அமெரிக்காவில் உள்ள கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஒரெக்கன் மாகாணத்தில் உள்ள ரோஸ்பெர்க் நகரில் அம்ப்குவா சமூதாய கல்லூரி அமைந்துள்ளது.
இந்த கல்லூரியில் நேற்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற கல்லூரியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரியில் இருந்து மாணவர்கள் அனைவரும் பேருந்து மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்றும் அவர்களது உடமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டவரை பொலிசார் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 வயதான அவர் தாக்குதல் நடத்தபோவது குறித்து முன்னரே இணையப்பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் அவரை பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக