நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பரிஸ்லாச்சப்பலில் படுகொலை!கொலையாளி, தப்பியோட்டம் !!

லாச்சப்பல் பகுதிக்கு மிகவும் அண்மையில் உள்ள ஸ்டாலின்கிராட் (Stalingrad) மெட்ரோ அருகில் ஒரு படுகொலை நடந்துள்ளது.
பரிஸ் பத்தில், நடக்கும் அதிக வன்முறைகளால், முதன்மைப் பாதுகாப்பு வலயமாகப் பிரகடணப்படுத்தப்பட்ட பகுதியான, (ZSP – zone de sécurité prioritaire) avenue de Flandre இல் ஸ்டாலின்கிராட் மெட்ரோ அருகில், இந்தப் படுகொலை நடந்துள்ளது. கொலைத் தாக்குதலின் பின்னர் தப்பியோடிய கொலையாளி, இன்னமும் கைது செய்யப்படவில்லை.
இங்கிருக்கும் ஒரு மளிகைக் கடையின் முன்னால், இந்தத் தகராறு ஆரம்பித்துள்ளது. தகராற்றில் ஈடுப்பட்ட ஒருவர், மற்றையவரின் வயிற்றில், கத்தியால் மிகவும் பலமாக, இரண்டு குத்துக்களைக் குத்திவிட்டுத் தப்பியோடி உள்ளார். அவசர முதலுதவிப்படையினர் வந்தபோது, கத்திக்குத்திற்கிலக்கானவர், சவாசம் இழந்து, மாரடைப்பிற்குள்ளாகி இருந்துள்ளார். அவசர சிகிச்சைகள் பலனளிக்காமல் அங்கேயே, அவர் உயிரிழந்துள்ளார். நட்டநடு வீதியில் இவர் கத்திக்குத்திற்கு இலக்காகி, இரத்த வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்துள்ளார் எனக், காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்
கொல்லப்பட்ட அஹ்மத் என்பவர், வில்நெவ்-லா-கரென் (Villeneuve-la-Garenne – Hauts-de-Seine) இனைச் சேர்ந்தவர். இவர் போதைப்பொருள் உட்கொள்பவர் என்றும், போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளையும் வியாபாரத்தையும் பேணி வந்தவர் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கொலை, மளிகைக் கடையில் ஏற்பட்ட தகராற்றினால் நடந்தது என்றே, காவற்துறையினரால் முதலில் விசாரணை செய்யப்பட்டது. ஆனால் பின்னர் இது , போதைப்பொருள் விற்பனையின் அடிப்படையில் ஏற்பட்ட தகராறு எனத் தெரியவந்துள்ளது. இதற்கான விசாரணையும் கொலையாளிக்கான, தீவிர தேடுதலும் நடந்து வருகின்றது
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>></

0 கருத்துகள்:

கருத்துரையிடுக