நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 29 ஜூலை, 2022

கொழும்புத் துறைமுகத்தை திடீரென வந்தடைந்த ஜெர்மனிய போர் கப்பல்

பயர்ன் (Bayern) எனப்படும் ​ஜெர்மனியின் போர் கப்பல், நேற்றைய தினம் (17) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தக் கப்பல் நாட்டை விட்டு வௌியேறுவதற்கு முன்னதாக இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பயிற்சிகளில்
 ஈடுபடவுள்ளது.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜெர்மனியின் போர் கப்பல் நாட்டிற்கு வந்தடைந்துள்ளது.
ஜெர்மனியின் பயர்ன் போர் கப்பல் 1996 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 15 ஆம் திகதி சேவையில் இணைக்கப்பட்டது.
அத்துடன், கடற்பரப்பு மற்றும் வான் பரப்பை கண்காணிப்பதற்கான வசதிகளும் அதி சக்தி வாய்ந்த ரேடார் கட்டமைப்பும் 
இதில் உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 26 ஜூலை, 2022

நாட்டுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் டொலர் பெறுமதி வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்த நாடு பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்களின் தொகை 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.  இது 51.6 வீத வீழ்ச்சியாகும். 
கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 478.4 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய தொகை 274.3 மில்லியன் 
டொலர்களாகும்.
வெளிநாட்டு தொழிலாளர் விசாரணைகள் ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியனாக டொலர்களாக இருந்தது மற்றும் மே மாதத்தில் 304 மில்லியனாக டொலராக உயர்ந்தது, ஆனால் ஜூன் மாதத்தில் 
மீண்டும் சரிந்தது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



திங்கள், 25 ஜூலை, 2022

இரத்தினக் கற்களை வயிற்ருக்குள் கடத்திச்சென்ற இலங்கையர் சென்னையில் கைது

சென்னை விமான நிலையத்தில் வயிற்றில் இரத்தின கற்களை கடத்திச்சென்ற இலங்கை இளைஞன் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பில் இருந்து, 19ஆம் திகதி ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சென்னை சென்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தபோது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.
அதில், இலங்கையை சேர்ந்த நைமுதீன் (வயது 28) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் சிறிய பாக்கெட்டுகளாக ரத்தின கற்களை விழுங்கியிருந்தமை தெரியவந்தது.
அதன் பின்னர் அவருக்கு இனிமா கொடுத்து அவற்றை வெளியே எடுத்த போது 56 சிறிய பாக்கெட்டுகளில் பளபளக்கும் ரத்தின கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்
இதன்போது சுமார் ரூ.94 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரத்து 309 கரட் கொண்ட 1,746 இரத்தின கற்களை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இரத்தினக் கற்களை கடத்தி வந்த இலங்கை இளைஞனைகைது செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

செவ்வாய், 5 ஜூலை, 2022

பணியிட வெற்றிடங்கள் கனடாவில் அதிகரிப்பு விபரங்கள் இதோ

கனடாவில் தற்போது 1,001,100 வேலைக்கான வெற்றிடங்கள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை ஒன்றில் இது குறித்த விபரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சுகாதாரம் மற்றும் சமூக உதவித் துறைகளில் வெற்றிடங்கள் 136,800 என்ற சாதனையை எட்டியுள்ளன. கட்டுமானத் துறையில் மட்டும் 81,500 வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் உருவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது உதவியாளர் மற்றும் தொழிலாளர் பணிக்கான வெற்றிடங்கள் 97 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், தச்சரருக்கான வெற்றிடங்கள் 149.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உற்பத்தி மற்றும் சில்லறை வர்த்தகத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் முறையே 5.3 சதவீதம் மற்றும் 12.8 சதவீதம் உயர்ந்து சாதனை 
உச்சத்தை எட்டியுள்ளன.
கனடாவில் வேலையின்மை பெருமளவில் சரிவடைந்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் தகுதியான ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதில் தடுமாறிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1976க்கு பின்னர் கனடாவில் வேலையின்மை சதவீதம் மிகக் குறைந்த எண்ணிக்கையில், 5.1% என பதிவாகியுள்ளது. இருப்பினும் பல நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியிடத்தை நிரப்ப 
தடுமாறி வருகின்றன.
மக்கள் கொரோனா பரவலுக்கு பின்னர் தங்களுக்கான வேலையை தெரிவு செய்வதில் அதிக கவனம் செலுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>