நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 25 ஜனவரி, 2019

திடீர் உடல்நலக் குறைவு கனடாவில் விமானம் ஏறிய பயணிகளுக்கு

கனடாவில் விமானம் ஏறிய சில நிமிடங்களில் 185 பயணிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடா நாட்டின் கியூபெக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்ல ஏர் டிரான்ஸாட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை 
தயாராக இருந்தது.
பயணிகள் ஒருவர்பின் ஒருவராக வநது தங்களது இருக்கைகளில் அமரத் தொடங்கினர். சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் கண் எரிச்சல், மயக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற உபாதைகளால்
 பாதிக்கப்பட்டனர்.
விபரமறிந்து விரைந்துவந்த மருத்துவ குழுவினர் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கி, முதலுதவி மற்றும் உரிய சிகிச்சை அளித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட சுமார் 10 பயணிகள் அருகாமையில் உள்ள வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டனர்.
இதைதொடர்ந்து, அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தி, தனிப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கமாக பறக்க தொடங்குவதற்கு முன்னதாக விமானத்தின் மூக்கு, இறக்கை மற்றும் வால் பகுதிகளில் படிந்துள்ள பனிக்கட்டி அல்லது பனித்துகள்கள் ஓடுபாதையில் பாய்ந்து சீறிக்கிளம்ப முடியாத நிலையில் என்ஜின்களின் உந்துசக்தியை குறைத்து விடும்.
இதை தவிர்க்கும் வகையில் பனிப்பிரதேசங்களில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் மீது சில வாகனங்கள் சூழ்ந்து நின்றுகொண்டு வெந்நீரில் கலக்கப்பட்ட 'கிளைக்கால்' எனப்படும் ரசாயன கலவையை விமானத்தின் மூக்கு, இறக்கை மற்றும் வால் பகுதிகளில் 
தெளிப்பதுண்டு.
இதன்மூலம் படிந்துள்ள பனிக்கட்டிகள் உருகி விடுவதுடன் பறக்கும்போது மேலும் சில மணி நேரங்களுக்கு மீண்டும்
 பனி படியாமல் தடுக்கப்படும்.
இதை விமானப் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்பச் சொல்லில் 'டிஐசிங்' என்று அழைப்பதுண்டு.
அவ்வகையில் 'டிஐசிங்' செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட தெளிப்பான்களின் நெடி காற்றுப்போக்கிகள் வழியாக விமானத்தின் உட்பகுதிக்குள் நுழைந்ததால் பயணிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், தொடர்ந்து விசாரணை 
நடைபெற்று வருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


ஆடை அலங்கார துறையில்உலகில் பிரபலமான இலங்கை தமிழர்

உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இலங்கை தமிழரான இளைஞனும் 
உள்ளடக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே ஆடை அலங்கார துறையில் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
20 வயதான அவர், லண்டன், பாரிஸ், மிலான் மற்றும் நியூயோர்க் உட்பட உலகில் புகழ்பெற்ற ஆடை அலங்கார கண்காட்சிகளில் முக்கியமான பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.
அவரது உடல் நிறமே இதற்கு பிரதான காரணம் எனவும் கூறப்படுகிறது. மாநிறமான மகாதேவன், ஆடை அலங்கார உலகில், தெற்காசியாவை சேர்ந்த நட்சத்திரங்களில் ஒருவராக
 மாறியுள்ளார்.
தனது உடல் நிறம் குறித்து தான் பெருமை கொண்டாலும் ஆசியாவை சேர்ந்த பலர் இன்னும் வெள்ளை நிற தோலை எதிர்பார்ப்பதாக மகாதேவன் கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


மெக்சிக்கோவில் பெற்றோல் குழாய் வெடித்து 66 பேர் பலி

மெக்சிக்கோவில் பெற்றோல் குழாய் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 66 பேர் உடல் கருகி பலியான சம்பவம் நடந்துள்ளது.
மெக்சிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லஹீலிப்பன் நகரிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு பெற்றோல் கொண்டு செல்லும் வழியில் சட்டவிரோதமாக துளையிட்டு பெற்றோலை பிடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குழாய் வெடித்து சிதறியதில் 66 பேர் உடல் கருகி பலியாகினர். 76 பேர் படுகாயமடைந்தனர்.
போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுபவர்களே பெற்றோலையும் திருடி விற்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புதிதாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஆண்ட்ரஸ் மனுவெல் ஒப்ராடார் பெட்ரோல் திருட்டை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 14 ஜனவரி, 2019

புதிய சட்டங்கள் கனடாவில் 2019 முதல் அறிமுகம்

கனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சட்டங்களுக்கும் கனடா அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில முக்கிய விடயங்கள்.
இயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அடுத்து வாகனம் ஓட்டும் போது கைகளில் மின்ணணு சாதனத்தை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
வாகனம் ஓட்டும் போது செல்லுலர் போன்களை பேசுவதற்காகவோ அல்லது தகவல் அனுப்புவதற்காகவோ, வரைபடங்களை(Map) சரி பார்த்தால் அல்லது பிளேலிஸ்டுகளை மாற்றவோ பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
வாகனம் ஓட்டும் போது உணவு உண்ணுதலும் குற்றமாக கூறப்பட்டாலும் இதற்காக வாகனம் ஓட்டும் உரிமம் இடைநீக்கம் செய்யப்படாது என்றும் ஆனால், ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது உணவைப் பொறுத்து ஆறு குறைபாடு புள்ளிகளை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 12 ஜனவரி, 2019

இரண்டடுக்கு பேருந்து கனடாவில் விபத்து மூவர் பலி 23 பேர் காயம்

கனடாவின் இரண்டடுக்கு பேருந்து (double-decker) ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
ஒட்டாவா பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது..
பேருந்தின் மேல் தளம் சேதமடைந்தமையால், மேல் தளத்தில் இருந்தவர்கள் நீண்ட நேரத்திற்கு பேருந்தில் இருந்து இறங்க முடியாமல் தவித்துள்ளனர். இதனால் பெரும்பாலானோர் பேருந்தின் மேல் தளத்தில் இருந்தவர்களே காயமடைந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 3.50 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டாவா மேயரான Jim Watson, உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் 
முன்னெடுக்கப்படுகிறது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 8 ஜனவரி, 2019

தமிழர் திருவிழா டோட்முண்ட் தமிழர் அரங்கில் 16.01.19

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் அனைத்து மதத்தவருக்கும் முக்கியம் கொடுத்து பொங்கள்விழாவில் மும்மத இணைப்பாக பெங்கல்விழா சிறப்பாக நடைபெறுகின்றது,
அந்த வகையில் எந்தமதமாக இருந்தாலும் தமிழ் ஈழத்து மக்களாகிய எமக்கு பெபங்கள்விழா என்பது இணை
வான விழாவாகும் அந்த வரிசையில் வருகின்ற 16.01.2019 அன்று தமிழர் அரங்கில் பொங்கல்விழாவவை சிறவப்பித்து நிற்போம் என அழைக்கின்றார்கள் தமிழர் அரங்கின் உரிமையாளர்கள் 
திரு திருமதி சபேசன் குழுவினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 7 ஜனவரி, 2019

மீண்டும் இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் 
தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இதற்கு முன்னர் நிலநடுக்கத்தின் அளவு 7.0 அளவு ரிச்ட்டரில் பதிவாகியதாகவும் புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம்
 தெரிவித்துள்ளது.
அத்தோடு ஏற்கனவே ஆழிப்பேரலையால் ஏற்பட்ட வடுக்கள் இந்தோனேஷியாவில் மாறாத நிலையில் மீண்டும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 4 ஜனவரி, 2019

பிரேசிலில் இறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை

கர்பப்பை தானத்தின் மூலம் பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இறந்த பெண்ணில் கர்ப்பப்பையில் இருந்து பிறந்த உலகின் முதல் குழந்தை இது என்பது 
குறிப்பிடத்தக்கது!
இறந்த பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தை பெற்றெடுக்கப்பட்டிருப்பது பெரிய சாதனை என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் புகழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் கர்ப்பம் தரிக்க முடியாத பல பெண்களுக்கும் இறந்தவர்களிடமிருந்து கர்ப்ப்பையினை தானமாக பெற்று குழந்தையினை பெற்றெடுக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்
 தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக உலகின் பல ஆராய்ச்சியாளர்கள் இறந்தவர்களின் கருப்பையை தானமாகப் பெற்று குழந்தை பிறப்பு குறித்து சோதித்துள்ளனர். எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது பிரேசிலை சேர்ந்த மருத்துவர்கள் இம்முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.
இந்த முயற்சியின் மூலம் பிறந்துள்ள குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது என்பதால் சர்வதேச மருத்துவத்துறை
 ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளது.
இந்த ஆராய்ச்சிக்ககு பிரேசிலில் பிறப்பிலேயே கருப்பை இல்லாமல் பிறந்த பெண் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு இறந்த பெண் ஒருவரின் கருப்பையை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர்
. கருப்பை தானமாகப் பெற்ற அப்பெண் இயற்கை முறையிலேயே கருத்தரித்து குழந்தைப் பெற்றெடுத்துள்ளார். இந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது. இந்த முயற்சியானது மருத்துவத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப் படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புத்தாண்டில்.01.01.19 அன்று பிறந்த முதல் குழந்தை

2019 ஆம் ஆண்டின் முதல் குழந்தை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
புத்தாண்டு பிறந்த ஒரே நொடியில் அதாவது 12.00.01 மணியில் அயர்லாந்து நாட்டில் உள்ள டிரோஹ்டே என்ற நகரத்தில் பிறந்த குழந்தை தான் இந்த ஆண்டின் முதல் குழந்தையாக 
அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து நாட்டில் உள்ள டிரோஹ்டே என்ற நகரத்தில் மைக்கேல் மாண்டாஹ் மற்றும் சிமன் காக்ஸ் ஆகிய தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்தப் பெண் குழந்தை தான் இந்த ஆண்டின் முதல் குழந்தை என்றும், இந்த குழந்தை 3.8 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தை பிறந்த மருத்துவமனையான லேடி ஆப் லார்ட்ஸ் என்ற மருத்துவமனை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் குழந்தைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>