பட்டன. தமிழ் சகோதரர்களே அவற்றை திருடினார்கள் என்பது
 விசாரணைகளில் தெரிய வந்தது. 2015 பி.எம்.டபிள்யூ எம் 4 மற்றும் 2017 ஃபெராரி 4 ஜிஎஸ் ஆகிய கார்களே மீட்கப்பட்டன.வாகனத் திருட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைக்கும்போது 
முன்னிலையாக வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தையடுத்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை
 கட்டியிழுக்கும் நிறுவனங்கள் தொடர்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள கனடிய பொலிசார், சில அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 14 அக்டோபர், 2019

ஈழத்தமிழன் கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப்பொறுப்பேற்பு

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.
  #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,
3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா 
கனடாவில் குடியேறினார்.
கடந்த 25 ஆண்டுகளாக கனேடிய பொலிஸ் சேவையில் குற்றப்பிரிவு, போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிஷான் துறையப்பா பணியாற்றி வந்தார்.
ஹால்டன் பிராந்தியத்தின் உதவி பொலிஸ் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் பீல் நகரத்தின் முதன்மை காவல்துறை அதிகாரியாக இப்போது பதவியேற்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் எந்தளவுக்கு பொலிஸாரிடம் இருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கின்றனரோ, அதே அளவிற்கு பொலிஸாரும் அவர்களிடமிருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கின்றனர் என நிஷான் துரையப்பா தெரிவித்தார்.
 3000 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட பீல் நகரத்தின் தலைமை அதிகாரியாக பதிவியேற்றுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக சிறப்பாக கடமையாற்றுவேன் என்று அவர் கூறினார்.பீல் நகரத்தில் உள்ள 1.4 மில்லியன் மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள 3,000 அதிகாரிகளைக் கொண்ட பீல் நகர பொலிஸை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பது எனது பாக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.
நிஷான் துரையப்பா ரொறண்டோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் குற்றவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.
2012 இல் ராணி எலிசபெத் - ஐஐ வைர விழா பதக்கத்தையும் இவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கனடாவில் சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.
 யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது.
அத்துடன் இப் போட்டில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இலங்கையில் இருந்து தெரிவாகிய ஒரே தமிழர் செ.செல்வதாசன் ஆவார்.  
இவரின் கண்டுபிடிப்பானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பார்வை அற்றவர்களுக்கான வழிகாட்டும் கருவி ஆகும். குறித்த கருவி இது சூரிய ஒளியில் இயங்க கூடியது 
என்பது மேலதிக தகவல்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 25 மார்ச், 2019

ரொரன்டோவில் காணாமல் போயுள்ள தமிழர்

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
நேற்று முன்தினம் Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50 மணியளவில் காணப்பட்டுள்ளார்.
பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 17 மார்ச், 2019

ஓர் அரிய வாய்ப்பு கனடா வாழ் மக்களுக்கு

கனடா நாட்டின் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெறுமதிமிக்க கற்கள் மற்றும் அணிகலன்கள் என்பன ஏலத்தில் விடப்படவுள்ளன.
நாளைய தினம்(17ஆம் திகதி ) இந்த அரிய வாய்ப்பினை கனடா வாழ் மக்களுக்கு அந்நாட்டு வருவாய் துறையினர் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளனர்.
நாளை பகல் 02.00 மணியளவில் குறித்த அணிகலன்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தகவல்கள் 
வெளிவந்துள்ளன.
இதன்போது பெறுமதியான ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் மிகக் குறைவான விலையில் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், டெல்டாஹோட்டல், ஸ்கேர்போரூக்ஹ், டொரண்டோ (Delta Hotel in 2035 Kennedy Road, Scarborough, Toronto) என்ற இடத்தை அணுக முடியும்.
இதில், பெண்களுக்கான ரோலக்ஸ் 18kt மற்றும் துருப்பிடிக்காத எஃகு வகைகள், பல சிறப்பம்சங்களுடன் Rolex (ரோலக்ஸ்), Cardier (கார்டியர்), Audemarspiguet, patakphilippe, Tiffany & Co. அத்துடன் வைரமோதிரம், வளையல்கள், கை செயின்கள், கழுத்தணிகள் மற்றும் உயர் ஆபரணங்கள் அனைத்து பொருட்களும் தனித்தனியாக அதி உயர் 
ஏலத்தில் விற்கப்படவுள்ளன.
இதில் கலந்து கொள்பவர்கள் தங்களது அடையாள அட்டையைக் காட்டி தங்களது பெயரை ஏல அட்டையில் பதிவு செய்து கொள்வதன் மூலம் ஏல பொருட்களின் பட்டியலை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>