நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 25 டிசம்பர், 2015

அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்…

நத்தார்தினத்தைக் கொண்டாடும் அனைவருக்கும் இந்த இணையங்களின் நல்  வாழ்த்துக்கள்
இந்த ஆண்டும் நத்தார்தினத்தை கொண்டாடும் அனைவரையும் வாழ்த்தி நிற்கும் நேரம் வாழ்வில் சிறப்பான காலம் வருடத்தில் ஓர்முறை உறவுகளும் உற்றாரும் கூடிமகிழும்காலம், இதனை சிறப்பாக 
எல்லா நாடுகளிலும் கொண்டாப் படுகின்றது, அதை மகிழ்வோடு 
வரவேற்று நிற்கும்
 நாம் இறைவனை நினைத்து இல்லாதோருக்கு உதவி இன்நாளில் மகிழ்ந்திருப்போம் நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ அன்பு இணைய உறவுகள் உலக மக்கள் அனைவக்கும் இந்த இணையங்களின் நத்தார்தின
 நல் வாழ்த்துக்கள்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 20 டிசம்பர், 2015

அமெரிக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் வழங்கத் தயார்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கருத்து வெளியிட்டார்.
பல ஆண்டுகளில் இல்லாத, மிகவும் மோசமான வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னை மக்களுக்கு உதவி செய்ய அமெரிக்காக அரசு தயார்நிலையில் உள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் சிக்கித்தவிக்கும் மக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துவாடும் மக்களைச் சுற்றி எங்களது எண்ணங்கள் சூழ்ந்துள்ளன.
இந்த இக்கட்டான வேளையில் உதவுவதற்காக இந்திய அரசுடன் அமெரிக்க அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எல்லாவித உதவியையும் செய்ய அமெரிக்கா தயார்நிலையில் இருப்பதாக நாங்கள் தெரிவித்துள்ளோம்.
இதுவரை எங்களிடமிருந்து எந்த உதவியையும் இந்திய அரசு கேட்கவில்லை. இதுபோன்ற வேளைகளில் அவசர உதவி மற்றும் பொதுச்சேவை நிலவரங்களை சுயமாக கையாளக்கூடிய அளவுக்கு இந்திய அரசு மிகவும் மேம்பாடு எய்தியுள்ளபோதிலும், குறிப்பாக, இந்தியாவைப்போன்ற வலிமையான நட்பு நாடுகளுக்கு பேரழிவுக்குப் பிந்தைய அனைத்து உதவிகளையும் செய்யவும் அமெரிக்க அரசு தயாராகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 18 டிசம்பர், 2015

அமெரிக்கா தைவானுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஆயுத விற்பனை சீனா போர்க்கொடி!!!

சீனாவும், தைவானும் பரம எதிரிகளாக உள்ளன. தென் சீனக்கடல் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை உள்ளது.
இந்த நிலையில் தைவானுக்கு அமெரிக்கா 1.83 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரத்து 261 கோடி) ஆயுத விற்பனை செய்கிறது. இது தொடர்பான அறிவிப்பினை வாஷிங்டனில் ஒபாமா நிர்வாகம் 
வெளியிட்டுள்ளது
தைவானுக்கு அமெரிக்கா 2 போர்க்கப்பல்கள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ‘டவ் 2 பி’ பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சீனா தனது எதிர்ப்பை பதிவு செய்வதற்கு, பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்துள்ளது.
அமெரிக்காவின் ஆயுத விற்பனை பற்றி சீனாவின் துணை வெளியுறவு மந்திரி ஜெங் ஜிகுவாங் கருத்து தெரிவிக்கையில், ‘‘ சீன பிரதேசத்தின் மாற்ற முடியாத பகுதியாக தைவான் உள்ளது. தைவானுக்கு 
அமெரிக்கா ஆயுத 
விற்பனை செய்வதை கடுமையாக எதிர்க்கிறோம். இந்த ஆயுத விற்பனையில் ஈடுபடுகிற அமெரிக்க நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என கூறினார்.
அமெரிக்க நிறுவனங்கள் மீது பொருளாதார தடை 
விதிக்க சீனா முடிவு செய்திருப்பது
 இதுவே முதல் முறை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 11 டிசம்பர், 2015

புதிய சுற்றுலா அறிவுறுத்தலை பிரித்தானியா வெளியிட்டுள்ளது?

இலங்கைக்கான புதிய சுற்றுலா அறிவுறுத்தலில் பிரித்தானிய தமிழ் குழுக்களின் தடைநீக்கலையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் பிரித்தானியாவை தளமாகக்கொண்ட இரண்டு குழுக்களின் தடை இலங்கையில் நீக்கப்பட்டுள்ளமை 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 20ஆம் திகதியன்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தலில் பிரித்தானிய தமிழ் பேரவை மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த தடைநீக்கத்தை தமது சுற்றுலா அறிவித்தலில் பிரித்தானிய 
வரவேற்றுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நகர்வு பேச்சுவார்த்தைக்கு வழியை ஏற்படுத்தும் என்று பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலின்படி உலக தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய தந்தை எஸ் ஜே இமானுவேலின் இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையும் நீக்கப்பட்டுள்ளமையையும் பிரித்தானிய சுற்றுலா அறிவித்தல் சுட்டிக்காட்டியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 9 டிசம்பர், 2015

விபத்துகுள்ளன பெண் பாதசாரி பலி!!

பிரம்ரனில் இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்த பெண் பாதசாரி ஒருவர் 08,12,2015,செவ்வாய்கிழமை அதிகாலை உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
48 வயதான அந்த பெண்மணி கடந்த திங்கட்கிழமை பின்னிரவு வேளையில் பிரம்ரனில் உள்ள கார்கள் கழுவும் இடத்தின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு காயமடைந்திருந்தார் என பீல் பிராந்தியக் காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேர்ந்ததை அடுத்து Williams Parkwayக்கு அருகில் 9499 விமான நிலைய வீதியில் உள்ள கார் கழுவும் இடத்திற்கு அவசர மீட்புப் பிரிவினர் திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் காயமடைந்த அந்த பெண் முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மத்திய மருத்துவ நிலையித்திற்கு மாற்றப்பட்டிருந்தார் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இன்று செவ்வாய்கிழமை காலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அவரை மோதிய black Cadillac Escalade வாகனம் கனரக வாகனத்தின் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் இன்னமும் யார் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வருங்கால அதிநவீன வளர்ச்சி இப்படி தான் இருக்குமோ!

தற்சமயம் உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பார்த்தால் வியப்பாக தான் இருக்கும். அதிலும் மொபைல்களை பற்றி சொல்லவா வேண்டும் அதனுடய வளர்ச்சிக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும்.
உலகம் வளர்ச்சியடைவதை விட மொபைல்கள் தான் அதிக அளவில் வளர்ச்சி அடைகின்றது. அந்த காலத்தில் ஒரு கடிதமோ அல்லது பணம் அனுப்புவதற்கு அதிக நாட்கள் ஆகும். தொலை பேசி என்றாலே பெரிய அளவில் கருதுவார்கள். இந்த விடியோவில் சமார்ட் காட், நியுஸ் பேப்பர் அதுபோல தொழில்நுட்பங்களை காணலாம்
அனால் கடந்த சில வருடமாக மொபைல் வளர்ச்சிக்கு அளவே இல்லை. தற்போது அண்டராய்ட் ஆப்ஸில் புதிய தொழில் நுட்பங்கல் அதிக அளவில் வளர்ச்சி அடைந்திருப்பது எட்டா கணியாகவே 
இருக்கிறது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 டிசம்பர், 2015

பனிமலை உருகும் அபாயம் எவரெஸ்ட் சிகரம் வெப்பமடைவதால்!!!

எவரெஸ்ட் சிகரம் வெப்பமடைவதால் பனிமலைகள் உருகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ஹுனான் பல்கலைக்கழகத்தின் சீன அறிவியல் அகாடமியும், குயோ மோ லாக்மா பனிசிறுத்தை சரணாலய மையமும் இணைந்து ஆய்வை நடத்தியது.
இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றமே எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எவரெஸ்ட் பனிமலை உருகி அதன் அளவு சுருங்கி வருவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக திபெத்தில் ஏரிகள் பல மடங்கு
 பெருகியுள்ளது.
2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தற்போது 80 சதவீதம் ஏரிகள் அதிகரித்துள்ளது. அது மட்டுமன்றி திபெத்தில் வனப்பகுதி அதிக அளவில் பரவியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீ முன் பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுக்க உலக நாடுகள் எரிசக்தி புரட்சியை மிக விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தலை விடுத்துள்ளார் என்பதும் 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>