நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 20 ஜூன், 2018

இளம் ஜோடிகள் பறக்கும் விமானத்தில் அருவருக்கும் செயல்

மெக்சிகோ செல்லும் விமானம் ஒன்றில் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு இளம் ஜோடி ஒன்று உறவில் ஈடுபட்ட சம்பவம் சக பயணி ஒருவரால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.அமெரிக்காவில் இருந்து தம்பதி ஒன்று விடுமுறையை கழிக்க மெக்சிகோ சென்றுள்ளனர்.விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்கு பின்னர் கடைசி இருக்கை நோக்கி சென்ற 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் ஜோடி உறவில் 
ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரம் அந்த விமாந்த்தில் பயணம் செய்த தம்பதியின் கமெராவில் சிக்கியுள்ளது.நிம்மதியாக விடுமுறையை கழிக்க செல்லும் வழியில் இதுபோன்ற இழிவான செயலை காண நேர்ந்தது என அந்த வீடியோவை தங்களது மகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர் 
அந்த தம்பதி.
குறித்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், குறித்த விமான சேவை நிறுவனம் தங்கள் விமானத்தில் தான் இச்சம்பவம் 
அரங்கேறியயுள்ளது.
ஆனால் நாங்கள் இதை ஆதரிக்கவில்லை என அவர்கள் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 18 ஜூன், 2018

இந்தோனேசிய பெண்ணின் உடல் .மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு.

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணை தேடி வந்த நிலையில், அவரது சடலம் 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஜகார்த்தா
இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த வியாழக்கிழமை தன்னுடைய தோட்டத்திற்கு சென்ற வா திபா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அந்த கிராமத்தில் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. வா திபாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரை தேடினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் 23 அடி நீள மலைப்பாம்பு ஒன்று எங்கும் செல்ல முடியாமல் உருண்டு வந்து உள்ளது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மலைப்பாம்பின் வயிற்று பகுதியை வெட்டி பார்த்து உள்ளனர். அப்போது வா திபாவின் சடலம் உள்ளே இருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சடலத்தை மீட்டு இறுதிச்சடங்கு செய்தனர்.
மலைப்பாம்பு கிடந்த இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் வா திபாவின் செருப்பு கிடந்து உள்ளது. அ
வருடைய தலையை முதலில் விழுங்கியுள்ள பாம்பு பின்னர் உடல் பகுதியை உள்ளே இழுத்து உள்ளது. திபாவின் தோட்டம் செங்குத்தான பாறைகள், குகைகள் என கரடு முரடான பகுதியில் உள்ளது. அங்கு பாம்புகள் நடமாட்டம் என்பது சர்வ சாதாரணமானது என உள்ளூர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் சய்தி >>>


செவ்வாய், 12 ஜூன், 2018

தமிழ் இளைஞன் கனடாவில் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளர்

கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
னேடிய நேரப்படி நேற்று முன்தினம் 9.42 மணியளவில் ஒன்டாரியோ மாகாணத்தில் Bluffers Park அருகே கப்பலில் இருந்து கடலில் விழுந்த தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
 27 வயதான பார்த்தீபன் சுப்ரமணியம் என்ற இளைஞனே காணாமல் போயுள்ளதாக அவரது உறவினரான காண்டீபன் சுப்பையா 
அடையாளம் காட்டியுள்ளார்.
 கனடா கடலோர காவல்படை இளைஞனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ரொரொண்டோ தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
கடலோர பொலிஸார் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 சுப்ரமணியம் தனது 10 வயதில் இலங்கையில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளார் என சுப்பையா தெரிவித்துள்ளார்.
 சுப்ரமணியத்துடன், அவரது சகோதரன் தீபன் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
 சுப்ரமணியம் சிறப்பாக நீந்த கூடியவர் அல்ல எனினும் நண்பர்களுடன் வெளியே செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளார் என சுப்பையா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கவசம் எதுவும் அவர் அணிந்திருந்தாரா என தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 சுப்ரமணியம் எனது மகன் போன்றவர் என அவர் கூறியுள்ளார். அவர் மிகவும் திறமையான ஒருவராகும். DJ இசை மூலம் தமிழ் சமூகத்தில் அவர் மிகவும் பிரபல்யமடைந்த ஒருவராகும். அவர் ஒரு
 சிறந்த DJ இசை கலைஞராகும்.
 இன்று அதிகாலை 1.30 மணியளவில் சுப்ரமணியத்தின் நண்பர்கள் வீட்டுக்கு வந்து, சுப்ரமணிம் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கப்பலில் இருந்து விழுந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதனை இலங்கையில் உள்ள சகோதரனுக்கு அறிவித்ததாக சுப்பையா தெரிவித்துள்ளார்
அவர் என்னை மிகவும் நேசித்தார். என்னிடம் எந்த நேரமும் பேசி கொண்டே இருப்பார் என சுப்பையா குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் சுப்ரமணியம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 7 ஜூன், 2018

அமெரிக்காவில் இப்படியும் ஒரு சத்திரசிகிச்சை!! அதிர்ச்சிக் காணொளி)

அமெரிக்காவில் கையில் கத்தியுடன் நடனமாடிக்கொண்டே அறுவை சிகிச்சை செய்த மருத்துவரால் நோயாளி மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விண்டெல் என்பவர் ஜொர்ஜியா பகுதியில் வசித்து வருகிறார். தோல் மருத்துவரான இவர் நோயாளிகளுக்கு அழகுக்காக செய்யப்படும் காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்யும் காணொளிகளை வெளியிட்டுள்ளார்.அதில் கொடுமை என்னவென்றால் நோயாளிகளுக்கு 
மயக்க நிலையில் இருக்கும்போது அறுவை சிகிச்சைக்கு நடுவே நடனம் ஆடிக் கொண்டும் ஹிப் ஹாப் பாட்டு பாடிக் கொண்டும் அவர் காணொளிகளை பதிவு செய்துள்ளார். அதோடு அவற்றை சமூக வலைத்தளங்களிலும் அவர்
 பதிவிட்டுள்ளார்.
அதில் ஒரு காணொளியில் தானே பாடல் வரிகளை உருவாக்கி ‘நான் இங்கு வெட்டப்போகிறேன்’ என பாடிக்கொண்டே மயக்க நிலையில் இருக்கும் நோயாளியின் கிழிக்கப்பட்ட வயிற்றுப் பகுதியை காண்பிக்கிறார்.இந்நிலையில், காணொளியை பார்த்து அதிர்ச்சி அடைந்த பலரும் கையில் கத்தியுடன் நடனமாடும் இவரது 
காணொளிகளை பகிர்ந்தனர்.
முன்னதாக 2016ல் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் தொப்பையை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்றவருக்கு இவரது செயல்பாடுகளால் இதய செயல்பாடு நின்றுவிட்டு அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விசாரணையில் அறுவை சிகிச்சை செய்ய உரிமம் இவர் பெறவில்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


                      

செவ்வாய், 5 ஜூன், 2018

பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு நடந்த சத்திரசிகிச்சை

Jucilene Marinho (23) என்ற இளம்பெண் பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர். மேலும் கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை பெற்றுக்கொள்வதும் இயலாது.இவர் பிறக்கும்போதே Mayer-Rokitansky-Küster-Hauser (MRKH) சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த குறைபாடு அதிகமாக பெண்களுக்குதான் ஏற்படும். இது பெண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கிறது. இதனால், யோனி மற்றும் கருப்பை வளர்ச்சி இல்லாமல் அப்படியே உடலினுள் உள்வாங்கி காணப்படும்.

15 வயதில் இருந்த பிரச்சினையை எதிர்கொண்ட Jucilene, தான் இந்த உலகில் பிறந்திருக்கவே கூடாது என கவலைகொண்டுள்ளார். இதுபோன்ற ஒரு குறைபாட்டால் என்னால் குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட இயலாதே என வெட்கி தலைகுனிந்தேன். எனது உலகமே முடிந்துவிட்டது என நினைத்தேன்.

