நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 29 பிப்ரவரி, 2016

நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் !!!

நேபாள நாட்டில் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் மேற்கேயுள்ள சுற்றுலாத்தலமான போக்காராவில் இருந்து ஜாம்சான் நகருக்கு புறப்பட்டுச் சென்ற தனியாருக்கு சொந்தமான சிறியரக விமானம் இன்று காலை மாயமானது.
போக்காரா நகரில் இருந்து புறப்பட்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த 'தாரா ஏர்' நிறுவனத்துக்கு சொந்தமான அந்த விமானத்தில் இரண்டு வெளிநாட்டினர் இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பயணிகளும், விமானி உள்பட 23 பேர் இருந்ததாக தெரியவந்தது.
இந்நிலையில், அந்த விமானம் ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிக் கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதில் சென்ற 23 பேரும் உயிரிழந்ததாகவும் நேபாள நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சகம் இன்று பிற்பகல் அறிவித்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 
 

இலங்கையருக்கு பிரித்தானியாவில் இலவச சமூக பணிக்கான உத்தரவு`?

பிரித்தானியாவில், மனைவி மீது தாக்குதல் நடத்திய இலங்கையர் ஒருவருக்கு 12 மாத கால சமூக பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு வாடகை வாகனம் செலுத்தி வந்த குறித்த நபர், தமது மனைவி மீது சந்தேகம் கொண்டு அவரை தாக்கியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவருக்கு 40 நாட்கள் புனர்வாழ்வளிப்பும், 100 மணித்தியால வேதனமற்ற தொழில் புரிதலுக்குமான உத்தரவும்
 பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

குறைந்த-வருமானம் உடைய மாணவர்களிற்கு வெற்றி?

கனடா- கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் உயர்கல்வி பயிலும் நிலைமை மிகவும் இலகுவானதாக மாறியுள்ளது.
வருடமொன்றிற்கு 50,000 டொலர்களிற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளிற்கு பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி கட்டணம் இலவசமாக்கப்படும் என லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது மட்டுமன்றி 
நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்களிற்கு மேலதிக மானியத் தொகையும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
டொலர்கள் 83,000ற்கும் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தை சேர்ந்த 50சதவிகிதத்திற்கும் மேலான மாணவர்களிற்கு மீள செலுத்த பட தேவையற்ற மானியங்களும் வழங்கப்பட உள்ளது.
முதிர்ந்த மற்றும் திருமணமான மாணவர்களிற்கு நிதி ஆதரவு அதிகரிக்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 24 பிப்ரவரி, 2016

கடுமையாக பாதிக்கும் :பிரிட்டன் தொழிலதிபர்கள் எச்சரிக்கை

 டேவிட் கேமரூன் தான் மீண்டும் வெற்றி பெற்று வந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து பொது வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்குவேன் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படியே, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருக்கலாமா, வேண்டாமா என்பது குறித்த பொது வாக்கெடுப்புக்கான நாளாக ஜூன் 23ம் தேதியை 
அவர் நிர்ணயித்தார்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கும் என்று பிரிட்டன் தொழிலதிபர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக பென்சார்,

வோடபோன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் முதலாளிகள் கையெழுப்பமிட்ட கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறினால், பிரிட்டனில் முதலீட்டு வாய்ப்புகள் பாதிக்கும் என்று          அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 

 

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பரிஸ்லாச்சப்பலில் படுகொலை!கொலையாளி, தப்பியோட்டம் !!

லாச்சப்பல் பகுதிக்கு மிகவும் அண்மையில் உள்ள ஸ்டாலின்கிராட் (Stalingrad) மெட்ரோ அருகில் ஒரு படுகொலை நடந்துள்ளது.
பரிஸ் பத்தில், நடக்கும் அதிக வன்முறைகளால், முதன்மைப் பாதுகாப்பு வலயமாகப் பிரகடணப்படுத்தப்பட்ட பகுதியான, (ZSP – zone de sécurité prioritaire) avenue de Flandre இல் ஸ்டாலின்கிராட் மெட்ரோ அருகில், இந்தப் படுகொலை நடந்துள்ளது. கொலைத் தாக்குதலின் பின்னர் தப்பியோடிய கொலையாளி, இன்னமும் கைது செய்யப்படவில்லை.
இங்கிருக்கும் ஒரு மளிகைக் கடையின் முன்னால், இந்தத் தகராறு ஆரம்பித்துள்ளது. தகராற்றில் ஈடுப்பட்ட ஒருவர், மற்றையவரின் வயிற்றில், கத்தியால் மிகவும் பலமாக, இரண்டு குத்துக்களைக் குத்திவிட்டுத் தப்பியோடி உள்ளார். அவசர முதலுதவிப்படையினர் வந்தபோது, கத்திக்குத்திற்கிலக்கானவர், சவாசம் இழந்து, மாரடைப்பிற்குள்ளாகி இருந்துள்ளார். அவசர சிகிச்சைகள் பலனளிக்காமல் அங்கேயே, அவர் உயிரிழந்துள்ளார். நட்டநடு வீதியில் இவர் கத்திக்குத்திற்கு இலக்காகி, இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார் எனக், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
கொல்லப்பட்ட அஹ்மத் என்பவர், வில்நெவ்-லா-கரென் (Villeneuve-la-Garenne – Hauts-de-Seine) இனைச் சேர்ந்தவர். இவர் போதைப்பொருள் உட்கொள்பவர் என்றும், போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளையும் வியாபாரத்தையும் பேணி வந்தவர் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை, மளிகைக் கடையில் ஏற்பட்ட தகராற்றினால் நடந்தது என்றே, காவற்துறையினரால் முதலில் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் பின்னர் இது , போதைப்பொருள் விற்பனையின் அடிப்படையில் ஏற்பட்ட தகராறு எனத் தெரியவந்துள்ளது. இதற்கான விசாரணையும் கொலையாளிக்கான, தீவிர தேடுதலும் நடந்து வருகின்றது
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>></

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கற்பை இணையதளம் மூலம் சந்தித்து பறிகொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!!

பிரித்தானிய நாட்டில் இணையத்தளம் மூலமாக அறிமுகமில்லாத ஆண்களிடம் சிக்கி கற்பை பறிகொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை 6 மடங்காக அதிகரித்துள்ளது அந்நாட்டு அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானிய நாட்டின் தேசிய குற்றவியல் ஏஜென்சி அண்மையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ’டேட்டிங் அப்ளிகேஷன்’ மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிமுகமில்லாத நபர்களை சந்தித்து கற்பழிப்பிற்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இணையத்தளம் மூலமாக சந்தித்து சீரழிந்தவர்களின் எண்ணிக்கை 2009ம் ஆண்டு 33 ஆக இருந்தது, 2014ம் ஆண்டில் 184 ஆக அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆண்களிடம் சிக்கிக்கொள்பவர்களில் 85 சதவிகிதத்தினர் பெண்கள் ஆகும்.
இந்த 85 சதவிகிதத்தில் 42 சதவிகிதத்தினர் 20 முதல் 29 வயதுடையவர்கள் என்றும் 24 சதவிகிதத்தினர் 40 முதல் 49 வயதுடைய பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
எனினும், இவ்வாறு கற்பை பறிகொடுத்துவிட்டு பொலிசாருக்கு தெரிவிக்காமல் பல பெண்கள் இருக்கலாம் என்பதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
பொலிசாரிடம் புகார் அளிக்காமல் உள்ளவர்கள் தைரியமாக முன்வந்து பொலிசாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என தேசிய குற்றவியல் ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய நாடு முழுவதும் ’டேட்டிங்’ செய்யும் இணையத்தளங்களில் சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களுடைய பெயர்களை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>மூதாட்டிகள்: 2,00,000 யூரோவை மூட்டைக்கட்டி வைத்திருந்த னர் அதிர்ச்சியில் பொலிசார்?

