நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 31 ஆகஸ்ட், 2013

மனிதத் தலை!பொதியில் வந்த அதிர்ச்சியில் கென்ய பொலிஸார்


கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஜான்சன் கவுலுடி என்ற அதிகாரி காவல்துறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று மத்திய நைரோபியில் உள்ள தேசிய காவல் சேவை ஆணைய அலுவலகத்தின் முன்புறமுள்ள பூந்தோட்டத்தில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் தாளில் சுற்றப்பட்டிருந்த பெட்டி ஒன்று கிடந்தது.
காவல்துறையினர் அதனைக் கைப்பற்றி பிரித்துப் பார்த்தபோது, அதனுள் ரத்தக்கறையுடன் ஒரு மனிதத் தலையும், இரண்டு கைகளும் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அத்துடன் அதில் ஒரு துண்டு பிரசுரமும் இருந்தது. அதில், ‘அடுத்த குறி கவுலுடிதான்’ என்ற எச்சரிக்கை வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த கொலை மிரட்டலைத் தொடர்ந்து, அனைத்துக் காவலர்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நைரோபிக்கு வெளிப்புறத்தில் இருக்கும் பண்ணை ஒன்றில், தலையில்லா உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது. அதனுடைய தலையைக் கொலையாளிகள் பெட்டியில் அனுப்பியிருக்கலாம் என்று நைரோபியின் காவல்துறைத் தலைவர் பென்சன் கிபுல் கருத்து தெரிவித்தார்

 

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நாணயத்தின் வீழ்ச்சி: பிரதமர் இன்று விளக்கம்

பாய் மதிப்பு சரிவடைந்து வருவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று விளக்கம் அளிக்கவுள்ளார்.

மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை காலையில் எழுப்பியபோது,
அவையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங், "சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சில சர்வதேச விளைவுகளால் அசாதாரண நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதிலிருந்து மீள நமக்கு சில காலம் ஆகும். இந்த விவகாரம் குறித்து நாளை விளக்கம் அளிக்க விரும்புகிறேன்' என்றார்

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

விபசாரம் நடத்தி வந்தவர் பிளாக் என்ற பெயரில் கைது


பிளாக் நடத்துவதாக கூறி அதன் மூலம் விபசாரம் செய்து வந்த சீன அமெரிக்கர் உட்பட 27 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஸூ சார்லஸ் பி சுவான்(வயது 60).
இணையத்தில் பிரபலமான ஸூ சார்லசுக்கு, 1.2 கோடி பாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை பெய்ஜிங் மாவட்டம் சாயோங் என்ற இடத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
குரூப் செக்ஸ் விருந்துகளுக்கு இவர் ஏற்பாடு செய்து விபச்சாரத் தொழிலை நடத்தி வந்ததாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவருடன் சேர்த்து 18 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

முதன் முறையாக விண்வெளியிலிருந்து நிலாவுக்கு விண்கலம்


விண்வெளியிலிருந்து முதன் முறையாக நிலாவுக்கு செயற்கைகோள்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
பூமியின் துணைக்கோளான நிலாவின் வளிமண்டலம் பற்றி இன்னும் முழுமையாக தெரியவரவில்லை.
இதனை அறிந்து கொள்ளும் பொருட்டு அடுத்த மாதம் செயற்கைகோளினை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
அதாவது, நிலாவினுடைய மெல்லிய வளிமண்டலத்தின் அமைப்பு மற்றும் வடிவம் பற்றி சிறந்த புகைப்படங்களை எடுக்க கார் அளவிலான ஒரு ஆய்வுக்கருவியை(ரோபோ) உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 6ம் திகதி அமெரிக்க விமானப்படை ராக்கெட் மூலம் அனுப்பப்பட உள்ள இந்த செயற்கைகோளானது பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு அப்பால் உள்ள நாசாவின் விர்ஜினியா விண்வெளி கடற்கரை ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு நிலாவை சென்றடையும்.
விண்ணிலிருந்து ஒரு விண்கலம் அனுப்பப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விண்கலத்தில் அனுப்பிவைக்கப்படும் ஆய்வுக்கருவியானது நிலாவை சுற்றி வளிமண்டலம் மற்றும் தூசு மண்டலம் பற்றிய விவரமான செய்திகளை அனுப்பும்.
மேலும் அதிநவீன லேசர் கருவிகளுடன் செயல்படும் இந்த ஆய்வுக்கருவியானது பூமியில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்திற்கு அறிய புகைப்படங்களை அனுப்பி வைக்கும்.
இதன் மூலம் சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கோள்கள், விண்பாறைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

அம்பலமாக்கியவர் “நான் ஒரு பெண்” அமெரிக்க ரகசியங்களை !!!


அமெரிக்காவின் ராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் பிராட்லி மேனிங்(வயது 25).
இவர் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள் அடங்கிய 7 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகள் மற்றும் போர்க்கள வீடியோ காட்சிகள் உள்ளிட்டவற்றை விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதைத் தொடர்ந்து கடந்த 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட இவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அமெரிக்க ராணுவ கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் அமெரிக்காவின் ‘என்.பி.சி.’ தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பிராட்லி மேனிங் கருத்து வெளியிட்டார். அவர் தெரிவித்ததாவது,
என்னைப்பற்றிய ஒரு உண்மையை தற்போது உங்கள் அனைவருக்கும் கூற விரும்புகிறேன். எனது உண்மையான பெயர் செல்சியா மேனிங். நான் ஒரு பெண். நான் அடிப்படையில் பெண்மைத்தன்மை உடையவன். அதை எனது குழந்தை பருவத்திலேயே உணர்ந்து கொண்டேன்.
இனி உள்ள எனது வாழ்க்கையை ஒரு பெண்ணாக வாழ விரும்புகிறேன். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் பெண்ணாக மாறுவதற்கான ஹார்மோன் தெரபி செய்து கொள்ள விரும்புகிறேன். இன்றிலிருந்து நீங்கள் என்னை ஒரு பெண்ணாக நினைத்து நடத்த கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவரது வக்கீல் டேவிட் கூம்ப், மேனிங்குக்கு அதிபர் ஒபாமா மன்னிப்பு அளிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ராணுவ வீரருக்கு 35 ஆண்டு


அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட ரகசிய தகவல்களை விக்கி லீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியமாக வழங்கியதாக பிராட்லி மேனிங் என்ற 25 வயதான அமெரிக்க ராணுவ வீரர் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் புலனாய்வு பிரிவில் பணியாற்றிய போது அவர் கைது ஆனார்.
பிராட்லி மேனிங் மீதான வழக்கை விசாரித்த அமெரிக்க ராணுவ கோர்ட்டு, உளவுப்பிரிவு சட்டத்தின்படி அவர் குற்றவாளி என்று கடந்த மாதம் தீர்ப்பு கூறியது. அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. பிராட்லி மேனிங்குக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டு நீதிபதி டெனிஸ் லிண்ட் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணையின் போது, பிராட்லி மேனிங்குக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்

புதன், 21 ஆகஸ்ட், 2013

உணவகத்தில்ஜேர்மனியில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி


ஜேர்மனியின் தென்மேற்குப் பகுதியில் உள்ள டோசன்ஹெய்ம் என்ற சிறிய நகரம் ஒன்றின் உணவகத்தில் நேற்று சொத்து உரிமையாளர்களின் கூட்டம் நடைபெற்றது.
அதில் நடுவில் ஏற்பட்ட விவாதத்தைத் தொடர்ந்து, கூட்டத்திற்கு வந்த உரிமையாளர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.
துப்பாக்கியுடன் திரும்பிவந்த அந்த நபர், கூட்டத்தில் இருந்த இரண்டு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு இறுதியில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து போனார்.
இந்த சம்பவத்தில் அருகிலிருந்த ஐந்து பேரும் காயமடைந்தனர். அதில் சிலருக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது, அந்த உணவகத்தில் 20 பேர் இருந்துள்ளனர். காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் ஏதும் சரிவர தெரியவில்லை என காவல்துறையின் தகவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் அதிர்ச்சியுற்றுள்ளனர் என்று ஹெய்டல்பெர்கில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

எகிப்திய இராணுவம் எச்சரிக்கை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு


எகிப்தில் ஆட்சி செய்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த மொஹமட் முர்ஸியை ஜெனரல் சிசி கடந்த ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்தார்.
சிறை வைக்கப்பட்டுள்ள முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்தக்கோரி போராட்டத்தில் குதித்துள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது.
சில நாட்களாக நடந்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்களை அச்சுறுத்துவதை முஸ்லிம் சகோதர்துதுவ அமைப்பு நிறுத்திகொள்ள வேண்டும் என்று அந்நாட்டுடு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி பேட்டியில் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் அப்டெல்-படா-எல்- சிசி தெரிவித்ததாவது,
நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் அழிவை பார்த்துக்கொண்டு இனி நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். சொத்துக்களை கொளுத்தி மக்களை அச்சுறுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளும் உள்நோக்கம் இராணுவத்திற்கு இல்லை. ஆனால், எகிப்தை ஆளுவதை காட்டிலும் மக்களின் உரிமையை பாதுகாப்பதையே குறிக்கோளாய் பெறுகிறோம்.
பிரச்சினையை அமைதியாக முடித்துக்கொள்வதற்கு நிறைய வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். நாட்டை அழித்து மோதலில் ஈடுபடுவதை கைவிட்டு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.
மோர்சி ஆதரவாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதை விட்டு இஸ்லாமியவாதிகள் அரசியலில் ஈடுபட வேண்டும் என ஜெனரல் சிசி குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் நடந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சியின் போது இந்த முஸ்லிம் சகோதர்துவ இயக்கமானது தடைசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

ரசாயன ஆயுத பயன்பாடு: ஐ.நா. ஆய்வாளர்கள் நேரில்


சிரிய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சியின் போது ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி நேரில் ஆய்வு செய்வதற்காக ஐநா ஆய்வாளர்கள் குழு டமாஸ்கஸ் விரைந்தது.
20 பேர் கொண்ட ஆய்வு குழுவினர் மற்றும் உதவியாளர்கள் டமாஸ்கஸ் சென்றுள்ளனர்.
அங்குள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அவர்கள் செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட நிபுணர்களை சந்திக்க மறுத்து விட்டனர்.
முன்னதாக சிரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்டாட் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஐநா ஆய்வு குழுவுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.
சிரியாவில் உள்ள கனல்-அசல் நகரின் புறநகர்ப் பகுதியான அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கடந்த மார்ச் 19 ஆம் தேதி ரசாயன ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக அதிபர் பஷார் ஆசாத் குற்றம் சாட்டி இருந்தார்.
அந்த இடம் மற்றும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள வேறு 2 இடங்களிலும் ஐநா குழுவினர் ஆய்வு நடத்துவார்கள்

பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு மரண தண்டனையை நிறுத்துமாறு


மரண தண்டனையை நிறைவேற்றுவதை உடனடியாக நிறுத்துமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியுடன் கலந்துரையாடும் வரை மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
லக்கர் ஐ ஜாங்கி ஆயுதக் குழுவின் இரண்டு உயர்மட்ட உறுப்பினர்கள் அடுத்த வாரம் தூக்கிடப்படவுள்ளமை குறித்து கலந்துரையாட வேண்டுமென ஆசிப் அலி சர்தாரி, பிரதமருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
மனித உரிமைக் குழுக்கள் இந்த மரண தண்டனை நிறைவேற்றத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி வருகின்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மரண தண்டனை மீதான தடையை மீளப் புதுப்பிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச ஜுரர்கள் குழு ஆகியன பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

சனி, 17 ஆகஸ்ட், 2013

பிரித்தானியா இலங்கைக்கு மனிதாபிமான உதவி


இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை பிரித்தானியா வழங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2011ம் ஆண்டு முதல் பிரித்தானியாவால், இலங்கைக்கு 20 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் உதவியளிக்கப்பட்டுள்ளது.
உலக மனிதாபிமான தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இயற்கை மற்றும் மனிதனினால் ஏற்படுத்தப்படும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்துள்ள நிலையிலும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுதல், இடம்பெயர் மக்கள் மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

புவி வெப்பமயமாவதால் அப்பிள் பழத்தின் இனிப்பும் சுவையும் அதிகரிப்பு!


 
உலகம் வெப்பமயமாவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பருவநிலையும் மாறும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் சில தாவரங்களில் பழத்தில் மாற்றங்கள் நிகழ்வதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பிள் பழத்தை சாப்பிடும் போது ஏற்படும் மொறு மொறு தன்மை மாறி வருவது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அப்பிள் பழத்தில் மிக அதிகமான இனிப்பு சுவை மாற்றத்தையும் காணமுடிகிறது. ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் கடந்த 1970 முதல் 2010ம் ஆண்டு வரை ஆப்பிள் பழங்களின் மீது இது குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
அப்பிள் மரங்களில் பூக்கள் பூத்து மலரும் போதும், அவை காயாகும் போதும் வெப்பம் அதிக அளவு தாக்குவதால் இது போன்ற மாற்றங்கள் நிகழ்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர். முந்தைய ஆய்வுகளில் உலகம் வெப்ப மயமாவதால் அப்பிள் மரங்களில் பூக்கள் பூத்து காயாகி பழமாக மாறி அறுவை செய்யும் காலம் மாறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சனி, 3 ஆகஸ்ட், 2013

திருமணம் செய்வதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்குமா?


 11 வயது சிறுமி கேள்வி ஏமனை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்கள் பணத்துக்காக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஏமனில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சிறுமிகளுக்கு, திருமணம் செய்து வைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் 11 வயது மதிக்கத்தக்க நடா அல் ஆடல் என்ற சிறுமி, பணத்துக்காக பெற்றோர்கள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து யூடியூப்பில், என்னை திருமணம் செய்து கொள்வதால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த வயதில் திருமணம் செய்து கொள்வதை விட, இறப்பதே மேல் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் உடலளவில் பாதிக்கப்படுவர் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பெண் உரிமைளுக்கான பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நடா, தற்பொழுது தனது பெற்றோரை விட்டு வந்து அவளுடைய மாமாவின் வீட்டில் வசித்து வருகின்றாள்
{காணொளி, }

வீழ்த்துவோம்இஸ்ரேலை வேரோடு: ஈரான் எச்சரிக்கை


 
இஸ்ரேலை வேரோடு வீழ்த்தும் பெரும்புயல் உருவாகிக் கொண்டுள்ளது என ஈரான் ஜனாதிபதி அஹமதி நிஜாத் எச்சரித்துள்ளார்.
ஈரான் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த ஜுன் மாதம் 14-ம் தேதி நடைபெற்றது.
இதில் ஹசன் ரவுகானி அமோக வெற்றி பெற்றார். வரும் ஞாயிற்றுக்கிழமை ஈரானின் புதிய ஜனாதிபதியாக அவர் பதவி ஏற்கிறார்.
இந்நிலையில், தலைநகர் டெஹ்ரானில் தனது ஆதரவாளர்கள் இடையே தனது ஜனாதிபதி அஹமதி நிஜாத் உரையாற்றினார். அவர் மேலும் தெரிவி்க்கையில்,
ஜியானிய அடிப்படை கொள்கைகளை வேரறுக்கக் கூடிய பெரும்புயல் வந்துக் கொண்டிருக்கிறது என ஆண்டவனை சாட்சியாக வைத்து உங்களுக்கு அறிவிக்கிறேன்.
இஸ்ரேலுக்கு இந்த பிராந்தியத்தில் இடமே இல்லை.
மத்திய கிழக்கு நாடுகளை பயமுறுத்தி பணிய வைக்க இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
சிரியா மற்றும் எகிப்தில் அரங்கேறி வரும் சம்பவங்களை பார்த்து அந்நாடுகள் மகிழ்ச்சி அடைகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்