நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 26 செப்டம்பர், 2020

ஆணுறைகளை வியட்நாமில் சுத்தம் செய்து மீண்டும் விற்க முயற்சி

 

வியட்நாமில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சுமார் 3,20,000 ஆணுறைகளை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த ஆணுறைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்நாட்டு போலீஸார் அவற்றை
 கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் சுத்தம் செய்யப்பட்டு, பழைய வடிவத்திற்கு கொண்டுவந்து மீண்டும் புதிதான ஒன்று போல பேக் செய்யப்பட்டு அவற்றை விற்பனை செய்ய இருந்ததாக 
கூறப்படுகிறது.
ஆணுறைகள் இது தொடர்பாக வெளியான காணொளியில் வியட்நாமின் வட பின் டுஆங் மாகாணத்தில் உள்ள ஒரு கிடங்கில் நடந்த சோதனையில் 360 கிலோ எடை கொண்ட பல பைகளில் பயன்படுத்தப்பட்ட 
ஆணுறைகள் இருந்தன.
இந்த கிடங்கிற்கு உரிமையாளர் என நம்பப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கிலோ ஆணுறைகளுக்கு 0.17 டாலர்கள் கொடுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட பெண் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகம் 
செய்தி வெளியிட்டுள்ளது.
இது போன்ற பயன்படுத்தப்பட்ட எத்தனை ஆணுறைகள் ஏற்கனவே சந்தையில் விற்கப்பட்டுள்ளன என்பது தெளிவாக 
தெரிய வரவில்லை
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>புதன், 23 செப்டம்பர், 2020

வியாட்நாமியர்கள் ஆளில்லா தீவில் சிக்கிக்கொண்டனர்

 

ஆஸ்திரேலியாவை செல்லும் முயற்சியில், கடந்த மார்ச் மாதம் இந்தோனேசியா சென்ற 11 வியாட்நாமியர்கள், அங்கிருந்து ஆஸ்திரேலியா நோக்கிய படகிற்காக மூன்று மாத
 காலம் காத்துக் கிடந்துள்ளனர். 
பின்னர், ஜூன் 1 அன்று ஆஸ்திரேலியா நோக்கி 11 வியாட்நாமியர்களுடன் கிளம்பிய படகு ஒரு சில நாட்களிலேயே
 பழுதடைய ஆளில்லா தீவான Jaco தீவில் கரை ஒதுங்கியிருக்கின்றனர். அங்கு வெட்டவெளியிலேயே இரண்டு இரவுகளை கழித்து இவர்களை, கிழக்கு திமோர் நாட்டு அதிகாரிகள் மீட்டுள்ளனர். 
கொரோனா பெருந்தொற்று சூழலினால் தீவு நாடான கிழக்கு திமோரியிலேயே இவர்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு (IOM) உதவியுடன், 8 ஆண்கள், 3 பெண்கள் உள்ளிட்ட 11 வியாட்நாமியர்களும் தனி விமானம் மூலம் தற்போது வியாட்நாமிற்கு திரும்பியிருக்கின்றனர். 
“அவசர நிலை நிலவும் இந்த சூழலுக்கு இடையிலும், தவித்து வந்த குடியேறிகளை(வியாட்நாமியர்கள்) பாதுகாக்க கிழக்கு திமோர் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது,” எனக் கூறியிருக்கிறார் கிழக்கு திமோரில் உள்ள IOM தலைமை 
அதிகாரி  Wonesai Workington Sithole. 
ஆஸ்திரேலியாவில் நல்ல வேலைக்கிடைக்கும் என்ற போர்வையில் நம்பிக்கைக் கொடுத்த முகவர்களுக்கு(ஏஜெண்டுகள்) குடியேறிகளும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் தொகையைக் கொடுத்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. இந்த பயண 
முயற்சியினால் குடியேறிகளும் அவர்களது குடும்பத்தினரும் கடன்காரர்களாகக் கூட மாறியிருக்கக்கூடும் என்ற போதும் குடியேறிகள் உயிருடன் வீடு திரும்புவது அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியாகும். 
“எதிர்ப்பார்க்காத பயணத் தடைகள் நிலவும் இந்த காலத்தில் எங்களை பத்திரமாக வீடு திரும்ப வைத்த IOM அமைப்புக்கும் கிழக்கு திமோர் மற்றும் வியாட்நாம் அரசுகளுக்கும் எங்கள் அனைவரின்(குடியேறிகளின்) சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என குடியேறி ஒருவர் தெரிவித்திருக்கிறார். 
“எங்களைப் போன்றவர்களின் உணர்வுகளை எப்படி கையாள்வது என்பதை முகவர்கள் நன்கு அறிந்துள்ளனர். இப்பயணம் சட்டப்பூர்வமானது எனக் கூறி எளிதாக நம்ப வைத்துவிட்டனர்.  அங்கு(ஆஸ்திரேலியா) சென்று விட்டால் எளிதாக வேலை செய்வதற்கான உரிமத்தை முகவர் பெற்றுக்கொடுத்து விடுவார் எனக் கூறினார்கள்,” என தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய படகுப் பயணம் குறித்து மற்றொரு வியாட்நாமியர்
 தெரிவித்திருக்கிறார். 
கடந்த 2013ம் முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்த மாட்டோம் என எச்சரித்து வருகின்றது. கடந்த காலங்களில்,
 இதுபோன்ற பயணங்கள் தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களும் மேற்கொண்டிருக்கின்றனர் என்பது
 இங்கு குறிப்பிடத்தக்கது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி

உலக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ரஷ்யாவின்கொரோனா வைரஸ் நோய்க்கு (கோவிட் -19) எதிரான ரஷ்யாவின் பரிசோதனை தடுப்பூசியான ஸ்பூட்னிக் 5 யை செலுத்திய 
பின்னர் ஏழு தன்னார்வலர்களில் ஒருவர் பக்கவிளைவுகளுக்கு உள்ளாகியுள்ளதாக 
அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.40 ஆயிரம் தன்னார்வலர்களில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை ஸ்பூட்னிக் 5 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய சுகாதார 
அமைச்சர் மிகைல் முராஷ்கோ
 சுட்டிக்காட்டியுள்ளார்.இவர்களில் 14 சதவீதமானோர் தடுப்பூசி செலுத்தப்பட்ட 24 மணி நேரத்தின் பின்னர் தசை வலி, வீக்கம் மற்றும் அவ்வப்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற பக்க 
விளைவுகளை சந்தித்துள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் முராஷ்கோ கூறியுள்ளார்.
img class=”alignnone size-full wp-image-20160″ src=”https://www.newlanka.lk/wp-content/uploads/2020/09/5f60bf9b85f5400a130590d5.jpg” alt=”” width=”2450″ height=”1377″ />
ஸ்பூட்னிக் 5 இன்னும் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளை முடிக்கவில்லை. எனினம் கடந்த 
மாதம் ரஷ்ய அரசாங்கத்தால் இது அங்கீகரிக்கப்பட்டது.ஸ்பூட்னிக் 5 மனிதனில் பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ள கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசி ஆகும். அதன் இறுதி மருத்துவ பரிசோதனைகள் இந்த மாதத் தொடக்கத்தில் மொஸ்கோவில் ஆரம்பமாகியமையும்
 குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


கனடாவில் காரைத் திருடிச் சென்ற 20 வயது தமிழ் இளைஞன்.

 

கனடா பிராம்ப்டனைச் சேர்ந்த 20 வயது, தமிழ் இளைஞன் சொகுசுக் கார் ஒன்றைத் திருடிச் செல்லும் போது
 பொலிசாரினால் துரத்திப் பிடிக்கப்பட்டுள்ளார். இது செப்டம்பர் 16 அன்று மாலை 4:30 மணிக்கு முன்பு நடந்தது. திருடப்பட்ட 2019 மெர்சிடிஸ் கார் வீட்டின் முற்றத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போது 
திருடப்பட்டதாக பிராந்திய காவல்துறை தெரிவித்தது.முதலில் ஒரு பொலிஸ் ரோந்து கார் வாகனத்தை நிறுத்த முயன்றது, 
ஆனால் அதனால், கார்திருடரை துரத்துவது போக்குவரத்து நெரிசலான நேரத்தில் சாத்தியமாகவில்லை. மேலும் காரைத்திருடியவர் அதிகவேகமாக காரைச் செலுத்தியதால் பொலில் கெலிகாப்படர்
 வரவழைக்கப்பட்டு துரத்துதல் தொடர்ந்தது. பட்டப்பகலில் திரைப்படங்களில் வரும் துரத்தல் காட்சிகளைப்போல இது இருந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>சனி, 19 செப்டம்பர், 2020

ஈழத்து யுவதி தாயார் யுத்தத்தில் இறந்ததாக போலி மரணச்சான்றிதழ்ம்பலம்

பிரான்ஸில் குடியுரிமை பெறும் நோக்கில், உயிருடன் உள்ள தாய்க்கு மரணச் சான்றிதழ் வழங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது.புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கிராம சேவகர், மரணவிசாரணை 
அதிகாரி, அதனை ஏற்பாடு செய்தவர் ஆகிய 
மூவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.மூவரும் மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு பொலீசாரால் நேற்றுமுன்தினம் (16-09-20) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.சந்தேகநபர்கள், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்கள், தலா இரண்டு இலட்சம் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன்
 வழக்கு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் தெரியவருவதாவது,
பிரான்ஸில் வசித்து வரும், புதுக்குடியிருப்பு 9 ஆம் வட்டாரம், மல்லிகைத்தீவைச் சேர்ந்த யுவதி ஒருவர், பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவரது 
பெற்றோர்கள் போரின்போது உயிரிழந்துள்ளதாக மரண சான்றிதழ் தயாரித்துள்ளார்.யுவதியின் தந்தை 2014 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது 
தாயார் உயிருடன் வழ்ந்து வருகின்றார்.இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு தனது தாய் மற்றும் தந்தை ஆகியோர் இறுதிப் போரில் உயிரிழந்ததாக கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை 
பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து யுவதியினால் ஏற்பாடு செய்யப்பட்டவர், புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள மரணவிசாரணை அதிகாரியிடம் அதனை உறுதிப்படுத்த கோரியுள்ளார். எனினும், போர் நிகழ்ந்த காலப் பகுதியில் தான் அங்கு வாழாத காரணத்தினால் முள்ளியவளையில் உள்ள மரண விசாரணை அதிகாரியிடம் அதனைப் பெறுமாறு
 அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய, தாயார் உயிருடன் உள்ள நிலையில் மரணச்சான்றிதழையும், உயிரிழந்த தந்தைக்கு இரண்டாவது மரணச் சான்றிதழையும் பெற்று, அதன் மூலப்பிரதிகள் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற
 தகவலையடுத்து, இது தொடர்பான விசாரணையினை முல்லைத்தீவு மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில் போலியாக மரணச் சான்றிதழ் தயாரித்துள்ளமை 
தெரியவந்துள்ளது.இது தொடர்பில் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயல பதிவாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டபோது உயிருடன் உள்ள
 தாய்க்கு மரண சான்றிதழ் வழங்கியுள்ளமையும் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்த ஒருவருக்கு 2009 ஆம் ஆண்டு போரின்போது உயிரிழந்ததாக இரண்டாவது மரணச் சான்றிதழ் வழங்கியமையும் தெரியவந்துள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 
கிராம சேவையாளர் ஒருவரும், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமாதான நீதவானும், மரணவிசாரணை அதிகாரியுமான முள்ளியவளையினை சேர்ந்தவரும், மரண சான்றிதழை கோரிய
 பிரான்சில் உள்ளவரின் சகோதரியும் கைதுசெய்யப்பட்டனர்.சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வழக்கு விசாரணை 
எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கைக்காக மேலதிக விசாரணைகள் மற்றும் ஆய்வு நடவடிக்கையினை
 முல்லைத்தீவு மாவட்ட விசேடகுற்ற விசாரணைப் பிரிவினர் ஈடுபட்டுள்ளார்கள்.இவ்வாறு பெறப்பட்ட ஆவணங்கள் பிரான்ஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த யுவதிக்கு குடியுரிமை இதுவரை கிடைக்கவில்லை எனத் 
தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
செவ்வாய், 15 செப்டம்பர், 2020

!மைக்ரோசொப்டுக்கு டிக்டொக்கை வாங்கும் ஒரக்கிள் .கிடைத்த தோல்வி

 

டிக்டொக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை வாங்க ஒரக்கள் ( oracle ) நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரபல சீன செயலியான டிக்டொக் செப்டெம்பர் 15 முதல் நாட்டில் தடை செய்யப்படும் என்று 
கூறியிருந்தார்.இந்நிலையில்,  செப்டம்பர் 15 -09-20.காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக, இன்று டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைடெடான்ஸ் அமெரிக்காவில் அதன் தொழில்நுட்ப கூட்டாளராக
 ஒரக்கள் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது.
 மைக்ரோசொப்ட் மற்றும் ஒரக்கள் ஆகிய 
நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்திடமிருந்து டிக்டொக்கின் அமெரிக்க 
உரிமையை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன.இந்தப் போட்டியில் ஒரக்கள் நிறுவனம் வெற்றி
 பெற்றுள்ளது.அமெரிக்காவில் டிக்டொக்கின் “நம்பகமான தொழில்நுட்ப கூட்டாளர் ஒரக்கள்” என்று அறிவிக்கப்பட உள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 10 செப்டம்பர், 2020

திடீர் நிறுத்தம் ஒக்ஸ்போர்ட் பல்கலை கொரோனா தடுப்பூசிப் பரிசோதனை

 

உலகம் முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ளது. இந்த நிலையில், பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா
 நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக 
தகவல் வெளியாகியுள்ளது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது அதிக நம்பிக்கை இருந்து வந்தது. இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை 
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், தடுப்பூசி பரிசோதனை மேற்கொண்ட தன்னார்வலர் ஒருவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் தற்போது பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விவரிக்க முடியாத 
அளவிலான உடல்நலக்குறைவு’ என்று மட்டுமே 
குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன பக்கவிளைவு ஏற்பட்டது போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது
 வெளியாகி இருக்கும் இந்த தகவல் பெரும் 
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

இத்தாலியில் முகக் கவசம் அணியாத இலங்கையர்களுக்கு அபராதம்

 

இத்தாலியில் இலங்கையர்கள் இருவருக்கு தலா 377 யூரோ என்ற கணக்கில் 754 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் பெறுமதியில் அது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை
 விடவும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.இத்தாலி, பிரேஷியா நகரத்தில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காலும் இருந்த இரண்டு இலங்கையர்களுக்கே இந்த 
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இந்த இலங்கையர்கள் இருவரும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதிப் பரிசோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளினால் வாகனம் நிறுத்தப்பட்டு
 சோதனைக்குட்படுத்தப்பட்டது.அதில் 
ஒருவர் முகக் கவசம் வைத்திருந்த போதிலும் அதனை உரிய முறையில் அணியாமல் இருந்ததுடன் மற்றைய நபரிடம் முகக் கவசம் இல்லாதமையினாலும் இந்த அபராதம் 
விதிக்கப்பட்டுள்ளது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>சனி, 5 செப்டம்பர், 2020

திருமணமாகி சில நாட்களில் கனடாவில் நடந்த கோர விபத்தில் இருவர் பலி

கனடாவில் நேற்று ஏற்பட்ட வீதி விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக ரொரோற்றோ Blue Mountains தெரிவித்துள்ளனர்.ஒன்டாரியாவின் Blue Mountains நகரில் 04-09- 2020.அன்று.இரவு விபத்து ஏற்பட்டுள்ளது.Oshawa மற்றும் Whitchurch-Stouffville நகரங்களை சேர்ந்த 29 வயதான இரண்டு தமிழர்களே 
உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் ஒருவர் கஜன் தனபாலசிங்கம் என உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இவர் கடந்த 29ஆம் திகதி திருமணம் செய்து கொண்டவர் எனவும் தெரியவருகின்றது.உயிரிழந்த இருவரும் பயணித்த 
Audi sedan கார் வீதியை விட்டு வெளியேறி
 ஒரு மரத்துடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.24 வயதான வாகனத்தின் ஓட்டுநரான Whitchurch-Stouffville நகரை சேர்ந்த 24 வயது இளைஞன் Collingwoodடில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு 
செல்லப்பட்டார். பின்னர் தீவிரமான நிலையில் அவர் விமானம் மூலம் Toronto பகுதி மருத்துவமனைக்கு கொண்டு
 செல்லப்பட்டுள்ளார்.இந்த விபத்து நிகழந்த போது, வாகனத்தில் மூன்று பேர் இருந்ததாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனம் வீதியை விட்டு வெளியேற என்ன காரணம் என்பது குறித்த கால்வதுறையினரின் விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>வெள்ளி, 4 செப்டம்பர், 2020

ஒரு மாதங்களின் பின் கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் ஒருவர்

 

பெய்ரூட் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து 30 நாட்கள் கடந்துள்ள நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் ஒருவர் உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகளைக் மீட்புப் பணியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிலி மீட்புக் குழுவான டோபோஸுடன் பணிபுரியும் ஒரு துப்பரியும் நாய் இடிபாடுகளுக்கு வெளியே இருந்தபடி ஒருவர் உயிருடன் இருப்பதற்கான 
சமிக்ஞையை வழங்கியதையடுத்து, மீட்பு
 முயற்சி தொடங்கப்பட்டது. கடந்த பத்து நாட்களாக மீட்பு பணியாளர்களுடன் துப்பரியும் நாய் பணியில் உள்ளது. வெடிப்புக்கு முன்னதாக அந்த இடத்தில் காணப்பட்ட நான்கு மாடி கட்டிடம் ஒன்று 
தற்போது முழுவதுமாக இடிந்து வீழ்ந்துள்ள நிலையில், இதன் இடிபாடுகளுக்கு இடையே ஒருவர் உயிருடன் இருப்பதாக
 மீட்பு பணியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.மீட்பு குழுவினால் குறித்த
 இடத்திற்கு அனுப்பப்பட்ட சிறப்பு உபகரணங்கள் 
இரண்டு உடல்கள் இருப்பதைக் கண்டறிந்தன, இதில் ஒருவர் ஒரு வயது குழந்தையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருவரில் ஒருவர் 
மட்டும் உயிருடன் இருப்பதாகவும் அவரின் இதயத்துடிப்பு
7 நிமிடத்திற்கு 18 துடிப்புகளை 
காட்டுவதாகவும் உபகரணங்கள் கண்டறிந்துள்ளன. நேற்று வியாழக்கிழமை தொடங்கப்பட்ட தேடுதல் பணி இடை நிறுத்தப்பட்டு 
மீண்டும்,04-09-20, இன்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1 மணிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.எனினும், பல மணி நேரங்களின் பின் உயிருடன் இருப்பவரின் இதயத்துடிப்பு
 ஒரு நிமிடத்திற்கு 10 துடிப்புகளை உபகரணங்கள் காட்டியுள்ளன.ஆரம்பத்தில் இருந்தே பேரழிவிற்கு வாய்ப்பினை ஏற்படுத்திய லெபனான் அதிகாரிகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் முழுமையாக விழிப்புடன் இருந்தார்களா என்பது குறித்து இந்த சம்பவம் கேள்வி 
எழுப்பியுள்ளது.கடந்த மாதம் பெய்ரூட்டின் துறைமுகத்தில் சுமார் 2,700 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததையடுத்து 
கிட்டத்தட்ட 200 பேர் இறந்தனர், 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் நகரின் பெரும் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>
ஐந்து குழந்தைகளுக்கு நஞ்சு கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயற்சி

 

மேற்கு ஜேர்மனிய நகரமான சோலிங்கனில் உள்ள ஒரு பெரிய வீட்டுத் தொகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்து குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அருகிலுள்ள டுசெல்டார்ஃப் ரயில் நிலையத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கும் முன், 27 வயதான தாய் குழந்தைகளை கொலை செய்ததாக சந்தேகிப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.இறப்புக்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லாமல், சில விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் நகரின் ஹாசெல்டெல் பகுதியில் உள்ள குடியிருப்புத் தொகுதிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன. உள்ளூர் நேரப்படி சுமார் 13:45 மணிக்கு வடக்கு
 ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் உள்ள சோலிங்கனில் உள்ள கட்டிடத்திற்கு வந்த பொலிஸார், மூன்று பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளின் சடலங்களை கண்டெடுத்தனர்.இதன்போது, 
ஆறாவது குழந்தையான 11 வயது சிறுவன் உயிர் பிழைத்ததாகக் கூறப்படுகிறது.முன்செங்லாட்பாக் நகரில் 60 கி.மீ (37 மைல்) தொலைவில் வசிக்கும் குழந்தைகளின் பாட்டி, 
அவசரகால சேவைகளை அழைத்ததாக ஜேர்மன் செய்தி வலைத்தளம் பில்ட் தெரிவித்துள்ளது.படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை
 பெற்று வரும் 
தாயிடம், சிகிச்சைக்கு பின் விசாரணை நடத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா அல்லது எவ்வாறு குழந்தைகள் உயிரிழந்தன என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>வியாழன், 3 செப்டம்பர், 2020

தீப்பற்றியெரியும் பாரிய கப்பல் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில்

 

அம்பாறை சங்கமன்கந்தவிற்கு கிழக்காகவுள்ள கடற்பிராந்தியத்தில் கப்பல் ஒன்று தீப்பற்றி எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எம்.ரி நியு டைமன் என்ற குறித்த எண்ணெய் கப்பலில் 
உள்ள ஊழியர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.கப்பலின் எஞ்ஜின் அறையில்
 ஏற்பட்டுள்ள தீ விபத்து இதுவரையில் பிரதான எரிபொருள் தாங்கி வரையில் பரவவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மீட்புப் பணிகளுக்காக இரண்டு 
கடற்படை கப்பல்கள் குறித்த 
பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சிறிய ரக விமானம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை 
தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>