இத்தாலி நாட்டில் வறுமையில் வாடிய இரண்டு வயதான சகோதரிகள் தங்களுடைய பாழடைந்த வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக 2,00,000 யூரோ பணம் வைத்திருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரோம் நகருக்கு அருகில் உள்ள San Giovanni என்ற பகுதியில் 93 மற்றும் 80 வயதான சகோதரிகள் இருவர் ஒரு பாழடைந்த வீட்டில் வசித்து
 வந்துள்ளனர்.
இருவரும் கடுமையான வறுமையில் வாடியதால், அருகில் குடியிருந்தவர்களிடம் சில உதவிகளை அடிக்கடி பெற்று வந்துள்ளனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ‘மூதாட்டிகள் இருவரையும் சில நாட்களாக காணவில்லை. நீங்கள் உடனடியாக விசாரிக்க வேண்டும்’ என பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.
தகவலை பெற்று வந்த பொலிசார், மூதாட்டிகளின் பாழடைந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
அப்போது, அங்கு தரையில் மயங்கிய நிலையில் இருவரும் மூச்சு விட சிரமமாகவும், எழுந்து நிற்பதற்கு பலம் இல்லாமலும் கிடந்துள்ளனர்.
உடனே இருவருக்கும் பொலிசார் முதலுதவி அளித்தனர். ஆனால், மூதாட்டிகளால் பேச முடியாததால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர், மூதாட்டிகளின் உறவினர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என எண்ணிய பொலிசார் ஏதாவது முகவரி கிடைக்குமா என அங்குள்ள அறையில் தேடியுள்ளனர்.
அப்போது ஒரு கிழிந்த மூட்டையில் யூரோ தாள்கள் அடைத்து வைக்கப்பட்டுருந்ததை பார்த்து அதனை பிரித்து எடுத்துள்ளனர்.
50 யூரோ தாள்களில் சுமார் 1,00,000 யூரோ தாள்கள் இருந்தது கண்டு பொலிசார் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாமல், மற்றொரு அறையில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்களும் வைக்கப்பட்டிருந்தது.
இவை அணைத்தையும் மதிப்பிட்டால், 2,00,000 யூரோ (3,21,53,867 இலங்கை ரூபாய்) வரை இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுருந்த 93 வயதான மூதாட்டி கடந்த செவ்வாய் அன்று உயிரிழந்துள்ளார்.
ஆனால், 80 வயதான மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அவர் ஒரு குழப்பமான நிலையிலேயே இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பணக்கட்டுகளை சோதனை செய்தபோது ஒவ்வொரு தாளும் புதிதாகவும், அழுக்குப்படாமலும் இருப்பதால் அண்மையில் தான் இந்த பணம் இந்த வீட்டிற்குள் வந்திருக்க வேண்டும் என பொலிசார் கணித்துள்ளனர்.
அதேசமயம், இந்த பணம் முழுவதும் மூதாட்டிகளின் சேமிப்பு பணம் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
எதனையும் உறுதிப்படுத்தாத பொலிசார் பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும், மூதாட்டி அல்லது அவரது உறவினர்கள் வந்து பணத்திற்கான உரிய விளக்கம் அளித்தால் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 6 பிப்ரவரி, 2016

குழந்தை உள்பட நிலநடுக்கத்தால் 5 பேர் பலி 318 பேர் காயம்!!!

தாய்வான் நாட்டின் தென்பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 10 மாத குழந்தை உள்பட ஐவர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் தைவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
தாய்வானின் இரண்டாவது பெரிய நகரமான காவோசியுங் 
நகரில் இருந்து 
சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக 16 தளங்களை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்பட நான்கு 
கட்டிடங்கள் சரிந்து விழுந்ததாகவும், இடிபாடுகளில் சிக்கிய பத்து மாத குழந்தை உள்பட மூவர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அருகாமையில் உள்ள இன்னொரு ஏழு மாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த சுமார் 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானோர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்த பேரிடர் மீட்புக் குழுவினர், தொடர்ந்து அங்கே இடிபாடுகளை அகற்றும் பணியிலும், மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1999-ம் ஆண்டு தைவானை தாக்கிய 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 2400 பேர் பலியாகினர் என்பது
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>