இந்நிலையில் தான் எனது பெற்றோரிடன் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தேன்” என கூறியுள்ளார்.மீ
பிறப்பிலேயே பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவர்Jucilene Marinho (23) என்ற இளம்பெண் . மேலும் கருப்பை வாய் மற்றும் கருப்பையும் இல்லாத காரணத்தால் இவரால் குழந்தை பெற்றுக்கொள்வதும் இயலாது.இவர் பிறக்கும்போதே Mayer-Rokitansky-Küster-Hauser (MRKH) சிண்ட்ரோம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார்
. இந்த குறைபாடு அதிகமாக பெண்களுக்குதான் ஏற்படும். இது பெண்களின் இனப்பெருக்க அமைப்பை பாதிக்கிறது. இதனால், யோனி மற்றும் கருப்பை வளர்ச்சி இல்லாமல் அப்படியே உடலினுள் உள்வாங்கி காணப்படும்.
15 வயதில் இருந்த பிரச்சினையை எதிர்கொண்ட Jucilene, தான் இந்த உலகில் பிறந்திருக்கவே கூடாது என கவலைகொண்டுள்ளார். இதுபோன்ற ஒரு குறைபாட்டால் என்னால் குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட இயலாதே என வெட்கி தலைகுனிந்தேன். எனது உலகமே முடிந்துவிட்டது
 என நினைத்தேன்.
இந்நிலையில் தான் எனது பெற்றோரிடன் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தேன்” என கூறியுள்ளார்.மீனின் தோலமைப்பை பயன்படுத்தி பிறப்புறுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.இதற்காக Tilapia என்ற மீனின் தோல்கள் பயன்படுத்தப்பட்டன. எதற்காக இந்த மீனின் தோல்கள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கான காரணத்தை கூறிய மருத்துவர்கள், இந்த வகை மீனில் அதிகமாக பாக்டீரிய தொற்றுக்கள் இருக்காது. இதனை பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு எவ்வித 
வலியும் இருக்காது.
இந்த தோலில் இருந்து பிறப்புறுப்பு வடிவம் வெட்டியடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.சுமார் 3 வாரங்கள் இந்த அறுவை சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது அப்பெண் நலமாக இருக்கிறார் என கூறியுள்ளனர்.
இதுகுறித்து அப்பெண் கூறியதாவது, இந்த அறுவை சிகிச்சையால் நான் நலமாக இருக்கிறேன். இனி எனது காதலனோடு வாழ்க்கையை சந்தோஷமாக கழிப்பேன். எனது பெற்றோரும் என்னை நினைத்து மகிழ்ச்சி கொண்டுள்ளார்கள் என கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




உங்கள் இருப்பிடத்திற்கே விரும்பிய உணவைக் கொண்டு வரும் ட்ரோன்

டிரோன்கள் (ஆள் இல்லா விமானம்) மூலம் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு சீனாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இணையதள வர்த்தக நிறுவனமான அலிபாபாவுக்கு சொந்தமான உணவு விநியோகிக்கும் இஎல்.மீ (Ele.me) என்ற நிறுவனத்துக்கு சீனாவின் ஷாங்காய் நகரத்திலுள்ள ஜின்ஷன் தொழிற்பூங்காவிலுள்ள 17 இடங்களில் டிரோன்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிப்பதற்கு அந்நாட்டு
 அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அந்த தொழிற்பூங்காவிலுள்ள 58 சதுர கிலோமீட்டர் பகுதிகளுக்கு டிரோன்கள் மூலம் உணவை விநியோகிப்பதற்கு இதன் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஜின்ஷன் தொழிற்பூங்காவில் செயல்படும் 100 உணவகங்களுகளில் ஆர்டர் அளித்தால், அது டிரோன்கள் மூலம் இருபது நிமிடங்களில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுவிடும்.
ஒவ்வொரு பாதையிலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டு குறிப்பிட்ட இடங்களுக்கிடையில் மட்டுமே டிரோன்கள் இயக்கப்படும் என்று தி சவுத் சீனா மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.ஆர்டர்களை பெறும் 
பணியாளர் உணவகத்துக்கு அருகிலுள்ள டிரோன் பறக்குமிடத்துக்கு சென்று அதை குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு அருகிலுள்ள டிரோன் பறக்குமிடத்துக்கு அனுப்புவார். அங்கிருக்கும் மற்றொரு பணியாளர், உணவை பெற்று 
வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பார்.
சாதாரண சாலை வழி உணவு விநியோக செலவை ஒப்பிடும்போது, டிரோன்கள் மூலம் விநியோகம் செய்வது செலவை குறைப்பதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆறு கிலோ வரையிலான உணவுப்பொருட்களை 20 கிலோமீட்டர் தொலைவு வரை அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகத்தில் கொண்டுசெல்வதை இதே நிறுவனம் முன்னோட்டம் செய்துள்ளது என்பது 
குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 4 ஜூன், 2018

மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி இவர் தான்! வயது எத்தனை தெரியுமா

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி இவர் தான்! வயது எத்தனை தெரியுமா?
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி என்று பெயரை பெற்றுள்ளார்.
பிரித்தானியாவின் Bolton பகுதியைச் சேர்ந்தவர் Carrie Hilton. 36 வயதான இவருக்கு இவர் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் 17 வயதான இவரின் மூத்த மகள் கடந்த ஜனவரி மாதம் பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
இதன் மூலம் Carrie Hilton பாட்டியானார். Carrie Hilton-ன் கவர்ச்சிகரமான புகைப்படங்களைக் கண்டு சமூகவலைத்தளங்களில் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவரை தற்போது வரை 15,000-க்கும் மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருவதால், அவர்கள் இவரை உலகின் கவர்ச்சிகரமான பாட்டி 
என்று கூறி வருகின்றனர்.
இது குறித்து அவர் கூறுகையில், ஆம் நான் தான் உலகின் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி என்று கூறுவேன். எனக்கு நிகராக இங்கு போட்டியிட யாரும் கிடையாது.
என்னுடைய அழகிற்கு மட்டும் தற்போது வரை 13,000 பவுண்ட் வரை செலவு செய்துள்ளதாகவும், அதில் முக்கியமாக மார்பகம் மற்றும் பின்னழகிற்கே அதிக செலவு ஆகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கிக் பாக்சிங்கில் பிளாக் பெல்ட் வெற்றியாளரான இவர் ஆறு முறை சர்வதேச அளவிலான போட்டிகளில் வெள்ளிப்பதக்கங்களை 
வென்று குவித்துள்ளார்.
தற்போது ஊடகம் ஒன்றி மேலாளர் பணியில் இருக்கும் இவரை இணையவாசிகள் பலர் என்னுடன் டேட்டிங் வரும் படி கூறுவதாகவும், ஒரு சிலர் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கூறுவதாகவும், மேலும் சிலர் உறவு வைத்துக் கொள்வதற்கு அழைப்பதாகவும் Carrie 
Hilton கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் 47 வயதைச் சேர்ந்த Gina Stewart தான் முதலில் மிகவும் கவர்ச்சிகரமான பாட்டி என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இணையவாசிகள் இவரை கவர்ச்சிகரமான பாட்டி என்று கூறிவருதால், தற்போது இவர் தொடர்பான புகைப்படம் தான் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


துனிசியர்கள் பயணித்தப் படகு மூழ்கியதில் 50 பேர் உயிரிழந்தனர். இதுவரை

மத்திய தரைக்கடல் பகுதியில் புலம்பெயர்ந்த துனிசியர்கள் பயணித்தப் படகு மூழ்கியதில் 50 பேர்  உயிரிழந்தனர். இதுவரை 68 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
துனிசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் சட்ட விரோத முறையில்
 புலம்பெயர்வது வழக்கம். ஆபத்தான மத்திய தரை கடல் பகுதியை இவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர். இவர்களது படகுகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கவிழ்வது 
வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், 30 அடி நீள படகு ஒன்றில் 180 க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக மத்திய தரைக்கடல் வழியே பயணம் செய்துள்ளனர். படகிற்குள் திடீரென நீர் கசிந்து உட்புகுந்ததில் படகு கடலில் மூழ்கியது.
இதுபற்றிய தகவல் கிடைத்து கடலோர படை மற்றும் கப்பற்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் 50 பேர் வரை உயிரிழந்தனர். 68 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
துனிசிய நாட்டின் தென்கடலோர பகுதியில் இருந்து இதுவரை 47 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. ராணுவ வானூர்தி உதவியுடன் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் புலம்பெயர்ந்து சென்றவர்களின் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகியதில் 90 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 3 ஜூன், 2018

ஆப்கனில் 30 ஆண்டுகளுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்ட விமான விமானி உயிருடன்

ஆப்கானிஸ்தானுக்கும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவுக்கும் இடையே கடந்த 1979 முதல் 1989-ம் ஆண்டு வரை போர் நடந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1989-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.
சோவியத் ரஷிய படைகள் வாபஸ் பெறப்பட்டன. அப்போது 300 வீரர்கள் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 30 வீரர்கள் மட்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிவிட்டனர். மற்றவர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. அவர்கள் போரில் இறந்து 
இருக்கலாம் என கருதப்பட்டது.
இதற்கிடையே 30 ஆண்டுகளுக்கு பிறகு விமானி ஒருவர் ரஷியா திரும்பினார். அவரது பெயர் செர்ஜி பேன்டலிக். தெற்கு ரஷியாவின் ரோஸ்டல் மாகாணத்தை சேர்ந்த இவர் வடக்கு காபூலில் பக்ராம் விமான படை தளத்தில் முகாமிட்டிருந்தார். அங்கிருந்து புறப்பட்ட போது அவரது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எனவே அவர் இறந்து இருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால் அவர் மரணம் அடையவில்லை. தற்போது உயிருடன் திரும்பிவிட்டார். மாயமான போது அவரது வயது 30. தற்போது 
இவருக்கு 60 வயதாகிறது.
இவருக்கு 31 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் காணாமல் போன சில மாதங்களுக்கு முன்பு தான் பிறந்தாள். இவரது தாயாரும்இ தங்கையும் இன்னும் உயிருடன் உள்ளனர். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் விட்டனர்.
தனது இறுதி காலத்தை ஆப்கானிஸ்தானில் தங்கி கழிக்க போவதாக விமானி பான்டலுக் தெரிவித்தார். ஏனெனில் ஆப்கானிஸ்தான் மக்கள் மிகவும் அன்பானவர்கள். உபசரிப்பதில் 
சிறந்தவர்கள் என்றார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சனி, 2 ஜூன், 2018

அகதிகளுக்கு ஜேர்மனியில் இனி இடமில்லை!

ஆயிரக்கணக்கான அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மன் நகரம் ஒன்று தற்போது தங்கள் நகரம் நிரம்பி வழிவதாகவும் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் Salzgitter நகரத்தின் இந்த முடிவால் ஏற்கனவே யுத்தத்தால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பிற்குரியவர்களுடன் சேர முடியாத சூழ ஏற்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் பலரை நகருக்குள் அனுமதிப்பதால் அதன் உள்கட்டமைப்பும் ஒருங்கிணைப்பும் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



ஜேர்மனியின் வடக்கிலிருக்கும் நகரமான Salzgitter, நாட்டில் புதிய வாழ்க்கையை தேடி வரும் அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நகரம் என்னும் வரலாற்றுப் பெருமை கொண்ட நகரமாகும்.



2015 ஆம் ஆண்டு அகதிகள் பிரச்சனையின்போது ஏஞ்சலா மெர்க்கல் அகதிகளை தங்கள் நாட்டிற்கு வரவேற்றது முதற்கொண்டு ஜேர்மனி ஐரோப்பாவிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவில் ஒன்றரை மில்லியன் அகதிகளுக்கு தஞ்சம் அளித்தது குறிப்பிடத்தக்கது.



அந்த நேரத்தில் Salzgitter 6000 அகதிகளுக்கு தஞ்சம் அளித்தது. ஆனால் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை.



இந்த செய்தி, தானும் தங்கள் இரட்டைப் பிள்ளைகளும் ஜேர்மனியிலும் தங்கள் கணவரான சமே வாடா நாட்டிற்கு வெளியிலும் வாழும் ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவிக்கும் காட்யா அப்துல்லா போன்ற பெண்களின் துயரத்தை அதிகரித்துள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வெள்ளி, 1 ஜூன், 2018

மர்மமான முறையில் பெல்ஜியத்தில் உயிரிழந்த இலங்கை யுவதி

வவுனியா - பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் உயிரிழந்துள்ளார்.
அவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிள்றுது.
பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்கியவராகும். இந்த நிலையில் இவரது மரணத்தில் பலத்த சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யுவதியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

இலங்கையர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை

வெளிநாடு ஒன்றில் தங்கியிருக்கும் 104 இலங்கையர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பிற்காக இஸ்ரேல் நோக்கி பயணித்து தற்போது வீசா காலம் நிறைவடைந்துள்ள நிலையில் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ளவர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில் 60 பேருக்கு நீதிமன்றம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு
 தெரிவித்துள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>