நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 28 நவம்பர், 2016

கார் ஏற்றி பொலிஸ்சாரை கொன்றுவிட்டு தப்பிய குற்றவாளி கைது !

பிரான்ஸ் நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மீது கார் ஏற்றி கொன்றுவிட்டு குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள Tarascon-sur-Ariege நகரில் பொலிசார் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, தூரத்தில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. காரை இடைமறித்து நிறுத்த பொலிசார் முயன்றுள்ளனர்.

ஆனால், வேகமாக வந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. எனினும், 55 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் காரை தடுக்க முயன்றபோது அவரை இடித்து தள்ளி விட்டு கார் பறந்துள்ளது.

இச்சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

பணியில் இருந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி தனது காரை எடுத்துகொண்டு பின் தொடர்ந்து துப்பாக்கி முனையில் நபரை கைது செய்துள்ளார்.

மேலும், பொலிசார் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பொலிசாரால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பலியான பொலிஸ் அதிகாரிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 26 நவம்பர், 2016

தற்போது லண்டனில் தொழில் புரிபவர்களுக்கு வந்தது அதிஸ்ரம?


பிரித்தானியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படைய சம்பளத்தை உயர்த்துவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்
 வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில் 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான குறைந்தபட்ச சம்பளம் 7.20 பவுண்டுகளாகவும், 21 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்கு 6.95 பவுண்டுகளாகவும், 18 முதல் 20 வயதுக்குட்பட்டோருக்கு 5.55 பவுண்டுகளாகவும்
 உள்ளது.
இந்த குறைந்தபட்ச சம்பள உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக இங்குள்ள தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இதன் அடிப்படையில் அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் நடவடிக்கையின் பேரில் 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான புதிய குறைந்தபட்ச சம்பள நிர்ணயிப்பது தொடர்பாக அரசு
 ஆலோசித்தது.
இதன்விளைவாக, 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான குறைந்தபட்ச சம்பளமாக 7.20 பவுண்டுகளில் இருந்து 7.50 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய அரசாங்கம் 
தீர்மானித்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹாமன்ட் இன்று பாராளுமன்றத்தில் வெளியிடுகிறார்.
எதிவரும் 2020 ஆண்டுக்குள் மறுசீரமைக்கப்பட்ட சம்பளம் 9 பவுண்டுகளாக உயர்த்தப்படலாம் என இங்குள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 24 நவம்பர், 2016

தனது பூனை இறந்ததற்கு 2½ கோடி ரூபா நஷ்டஈடு கேட்கும் பெண்`?

பாகிஸ்தானை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சுந்தஸ்கோரின் வளர்ப்பு பூனை இறந்தமைக்கு நஷ்ட ஈடாக ரூபா 2.5 கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறித்த வழக்கறிஞர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த பூனைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.
அங்குள்ள கால்நடை வைத்தியரிடம் காண்பித்தார். அவர் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. நோய் மேலும் அதிகரித்தது.
இதனால் பூனையை வேறு வைத்தியரிடம் கொண்டு சென்றார். அதற்குள் பூனை இறந்து விட்டது. 
ஏற்கனவே சிகிச்சை அளித்த வைத்தியர் தவறுதலாக சிகிச்சை அளித்ததால் பூனை இறந்து விட்டதாக கூறி அவர் மீது ரூ. 2½ கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 17 நவம்பர், 2016

செத்த எலி ஆடைக்குள் ஆடை விற்பனை நிலையத்துக்கு எதிராக யுவதி வழக்கு!.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தான் வாங்­கிய ஆடையில் மடித்து தைத்த பகு­திக்குள் இறந்த எலி­யொன்று கிடந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துடன், வழக்கும் தொடுத்­துள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த கெய்லி பிசெல் எனும் 24 வய­தான இந்த யுவதி, “ஸாரா” எனும் ஸ்பானிய ஆடை விற்­பனை நிறு­வ­ன­மொன்­றி­ட­மி­ருந்து மேற்­படி புதிய ஆடையை வாங்­கி­ய­தாகத் தெரி­வித்­துள்ளார்.
40 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு (சுமார் 6000 ரூபா) வாங்­கப்­பட்ட இந்த ஆடையை சில வாரங்­களின் பின்னர் தனது வேலைத்­த­ளத்­துக்கு அணிந்து சென்­ற­போது அதிக துர்­நாற்றம் ஏற்­பட்­டதாம்.
தனது காலில் ஏதோ உராய்­வதை உணர்ந்த கெய்லி பிசெல், மேற்­படி ஆடையை ஆராய்ந்­த­போது, ஆடையில் மடித்து தைத்த பகு­திக்கு வெளியே எலி­யொன்றின் கால் நீட்­டிக்­கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்­தாராம்.
“தைய­லி­டப்­பட்ட பகு­தியை தொட்­ட­போது, எலி­யொன்றின் கால் தென்­பட்­டது. அப்­போது அதிர்ச்­சி­யினால் நான் உறைந்து போய்­விட்டேன்” என கெய்லி பிசெல் தெரி­வித்­துள்ளார்.
இதை­ய­டுத்து, மேற்­படி நிறு­வ­னத்­திடம் நஷ்ட ஈடு கோரி கெய்லி பிசெல் வழக்குத் தொடுத்­துள்ளார். இது தொடர்­பாக ஸாரா யூ.எஸ்.ஏ. நிறு­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் கூறு­கையில், “இந்த விவ­காரம் குறித்து நிறு­வனம் அறிந்­தி­ருக்­கி­றது.
இது தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­ப­டு­கி­றது. ஸாரா யூ.எஸ்.ஏ. நிறு­வ­ன­மா­னது இறுக்­க­மான சுகாதார மற்றும் பாதுகாப்பு தர நியமங்களை பேணுவதற்கு உறுதி பூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 9 நவம்பர், 2016

இரு மடங்காக அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவேன்!

அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்று நாட்டின் 45-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி
 வருகின்றனர்.
இந்த வெற்றியை அடுத்து நியூயார்க்கில் தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அமெரிக்காவின் அதிபராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது வளர்ச்சிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்றிய ஹிலாரிக்கும் என் நன்றிகளை
 தெரிவிக்கிறேன்.
8 மாத பயணத்தின் இறுதியாக மிகச்சிறந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். ஹிலாரியும் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடினார். இனி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் நமது கனவுகளை
 செயல்படுத்தலாம்.
நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிபராக பணியாற்றுவேன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டம் உள்ளது. அமெரிக்காவை நண்பனாக நினைக்கும், அமெரிக்காவுடன் நட்பு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 8 நவம்பர், 2016

அடுத்த அமெரிக்காவின் அதிபராக டொனால் டிரம்ப் தேர்வு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகளுடன் வெற்றபெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால் டிரம்ப் 276 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஹிலரி கிளின்டனுக்கு 218 அதிபர் மன்ற வாக்குகள் கிடைத்துள்ளன.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலரி கிளின்டனை விட 58 ஆசனங்களை மேலதிகமாக பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி
 பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று 
இடம்பெற்றது.
அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
அதற்கமைய தற்போது வரையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால் டிரம்ப் 276 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற்று வெற்றிப்
 பெற்றுள்ளார்.
மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஹிலரி கிளின்டன் 218 அதிபர் மன்ற வாக்குகள் பெற்று 
தோல்வியடைந்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 நவம்பர், 2016

எச்சரிக்கை பிரித்தானியா நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது ?

பனியின் தாக்கம் இரவு நேரங்களில் உச்சத்தை அடையும் என்பதால் பிரித்தானிய நாட்டு மக்கள் தங்கள் விழா கொண்டாட்டத்தை சீக்கிரம் முடித்து கொள்ளுதல் நலம் என அந்த நாட்டின் வானிலை மையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டில் பாரம்பரியமாக BoneFire Night என்னும் வானவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நவம்பர் மாதங்களின் இரவு நேரங்களில் நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று அந்த நிகழ்ச்சிகளை சிறப்பிப்பார்கள்.
இந்த நிலையில் அங்கு பனியின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளிட்டுள்ள செய்தியில், காலை நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும், பின்னர் மாலை நேரம் ஆக ஆக குளிரின் தாக்கம் அதிகம் அடைந்து பின்னர் -5 டிகிரி செல்சியஸிலிருந்து -3 டிகிரி செல்சியஸாக குறைய கூட வாய்ப்புள்ளது.
இப்படி ஆவதால் பனி பொழிந்து மக்கள் இரவு நேரங்களில் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். இதனால் மக்கள் BoneFire நிகழ்ச்சியை நடு இரவு வரை கொண்டாடுவது சரியானதாக இருக்காது என வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை பற்றி அங்கு வாழும் ஒருவர் கூறுகையில், மக்கள் கொண்டாட்டமான மனநிலையில் தற்போது இருக்கிறார்கள். ஆனால் வானிலை மையத்தின் எச்சரிக்கையையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>