நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 18 டிசம்பர், 2015

அமெரிக்கா தைவானுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஆயுத விற்பனை சீனா போர்க்கொடி!!!

சீனாவும், தைவானும் பரம எதிரிகளாக உள்ளன. தென் சீனக்கடல் விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை உள்ளது.
இந்த நிலையில் தைவானுக்கு அமெரிக்கா 1.83 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரத்து 261 கோடி) ஆயுத விற்பனை செய்கிறது. இது தொடர்பான அறிவிப்பினை வாஷிங்டனில் ஒபாமா நிர்வாகம் 
வெளியிட்டுள்ளது
தைவானுக்கு அமெரிக்கா 2 போர்க்கப்பல்கள், பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், ‘டவ் 2 பி’ பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சீனா தனது எதிர்ப்பை பதிவு செய்வதற்கு, பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்துள்ளது.
அமெரிக்காவின் ஆயுத விற்பனை பற்றி சீனாவின் துணை வெளியுறவு மந்திரி ஜெங் ஜிகுவாங் கருத்து தெரிவிக்கையில், ‘‘ சீன பிரதேசத்தின் மாற்ற முடியாத பகுதியாக தைவான் உள்ளது. தைவானுக்கு 
அமெரிக்கா ஆயுத 
விற்பனை செய்வதை கடுமையாக எதிர்க்கிறோம். இந்த ஆயுத விற்பனையில் ஈடுபடுகிற அமெரிக்க நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என கூறினார்.
அமெரிக்க நிறுவனங்கள் மீது பொருளாதார தடை 
விதிக்க சீனா முடிவு செய்திருப்பது
 இதுவே முதல் முறை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக