நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 24 டிசம்பர், 2013

சூடானுக்கு இரகசியமாக இலங்கை இராணுவம்


தென் சூடான் நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் அங்கே உள்நாட்டுப் போர் வலுவடைந்துள்ளது. தற்போது அது பூதாகரமாக எல்லா மாநிலங்களிலும் பரவியுள்ளது. இன் நிலையில் அன் நாட்டில் சுமார் 75 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களை இலங்கைக்கு மீட்டுக்கொண்டுவரவேண்டும் என்று இலங்கை அரசு கூறிவந்தது. எகிப்த்து நாட்டு அதிகாரிகளுன் இலங்கை அதிகாரிகள் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனையடுத்து, இலங்கையர் சிலரை எகிப்த்தினூடாக தென் சூடானுக்கு அனுப்பி அங்கே சிக்கியுள்ள 75 இலங்கையர்களை மீட்க்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசு இந்த 75 பேருக்காகவா இவ்வாறு செய்கிறது என்று கேட்டால் அது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. சாதாரண கூலி வேலைசெய்யும் இந்த 75 பேரையும் மீட்க்க இலங்கை இவ்வாறு செய்யுமா என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது. இதுதொடர்பாக சில இரகசிய தகவல்கள் கொழும்பில் இருந்து கசிந்துள்ளது. அதாவது நாடு கடந்த தமிழீழ அரசு, மற்றும் ஏனைய சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள், தென் சூடான சுதந்திரம் அடைந்த பின்னர் அன் நாட்டு அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு, தமிழர்களுக்கு உதவுமாறு கோரிவந்தது. இதனால் தென் சூடான் என்னும் புதிய நாடு ஈழத் தமிழர்கள் பக்கம் திரும்பிவிடும் என்று இலங்கை அரசு எண்ணியது.
இதன் காரணமாக இலங்கை அரசு சில முக்கிய சிங்கள இராஜதந்திரிகளை அன் நாட்டுக்கு அனுப்பி, லாபி செய்ய வைத்தது. அவர்களே தற்போது அங்கே சிக்கித் தவிக்கிறார்கள். இந்த 75 பேரில் குறைந்தது 4 இலங்கை இராஜதந்திரிகள் அடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இவர்களை பாதுகாப்பாக மீட்டு வர அதிகாரிகள் என்றபோர்வையில், இலங்கை அதிரடிப்படையினர் எகிப்த்துக்கு அனுப்பப்பட உள்ளதாக மேலும் அறியப்படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் !

திங்கள், 23 டிசம்பர், 2013

நாடக வடிவில் கலக்க வருகிறது ஹாரி பாட்டர்


இங்கிலாந்தை சேர்ந்த ஜே.கே.ரௌலிங் எழுதிய ஹாரி பாட்டர் என்ற நாவல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும்.
ஹாரி பாட்டரில் 7 தொகுப்புகள் வரை எழுதிய ரௌலிங் இதற்கு மேல் இந்த தொடரை எழுதப் போவதில்லை என்று அறிவித்து விட்டார்.

எனவே இதனை நாடகமாக நடத்துவதற்கு ஏராளமானோர் அவரை அணுகியுள்ளனர்.
இந்நிலையில் விருது பெற்ற நாடகத் தயாரிப்பாளர்களான சோனியா பிரைட்மேன் மற்றும் கோலின் கேலண்டர் ஆகியோருடன் இணைந்து புகழ்பெற்ற ஹாரி பாட்டர் கதை வடிவங்களை நாடகமாக இயக்கப் போவதாக ரௌலிங் நேற்று தெரிவித்துள்ளார்.

யுகே தியேட்டர் எனப்படும் இந்த நிறுவனத்திருடன் தயாரிக்கப்படும் நாடகம் ஹாரி பாட்டர் ஹோக்வர்ட் பள்ளிக்கு வருவதற்குமுன் அனாதையாக இருந்த காலகட்டத்தையும், அவர் கடத்தப்பட்ட விதத்தையும் சித்தரிக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த நாடகத்தில் ரௌலிங் இணை தயாரிப்பாளராகப் பங்குபெறுகின்றார், ஆனால் வசனங்களை அவர் எழுதவில்லை என்று கூறப்படுகின்றது.

இதற்கான வசனகர்த்தாவையும், இயக்குனரையும் தேர்வு செய்யும்பணி தற்போது தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் இந்த நாடகத் திரையாக்கம் வரும் 2015-ல் அரங்கிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 22 டிசம்பர், 2013

சூடானில் பதற்றம் அதிகரிப்பு - இலங்கையர்களை திருப்பி அழைக்க!!

சூடானில் பதற்றம் அதிகரிப்பு - இலங்கையர்களை திருப்பி அழைக்க!! 
தென்சூடான் நாட்டிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் சூடானில் இன மோதல்கள் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்கள் தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

கோரிக்கை விடுத்துள்ளது. தென்சூடானில் இலங்கை பணியாளர்கள் 75 பேர் வரையில் பணியாற்றுகின்ற நிலையில் அவசியம் ஏற்படில் அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் துணை ஜனாதிபதி ரீக் மஷார் தன்னை பதவியிலிருந்து கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி சல்வா கீயர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அங்கு கடந்த ஞாயிறு முதல் நடந்துவரும் இன வன்முறைகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
 

சனி, 21 டிசம்பர், 2013

காதலர் தின ராட்சதனை மடக்கிய பிரான்ஸ் பொலிசார்

இத்தாலி நாட்டைச் சேர்ந்த தொடர் கொள்ளைகாரன் பிரான்ஸ் பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.
இத்தாலியை சேர்ந்த கேலியாரே என்பவன் “கிரிமினல் மனநோயாளி”.இவன் கடந்த 1980ம் ஆண்டு 3 விலைமாதுக்களை கொன்று மற்றொருவரை காயப்படுத்தினான்.
இதனடிப்படையில் இவன் பல வருடங்கள் மருத்துவமனையில் கிரிமினல் மனநோயாளிகளின் வார்டில் உள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டான்.

இதனைதொடர்ந்து கடந்த 1990ம் ஆண்டு அம்மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடிய இக்கொலைகாரன் தன் பெண் நண்பர் ஒருவரின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பித்துள்ளார்.
இதுகுறித்து அன்ஸா என்ற செய்திநிறுவனம் விடுத்த அறிக்கையில், இத்தாலியை சேர்ந்த கேலியாரே என்ற நபர் சைக்கோ கொலைகாரன் ஆவான். இவன் தொடர் கொலை செய்வது மட்டுமல்லாது

கொள்ளை, கற்பழிப்பு, போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் வைத்திருத்தல் போன்ற பல்வேறு குற்றங்களை செய்த குற்றவாளி என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் கண்ணில் மண்ணை தூவ எண்ணிய கேலியாரே இத்தாலிய சிறையிலிருந்து தப்பி வந்து பிரான்ஸிலுள்ள “பிரெஞ்சு ரிவேரியாவில்” பதுங்கியுள்ளான்.
ஆனால் இத்தாலிய பொலிசார் அளித்த தகவலின் பெயரில் பிரெஞ்சு பொலிசார் இவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் இத்தாலிய ஊடகங்கள் இக்கொலையாளியை “வேலண்டைன் சீரியல் கில்லர்” (காதலர்தின தொடர் கொலைகாரன்) என்றும் ”வேலைடைன்ஸ் டே மான்ஸ்டர்” (காதலர் தின ராட்சதன்) எனவும் வர்ணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 19 டிசம்பர், 2013

பிரித்தானிய பாடகருக்கு 35 வருட சிறை பாலியல் துஷ்பிரயோக வழக்கில்!!

 இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ராக் இசைக்குழு லாஸ்ட்புராபெட்ஸ் என்பதாகும். இந்த இசைக்குழுவின் பாடகர்களில் ஒருவரான இயன் வாட்கின்ஸ்(36) சிறுவர் பாலியல் குற்றங்களுக்காக நேற்று 35 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ளார். இவர் மீது மொத்தம் 13 வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இவருடன் இரண்டு குழந்தைகளின் தாய்மார்களும் இந்தக் குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இவர்கள் அனைவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
   
தான் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரியும் கடந்த 28 வருடங்களில் இதுவே தன்னை மிகவும் பாதித்த வழக்காகும் என்று தெற்கு வேல்ஸ் பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரியும், துப்பறியும் நிபுணருமான பீட்டர் டோய்லே தெரிவித்துள்ளார். இதுதவிர ஜெர்மனியிலும், அமெரிக்காவிலும் இதுபோன்ற குற்றங்களில் இயன் வாட்கின்ஸ் ஈடுபட்டுள்ளாரா என்பதையும் ஆராய்ந்து கொண்டிருப்பதாக இவர் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட இசைத்தட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்திருந்த இந்தக் இசைக்குழு வாட்கின்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றத்தினால் கடந்த அக்டோபர் மாதம் பிரிந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது
 

திங்கள், 16 டிசம்பர், 2013

லஞ்சத்தில் மடங்கும் நாராயண் சாய் வழக்கு: குற்றவாளிகள் கைது

 பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் மீதான வழக்கை பலவீனப்படுத்த வலியுறுத்தி லஞ்சம் கொடுக்க வந்த அவரது ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நாராயண் சாயின் வழக்கை வவிசாரித்து வரும் பொலிஸ் அதிகாரிகளுக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க வந்த அவரின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யயப்பட்டனர். அவர்களிமிடருந்த 5 கோடி ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறை அதிகாரிகள் தங்கள் தகவலில், இப்பணத்தை அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கும், மருத்துவர்களுக்கும், நீதித்துறையை சார்ந்தவர்களுக்கும் வழங்க முன்வந்ததாக குறிப்பிட்டுள்ளது.
குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரி சி.கே.கும்பானியும் நாராயண் சாயின் ஆதரவாளர்களுடன் கைது செய்யட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

நாராயண் சாயின் கூட்டாளியான உதய் சாங்காணியிடமிருந்து ரூபாய் 1 கோடியும், சூரத்திலுள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கேத்தன் படேலிடமிருந்து ரூபாய் 4 கோடியும் கைப்பற்றப்பட்டதாக குற்றப்பிரிவு துணை ஆணையர் ஷோபா புட்டாடா தெரிவித்துள்ளார்.