நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 25 ஜனவரி, 2021

பனிப் பொழிவு பிரித்தானியாவில் -10 டிகிரி உறைவெப்பநிலையில் சிக்கித் தவிக்கும் மக்கள்


பிரித்தானியா அதன் மிக கடுமையான குளிர்கால இரவுகளை சந்திக்கவுள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோஃப் என்ற கொடிய புயலை அடுத்து , கடுமையான பனி மற்றும் மழையின் மற்றொரு இயற்கை தாக்குதலை பிரித்தானியா சந்திக்கவுள்ளது
மைனஸ் 10 
டிகிரி செல்சியசுக்கு ஆர்க்டிக் பகுதியிலிருந்து
 பனிப்புயல் எதிர்பார்க்கப்படுவதாகவும், 6 அங்குலத்துக்கு பிரித்தானியா முழுவதும் பனிபொழிவு ஏற்படும் என வானிலை
 அலுவலகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் கடுமையான 
பனிப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கெனவே வெள்ளத்தால் சோர்ந்துபோன அப்பகுதி மக்களுக்கு மேலும் துயரத்தை அச்சுறுத்துகிறது. மெதுவாக நகரும் பனி, 
பனிப்பொழிவு மற்றும் மழை.25-01-2021. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை மேற்கிலிருந்து வீசும், மேலும் இது தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள டார்ட்மூர் மற்றும் எக்ஸ்மூர் மீது 6 இன்ச் (15 செ.மீ) பனியைக் கொட்டக்கூடும்.மேலும் ஷ்ரோப்ஷைர், வொர்செஸ்டர்ஷைர், க்ளோசெஸ்டர்ஷைர், ஆக்ஸ்போர்டுஷைர் மற்றும் ஹாம்ப்ஷயர் ஆகிய
 பகுதிகளில் 4 இன்ச் (10 செ.மீ) பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சாலைகளில் பயணிக்க முடியாததாக மாறலாம், கிராமப்புற சமூகங்களுக்கு போக்குவரத்து 
துண்டிக்கப்படலாம், ஓட்டுநர்கள் எதிர்பாராத நிலைமைகளையும் தாமதங்களையும் எதிர்கொள்ளக்கூடும், மின்வெட்டுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.லண்டன் மற்றும் மான்செஸ்டர் ஒரே இரவில் -3 டிகிரி செல்ஸியஸாகவும், பிரிஸ்டல், பெல்ஃபாஸ்ட் மற்றும் கிளாஸ்கோ -2 டிகிரி செல்ஸியஸாகவும் குறையும் என்று
 எதிர்பார்க்கப்படுகிறது.23-01-2021..சனிக்கிழமை அன்று மாலை நிலவரப்படி, மத்திய மற்றும் தெற்கு இங்கிலாந்து, வேல்ஸின் பெரும்பகுதி, வடக்கு அயர்லாந்தின் பெரும்பகுதி மற்றும் ஸ்காட்லாந்தின் மேற்கு
 மற்றும் வடக்கு பகுதிகளுக்கு 5 பனிப்பொழிவு எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.24-01-2021.ஞாயிற்றுக்கிழமை அன்று .அதிகாலையில் தென் மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு பனிப்பொழிவு நகரும் என்றும், பின்னர் கிழக்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து வரை பரவுகிறது என்றும் வானிலை அலுவலகம்
 தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>







