நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 5 நவம்பர், 2020

தேர்தல்..2020- பராக் ஒபாமாவின் சாதனையை முறியடித்து வெற்றி நடை போடும் ஜோ பிடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாகுகளுடன் முன்னிலையில் உள்ளார்.தற்போதுவரை
 ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271 (50.3%)என பதிவாகியுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற 69,498,516 என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுவரை 67,567,559 (48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012-ல் அதிபர் பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.வாக்குகளை
 பெறுவதில் ஜோ பிடன் சாதனை 
புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் அதிபர் தேர்வு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை
 கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்ற, ஒரு அமெரிக்க
 வேட்பாளர் மொத்தம் உள்ள 538 தேர்தல் வாக்குகளில் 270 ஐ வெல்ல வேண்டும். நவம்பர் 3 ம் திகதி தேர்தல் நாளுக்கு முன்னதாக 10 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக