நிலாவரை .கொம்

siruppiddy
அமெரிக்க செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமெரிக்க செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 11 ஜூன், 2022

கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒன்றை அமெரிக்க எடுத்துள்ளது.இதன்படி, நாளை முதல் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வேறொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், கோவிட்-19 தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கோவிட்  தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற சான்றிதழை கொண்டிருப்பது அவசியமற்றது என அமெரிக்கா 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




புதன், 4 ஆகஸ்ட், 2021

செக்க சிவந்த நிலா அமெரிக்க வானில் தோன்றிய அதிசயம்

அமெரிக்காவில் செக்கச் சிவந்த நிறத்தில் தோன்றிய நிலவை அதிகளவிலான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர் வாஷிங்கடனில் உள்ள வானுயர 
கட்டிங்களுக்கு பின் தோன்றிய நிலா சிவந்த நிறத்தில் காட்சி அளித்தது. முழு நிலவை பார்த்து ரசித்த மக்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் 
எடுத்து மகிழ்ந்தனர்
மேலும் ஒரு தரப்பினர் பற்றி எரியும் காட்டுத் தீயை பிரதிபலிக்கும் பிம்பமாக முழு நிலா சிவந்து காட்சியளித்ததாக 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>




செவ்வாய், 18 மே, 2021

அமெரிக்க நீதிமன்றம் இலங்கையில் பிறந்த கனேடிய பிரஜைக்கு சிறைத்தண்டனை

சர்வதேச மனித கடத்தல் வளையத்தில் பங்கு வகித்ததற்காக இலங்கையில் பிறந்த  கனேடிய நபருக்கு புளோரிடாவில் 32 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை 
திங்களன்று அறிவித்தது.
இலங்கையில் பிறந்த கனேடிய குடிமகனான (மோகன் அல்லது ரிச்சி என்றழைக்கப்படும்) ஸ்ரீகஜமுகம் செல்லையா என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
இவர் பிப்ரவரி 24 அன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். 
இலங்கையிலிருந்து ஆவணப்படுத்தப்படாத குடியேறியவர்களை கரீபியன் வழியாக அமெரிக்காவிற்கு பணத்திற்காக கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட கடத்தல் வளையத்துடன் இவர் 
தொடர்பிலிருந்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்காக துர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் 2020 ஆகஸ்டில் ஒப்படைப்பு கோரிக்கையின் பேரில் அவர் அமெரிக்காவிடம்
 ஒப்படைக்கப்பட்டார்.
அமெரிக்கா வழியாக கனடா செல்லும் வழியில் ஆவணமற்ற குடியேறியவர்களுக்கு வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஏற்பாடு செய்ய செல்லையா மற்ற மனித கடத்தல்காரர்களுடன் இணைந்து
 பணியாற்றினார்.
ராயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் பொலிஸ் படைகளின் (ஆர்டி & சிஐபிஎஃப்) தகவலின் படி, பல இலங்கையர்கள் மற்றும் ஒரு இந்தியர் உட்பட 158 பயணிகளுடன் துருக்கியர்கள் மற்றும் கைகோஸ் அதிகாரிகள் 158 பயணிகளுடன் ஒரு படகில் அவரைக் கண்டபோது செல்லையா  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 29 மார்ச், 2021

பல்கலைக்கழக மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து மாட்டிய மருத்துவர்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மகப்பேறு டாக்டராக பணியாற்றியவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 கோடி டாலர்( இந்திய மதிப்பில் ரூ.726 கோடி ) இழப்பீடு வழங்க குறித்த பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் குறித்த முடிவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்
 செயல்பட்டு வந்த மாணவர்களுக்கான சுகாதார 
மையத்தில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் ஜார்ஜ் டிண்டால். இவரே மொத்தம் 710 மாணவிகளிடம் வரம்பு மீறியதாகவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.இந்த 
வழக்கில், சுமார் 852 
மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டதுடன்,இன்னொரு 215 மில்லியன் டாலர் இழப்பீடும் வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்றம் வியாழக்கிழமை
 ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. டாக்டர் ஜார்ஜ் டிண்டால்
 இந்த விவகாரம் தொடர்பில் 2019ல் கைதானார்.அவர் மீது 19 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது மட்டுமின்றி, 
விசாரணைக்கு 
இடையே, அவர் மீது மீண்டும் 6 பிரிவுகளில் துஷ்பிரயோக வழக்குப் பதியப்பட்டது.அவர் இதுவரை தாம் 
குற்றவாளி அல்ல என்று வாதிட்டு வருவதால் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.2009 முதல் 2016 வரையான
 காலகட்டத்திலேயே மருத்துவர் திண்டால் மாணவிகளிடம் துச்ஜ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.விசாரணை அதிகாரிகள் திண்டாலின் 
குடியிருப்பில் இருந்து 1,000-கும் அதிகமாக காணொளி காட்சிகளையும், அருவருப்பான புகைப்படங்களையும் கைப்பற்றினர் என்பது 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 7 மார்ச், 2021

அமெரிக்காவின் அதி உயர் விருதுபெறும் தமிழ்ப் பெண்மணி

தமிழினத்தின் நலனுக்காக செய்துவரும் அபரிதமான சேவையினால் அமெரிக்காவின் அதி உயர் விருதுபெறும் தமிழ்ப் பெண்மணி
சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த பேசுபொருள் அனைத்துலக அரசாங்கத்தில் முக்கிய 
இடத்தைப்பிடித்துள்ள
 நிலையில், இலங்கையின் மனிதஉரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரனிதா ஞானராஜாவுக்கும் அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தைரியமான பெண்மணி என்ற விருதை
 வழங்கியுள்ளது
அமெரிக்க ராஜாங்கத்திணைக்களத்தால் நேற்று உலகெங்கிலும் இருந்து விருது பெறுபவர்களின் பட்டியலை அறிவிக்கப்பட்டிருந்தது இதில் ஒருவராக ரனிதா ஞானராஜாவும் இடம் பிடித்துள்ளார்.சிறிலங்கா அரசாங்கத்தால் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் விடுக்கப்பட்டபோதிலும், ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக ரனிதா ஞானராஜா தொடர்ந்தும் போராடி வருவதாகவும் அமெரிக்கவெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் 
இலங்கையின் 
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இலவச சட்ட உதவி உட்பட்ட சேவைகளை வழங்கும் நீதிக்காக ரனிதா ஞானராஜா 
தனதுவாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.இவர்களுக்குரிய விருது வழங்கும் மெய்நிகர் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ராஜாங்கசெயலாளர் அந்தனி பிளிங்களின் தலைமையில் 
இடம்பெறவுள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

லூசியானாவில் மெட்டைரி யில் துப்பாக்கி விற்பனை கடையில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் லூசியானாவில் மெட்டைரி என்ற பகுதியில் துப்பாக்கி விற்பனை கடை ஒன்று உள்ளது.  
இது நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வடமேற்கே சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடையில் இருந்த நபர் ஒருவர் திடீரென 2 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  
இதில் பெண் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் வேறு 2 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  
அவர்களது நிலைமை சீராக உள்ளது.  துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் வாடிக்கையாளர்களாகவோ, ஊழியர்களாகவோ அல்லது தனி நபர்களாகவோ இருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  கொல்லப்பட்ட 3வது நபர் துப்பாக்கியால் சுட்டவர் என்றும் கூறப்படுகிறது.  இதுபற்றி நியூ ஆர்லியன்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


வியாழன், 18 பிப்ரவரி, 2021

அமெரிக்காவில் நாய்க்கு 100 கோடி ரூபா சொத்தை எழுதி வைத்த உரிமையாளர்

தான் பாசமாக வளர்த்த நாய், தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய்க்கு எழுதி வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் 
உரிமையாளர் ஒருவர்.
நாய் உரிமையாளர் கடந்த ஆண்டே இறந்துவிட்டாலும், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதால், 100 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.அமெரிக்காவின்
 டென்னிசிஸ் பகுதியில்
நாஷ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் பில் டோர்ரிஸ் (84). பில் டோர்ரிஸ் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், தனது தொழிலில் வெற்றிகரமானவராகத் திகழ்ந்தார். சுமார் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புக்கு அளவுக்கு
சொத்துள்ள பில் டோரிஸ் யாரையும் தத்தெடுத்து வளர்க்கவில்லை. அவருக்கு நண்பன், சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருந்தது லுலு
 எனும் Border Collie இன
நாய் மட்டுமே.பில் டோர்ரிஸ் எங்கு சென்றாலும், லுலுவுடன் செல்வது தான் வழக்கம். ஒரு நிமிடம் கூட லுலுவை விட்டு அவர் பிரிந்திருக்கமாட்டார். அந்த
அளவுக்கு லுலுவை நேசித்தார் பில் டோர்ரிஸ்.முதுமையால்
 வாடிய பில் டோர்ரிஸ், தனது இறுதிக்காலம் நெருங்கியதை உணர்ந்ததும் தான் நேசித்த லுலு, தன் காலத்துக்கு பிறகு துன்பப் படக்கூடாது என்பதற்காக 5 மில்லியன் மதிப்புள்ள
சொத்துக்கள் (97,13,98,500.00 இலங்கை ரூபா) அனைத்தையும் லுலு மீது உயில் எழுதிவைத்தார். தான் எழுதிவைத்த உயிலில், “இந்த உயில் லுலுவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கானது.எனது சொத்து அனைத்தையும் லுலு
பெயருக்கே எழுதி வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.தற்போது, லுலுவைப் பார்த்துக்கொள்ள அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளை லுலுவுக்குத் தேவையானதை பில் டோர்ரிஸின் சொத்துக்கள் மூலம் செய்து
வருகிறது.பில் டோர்ரிஸின் நிலம் மற்றும் பண்ணை வீட்டின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று அறக்கட்டளை மூலம் மதிப்பிடப்பட்டு வருகிறது. அந்தப் பணி
முடிந்ததும் லுலுவின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு இன்னும்
 அதிகமாகும் என்றும்
கூறப்படுகிறது. மேலும், பில் டோர்ரிஸ் எங்கெங்கு முதலீடு செய்துள்ளார் என்றும் தேடி வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 21 ஜனவரி, 2021

முதல் பெண் துணை அதிபராக அமெரிக்காவில் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக
 பதவியேற்றார்.
இந்நிலையில் கமலாஹாரிஸின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள 
குலதெய்வ கோவிலான தர்ம சாஸ்தா சேவகபெருமாள் ஆலயத்திற்கு கமலா ஹாரிஸ் 1991ம் ஆண்டு நன்கொடை அளித்துள்ளதாகவும், அந்த தெய்வத்தின் சக்தியாலேயே கமலா உயர் பதவிகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறுகின்றனர் கிராமத்தினர்.
மேலும் அவர் அதிபராக உயருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். கமலாஹாரிஸ் தனது பெருமுயற்சியினால் அமெரிகக் துணை அதிபராக உயர்ந்திருப்பதன் மூலம், தங்கள் கிராமத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளதாக கிராமத்தினர் பெருமிதம் 
தெரிவித்தனர்.
துணை அதிபராக இருக்கும் கமலா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதிபராக உயரும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்காக இன்றே தாங்கள் பிரார்த்திக்கத் துவங்கி விட்டதாகவும் குறிப்பிடுகின்றனர் கிராமத்தினர். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் அடுத்த அமெரிக்க அதிபராக கமலாஹாரிஸ் தேர்வு செய்யப்படுவார் என்றும் நம்பிக்கை 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 16 நவம்பர், 2020

பராக் ஒபாமா பதில் என் மனைவி என்னைப் பிரிந்து சென்றுவிடுவார்

ஜோ பைடனின் அமைச்சரவையில் இடம் பெற்றால் தனது மனைவி பிரிந்து சென்று விடுவார் என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா 
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். இதேபோன்று தெற்காசியாவை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை 
அதிபராகிறார்.
இதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில், அவரது அமைச்சரவையில் இடம் பெறுவது பற்றி ஒபாமாவிடம் கேள்வி
 எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஒபாமா, பைடனுக்கு எனது ஆலோசனை தேவைப்படாது. அவர் தனது அமைச்சரவையில் எனக்கு
 ஓரிடம் அளிக்கிறார் என்றால், அதில் நான் இடம் பெறமாட்டேன். ஒருவேளை பைடன் அமைச்சரவையில் சேர்ந்து 
விட்டால், எனது மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விடுவார் என ஒபாமா அச்சம் தெரிவித்து உள்ளார்.
ஆனால், பைடனுக்கு தன்னால் முடியும் பட்சத்தில் உதவி செய்வேன் என்று ஒபாமா உறுதியுடன் கூறியுள்ளார். வெள்ளை மாளிகை பணியாளராக உடனடியாக செயல்பட நான் எந்த திட்டமும் வைத்திருக்கவில்லை என்றும் ஒபாமா என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் 44வது அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. இவரது தலைமையின் கீழ் கடந்த 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை துணை அதிபராக பைடன் இருந்தார் என்பது 
குறிப்பிடத்தக்கது.

 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 9 நவம்பர், 2020

தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பை, அவரது மனைவி மெலானியா விவாகரத்து செய்ய உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்புக்கும் அவரது மூன்றாவது மனைவி மெலானியாவுக்கும் இடையே மனக் கசப்பு இருந்ததாகவும் ட்ரம்ப் அதிபராக இருக்கும் போது விவகாரத்து பெற்றால் தான் தண்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தற்போதுவரை காத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெள்ளை மாளிகையை விட்டு டிரம்ப் வெளியேறியதும், அவரை மெலானியா விவாகரத்து செய்வார் என, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்
 தெரிவித்துள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 6 நவம்பர், 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் களம்..வெள்ளை மாளிகையை கைப்பற்றப் போவது யார்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என மாநில செயலாளர் கெத்தி புக்வோர் தெரிவித்துள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார்.
பைடனுக்கு 50.4 வீத வாக்குகள் கிடைத்துள்ள 
நிலையில், சமீபத்திய கணிப்புகளின்படி ட்ரம்பிற்கு 47.9 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.பைடன் வெற்றி பெற்று அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆறு 
வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.வாக்கு எண்ணும் பணிகளில் முறைக்கேடு நடந்துள்ளதாகவும் அதனால் மீள தேர்தலை நடத்துமாறும் கோரும் ட்ரம்ப், 50 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.அதனடிப்படையில் 
எலெஸ்கா மாநிலத்தில் 3 தேர்தல் தொகுதிகளும், ஜோர்ஜியா மாநிலத்தில் 16 தேர்தல் தொகுதிகளும், நெவாடா மாநிலத்தில் 6 தேர்தல் தொகுதிகளும், வட கரோலினா மாநிலத்தில் 15 தேர்தல் தொகுதிகளும் 
மற்றும் பென்சில்வேனியா மாநிலத்தில் 20 தேர்தல்கள் உள்ளனஆகவே இந்த ஐந்து மாநிலங்களின் முடிவுகளின் முடிவைப் பொறுத்தே இறுதி முடிவு அமையும் என கூறப்படுகின்றது.
பைடன் ஓரளவு முன்னிலை வகிக்கும் நெவாடா மாநிலம் தவிர மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அதிலும், குறிப்பாக 20 தேர்தல் வாக்குகளை கொண்ட பென்சில்வேனியா மாநிலத்தில் வெற்றி 
பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.இங்கு ஆரம்பத்தில் ட்ரம்ப் 1,08,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார்.இதனால், ஜோ பைடன் பென்சில்வேனியாவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என ஜனநாயக கட்சி பிரசாரக்குழு 
கூறுகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில், பென்சில்வேனியாவில் வாக்குகள் எண்ணி 
முடிக்கப்பட்டு முடிவுகள் இன்று வெளியாகும் என
 மாநில செயலாளர் தெரிவித்துள்ளர் அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 5 நவம்பர், 2020

தேர்தல்..2020- பராக் ஒபாமாவின் சாதனையை முறியடித்து வெற்றி நடை போடும் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாகுகளுடன் முன்னிலையில் உள்ளார்.தற்போதுவரை
 ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 (50.3%)என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012-ல் அதிபர் பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.வாக்குகளை
 பெறுவதில் ஜோ பிடன் சாதனை 
புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் அதிபர் தேர்வு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை
 கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்ற, ஒரு அமெரிக்க
 வேட்பாளர் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில் 270 ஐ வெல்ல வேண்டும். நவம்பர் 3 ம் திகதி தேர்தல் நாளுக்கு முன்னதாக 10 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 4 நவம்பர், 2020

விண்வெளியிலிருந்து அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்தர் கேட் ரூபின்ஸ்

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்க‍ை விண்வெளியிலிருந்து பதிவுசெய்தார் ரூபின்ஸ். குறை புவி சுற்றுப்பாதையில் இருந்துகொண்டு இவர் தனது வாக்கைப் ப
திவுசெய்தார்.¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கலிஃபோர்னியா மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 130 டிகிரி ஃபாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
மரணப் பள்ளத்தாக்கின் ஃபர்னேஸ் க்ரீக் எனும் இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதுவரை பூமியில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக 
கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியின் வெப்பநிலை இந்த வாரத்தில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பூமியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 129.2 டிகிரி ஃபாரன்ஹீட் (54 டிகிரி செல்சியஸ்) ஆகும்.
இதுவும் 2013-ஆம் ஆண்டு மரணப் பள்ளத்தாக்கில்தான் 
பதிவு செய்யப்பட்டது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மரணப் பள்ளத்தாக்கில் 134 டிகிரி ஃபாரன்ஹீட் (56.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மற்றும் 
கேள்விகள் உள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 23 ஜூலை, 2020

பொலிவியாவில் நகரங்களின் வீதிகளில் குவிந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான சடலங்கள்

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெரிய நகரங்களின் வீதிகள், வாகனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூலை 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை 400க்கும் மேற்பட்ட இறந்த 
உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக, தேசிய பொலிஸ்துறை இயக்குனர் இவான் ரோஜாஸ் தெரிவித்துள்ளார்.கோச்சபம்பா பெருநகரப் பகுதியில் மொத்தம் 191 சடலங்களும், நிர்வாகத் தலைநகர் லா பாஸில் 141 சடலங்களும், மிகப்பெரிய நகரமான
 சாண்டா குரூஸில் 68 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதில் 85 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் இறந்ததாக நம்பப்படுகிறது.மீதமுள்ளவர்கள் பிற காரணங்களால் இறந்ததாக கூறப்படுகின்றது.அதாவது ஒரு நோய் அல்லது 
வன்முறை காரணத்தால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பொலிவியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 64,135பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,328பேர் உயிரிழந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 20 ஏப்ரல், 2020

லட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் உணவுக்காக உணவு வங்கிகள் முன்னால்

கொரோனாவினால் அடித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் உணவுக்காக உணவு வங்கிகள் முன்னால் லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கியுள்ளார்கள்.கண்கள் எட்டும் தொலைவு வரை பென்சில்வேனியாவி கிரேட்டர் பிட்ஸ்பர்க் சமூகத்தினரின் உணவு வங்கியின் முன்னால் சுமார் 1000 கார்கள் வரை உணவுப்பொட்டலங்களுக்காக வரிசை 
கட்டி நின்ற காட்சி பலரையும் வேதனையடையச் செய்துள்ளன.தங்களுக்குக் கிடைக்கும் சிறிய உணவு பங்குக்காக அங்கு சில வேளைகளில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளதாக உணவு 
வங்கி நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.சுமார் 2 கோடியே 20 இலட்சம் பேருக்கு வேலை பறிபோயுள்ளது. இதனையடுத்து உணவு அளிக்கும் அறக்கட்டளைகள் பசியாற உணவு அளித்து வருகின்றன. ஆனால் ஒருநாள் கொரோனா கோரத்தாண்டவத்தினால், இந்த 
உணவு வங்கி முன்னால் சுனாமி போல் மக்கள் படையெடுக்கும் நிலை வரலாம் என்று அனைவரும் அஞ்சுகின்றனர். மார்ச்சில் மட்டும் பிட்ஸ்பர்க் கம்யூனிட்டி உணவு வங்கியில் உணவுப் பக்கெட்டுகளுக்கான தேவை 40% அதிகரித்துள்ளது.இது போன்ற 8 மையங்களில் நாளுக்கு நாள் தேவை அதிகரிப்பினால் உணவுப்பற்றாக்குறை
 தோன்றிவிடும் நிலை உள்ளது. அதிகம் பேர் எங்கள் சேவையை முதல் முறையாகப் பயன்படுத்துகின்றனர். இவர்களெல்லாம் உணவு வங்கிக்கு முன்பின் வந்தவர்களல்ல” என்று உணவு 
வங்கி நிர்வாகி குலிஷ் என்பவர் தெரிவித்தார்.எங்களிடம் 350 மையங்கள் இதே பென்சில்வேனியாவில் உள்ளன, இது பலருக்கும் தெரியாததால் ஒரே மையத்தில் மக்கள் குவிவதாக 
அவர் தெரிவித்தார்.  அமெரிக்கா முழுதும் நியூ ஆர்லியன்ஸ் முதல் டெட்ராய்ட் வரை சம்பளம் இல்லாத மக்கள் உணவு வங்கிகள் முன்னால் குவிந்து வருகின்றனர். சிறிய 
பங்குக்காக கிட்டத்தட்ட அடித்துக் கொள்ளும் சோகமயமான காட்சிகள் அங்கு தோன்றியுள்ளன.ஏப்ரல் 9ம் திகதி டெக்ஸாசில் சான் ஆண்டனியோவில் மிகவும் சோகமயமான காட்சி நடந்தேறியது. 
ஒரு உணவு வங்கி முன்பாக 10,000 பேர் கார்களில் காத்திருக்க நேரிட்டது. சில குடும்பங்கள் இரவு முதலே அங்கு காத்திருக்கவும் செய்கின்றனர். பொஸ்டன் புறநகர்ப் பகுதி செல்ஸீயில் உள்ள ஒரு 
மையத்தில் அலனா என்ற பெயருடைய ஒரு பெண் கூறும்போது, “வேலையின்றி மாதக்கணக்காக அலைகிறோம்” என்றார்.மேலும் அவர் கூறும்போது, “நேற்று ஒரு 
பெண் தன் 15 நாட்களேயான பிறந்த கைக்குழந்தையுடன் வரிசையில் காத்திருந்தார், கணவருக்கு வேலை போய் விட்டது. அவருக்கு இன்னும் 2 குழந்தைகள் உள்ளன. அவர் வீட்டில் உணவு இல்லை” என்றார். அமெரிக்கா முழுதும் உணவு மையங்களில் தேவை 
உச்சத்தைத் தொட்டு விட்டதாக உணவு வங்கி அதிகாரி தெரிவித்தார்.ஒரே நாளில் 30% தேவை அதிகரித்தால் சமாளிக்க முடியவில்லை என்பதே உணவு வங்கிகளின் வேதனையாக உள்ளது.அமெரிக
 உணவுத் தொழிற்துறையே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு வங்கிகளும் தீடீர் தேவை அதிகரிப்பு காரணமாக பெரிய சிக்கலில் தவித்து வருகின்றன.ரொக்க நன்கொடைகளும் வந்த 
வண்ணம் உள்ளன, அமேசன் தலைவர் ஜெஃப் பெஸாஸ் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக
 வழங்கியுள்ளார்.இந்த நன்கொடைகள் இல்லையெனில், உணவு வங்கிகளில் தேவையை சமாளிப்பது கடினம் ஆகியிருக்கும். ஆனால், இப்போதைக்கு சமாளிக்க முடிகிறது, எதிர்கால கொள்ளை நோய்களைச் சமாளிக்க முடியாத நிலையே அங்கு கவலைகளை அதிகரித்துள்ளது. 
இப்போதைக்கு சப்ளை இருக்கிறது, இன்னும் ஒரு மாதத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்கிறார் உணவு 
வங்கி நிர்வாகி குலிஷ்.பெரிய இராணுவ சக்தியாக இருந்து என்ன பயன்? உணவுக்காக மக்கள் வீதிக்கு வரும் காட்சிதான் இப்போதைய அமெரிக்க எதார்த்தமாக உள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை இணையச் செய்தி (நிழல் படங்கள் இணைப்பு) >>>





வியாழன், 9 ஏப்ரல், 2020

அமெரிக்காவின் புதிய தடுப்பு மருந்து கொரோனாவிற்கு எதிரான பெருவெற்றியளிக்கும்

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன.மனிதர்கள் மீது கொரோனாவூக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு ஏற்கனவே 
தொடங்கியூள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து 
செலுத்தப்பட்டுள்ளதாக ‘அசோசியேட் ப்ரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து
 இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு 
எந்த தீங்கும் ஏற்படாது.இந்த தடுப்பு மருந்தும், இதே போல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் மற்ற தடுப்பு மருந்துகளும் கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் 
தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 43 வயது பெண்ணிடம் இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸைத் தடுக்க என்னால் முடிந்த ஒரு உதவியைச் செய்துள்ளேன்” என அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.உலகம் 
முழுவதிலும் கொரோனாவூக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியூம் பணியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை இந்தத் தடுப்பு மருந்து, விலங்குகளின் நோய் எதிர்ப்புத்திறனைத் தூண்டுமா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகளும் வழக்கம் போல நடைபெறுகின்றன.இந்த தடுப்பூசி 
அதி உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானது. இந்த தடுப்பு மருந்தினால் சோதனை நடத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
“இது வைரஸஷுக்கு எதிரான ஒரு பந்தயம். மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான பந்தயம் கிடையாது. மேலும் இது மனிதகுலத்திற்குப் பலன் அளிப்பதற்காகவே நடத்தப்படுகிறது” 
என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய் நிபுணரான ஜோன் ட்ரோகோனிங் தெரிவித்துள்ளார். பொதுவாக அம்மை போன்ற வைரஸ்களுக்கான தடுப்பு மருந்து, பலவீனமடைந்த அல்லது கொல்லப்பட்ட வைரஸ்களின் மூலம் உருவாக்கப்படும். ஆனால் கொவிட்-19 தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மூலம் இந்தத் தடுப்பு மருந்து 
உருவாக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக, விஞ்ஞானிகளால் ஆய்வகத்தில் உருவாக்க முடிந்த, கொவிட் வைரஸிலிருந்து நகலெடுக்கப்பட்ட மரபணு குறியீட்டின் ஒரு சிறிய பகுதியை இது உள்ளடக்கியுள்ளது.உண்மையான தொற்றை எதிர்த்து போராடும் அளவூக்கு மனித நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு
 இந்தத் தடுப்பு மருந்து உந்துதல் அளிக்கும் என
 ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.இந்த சோதனை தடுப்பு மருந்து தன்னார்லர்கள் மீது பல்வேறு
 அளவூகளில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு அடுத்த 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை என கையின் மேல் தசை பகுதியில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும்.இந்த முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றி அடைந்தால், உண்மையான, 
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து செயற்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் 18 மாதங்கள் ஆகும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 20 மார்ச், 2020

கொரோனாவுக்கான தடுப்பூசி அமெரிக்கப் பெண்ணிற்கு சோதனை முயற்சி

அமெரிக்காவில் தன்னார்வலப் பெண் ஒருவருக்கு முதன் முறையாக கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளது. 
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளில் தடம் பதித்துள்ளது. தற்போது சீனாவில் 
கட்டுபாட்டில் உள்ள இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.
கொரோனா வைரஸ்க்கு இதுவரை எந்த
 மருந்து மற்றும் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் அனைத்தும் கொரோனவைத் தடுக்கும் 
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் கைசர் பெர்மனெட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனம் முதல்கட்டமாக பெண் தன்னார்வலருக்கு கையில் தடுப்பூசி ஒன்றை சோதனை முயற்சியாக போட்டுள்ளது.  இந்த சோதனையின் முடிவுக்காக 
ஆராய்ச்சியாளர்கள் காத்து உள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 23 ஜனவரி, 2020

அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவில் உள்ள அலஸ்கா மாகாணத்தில் இலங்கை நேரப்படி, இன்று காலை 5.53 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.அந்தவகையில், இந் நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் 
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அலஸ்காவின் யு.டி.சி. அலுடியன் தீவுகளில் காணப்படும் தனகா எரிமலைக்கு கிழக்கே 22 கிலோமீற்றர் தூரத்தில் சுமார் 10 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்நிலநடுக்கம்
 ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எவ்வித செய்திகளும் வெளியாகவில்லை எனத் தெரியவருகின்றது.இந்நிலையில், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லையென அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 8 நவம்பர், 2019

நடந்த கார் விபத்தில் அமெரிக்காவில் பரிதாபமாக பலியான யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு
 உயிரிழந்தவராவார்.குறித்த இளைஞர் கடந்த
 சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2018-ம் ஆண்டில் 
அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.