நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 26 ஜூன், 2020

இரவு நேரத்தில் கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழ்ப்பெண்

கனடாவில் காணாமல் போயுள்ள இலங்கை தமிழ்ப்பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்
ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.
அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமாரி கடைசியாக கடந்த 25ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு Oak St + Parliament St பகுதியில் காணப்பட்டுள்ளார் 
என தெரியவந்துள்ளது.
காணாமல் போன அன்று சசிகுமாரி Blue short sleeve pajama சட்டை மற்றும், பிங்க் pajama பேண்ட் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட சசிகுமாரி குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் 
தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


வியாழன், 25 ஜூன், 2020

மகிழ்ச்சியான செய்தியைச் சொன்ன ஜேர்மனி..வருகிறது கொரோனாவிற்கு தடுப்பூசி

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ‘க்யூர்வேக்’ (CureVac)என்ற நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத
 நிறுவனம் ஆகும்.
டியுபிங்கன் பல்கலைக்கழக வைத்தியசாலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி இடம்பெற்று வருகின்றது.இந்த தடுப்பூசியை உருவாக்கும்
 பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.இதை முதலில் பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜேர்மன் மற்றும் பெல்ஜியத்தில் மொத்தம் 144 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 மாதங்களில்
 அவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு, 
முடிவுகள் வெளியிடப்படும்.பீட்டர் கிரம்ஸ்னர் கூறியதாக இந்த தகவலை ஜேர்மன் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பரிசோதனைக்குப் பின்னர் அடுத்த ஆண்டில் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று, பீட்டர் கிரம்ஸ்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 23 ஜூன், 2020

பத்து பீர் குடித்துவிட்டு 18 மணிநேரமாக சிறுநீர் கழிக்காத நபருக்கு நடந்த விபரீதம்

சீனாவில் ஒரே நேரத்தில் 10 பீரை குடித்து காலி செய்துவிட்டு 18 மணிநேரம் தூங்கியவருக்கு சிறுநீர் பை சிதைவு ஏற்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஹூ என்பவர் 10 பீருக்கு மேல் குடித்துவிட்டு
 கிட்டத்தட்ட 18 மணிநேரம் தூங்கியுள்ளார். இடையில் அவர் சிறுநீர் கழிக்கக் கூட, எழுந்திரிக்கவில்லை. இதனால் அவரது சிறுநீர் பையில் அதிகளவில் சிறுநீர் தேங்கியுள்ளது. அளவுக்கதிகமான சிறுநீர் தேக்கத்தால் சிறுநீர் பை சிதைந்துள்ளது. இதனால் அவருக்குக் கடுமையான வயிற்று
 வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சேர்ந்த அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 17 ஜூன், 2020

இலங்கை பெண்மணி நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் களம் குதிக்கின்றார்

.இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த வனுஷி வோல்ட்டேர்ஸ் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தொழிற் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.இவரை வேட்பாளராகக் களமிறக்குவதற்கான அங்கீகாரத்தை 
தொழிற்கட்சி வழங்கியுள்ளது.ஆக்லான்டில் போட்டியிடவுள்ள இவர், தேர்தலில் தெரிவு 
செய்யப்பட்டால், நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற 
பெருமையைப் பெறுவார்.வனுஷி நியூசிலாந்து அரசாங்கத்திலும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு 
பொறுப்புவாய்ந்த உயர் பதவிகளை வகித்ததன் மூலம் பரந்த நிபுணத்துவ அறிவையும், அனுபவத்தையும் கொண்டவர். சட்டத்துறையிலும், இலாப
 நோக்கமற்ற நிறுவனங்கள் பலவற்றிலும் முக்கியமான பதவிகளையும் வகித்திருக்கின்றார்.தற்போது நியூசிலாந்து மனித 
உரிமைகள் ஆணைக்குழுவில் ஒரு சிரேஷ்ட முகாமையாளராகவும் பதவிவகிக்கும் அவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது
.வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசுப் பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவரது பெயரிலேயே 
சரவணமுத்து ஸ்ரேடியம் அமைக்கப்பட்டது.புகழ்பெற்ற சரவணமுத்துவின் அரசியல் குடும்பத்தில் வந்த வனுஷி, ஐந்து வயதாக இருக்கும் போதே அவரது தந்தை காலஞ்சென்ற ஜனா இராஜநாயகம், தாயார் பவித்திரா ஆகியோருடன் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்.வோல்ட்டேர்ஸ் என்பவரைத் திருமணம் செய்த வனுஷிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளார்கள்.செப்டம்பர் 19 ஆம் திகதி
 நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்றால் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இலங்கையில் பிறந்த முதலாவது உறுப்பினர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொள்வார்.

ஞாயிறு, 7 ஜூன், 2020

சிங்கப்பூரில் இலங்கைத் தமிழ் இளைஞர்களிற்கு ஏற்பட்ட கதி

கனடா ஆசை எல்லை கடக்கும்போது திடீர்ப் பதற்றம் போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டையுடன் சிங்கப்பூரில் கைதான இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களிற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.புஷ்பராஜ் கபில் (21), இராமச்சந்திரன் கிரியசோ பிரஷாத் (32) ஆகிய இருவருக்குமே சிறைத்தண்டனை 
விதித்துள்ளது.புஷ்பராஜ் கபிலுக்கு ஏப்ரல் 28ஆம் திகதியும், இராமச்சந்திரன் கிரியசோ பிரஷாத்துக்கு ஜூன் 4ஆம் திகதியும் தலா எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக
 சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் நேற்று (5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டை வைத்திருந்ததற்காக கபில் தண்டிக்கப்பட்டார். 
போலி ஆவணங்களைப் பெற கபிலுக்கு உதவிய பிரஷாத்துக்கு தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த பெப்ரவரி 29ஆம் திகதி
 இருவரும் சிங்கப்பூரில் நுழைய முயற்சி செய்தபோது கைது செய்யப்பட்டனர்.
கனடாவுக்குள் அகதியாக நுழைய விரும்பிய கபில், சேம் என்பவரின் உதவியை நாடியுள்ளார். கனடா செல்வதற்கான 
ஆவணங்களைத் தயாரித்து கொடுத்தால் 9,000 சிங்கப்பூர் டொலர் தருவதாக சேமிடம் கபில் உறுதி கூறினார்.உடனே சேம், பிரஷாத் என்பவருடன் தொடர்புகொண்டு கபிலின் பயணத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள மலேசியரான முகமட் என்பவரிடமிருந்து பிரஷாத் போலி 
ஆவணங்களைப் பெற்றார்.பின்னர் பிப்ரவரி 28ஆம் திகதி கபிலும், பிரஷாத்தும் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டனர்.
அப்போது போலி ஆவணங்கள் உள்ள பையை கபிலிடம் பிரஷாத் ஒப்படைத்தார்
.மறுநாள் நாள் காலை 6.30 மணியளவில் இருவரும் துவாஸ் சோதனைச் சாவடியை வந்தடைந்தனர்.குடிநுழைவுத்துறை 
அதிகாரியிடம் கபில் தனது இலங்கை கடவுச்சீட்டை காட்டினார். ஆனால் அவரது நடத்தையில் அதிகாரிக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் கபிலையும் அவருடன் வந்த பிரஷாத்தையும் 
மேலதிகாரியிடம் அனுப்பி வைத்தார்.சோதனையில் அவர்களிடம் போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இருவரும் உடனடியாக 
கைது செய்யப்பட்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






கொரோனா தொற்றிலிருந்து உலகம் முழுவதும் குணமடைந்தோர் அதிகரிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 33 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்துள்ளதாக 
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் அடையாளம் 
காணப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 
உலகின் 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதனால் பெரும்பாலான நாடுகளில் முடக்கநிலை
 அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 
சில நாடுகளில் முடக்கநிலை தளர்த்தப்பட்டும் வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் 6,791,307 பேர் பாதிக்கப்பட்டுள்ள
 நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு 
குணமடைந்தோர் எண்ணிக்கை 3,304,798 ஆக உயரந்துள்ளதாக சர்வதேச
 ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கொரோனாவுக்கு
 சிகிச்சை பெறுபவர்களில் 53,503 பேரின்
 நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 396,275 பேர் உயிரிழந்துள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 5 ஜூன், 2020

கோரத் தாண்டவமாடும் கொரோனா கனடாவில் 139 பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 139பேர் உயிரிழந்ததோடு, 641பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கமைய 
உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,637ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த 
எண்ணிக்கை 93,726ஆக அதிகரித்துள்ளது.மேலும், 34,350பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 
வருவதோடு, 51,739பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுதவிர, 1,727பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து முழுமையாக விடுபட்ட தீவு

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து ஒரேயொரு தீவு மாத்திரம் குறித்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பியுள்ளது.பசுபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள இந்தத் தீவானது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 
தாம் விடுபட்டுவிட்டதாக அறிவித்துள்ளது.அங்கு இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரும் பூரண குணமடைந்ததை
 தொடர்ந்தே குறித்த அறிவிப்பு 
விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு மொத்தமாக ஒன்பது இலட்சத்து 30 ஆயிரம் பேர் வாழ்ந்து வருவதோடு, அங்கு முதலாவது கொரோனா தொற்றாளர் கடந்த மார்ச் மாதத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அந்நாட்டில் மொத்தமாக 18 பேருக்கு மாத்திரமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதே போல கடந்த 45 நாட்களாக அடங்கு எந்தவொரு கொரோனா 
தொற்றாளரும் அடையாளம் காணப்படவில்லை என்பதும் விசேட அம்சமாகும்.பிஜீ தீவில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக எந்தவொரு உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என்பது 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>