நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 15 ஜூலை, 2013

அணு உலைக்கு எதிராக வலுக்கும் போராட்டம்


பிரான்சில் அணு உலைக்கு எதிரான பசுமை அமைதி இயக்க ஆர்வலர்கள் திடீரென அணு மின் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்சின் துரோம் பகுதியில் திரைகாஸ்டின் என்ற அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை அணுசக்திக்கு எதிரான பசுமை அமைதி இயக்கத்தினர் சிலர், திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டம் நடத்தியவர்களில் 21 பேர் உள்ளே நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார், அவர்களை கைது செய்தனர்.{காணொளி, }
 


அமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்: இத்தாலியில் ??


இத்தாலியில் கறுப்பின பெண் அமைச்சரை குரங்குடன் சேர்த்து ஒப்பிட்டு விமர்சித்தவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலி செனட் துணை தலைவர் மற்றும் நார்த்தன் லீக் கட்சி உறுப்பினர் ராபர்ட்டோ கால்டெரோலி.
இவர் நேற்று முன்தினம் வடக்கு இத்தாலியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, எனக்கு விலங்குகள், பறவைகளை மிகவும் பிடிக்கும். அதுபோல் சிசிலியை பார்த்தாலே எனக்கு உராங்குட்டான் குரங்குதான் நினைவுக்கு வருகிறது. அந்த நினைப்பை என்னால் தடுக்க முடியவில்லை என்று பேசினார்.
இதை கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், நாகரிகம் சிறிது கூட இல்லாமல் இனவெறியுடன் விமர்சித்துள்ளார் என ராபர்ட்டோவுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் தடுப்பு துறை அமைச்சராக சிசிலி உள்ளார்.
மேலும் இவர் காங்கோ நாட்டை சேர்ந்தவர் என்பதும், 1983ம் ஆண்டு இத்தாலியில் குடியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரதமர் லெட்டா வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் சிசிலி யெங்கேவை குரங்குடன் ஒப்பிட்டு பேசியது நாகரிகமற்ற செயல்.
இனவெறியை தூண்டும் செயல். நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்

ஞாயிறு, 14 ஜூலை, 2013

உலுக்கி இருக்கும் தொடருந்து விபத்து!!!


பிரான்ஸைஉலுக்கி இருக்கும் மாலை 17h14 அளவில்   Paris-Limoges (Haute-Vienne) இடையில் பயணித்த  Intercités Teoz (n°3657) தொடருந்து  தண்டவாளத்திலிருந்து விலகி Brétigny-sur-Orge (Essonne) தொடருந்து நிலையத்தில்விபத்திற்குள்ளாகி உள்ளது. தொடருந்தின் கடைப் பகுதியிலுள்ள கிட்டத்தட்ட 370 பயணிகள் பயணித்த ஆறு அல்லது ஏழு தொடருந்துப் பெட்டிகள் விபத்துக்கு உள்ளாகி உள்ளன. இப் பெட்டிகள் பலத்த சேதத்திற்கு உள்ளாகிக் கவிழ்ந்துள்ளன.  உடனடியாக சிவப்பு எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன, இரவு 22 மணியளவில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ள முதலுதவிச் சேவையினர் 22 கடுமையான காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையிலுள்ள்ளதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் 60 காயமடைந்தோரையும் மீட்டுள்ள அவசர சிகிச்சைப் படையினரும் தீயணைப்புப் படை வீரர்களும் தொடர்ந்தும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சிகிச்சைப்பிரிவினர் 180 பேரைப் பொறுப்பேற்றுள்ளனர். காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் அதிகரித்த வண்ணமே செல்கின்றது. உடனடியான நிவாரண மற்றும் இடர்நிவாரண மையம் ஒன்றை ESSONNE நிர்வாகமும் SNCF நிர்வாகமும் அமைத்துள்ளனர். பரிசின் வைத்தியசாலைகளும் அரசினர் வைத்தியசாலைகளும் (AP-HP) உடனடியாக அவசர சிகிச்சைகளிற்கு பலரை உள்வாங்கும் வண்ணம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையின் பின்னர் இவ்விபத்தானது தொடருந்துப் பாதையின் சமிக்ஞை மற்றும் இருப்புப் பாதை ஒழுங்கை மாற்றும் அமைப்பின் தவறினால் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. கடந்த மே மாதத்திலிருந்தே SNCF பிரெத்தினி தொடருந்து நிலையத்தின் சமிக்ஞை மற்றும் பாதை ஒழுங்கு மாற்று அமைப்பில் கோளாறு உள்ளதாகவும் அதற்கான திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் பிரெத்தினி தொடருந்து நிலையத்தினுள் நுழையும் தொடருந்துகளின் சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இத் தொடருந்து நிலையத்தைத் தாண்டி வேலை நேரங்களில் நிமிடத்திற்கு மூன்று தொடருந்துகள் பரிஸ் நோக்கிச் செல்லும் முக்கிய பாதையாக இது இருக்கின்றது. இப்பகுதிக்கான போக்குவரத்து அடுத்த மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் மற்றும் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ், போக்குவரத்து அமைச்சர் பிரெட்ரிக் குவியே ஆகியோர் விரைந்துள்ளனர். பிரான்சுவா ஒல்லோந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிற்கு ஆறுதல் கூறியதோடு அனைவரையும் ஒன்றிணைந்து இந்தச் சிக்லாள நேரத்தில் செயற்படுமாறு கோரியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக நீத்தித்துறையினரின் விசாரணையையும் SNCFஇன் விசாரணையையும் போக்குவரத்து அமைச்சின் விசாரணைகளையும் உடனடியாக ஆரம்பிக்குமாறு கட்டளையிட்டுள்ளார். மேலும் செய்திகள் பின்னர் அறிவிக்கப்படும். (காணொள புகைப்படங்கள் இணைப்பு )

திங்கள், 8 ஜூலை, 2013

எண்ணெய் டாங்கர்களுடன் ரயில் தடம்புரண்டு விபத்து: 60 பேர்

 
கனடாவில் எண்ணெய் டாங்கர்களுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 60 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் வடக்கு டோக்டா நகரில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு 77 டாங்கர்களுடன் சென்ற ரயில், கனடாவின் கிழக்கே குயிக்பெக் மாகாணத்தின் லாமேக்னடிக் நகர் வந்த போது, திடீரென தடம்புரண்டு கட்டிட பகுதிக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது.
இதனால் ஏற்பட்ட தீயிலும், கரும் புகையிலும் அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தன.
பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதில் 60-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தீயணைப்பு துறையினரும் இவர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்று கொண்டிருக்கின்றனர்.
70 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த இந்த ரயிலில், பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்த சில பெட்டிகள் வெடித்ததில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
அருகிலிருந்த சவுடியர் நதியிலும் இந்த ரயிலிலிருந்து கசிந்த எரிபொருட்கள் கலந்ததாக கியூபெக் மாகாணத்தின் சுற்றுச்சூழல் அமைப்பின் தகவல் அதிகாரி கிறிஸ்டியன் பிளாங்கெட் தெரிவித்துள்ளார்