நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 30 அக்டோபர், 2015

இலங்கைத் தமிழ்ப்பெண். அவுஸ்ரேலியாவில் முதல்வரானார்

அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர முதல்வராக, இலங்கையில் பிறந்த சமந்தா ரத்தினம் என்ற தமிழ்ப் பெண் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்ரேலியாவின் மோர்லன்ட் நகர மன்றத்தின், தெற்கு வட்டாரத்தின் உறுப்பினரான சமந்தா ரத்தினம், கிறீன் கட்சியின் சார்பில் 
தெரிவானவர்.
இந்த நகர முதல்வர் பதவிக்கு நடந்த வாக்கெடுப்பில், 6-5 என்ற வாக்குகளின் அடிப்படையில், தொழிலாளர் கட்சியின் வேட்பாளரை, தோற்கடித்து, சமந்தா ரத்தினம் வெற்றி பெற்றார்.
அவுஸ்ரேலிய தொழிலாளர் கட்சியின் கோட்டையான இந்த நகர மன்றத்தில், கிறீன் கட்சி முதல் முறையாக நகரமுதல்வர் பதவியைப்
 பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் இரண்டு ஆண்டுகள் நகர முதல்வர் பதவிக்கு நடந்த தேர்தலின் போது, சமந்தா ரத்தினம் 
தோல்வியடைந்திருந்தார்.
சிறிலங்காவில் பிறந்த இவர், வன்முறைகளால் 1987இல் அங்கிருந்து வெளியேறி, ஐரோப்பா, கனடாவில் வசித்த பின்னர், 1989ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் குடியேறினார்.
தனக்கு ஆறு வயதாக இருந்த போது, 1983ஆம் ஆண்டு கொழும்பில் இனக்கலவரம் ஏற்பட்டதாகவும், அப்போது சிங்களவர்களால் தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டு தமது குடும்பத்தினர் உள்ளிட்டோர் அகதிகளாகியதாகவும் சமந்தா இரத்தினம்
 நினைவுகூர்ந்துள்ளார்.
“வீதிகள் எரிந்தன. பெயரிவர்கள் அழுததை முதல்முறையாக பார்த்தேன்” என்று அவர் அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்றிடம் 
கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 29 அக்டோபர், 2015

இலங்கை கூடப் பாதிக்கப்படும்?சீனாவைப் போருக்கு இழுக்கும் அமெரிக்கா!

மலேசியாவிற்கு அண்மையில் ஆழ்கடலில் செயற்கையாக நிர்மாணித்த தீவை, இராணுவத் தேவைகளிற்கான தீவாக  சீனா மாற்றியுள்ளது.
இதனையடுத்து அமெரிக்கா ஏவுகணை தாங்கிய நாசகாரிக் 
கப்பல் எங்களது இறையாண்மை எல்லைக்குள் வரவேண்டாம் என்ற சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அந்தத் தீவிற்கு அண்மையால் பயணம் செய்தது.
சீனா சொல்லுவதைத் சொல்லட்டும் தொடர்ந்தும் இனிவரும் வாரங்களில் தாங்கள் இவ்வாறு செய்வோம் என்ற அமெரிக்கப் பதிலடியும் அதன் தாக்கங்கள் பற்றிய பல தகவல்களை  வானொலி  ஆய்வாளர்  பகிர்ந்து கொண்டார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 21 அக்டோபர், 2015

புதிய சாதனைகள் கனடாவின் புதிய கீழ்சபையில் ???

கனடாவின் 43-வது புதிய பாராளுமன்றத்திற்கு சாதனைகளாக 10 பழங்குடியினர் எம்பிக்களாக தெரிவு செய்யப் பட்டிருப்பதுடன் அதிக பெண்களும் தெரிவாகி உள்ளனர். கடந்த இரவு இடம்பெற்ற தேர்தலில் 88-பெண் எம்பிக்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இது கீழ்ச்சபையை
 மேலும் 
வேறுபட்டதாக்கியுள்ளது. 37-ஆசனங்களில் ஆரம்பித்து தேர்தல் இரவு 184 ஆசனங்களை தமதாக்கி கொண்டது லிபரல் கட்சி. பிரச்சாரத்தின் நோக்கம் ஒருபோதும் வெற்றிக்காக இரருக்கவில்லை. பழங்குடியினரின் 
மதிப்புக்கள் 
ஒட்டாவாவில் பிரதிபலிக்க வேண்டும் பாராளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்ததென வின்னிபெக் உள்நகர வேட்பாளரும் முன்னாள் மேயர் பதவி வேட்பாளருமான றொபேட்-வல்கொன் 
ஓளலெட்டே திங்கள்கிழமை இரவு தெரிவித்தார்l.புள்ளிகளின் நிறங்கள் கட்சிகளை பிரதிபலிக்கின்றன. கறுப்பு வெளிக்கோடிட்ட புள்ளிகள் பெண்களையும் கிறே வெளிக்கோடிட்ட புள்ளிகள் ஆண்களையும் குறிக்கின்றன. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பொலிசாரால் கனடாவில் தேடப்படும் உயர்மட்ட கடை திருடி!!!

 ரொறொன்ரோ கனடா- பொலிசார் மிகவும் விலை உயர்ந்த பொருட்கள் மீது சுவைகொண்ட பெண் ஒருவரை தேடிவருகின்றனர். ரொறொன்ரோ யோர்க்டேல் மோலில் அமைந்துள்ள ஜிம்மி சூ என்ற கடையை 
இரண்டொரு
 நாட்கள் இடைவெளியில் இலக்கு வைத்ததை பாதுகாப்பு கமராவில் பதியப்பட்ட காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை 11மணியளவில் 2,300டொலர்கள் பெறுமதியுள்ள ஒரு பர்ஸ் திருடப்பட்டுள்ளது. மீண்டும் திங்கள்கிழமை பிற்பகலிற்கு
 சிறிது முன்பாக 
1,500டொலர்கள் பெறுமதியான சிறு தோல்பை களவாடப்பட்டுள்ளது. இப்பெண் 35முதல் 45வயதிற்குட்பட்ட நடுத்தர தோற்றமுடைய கறுப்பு முடி கொண்டவர் என விபரிக்கப்பட்டுள்ளது. கறுத்த சேர்ட் நீல காற்சட்டை மற்றும் ஒரு வெண்மை கலந்த பழுப்பு கோர்ட் அணிந்திருந்தார் 
என கூறப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 20 அக்டோபர், 2015

சிலை ஒன்றை இந்தியாவிடம் சிங்கப்பூர்ஒப்படைக்கும் அருங்காட்சியகம்.

சிங்கப்பூரின் அருங்காட்சியகம் ஒன்று தம்மிடமுள்ள பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை ஒன்றை இந்தியாவிடம் ஒப்படைக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.இந்தச் சிலை இந்தியாவிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தாம் உணர்வதால் அதைச்
 செய்வதாக
 அவ்வருங்காட்சியகம் கூறுகிறது.இந்துப் பெண் தெய்வம் ஒன்றின் இந்த வெண்கலச் சிலையை எட்டு ஆண்டுகளுக்கு முன் நியூயார்க்கைச் சேர்ந்த ஆர்ட் ஒஃப் த பாஸ்ட் கலைப்பொருள் வணிக நிறுவனத்திடம்
 இருந்து
 சிங்கப்பூரின் ஆசிய நாகரிகங்கள் அருங்காட்சியகம் அறுபத்தையாயிரம் டாலருக்கு வாங்கியிருந்தது.தமிழ்நாட்டின் சிவன் கோயில் ஒன்றிலிருந்து இந்த சிலை முறைகேடாக எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.கலைப் பொருட்களை சட்டவிரோதமாக கடத்தியது பற்றிய விசாரணை ஒன்று தற்போது அந்த கலைப்பொருள் வணிக நிறுவனத்தின் மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>

நடை பெற்ற பொதுத்தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி!

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டியுள்ளார்.
ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல 
வைத்தனர்.
ஹரி ஆனந்தசங்கரிக்கெதிராக இனவாதம் கலந்த வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும், அவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.
கனடியப் பல்லினத்தவரிடையே மாத்திரமல்லாது, உலகத் தமிழ் தலைவர்களிடமும் மிகுந்த நட்பைப் பேணும் ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தலில் போட்டியிட்ட போதும் இதேபோலவே அவரிக்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை முறியடித்து அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்தக் கட்சியின் சார்பான வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கான கட்சி உள்ளகத் தேர்தலின் போது, உலகத் தமிழர் பேரவை வன.பிதா. இமானுவேல், கௌரவ இரா.சம்பந்தன் உள்ளிட்ட 72 தலைவர்கள் ஹரி ஆனந்தசங்கரியை ஆதரித்தது ஒரு மாறுபட்ட நிகழ்வாக அன்றைய காலகட்டத்தில் பார்க்கப்பட்டது.
இன்று அத்தெரிவுகள் சரியானவை என்பதை நிரூபிப்பதாக அவர் பெற்ற வெற்றியுள்ளது. வெற்றிக் கொண்டாடங்கள் ஸ்காபரோ நகரத்தின் பாரிய மண்டபமொன்றில் வெகு உற்சாகத்தோடும் பலரது பங்களிப்போடும் இடம்பெற்று வருகின்றது.
2ம் இணைப்பு
ஹரி ஆனந்தசங்கரி வெற்றி! ராதிகா உட்பட ஐவர் தோல்வி….!
கனடாவின் தேர்தல்கள் ஓரளவிற்கு முடிவு பெற்று லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிட்ட தமிழர்களின் நிலைமைகளை ஆராய்ந்தால், ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி இத் தேர்தலில் 
வெற்றியீட்டியுள்ளார்.
இவர் தனது 10 வயதில் 1983ம் ஆண்டு கனடாவிற்கு வந்தவர். தந்தையின் தொடர்பில்லாமல் தாயாராலேயே வளர்க்கப்பட்டவர். பல தமிழ் அமைப்புக்களில் உயர் பதவிகளை வகித்ததுடன், இளைஞர்கள் கலாச்சாரா பிரழ்வால் வழிதவறிச் செய்ய முயன்ற போது அவர்களிற்காக உதவும் அமைப்பை ஸ்தாபித்து தமிழ் இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகின் தமிழ்த் தலைவர்களின் மதிப்பைப் பெற்றவர்.
ராதிகா சிற்சபைஈசன். இந்தத் தேர்தலில் வெற்றிக் கனியை சில ஆயிரம் வாக்கால் தவறவிட்டுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று புலம்பெயர்ந்த தேசங்களில் முதலாவது தமிழ் பாராளுமன்ற என்ற பெருமையைப் பெற்றவர்.
இலங்கையில் பிறந்து 5 வயதாக இருந்தபோது தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள ரொரன்ரோ மாகாணத்தில் குடியேறியவர். இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக 
விவாகரங்களிலும் அக்கறை கொண்டவர். நுடநஉவழைn_உயயெனய_வயஅடைல-293ஒ150-உழில
போதகர் கந்தரத்தினம் சாந்திக்குமார். ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி பயின்றவர். 30 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறிய சாந்திகுமார், இங்குள்ள தொலைதொடர்பு நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.
மார்க்கம் தோன்கில் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா இத் தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார். தமிழர்களின் விளம்பரங்கள் வெளியிடும் தமிழன் வழிகாட்டி என்ற கைக் கொத்தின் 
பதிப்பாளராகவுள்ளார்.
ஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொசான் நல்லரத்தினம் லிபரல் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார்.
கனடாவிற்கு 2007ம் ஆண்டு வருகை தந்து பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருபவர். இலங்கையில் பிறந்த இவர் தனது மூன்று வயதில் இந்தியா சென்று அங்கு தனது கல்வியைத் தொடர்ந்திருந்தார்.
பிரம்டன் மேற்குத் தொகுதியில் பசுமைக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோபிநாத் இத் தேர்தலில் 
வெற்றிபெறவில்லை.
இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறிய கார்த்திகா குற்றவியல், நீதித்துறையில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். மேலும் பொது கொள்கைகள்இ நிர்வாகம் மற்றும் சட்ட திட்டம் தொடர்பாக முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வியாழன், 15 அக்டோபர், 2015

ஆயிரக்கணக்கில் மாடுகள் இறந்து கரையொதுங்கியுள்ளன?

பிரேசிலில் ஆயிரக்கணக்கான மாடுகள் கடற்கரையில் இறந்து கரையொதுங்கியதால், துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
லெபனான் கப்பல் ஒன்று கடந்த வாரம் 5000 மாடுகள் மற்றும் 750 டன் எண்ணெய்யுடன் பாரா பகுதிக்குச் சென்றுகொண்டிருந்த போது,   பிரேசில் அருகே விபத்திற்குள்ளாகி மூழ்கியது.
கப்பலில் இருந்த மாடுகளும் கடலில் மூழ்கி 
இறந்தன.
டன் கணக்கில் எண்ணெய் கடலில் கலந்துள்ளதால், கடல் உயிரினங்கள் மட்டுமில்லாமல், அப்பகுதி மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்த மாடுகள் கரை ஒதுங்கி துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கப்பல் மூழ்கியமை குறித்து விசாரணைகள் இடம்பெற்று 
வருகின்றன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள >>>



செவ்வாய், 13 அக்டோபர், 2015

பாறை சரிந்து குழந்தைகள் உள்பட 13 பேர் பலி


பாகிஸ்தானில் கராச்சி குலிஸ்தான் இ ஜாக்குவாரி பகுதியில் நேற்று பாறைச்சரிவு ஏற்பட்டது. சரிந்த பாறைகள் அங்கிருந்த 2 குடிசைகள் மீது விழுந்தன. இதில், குடிசையில் வாழ்ந்து வந்த 2 குடும்பத்தினர் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினரும், போலீஸ் படையினரும் விரைந்து சென்று, மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
இதில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 3 பெண்களும் அடங்குவர்.
அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, கராச்சியில் உள்ள ஜின்னா முதுநிலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கராச்சி கமிஷனர் சொயிப் அகமது சித்திக், முத்தாஹிதா குவாமி இயக்க தலைவர்கள் பைசல் சப்ஸ்வாரி, முகமது உசேன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பாறைச்சரிவில் யாரேனும் உயிருடன் சிக்கி உள்ளனரா என தெரியவில்லை. இருப்பினும் இடிபாடுகளை அகற்றும் பணியில் கனரக எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். நிதி உதவி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 



இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

சனி, 10 அக்டோபர், 2015

பிலிப்பைன்ஸில் அகதிகளைகுடியேற்ற அவுஸ் நடவடிக்கை?

அவுஸ்திரேலியாவின் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளை பிலிப்பைன்ஸில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் மெற்கொண்டு வருவதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை அமைச்சர் பீற்றர் டட்டனை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நவுறு, மானஸ் தீவுகளிலும் பப்புவா நியுகினியிலும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல அகதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக அவர்களை கம்போடியாவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் நான்கு பேர் மாத்திரமே அங்கு குடியேற்றப்பட்ட நிலையில், அந்த திட்டம் தோல்வி அடைந்தது.
தற்போது அகதிகளை பிலிப்பைன்ஸில் குடியேற்றுவது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 9 அக்டோபர், 2015

ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தால் ஹம் நகரில் அமைக்கபட்ட ஹிந்துமயானம் திறந்து வைக்கப்படும்

ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தால் எதிர்வரும் 01.10.2015 அன்று  முதலாவது ஹம் நகரில் முதலாவது  ஹிந்துமயானம் திறந்து வைக்கப்படும்
ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் தனது தொடர் 
பணியாக ஹம் 
நகரில் ஹிந்துகளுக்கான தனி ஹிந்து மயானம் ஒன்றை அமைத்துள்ளது. இதுவரை காலமும் ஜெர்மனி நாட்டில் இறைபதம் அடையும் ஹிந்துக்களுக்கு இறுதி கிரிகைகளோ அல்லது ஹிந்து முறையிலான 
எந்தவொரு சடங்கும்
 சரியான முறையில் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையாக ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயகுரு அவர்கள் தனது விடாமுயற்சியால் ஹம் மாநகர சபையுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஹம் நகரில் இந்த ஹிந்து மயானத்தை அமைத்துள்ளார்.
இந்த ஹிந்து மயானத்தின் திறப்புவிழா எதிர்வரும் 01.10.2015 அன்று காலை 11.00 மணிக்கு ஹம் நகரபிதா மற்றும் சக அதிகாரிகள் முன்னிலையில் ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயகுரு அவர்களால் திறந்து வைக்கப்படும். அன்பார்ந்த ஹிந்துமக்களே! நாம் பிறந்தோம் இறந்தோம் என்றில்லாமல் நாம் வாழ்கிற காலத்தில் எமது எதிர்கால சந்ததியினருக்கு ஏதாவது 
செய்தாக 
வேண்டும் அப்போது தான் அவர்களுக்கு எமது கலாசார சடங்குமுறைகளை எமது காலத்தின் பின்பாகவும் பின்பற்ற முடியும் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து ஆலயம் மேற்கொண்டுள்ள இந்த நற்பணிக்கு மென்மேலும் ஒத்துழைப்பு நல்கும் வண்ணம் கேட்டுக்
கொள்கிறோம்.
இந்த திறப்புவிழா வைபவத்தில் அனைவரும் பங்குகொள்ளும் வண்ணம் மிக அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



சனி, 3 அக்டோபர், 2015

வெடிகுண்டு தாக்குதல் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் 2 இடங்களில் ஏற்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தலைநகர் அபுஜாவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜி என்ற பகுதியில் உள்ள காவல்நிலையம் அருகில் நேற்று இரவு முதல் குண்டு வெடித்தது. அதனை தொடர்ந்து நயன்யா பகுதி பேருந்து நிலையத்தில் 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. 

இந்த தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் இறந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 2 அக்டோபர், 2015

துப்பாக்கிச்சூடுட்டில் 13 பேர் பலி- 20 பேர் காயம் (காணொளி இணைப்பு)


அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒரெக்கன் மாகாணத்தில் உள்ள ரோஸ்பெர்க் நகரில் அம்ப்குவா சமூதாய கல்லூரி அமைந்துள்ளது.

இந்த கல்லூரியில் நேற்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற கல்லூரியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரியில் இருந்து மாணவர்கள் அனைவரும் பேருந்து மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்றும் அவர்களது உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டவரை பொலிசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 வயதான அவர் தாக்குதல் நடத்தபோவது குறித்து முன்னரே இணையப்பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் அவரை பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>