நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 30 ஏப்ரல், 2016

மாணவி ஒருவரை தன்னை திருமணம் செய்யுமாறு துன்புறுத்தியவருக்கு சிறை!

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஜிதேந்தர் சிங் (வயது 32). இவர் கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் உள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்த போது தன்னுடன் படித்த சக மாணவி ஒருவரை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டார். அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து விட்டார். பின்னர் பட்டப்படிப்பை முடிக்கும் வரை அந்த பெண்ணை பின் தொடர்தல், வீட்டுக்கு சென்று மிரட்டுதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் ஜிதேந்தர் சிங் ஈடுபட்டு 
வந்தார்.
2007-ம் ஆண்டு அந்த பெண் மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். ஆனாலும் ஜிதேந்தர் சிங்கின் தொல்லை ஓயவில்லை. இந்தியாவில் உள்ள அந்த பெண்ணின் தந்தையை அவர் தாக்கினார். இது தொடர்பான வழக்கில் அவர் தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டார். மேலும் அந்த பெண்ணை பின் தொடரமாட்டேன் எனவும் உறுதி அளித்தார்.
ஆனால் மாறாக ஜிதேந்தர் சிங் அமெரிக்கா சென்று அந்த பெண் படித்து வந்த நியூயார்க் பல்கலைக்கழகத்தில் தன்னையும் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டு உள்ளார். பல்கலைக்கழகம் அதனை மறுத்துவிட்டது. பின்னர் அந்த பெண் பயிற்சிக்காக கலிபோர்னியா 
மாகாணத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கு உள்ள அவரது முகவரியையும் கண்டுபிடித்து ஜிதேந்தர் சிங் தொல்லை கொடுத்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. வேலைக்காக அவர் பிளானோ நகருக்கு
 குடிபெயர்ந்தார்.
2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை தொலைபேசி மூலம் அந்த பெண்ணை துன்புறுத்தி வந்த ஜிதேந்தர் சிங், இறுதியில் அந்த பெண்ணின் வீட்டின் முகவரியை கண்டுபிடித்தார். ஆனால் அங்கு சென்ற போது அந்த பெண் வீட்டில் இல்லை. வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற அவர் அந்த பெண்ணின் பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் நகைகளை திருடினார். இது தொடர்பாக ஜிதேந்தர் சிங் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி தொடர்ந்து 8 ஆண்டுகளாக பெண்ணை துன்புறுத்தி வந்த குற்றத்திற்காக அவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 28 ஏப்ரல், 2016

இலங்கைப் பணிப்பெண் நகைகளை திருடியதாக முறைப்பாடு`!

துபாயில் பணியாற்றிய இலங்கை பணிப்பெண் ஒருவர், தங்க நகைகளை திருடிய பின்னர், இலங்கைக்கு சென்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
துபாயின் பொதுமகன் ஒருவர் இந்த முறைப்பாட்டை துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதன்படி தாம் வெளிநாடு ஒன்றுக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்த போது குறித்த இலங்கை பணிப்பெண், தமது 40 ஆயிரம் திர்ஹாம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டதாக 
தெரிவித்துள்ளார்.
பணிப்பெண் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டமையை தமது மகன் தமக்கு அறியத் தந்ததாகவும் துபாயின் பொதுமகன் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

மிரண்ட நாய் பிறந்த சிசுவை கடித்துக் கொன்றது.!!!

தாய் இருமியதால் மிரண்ட நாய் பிறந்த சிசுவை கடித்துக் கொன்றது.
அமெரிக்காவில் சான் டியாகோ நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சம்பவத்தன்று அந்த சிசுவை படுக்கையில் கிடத்தி வைத்திருந்தனர்.
சிசுவின் தாயும், தந்தையும் இருக்கையில் அமர்ந்து டி.வி. நிகழ்ச்சியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் வீட்டில் வளர்த்து வரும் ‘போலோ’ என்ற செல்ல நாயும் இருந்தது.
டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது சிசுவின் தாய் இருமினார். அதைக் கேட்டு மிரண்ட நாய் என்னமோ ஏதோ என கருதி படுக்கையை நோக்கி தாவி ஓடியது.
அங்கு படுக்க வைத்திருந்த சிசுவை கடித்துக் குதறியது. 
அதன் சத்தம்
 கேட்டு ஓடிய பெற்றோர் நாயிடம் இருந்து சிசுவை மீட்டு பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விரைந்து வந்து சிசுவை கடித்துக் கொன்ற நாயை பிடித்துச் சென்றனர். 
வெறி நாய்கடி
 நோயை ஏற்படும் ‘ரேபிஸ்’ கிருமி தாக்கியுள்ளதா என பரிசோதிக்க அந்த நாயை 10 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க
 முடிவு செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பெண் மேயரை ஜேர்மனியில் கத்தியால் குத்திய நபர்

ஜேர்மனியில் குடியேற வரும் அகதிகளுக்காக குரல் கொடுத்த பெண் மேயர் ஒருவரின் கழுத்தை கத்தியால் அறுத்த நபர் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த Henriette Reker என்ற பெண் மேயர் கடந்த அக்டோபர் மாதம் நகராட்சி தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
அப்போது, கூட்டத்திலிருந்து பாய்ந்த 44 வயதான நபர் ஒருவர் மேயரின் கழுத்தை குறிவைத்து கத்தியால் 
அறுத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மேயரை பாதுகாவலர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் அமோக வாக்குகள் பெற்று அந்த தேர்தலில் மகத்தான வெற்றியையும் பெற்றார்.
இவர் மேயர் மட்டுமின்றி, கலோங் நகரில் அகதிகளுக்கு தேவையான சேவைகளை இவர் தொடர்ந்து செய்து 
வருகிறார்
மேயரை தாக்கிய நபரை கைது செய்து விசாரணை செய்தபோது, அவர் அகதிகளுக்கு எதிரானவர் என்றும், ஜேர்மனி நாட்டில் அகதிகளை அதிகளவில் அனுமதிக்க மேயர் குரல் கொடுத்த காரணத்திற்காக அவரை தாக்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நபரை சிறையில் அடைத்த பொலிசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், நபர் மீதான விசாரணை நேற்று Dusseldorfநகர நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது.
நபரின் குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 5 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

அழகிய நாய் குட்டியை வாங்கி வளர்த்த தம்பதியினர் ?

ஒரு இளஞ்ஜோடியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை பாக்கியமே இல்லை. அதனால் அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். ஒரு நாள் அழகிய நாய் குட்டியை வாங்கி வந்தனர், அதை தங்கள் மகன் போல வளர்க்க ஆரம்பித்தனர்.
அந்த நாய் குட்டியும் அவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது.ஒரு முறை திருடன் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது தன்னுடைய எஜமானருக்கு விசுவசாமாக நடந்து கொள்ள தன் உயிரையும் பொருட்படுத்தாமால் அவர்களை விரட்டியது.
நாட்கள் உருண்டோடின அந்த குட்டி நாய் நல்ல பெரிய நாயாக வளர்ந்தது. 7 வருடம் கழித்து அந்த தம்பதியனருக்கும் ஒரு மகன் பிறந்தான்.
இப்போதெல்லாம் அந்த குழந்தையுடன் தான் அந்த தம்பதியினர் நேரத்தை செலவிடுகின்றனர் .நாய் இப்போதெல்லாம் தனிமையிலே தன் பொழுதை கழிக்க வேண்டியதாயிற்று. அவர்கள் வளர்த்த நாய்க்கு அந்த குழந்தை மேல் பொறாமை உண்டாயிற்று
ஒரு நாள் அந்த தம்பதியினர் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு மாடியில் நின்று பேசி கொண்டு இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து நாயின் சத்தம் கேட்டதும் மேலே இருந்து இறங்கி ஓடி வந்தனர். படி அருகில் நாய் வாயில் ரத்தக்கறையுடன் நின்று கொண்டு இருந்தது.இதைப் பார்த்ததும் அதன் எஜமானர் ஓடி சென்று துப்பாக்க்கியை எடுத்து வந்து நாயை சுட்டு வீழ்த்தினார்.
பிறகு வீட்டின் உள்ளே சென்று பார்த்த அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.குழந்தையின் அருகில் நல்ல பாம்பு இரண்டு துண்டுகளாக கிடந்தது .குழந்தையை காப்பாற்ற அவர்கள் வளர்த்த நாய் அந்த பாம்பை கடித்து போட்டுள்ளது, அந்த பாம்பின் ரத்தக் கறை தான் நாயின் வாயில் இருந்தது என்று அப்போது தான் அவர்களுக்கு புரிந்தது.
தங்கள் குழந்தையை காப்பாற்றிய நாயை அநியாயமாக கொன்று விட்டனே என்று கதறி அழுதனர்.
முன்கோபம் முட்டாள் தனத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு.
எப்ப நாம ஒரு முடிவு எடுப்பது என்றாலும் நன்றாக ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 5 ஏப்ரல், 2016

பிள்ளைக்கு பாலூட்டிய தாயாருக்கு 100 பவுண்டு அபராதம்!

பிரித்தானியாவில் வாகன நிறுத்தம் ஒன்றில் குழந்தைக்கு பாலூட்டிய தாயார் ஒருவருக்கு அபராதமாக 100 பவுண்டு விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் Northumberland மாகாத்தைச் சேர்ந்த 27 வயது கெல்லி ஜான்சன் என்பவர் தமது 7 கிழமைகள் பிராயம் கொண்ட குழந்தையுடன் வணிக வளாகமொன்றில் சென்றுள்ளார்.
அப்போது அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான பாலூட்டும் அறையில் தமது குழந்தைக்கும் பாலூட்டியுள்ளார்.
இதனிடையே அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இவரது வாகனத்திற்கு குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் நிறுத்தப்பட்டிருந்ததாக கூறி 100 பவுண்டு அபராதம் செலுத்த கேட்டுள்ளனர்.
அந்த வளாகத்தில் இலவசமாக 3 மணி நேரம் வாகனத்தை நிறுத்தலாம் என்ற நிலையில், கெல்லி ஜாப்சன் அதிகப்படியாக 20 நிமிடங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமது குழந்தைக்கு சுகவீனம் உள்ளதால் மட்டுமே தாம் தாமதிக்க காரணம் என தமது நிலையை விளக்கியும் குறிப்பிட்ட நிர்வாகத்தினர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.
மேலும், அந்த வணிக வளாகத்தில் உள்ள ஏதேனும் ஒரு அங்காடியில் பொருள் வாங்கியதற்கான ரசீதை ஒப்படைத்தால், அபராத தொகையை ரத்து செய்வதாகவும் அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அந்த சலுகையை பெறும் நிலையில் கெல்லி இல்லை என கூறப்படுகிறது. இதனிடையே கெல்லி தமது நிலையை எடுத்துக் கூறியும் குறிப்பிட்ட நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக கூறி குற்றம்சாட்டியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>