நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 14 அக்டோபர், 2019

ஈழத்தமிழன் கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப்பொறுப்பேற்பு

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.
  #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,
3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா 
கனடாவில் குடியேறினார்.
கடந்த 25 ஆண்டுகளாக கனேடிய பொலிஸ் சேவையில் குற்றப்பிரிவு, போதை தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிஷான் துறையப்பா பணியாற்றி வந்தார்.
ஹால்டன் பிராந்தியத்தின் உதவி பொலிஸ் தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் பீல் நகரத்தின் முதன்மை காவல்துறை அதிகாரியாக இப்போது பதவியேற்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் எந்தளவுக்கு பொலிஸாரிடம் இருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கின்றனரோ, அதே அளவிற்கு பொலிஸாரும் அவர்களிடமிருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கின்றனர் என நிஷான் துரையப்பா தெரிவித்தார்.
 3000 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட பீல் நகரத்தின் தலைமை அதிகாரியாக பதிவியேற்றுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது. நிச்சயமாக சிறப்பாக கடமையாற்றுவேன் என்று அவர் கூறினார்.பீல் நகரத்தில் உள்ள 1.4 மில்லியன் மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள 3,000 அதிகாரிகளைக் கொண்ட பீல் நகர பொலிஸை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பது எனது பாக்கியம் எனவும் அவர் தெரிவித்தார்.
நிஷான் துரையப்பா ரொறண்டோ பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் குற்றவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். மேற்கு ஒன்ராறியோ பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.
2012 இல் ராணி எலிசபெத் - ஐஐ வைர விழா பதக்கத்தையும் இவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக