நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 13 அக்டோபர், 2015

பாறை சரிந்து குழந்தைகள் உள்பட 13 பேர் பலி


பாகிஸ்தானில் கராச்சி குலிஸ்தான் இ ஜாக்குவாரி பகுதியில் நேற்று பாறைச்சரிவு ஏற்பட்டது. சரிந்த பாறைகள் அங்கிருந்த 2 குடிசைகள் மீது விழுந்தன. இதில், குடிசையில் வாழ்ந்து வந்த 2 குடும்பத்தினர் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினரும், போலீஸ் படையினரும் விரைந்து சென்று, மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
இதில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் 3 பெண்களும் அடங்குவர்.
அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, கராச்சியில் உள்ள ஜின்னா முதுநிலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கராச்சி கமிஷனர் சொயிப் அகமது சித்திக், முத்தாஹிதா குவாமி இயக்க தலைவர்கள் பைசல் சப்ஸ்வாரி, முகமது உசேன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பாறைச்சரிவில் யாரேனும் உயிருடன் சிக்கி உள்ளனரா என தெரியவில்லை. இருப்பினும் இடிபாடுகளை அகற்றும் பணியில் கனரக எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். நிதி உதவி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 



இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக