நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 24 ஜூலை, 2016

ஜேர்மன் தாக்குதலில் இலங்கையர்களின் நிலமை?

ஜேர்மன் – முன்சன் நகரத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பேற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இருந்த போதிலும் இலங்கையர்கள் தொடர்பில் இராஜதந்திர முறையின் கீழ் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்காக 3 ஆயுததாரிகள் வந்துள்ளதாக முதல் செய்தி வெளியாகிய போதிலும் தாக்குதலை ஒருவரே மேற்கொண்டுள்ளதாக முன்சன்ச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆயுததாரி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முனிச் நகர பொலிஸ் தலைமை அதிகாரி 
தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் சந்தேக நபர் 18 வயதுடைய ஜேர்மன் – ஈரானிய இரட்டை குடியுரிமையை கொண்டு முனிச் நகரில் வாழும் ஒருவராகும் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் தாக்குதலுக்கான காரணம் இன்னமும் தெளிவாக இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 21 ஜூலை, 2016

இரு தமிழ் குழந்தைகள்லண்டனில் கடத்தல்…

லண்டனில் வசித்து வரும் கவிப்பிரியா பாலசுதன் என்ற பெண் தன் மூத்த பிள்ளையை பாடசாலையில் இருந்து அழைத்து வருவதற்காக மற்றைய இரண்டு பிள்ளைகளையும் காரில் விட்டு விட்டு பாடசாலைக்கு 
சென்றுள்ளார்.
இந்நிலையில் திடீரென கார் திருடன் ஒருவன் இரண்டு பிள்ளைகளும் காரில் இருக்கும் போதே குறித்த காரை திருடிச் சென்றுள்ளான்.
காரினுள் 8 வயது பெண் பிள்ளை மற்றும் 5 வயது மகன் இருந்ததாக தாய் கவிப்பிரியா பாலசுதன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கார் திடீரென எடுத்துச் சென்ற சத்தத்தை உணர்ந்த குறித்த தாய் தன் கையடக்க தொலைபேசியையும் காரில் தவறி விட்டு வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கவிப்பிரியா தெரிவிக்கையில், என்னால் அதை நம்ப முடியவில்லை, எனக்கு என்னுடைய பிள்ளைகள் மாத்திரமே வேண்டும். இது தான் என்னுடைய முக்கிய எண்ணம் என்று தெரிவித்துள்ளார்.

என் பிள்ளைகள் இல்லாவிட்டால் நான் என்ன பண்ணுவேன் என எனக்கே தெரியாதென குறித்த தாய் தெரிவித்துள்ளார். இது எவ்வாறு திடீரென நிகழ்ந்தது என தனக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு என் காரை பற்றி எந்த அக்கறையும் இல்லை, எனக்கு என் குழந்தை மட்டுமே வேண்டும் என கூறியுள்ளார். பின் பொலிஸார் குறித்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் அந்த சமயத்தில் விசாரணைகள் இடம் பெற்று வந்ததாகவும் பின் நிரூபிக்கப்பட்ட பிறகு 19 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 15 ஜூலை, 2016

‘ : மக்கள் கூட்டதிற்குள்பயங்கரவாத தாக்குதல்’பாரிய லொறியை” செலுத்தி ?

பிரான்சில் Bastille Day கொண்டாட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 74 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஸ் நகரில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது லொறி ஒன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கூட்டத்தில் 
புகுந்துள்ளது,
இதில், மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தெருக்களில் ஓடியுள்ளனர், இதில் 50 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் துப்பாக்சூடு சம்பவம் நடைபெற்றதாகவும், இது தீவிரவாத தாக்குதல் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், நைஸ் நகரில் உள்ள ஹொட்டல்கள், கபே, குடியிருப்புகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர், மேலும், குடியிருப்பை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என பொலிசார் மக்களுக்கு 
அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, துப்பாக்கிசூடு சத்தம் கேட்டது, அதன் பின்னர் லொறி மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது  என்றும் தெருங்களில் ஆங்காங்கே இறந்தவர்களின் உடல்கள் கிடக்கிறது எனவும் கூறியுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நிழல்படங்கள்  இணைப்பு ..பகுதி இரண்டு 
வியாழன், 14 ஜூலை, 2016

