அவுஸ்திரேலியாவின் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளை பிலிப்பைன்ஸில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசாங்கம் மெற்கொண்டு வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை அமைச்சர் பீற்றர் டட்டனை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நவுறு, மானஸ் தீவுகளிலும் பப்புவா நியுகினியிலும் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல அகதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக அவர்களை கம்போடியாவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
எனினும் நான்கு பேர் மாத்திரமே அங்கு குடியேற்றப்பட்ட நிலையில், அந்த திட்டம் தோல்வி அடைந்தது.
தற்போது அகதிகளை பிலிப்பைன்ஸில் குடியேற்றுவது குறித்து அவுஸ்திரேலிய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக