நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 22 அக்டோபர், 2021

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன சிறுமியைக் கண்டுபிடித்து தருவோருக்கு ஒரு மில்லியன் டொலர்

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன 4 வயதுச் சிறுமியைக் கண்டுபிடிக்கத் தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வெகுமதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் பொழுதுபோக்கிற்காக முகாமில் தங்கும் இடத்திலிருந்து கிளியோ ஸ்மித் ( Cleo Smith) என்ற
 அந்தச் சிறுமி
சென்ற சனிக்கிழமை (16) கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சிறுமி காணாமல்போன அன்று, கிளியோவின் ( Cleo Smith) தாயார், அன்று காலை 6 மணிக்கு எழுந்தபோது, அவர்கள் தங்கியிருந்த கூடாரம் திறந்திருந்தபோதுதான், கிளியோவைக் காணவில்லை என்பதை அவர்
 உணர்ந்தார்.
இந்நிலையில் சுறுமியை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.கிளியோ, கூடாரத்திலிருந்து கடத்தப்பட்டார் என்று நம்புவதாக தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், சிறுமியின் பாதுகாப்புக் குறித்து அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமியை உயிரோடு மீட்கமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 21 அக்டோபர், 2021

இலங்கைத் தமிழ் குடும்பம் பிரிட்டனால் கடத்தப்படும் நிலையில் நடந்தது என்ன

பிரித்தானியாவில் இருந்து தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றது. டாக்டர் நடராஜா முகுந்தன் – வயது 44 ஒரு விஞ்ஞானி ஆவார். இவருடைய மனைவி சர்மிளா. மூன்று பிள்ளைகள். முகுந்தன் புலமை பரிசிலுக்காக 2018 இல் வந்தார். இவரின் மனைவி மருத்துவ 
பராமரிப்பாளர்.
நோயாளியான அம்மாவை பார்க்க 2019 இல் இலங்கைக்கு வந்த முகுந்தன் கைது செய்யப்பட்டு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார். ஆனால் இவர் ஒருவாறு தப்பி பிரிட்டனுக்கு திரும்பி சென்றார். இவருக்கான இரண்டு வருட கால புலமை பரிசில் 2020 முடிந்து விட்டது. அதன் பின் இவரோ மனைவியோ வேலை செய்ய அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
இவருடைய அரசியல் புகலிட கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சு அலுவலகம் கடந்த மாதம் 20 ஆம் திகதி மின்னஞ்சல் மூலம் அறிவித்தது. ஆனால் இவரின் கோரிக்கையை நிராகரித்து உள்ளதாக ஒக்டோபர் 11 ஆம் திகதி இன்னொரு மின்னஞ்சல் அனுப்பினர். அதில் வேடிக்கை என்னவென்றால் இவரின் கோரிக்கை ஓகஸ்ட் 23 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதில் உள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கூகுள் விடுத்த எச்சரிக்கை செய்தி தொலைபேசியினை பயன்படுத்துவர்களுக்கு

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த ஆயிரக்கணக்கான செயலிகள், மக்களிடம் தனிப்பட்ட தரவுகளை திருடும் அபாயம் ஏற்பட்டதால் அனைத்தையும் கூகுள் அகற்றியுள்ளது.மேலும் இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்களை சிக்க வைக்க முடியும் மற்றும் மோசடிக்கு ஆளாகலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த செயலிகள் குறித்து கூகுள் (Google) மேற்கொண்ட விசாரணையில் ஆபத்து இருக்கிறது என தெரியவந்ததை அடுத்து, அந்த செயலிகளை கூகுள் தடை செய்துள்ளது.ஆன்ட்ராய்டு சாதனங்களில் (Android devices) ஆப்ஸைப் பதிவிறக்குவதற்கு கூகுள் ப்ளே ஸ்டோர் பாதுகாப்பான
 ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால் உங்கள் மொபைல் போன் மற்றும் கணினியை ஆபத்தில் சிக்க வைக்கும் சில செயலிகள் 
பட்டியலிடப்பட்டுள்ளன.
அவ்வப்போது பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை குறித்து கூகுள் விசாரிக்கும். அப்போது ஆபத்தான தீம்பொருள் சாப்ட்வேர் கொண்ட தீங்கிழைக்கும் செயலிகளை கண்டறிந்து அதனை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றிவிடுகிறது.
பயர்பேஸ் தரவுத்தளம்:பயனர்கள் பயன்படுத்தும் 19,300 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளில் (Android apps) பயர்பேஸ் தரவுத்தளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது என அவாஸ்ட் கூறியது. 
பயர்பேஸ் என்பது பயனர் தரவை சேமிக்க ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும். அதாவது பயர்பேஸ் (Firebase) என்பது கூகிள் மொபைல் மற்றும் வலை பயன்பாடுகளை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும்.
பெயர், முகவரி, இருப்பிடத் தரவு மற்றும் சில சமயங்களில் கடவுச்சொற்கள் போன்றவற்றை ஆப் மூலம் சேகரிக்கப்பட்டு இருந்தால், அதாவது தனிப்பட்ட அடையாளம் எனக்கூறக்கூடிய நமது தகவல்கள் (PII) திருடப்படலாம் என கூகுள் நிறுவனத்துக்கு அவாஸ்ட் தெரிவித்தது.
தரவு திருட்டு எப்படி நடக்கும்:நீங்கள் பயன்படுத்தும் 
செயலில் உங்கள் தரவு, பெயர்கள், பிறந்த தேதி, முகவரிகள், தொலைபேசி எண்கள், இருப்பிடத் தகவல் உட்பட பல்வேறு தகவல்கள் சேமிக்கப்படுகிறது.ஒருவேளை 
ஆப் டெவலப்பர் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், உங்கள் கடவுச்சொற்கள் உட்பட அனைத்து தரவுகளும் 
 திருடப்படலாம்

நிலாவரை.கொம் செய்திகள் >>>
சனி, 9 அக்டோபர், 2021

தென்னாப்பிரிக்காவுக்கு தமிழகத்திலிருந்து செல்ல முயன்ற இலங்கையர் கைது

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக,  தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி அதில் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.
இந்நிலையில் மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினராம். மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்காவுக்கு 
சொந்தமானதாக உள்ளது.
அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. எனினும் இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றதாக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு பொலிஸாா், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் , தற்போது வரை இந்த 64 போ் யாா் என்பதை உளவுத்துறை பொலிஸாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழக பொலிஸார் சா்வதேச பொலிஸாா் உதவியை நாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 22 செப்டம்பர், 2021

ஸ்பெயினில் காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு

 ஸ்பெயினை சேர்ந்த ஒரு நிறுவனம் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை தயாரித்துள்ளது.வெப்பக்காற்றை குளிரூட்டினால் உறைவு மூலம் உருவாகும் நீர் துளிகளை சேகரிக்கும், மின்சாரத்தில் இயங்கும், இந்த கருவியை, அக்வேயர் என்னும் நிறுவனம்
 தயாரித்துள்ளது.
இதற்கமைய பஞ்சம் அதிகம் இருக்கும் நமீபியா மற்றும் லெபனானில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இந்த கருவிகள் தற்போது 
பயன்பாட்டில் உள்ளன.
1990-களில் ஸ்பெயினை வாட்டிய கடுமையான வறட்சி காலத்தில் இந்த கருவியை உருவாக்கியதாக 82 வயதுடைய பொறியாளர் என்ரிக் வெய்கா தெரிவித்துள்ளார்
மேலும் நாளொன்றுக்கு 50 முதல் 75 லிட்டர் குடிநீர் தயாரிக்கும் இந்த கருவிகள் நீர் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக
 அமைந்ததுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>வியாழன், 16 செப்டம்பர், 2021

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக யாழ் தமிழ் பெண் தேர்வு

யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து
 போட்டியிட்டார்.
அவர், 21 அக்டோபர் 2015 அன்று ஒஸ்லோவின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 14-09-2021-அன்று  நடந்த தேர்தலில் நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக கம்ஷாஜினி குணரட்னம் 
தெரிவாகியுள்ளார்.
கம்ஷாஜினி குணரத்தினத்திற்கு இந்த இணையத்தின் 
நல்வாழ்த்துக்கள் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

வட்ஸ்அப் நிறுவனம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு செயற்பாடுகள் நிறுத்தம்

எதிர்வரும் 01-11-2021. நவம்பர் மாதம் முதல் 43 வகையான தொலைபேசிகளில் WHATSAPP பயன்படுத்தினவர்களுக்கு அதிர்ச்சி தகவல்43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.உலகின் அதிகளவான 
ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இருப்பினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக நிறுவனம் 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>