நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

வாழைச்சேனை இளைஞர் நேபாளத்தில் இளைஞர் மாநாட்டுக்கு விஜயம்

நேபாளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் சர்வதேச இளைஞர் உச்சி மாநாட்டுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவர் வியாழக்கிழமை விஜயம்  செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன முன்னாள் தலைவரும், வாழைச்சேனை கோறளைப்பற்று இளைஞர்
 சம்மேளங்களின் முன்னாள் தலைவரும், வாழைச்சேனை பேத்தாளையைச்
 சேர்ந்தவருமான தங்கராசா சசிகுமார் நேபாளத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
நேபாளத்தில் ஒரு வாரம் நடைபெறும் சர்வதேச இளைஞர் உச்சி மாநாட்டுக்கு இவருடன் பத்து பேர் இலங்கையில் இருந்து 
விஜயம் செய்துள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

மல்லாகம் பகுதியில் கனடாவில் இருந்து . வந்தவர் திடீர் மரணம்

கனடாவில் இருந்து யாழ்ப்பாத்திற்கு வந்தவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது..
தாயின் இறுதிக் கிரியைக்காக தனது மனைவியுடன் அவர் யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. .
தாயின் இறுதிச் சடங்கின் போதே இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்லும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ். மல்லாகம் கட்டுவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட 2 பிள்ளைகளின் தந்தையான 44 வயதுடைய இராசையா பத்மவேல் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இவருடைய இறுதிக்கிரியை இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளமை 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

யேர்மனியில் நான்கு கலைஞர்கள் இணைந்துகொண்டவேளை

யேர்மனியில் புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட பரிசில் இருந்து வந்திருந்த க.வாசுதேவன் அவர்களின் பிரன்சுப்புரட்சி எனும் புத்தகம் தமிழ் ஆக்கப்பதிவாக பலகலைஞர்கள் பார்வையாளர்கள் என இணைந்து கொண்ட வெளியீடாக
 சிறப்பைக்கண்டது.
இதில் கலந்து கொண்ட எழுத்தாளர் ஆய்வாசிரியர் திரு. வாசுதேவன் அவர்கள் இந்தப்பணியானது எமது இனத்தின் ஆழுமைக்கு ஒரு மகுடமாகும், மேலதிகத்தகவல்கள் எஸ் ரி எஸ் இணையத்தில் பதிவாக உள்ளதுடன் இதன் காணொளி தமிழ் எம் ரிவி ,எஸ் ரி எஸ் தமிழ் இ‌ணையத்தெ‌ாலைக்காட்சியில் உங்கள் பார்வைக்கு ஒளிபரப்பாகும் 
என்றதகவலுடன்.
இன்நிகழ்வுபற்றிய சிறப்புத்தகவல்கள்  இன்நிகழ்வுக்கு வந்திருந்த திரு. வாசுதேவன், ஊடகவியலாளர்மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன், தமிழ் எம்ரிவி இ‌ணையத்தெ‌ாலைக்காட்சி இயக்குனர், குழந்தைக்கவிஞர் ,கதாசிரியர் ,ஆனைக்கோட்டை இணையநிர்வாகி என பல்துறைசார் கலைஞர் என்.வி. 
சிவநேசன்,
இவர்களுடன் எஸ் ரிஎஸ் தமிழ் இ‌ணையத்தெ‌ாலைக்காட்சி இயக்குனர், எஸ் ரிஎஸ் ஸ்ரூடியோ, ஈழத்தமிழன், எஸ் ரிஎஸ்தமிழ், ஈழஒளி இணையங்களின் நிர்வாகியும், கவிஞர், இசையமைப்பாளர், சிறுப்பிட்டி எஸ்.தேவராசாஅவர்களும் இணைந்துள்ள நிழல்படம்தன்னை இங்கே காணலாம் இதுவே நான்கு கலைஞர்கள் சந்தித்த 
இனியவேளையாகும்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>திங்கள், 12 பிப்ரவரி, 2018

தமிழ் மொழி கனடா பள்ளிகளில். இரண்டாம் மொழியாக படிக்கலாம்

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும்

மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக்

கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும்

சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் தென்னாபிரிக்கா, குயானா, பிஜி,

 சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள்

பேசுவதில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது

  இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>

சனி, 3 பிப்ரவரி, 2018

குவைத்தில் சட்டவிரோதமாக 15 ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள்!!

இலங்கையைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குவைட்டில் சட்டவிரோதமாக வசித்து வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.
தற்போது அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியாவதற்கு அல்லது பதிவு செய்துக் கொள்வதற்கான பொதுமன்னிப்புக் காலம் அமுலாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்பு காலம் 
அமுலில் இருக்கும்.
இந்த காலப்பகுதியை பயன்படுத்தி, அங்கு சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை கோரியுள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>