வியாழன், 21 ஜனவரி, 2021

விடுதி தடுப்பிலிருந்து ஆஸ்திரேலியாவில் விடுவிக்கப்படும் அகதிகள்

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் 60 அகதிகளுக்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிக இணைப்பு விசா வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 
இதையடுத்து,21-01-2021. இன்று மெல்பேர்ன் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த 26 அகதிகளுக்கு ஆறு மாத இணைப்பு விசா வழங்கப்பட்டு விடுவிக்கப்படுள்ளதாக தஞ்சக்கோரிக்கையாளர் வள மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் 34 பேர் நாளை விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த அகதிகள் கடந்த 2019ம் ஆண்டு 
மனுஸ் மற்றும் நவுருத்தீவிலிருந்து மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வரப்பட்ட அகதிகளாவர். 
முன்னதாக, இந்த அகதிகள் மெல்பேர்னின் Preston பகுதியில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிருந்த 
நிலையில் இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் பார்க் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டிருந்தனர். இந்த ஹோட்டல் கொரோனா காலத்தில் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட தங்குமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 
அதே சமயம், இவ்வாறு 
ஆஸ்திரேலியாவில் வைக்கப்பட்டுள்ள எத்தனை அகதிகளுக்கு இணைப்பு விசா வழங்கப்பட்டுள்ளது என்ற தகவலை வெளிப்படுத்த ஆஸ்திரேலிய உள்துறை மறுத்திருக்கிறது. 
“தடுப்பிற்கான மாற்று இடத்தில் தங்கியுள்ளவர்கள் ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அழைத்து வரப்பட்டவர்கள். மருத்துவ சிகிச்சையை நிறைவுச் செய்ய 
அவர்களுக்கு ஊக்குமளிக்கப்படுகிறது, அதன் மூலம் அமெரிக்காவில் மீள்குடியேறலாம். இல்லையெனில நவுரு, பப்பு நியூ கினியாவுக்கோ அல்லது தாய்நாட்டுக்கோ அவர்கள் திரும்பலாம்,” என ஆஸ்திரேலிய உள்துறை தரப்பில்
 தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இணைப்பு விசா பெறும் ஒரு அகதி, ஆஸ்திரேலியாவில் பணியாற்றவும் மருத்துவ உதவியை பெறவும் அனுமதிக்கப்படுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



முதல் பெண் துணை அதிபராக அமெரிக்காவில் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக
 பதவியேற்றார்.
இந்நிலையில் கமலாஹாரிஸின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள 
குலதெய்வ கோவிலான தர்ம சாஸ்தா சேவகபெருமாள் ஆலயத்திற்கு கமலா ஹாரிஸ் 1991ம் ஆண்டு நன்கொடை அளித்துள்ளதாகவும், அந்த தெய்வத்தின் சக்தியாலேயே கமலா உயர் பதவிகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறுகின்றனர் கிராமத்தினர்.
மேலும் அவர் அதிபராக உயருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். கமலாஹாரிஸ் தனது பெருமுயற்சியினால் அமெரிகக் துணை அதிபராக உயர்ந்திருப்பதன் மூலம், தங்கள் கிராமத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளதாக கிராமத்தினர் பெருமிதம் 
தெரிவித்தனர்.
துணை அதிபராக இருக்கும் கமலா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதிபராக உயரும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்காக இன்றே தாங்கள் பிரார்த்திக்கத் துவங்கி விட்டதாகவும் குறிப்பிடுகின்றனர் கிராமத்தினர். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் அடுத்த அமெரிக்க அதிபராக கமலாஹாரிஸ் தேர்வு செய்யப்படுவார் என்றும் நம்பிக்கை 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஒஸ்திரியாவில் 30 உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு

ஒஸ்திரியாவில் இடம்பெறும் சிறிலங்காவின்  73வது சுதந்திர தின வைபவத்திற்கு அமைவாக ஒஸ்திரியாவில் விற்பனை செய்யக்கூடிய இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் 30 பொருட்களுக்கு போட்டிமிகு விநியோகஸ்தர்களை கவருவதற்கு அந்நாட்டிலுள்ள எம் டி சி எக்ஸோடிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எம் டி சி எக்ஸோடிக் வர்த்தக தொகுதியின் ஒத்துழைப்புடன் இலங்கையின் தயாரிப்புகளை எந்தவித செலவுகளுமின்றி வியன்னாவில் உள்ள நகர் மத்திய நிலையத்தில் காட்சிப்படுத்துவதற்கான வசதிகளை செய்வதற்கு அங்குள்ள இலங்கை தூதரகம் தற்பொழுது நடவடிக்கைகளை
 மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம் இலங்கை உற்பத்திக்கு ஒஸ்திரியாவில் புதிய சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு முடியுமென நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் டி சி எக்ஸோடிக் என்ற நிறுவனம் வலுவான நுகர்வோரை அடிப்படையாகக் கொண்ட ஒஸ்திரியாவில் பிரபலமிக்க அங்காடி வர்த்தக வலைப்பின்னலாகும். இதன் மூலம் இலங்கை தயாரிப்புகளை சந்தைப் படுத்துவதற்கும், அதனை வர்த்தக ரீதியில் மேம்படுத்துவதற்கும் பெரும் மேடையாக இது அமையும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 18 ஜனவரி, 2021

புதிய வைரஸ் பிரான்ஸில் மார்ச் மாதமே தீவிரமாகுமாம் :தேசிய சுகாதார ஆராய்ச்சி மையம்

தற்சமயம் நாடெங்கும் பரவி வருகின்ற இங்கிலாந்து வைரஸ் வரும் பெப்ரவரி மாத இறுதியில் தொடங்கி மார்ச் மாதத்தில் தீவிரமடையலாம்.
பிரான்ஸின் தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி மையம் (The Institut national de la santé et de la recherche médicale – Inserm) இவ்வாறு 
மதிப்பிட்டுள்ளது. சுகாதாரக் கட்டுப்பாடுகளை இறுக்கி தடுப்பூசி ஏற்றுவதை இயன்றவரை விரைவுபடுத்து வதன் மூலம் புதிய வைரஸின் மோசமான விளைவுகளைத் தணிக்க முடியும் என்றும் அது 
தெரிவித்துள்ளது.
தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தைக் கவனத்தில் எடுக்காமல் நடத்தப்பட்ட மதிப்பீட்டு ஆய்வுகளின்படியே இத்தகவல் வெளியிடப்படுவதாகவும் ஆராய்ச்சி மையத்தின் நிபுணர்கள் 
கூறியுள்ளனர்.
தற்சமயம் தினசரி புதிதாக அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்களில் 1.4 வீதமாகக் காணப்படுகின்ற இங்கிலாந்து வைரஸின் தொற்று அடுத்துவரும் வாரங்களில் அதிகரிப்பைக் காட்டும். பழைய கொரோனா 
வைரஸை விடவும் 50 முதல் 70 வீதம் கூடிய பரவும் வேகம் கொண்டது என்பதால் புதிய வைரஸ் தொற்றினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பெப்ரவரி – ஏப்ரல் மாதங்களுக்கு இடையே நாளாந்தம் 20 ஆயிரம் என்ற 
அளவை எட்டலாம்.
-இவ்வாறு தேசிய சுகாதார மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் மிக மோசமான சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்ற VOC 202012/01 என அழைக்கப்படும் புதிய வைரஸை “பைசர் – பயோஎன்ரெக்” தடுப்பூசி தடுக்கும் திறன் கொண்டுள் ளது என்று அதனைத் தயாரித்த கூட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் பைசர் தடுப்பூசி தயாரிப்பு வேகம் அதன் அவசர தேவையை ஈடு செய்யும் அளவுக்கு இல்லாதிருப்பதால் பிரான்ஸ் உட்பட பல நாடுகளுக்கு உறுதி அளித்தபடி அவற்றை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊசி ஏற்றும் பணிகள் 
தாமதப்படுத்தப் பட்டுள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>



வெள்ளி, 15 ஜனவரி, 2021

வலுவான தீர்மானம் இலங்கைக்கு எதிராக கொண்டு வரவேண்டும் மெக்டொனாக்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் வலியுறுத்தியுள்ளார். 
பிரித்தானியப் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் , மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 
உட்பட மனித உரிமைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பில் ராஜபக்ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இவ்வாறானதொரு
 நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் , நீதி மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாக்கும் வகையில் பிரித்தானிய அரசு ஜெனிவாவில் 
செயற்பட வேண்டும். 
ஆகவே இலங்கை விடயத்தில் புதிய தீர்மானமொன்றிக்கான உறுதிப்பாட்டை பிரித்தானிய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அந்த தீர்மானத்தில் இலங்கையை கண்காணிக்கும் அலுவலகத்தை
 மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் ஸ்தாபித்தல்  என்ற 
விடயம் அமையப்பெற்று ஒரு சிறப்பு பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும் 
என குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


புதன், 13 ஜனவரி, 2021

கனடாவில்கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண்

கனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு அமுலில் இருந்தவேளை தனது கணவனை நாய் போல வெளியில் அழைத்துச் சென்ற பெண் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் உள்ள ஷெர்ப்ரூக் நகரில் இந்த சம்பவம்
 கடந்த 09-01-2021.சனின்கிழமை இரவு நிகழ்ந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கனடாவில் நான்கு வார காலத்திற்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஆனாலும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப்பிராணிகளுடன் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் அனுமதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கியூபெக் நகரின் ஷெர்ப்ரூக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை நாயாக
 பாவித்து நடைபயிற்சி செல்வது போல் சென்றுள்ளார். இதனை கவனித்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை 
அவரிடம் விசாரணை நடத்தினர்.
நான் எனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன். என்று பதில் அளித்தார். அரசின் அறிவிப்பை மீறியதற்காக இருவர் மீதும் அரசின் விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு கனேடிய டொலர் $ 1546 வரையில் அபராதம்
 விதிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 9 ஜனவரி, 2021

ஒலிம்பிக் 2021 ஆம் ஆண்டு நடப்பதும் சந்தேகமே வெளியான புதுத் தகவல்

ஒலிம்பிக் 2021 ஆம் ஆண்டு  நடப்பதும் சந்தேகமே என ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி சூசகமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது தெரிந்ததே.
இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 08 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாராலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக 
அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜப்பானில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பீதியால் ஜப்பானில் அவசர பிரகடன நிலை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே, டோக்கியோ ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி, அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடக்குமா என அதிகாரப்பூர்வமாக எதுவும் குறிப்பிட முடியாது என 
கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 7 ஜனவரி, 2021

கொரோனா தொற்ரால் யேர்மனியில் ஒரு நாளில் 1019 பேர் பலி!!!

யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு 1019 பேர் 06-01-21அன்று  புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். அத்துடன் 26,651 பேருக்கு புதிதாக 
தொற்று ஏற்பட்டுள்ளது.என்பது 
குறிப்பிடத்தக்கது 

 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


கொரோனா தொற்ரால் பிரித்தானியாவில் ஒரு நாளில் மட்டும் 1041 பேர் பலி

பிரித்தானியாவில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் ஒரு நாளில் 06-01-21.அன்று  புதன்கிழமை)மட்டும் 1041 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்
62,322 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.
இங்கிலாந்து மருத்துவமனைகளில் 30,074 கோவிட் நோயாளிகள் உள்ளனர். தொற்று நோயாளிகள் எண்ணிக்கை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வர முடியாமல் ஆம்புலன்ஸ் சேவை திணறி
 வருகின்றது.
அடுத்த சில வாரங்களுக்கு இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் எதிர்பாக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 5 ஜனவரி, 2021

பிரிட்டநில் 6 வாரத்துக்கு பாடசாலைகள் பூட்டு!பரீட்சைகள் ரத்து

 

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தேசிய அளவில் நாட்டை முடக்கும் கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறார்.05-01-21. இன்று செவ்வாய் முதல் அங்கு பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டு பரீட்சைகள் 
இரத்தாகின்றன.
உடனடியாக அமுலுக்கு வருகின்ற கட்டுப்பாடுகள் பெப்ரவரி நடுப்பகுதி வரை – சுமார் ஆறுவாரங்கள் – தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டவுணிங் வீதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து லண்டன் நேரப்படி இன்றிரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நாட்டை மூடி முடக்கவேண்டிய அவசியத்தை விவரித்தார். நாடு 
வைரஸ் நெருக்கடியின் இறுதி அத்தியாயத்தைக் கடந்துகொண்டிருக்கிறது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>