அவுஸ்திரேலியாவில் இலங்கையர் கிரிகெட்டில் வெற்றிநடை!!!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார்.
இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம் நகருக்கு அண்மையில் உள்ள உடப்பு மீனவக் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
சகலத்துறை ஆட்டக்காரரான யுகேந்திரன் இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட இலகுப் பந்து அணியில் 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார்.
அத்துடன், 2010ஆம் ஆண்டு 22 வயதுக்குட்பட்ட அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தி யுகேந்திரன் விளையாடியுள்ளார்.
கிரிக்கெட் மீது தீவிர காதல் கொண்ட யுகேந்திரன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றும் தமது விளையாட்டை கைவிடவில்லை.
அவுஸ்திரேலியாவின் டீ அணியில் விளையாடி வரும் இவர் கடந்த 10ஆம் திகதி அங்கு இடம்பெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி இரட்டை சதம் 
பெற்றுள்ளார்.
இவ்வாறு கிரிக்கெட்டில் தமது திறமையை வெளிக்காட்டிய முதலாவது புகலிக்கோரிக்கையாளர் என்ற பெயருக்கும் யுகேந்திரன் உரித்துடையவராகியுள்ளார்.
அத்துடன் யுகேந்திரன் நடந்து முடிந்த 40 ஓவர்கள் கொண்ட குறித்த போட்டியில் ட்ரேசி வில்லேஜ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றார்.
இந்த போட்டியில், அவர், 18 ஆறு ஓட்டங்களையும், 14 நான்கு ஓட்டங்களையும் பெற்று மொத்தமாக 227 ஓட்டங்களுக்கு பெற்றிருந்தார்.
இதேவேளை ‚கிரிக்கெட் எனது உயிர். நான் எனது வாழ்க்கையில் கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்வேன் என யுகேந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன், அவுஸ்திரேலிய அணியில் விளையாட கிடைத்தமை சிறந்த அனுபவம் என அவர் மேலும் 
குறிப்பிட்டுள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 11 ஜூலை, 2016

வெளியேறிய ரொனால்டோ: ஹீரோ ஆனார் மாற்று வீரர் ஈடர்?

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் காயம் காரணமாக ரொனால்டோ வெளியேறியதால் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஈடர் ஹீரோ ஆனார்.
15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் பிரான்ஸ் நாட்டில் நடந்து வந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்று 
விளையாடின. 
இறுதிப் போட்டியில் உலக கால்பந்து தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணியும், 17-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணியும் 
மோதியது. 
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ காயம் காரணமாக வெளியேறினார். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
70-வது நிமிடத்தில் ஜான்செஸுக்கு பதிலாக மாற்று வீரராக ஈடர் களமிறங்கினார். இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் ஈடர் கோல் அடித்து
 அசத்தினார். 
இதனால், காயம் காரணமாக ரொனால்டோ வெளியேறியதால் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கிய ஈடர் ஹீரோவானார். அவர் அடித்த ஒரு கோல்தான் போர்ச்சுகல் அணிக்கு கோப்பையை வென்று 
அளித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 4 ஜூலை, 2016

எழுபத்தாறு வயது பாட்டி: மரண தண்டனை விதித்த நீதிமன்றம்!!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பாட்டி ஒருவருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதித்து வியட்நாம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Nguyen Thi Huong என்ற 76 வயது பாட்டி ஒருவர் 1.6kg போதைபொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார், இது தொடர்பான வழக்கு வியட்நாம் Ho Chi Minh City நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இப்பெண்மணி, தான் கொண்டு சென்ற பொருளில் போதைபொருள் இருந்தது தெரியாது என்று கூறியுள்ளார், இருப்பினும் பிரதிவாதியின் பதிலை ஏற்க மறுத்த நீதிபதி அவருக்கு மரணதண்டனை விதித்து
 உத்தரவிட்டுள்ளார்.
மேலும், எனது உடல்நிலை மோசமாக உள்ளது என கூறி அவர் மேல்முறையீடு செய்துள்ளார், ஆனால் இந்த மேல்முறையீடு தோல்வியடையும் வீதத்தில், விஷ ஊசி மூலம் இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
இந்த வழக்கு குறித்து அவுஸ்திரேலியா வெளியுறத்துறை அமைச்சர் கூறியதாவது, தூதரகம் சார்பில் அவருக்காவும், அவரது குடும்பத்தினருக்காகவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் 
என கூறியுள்ளார்.
உலக நாடுகளில் போதைபொருள் கடத்தல் வழக்கில் கடுமையான சட்டங்களை பின்பற்றி வரும் நாடுகளில் வியட்நாம் நாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>