நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

எகிப்திய இராணுவம் எச்சரிக்கை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கு


எகிப்தில் ஆட்சி செய்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த மொஹமட் முர்ஸியை ஜெனரல் சிசி கடந்த ஜூலை மாதம் பதவி நீக்கம் செய்தார்.
சிறை வைக்கப்பட்டுள்ள முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்தக்கோரி போராட்டத்தில் குதித்துள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் இராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ளது.
சில நாட்களாக நடந்து வரும் இந்த கலவரத்தில் இதுவரை 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மக்களை அச்சுறுத்துவதை முஸ்லிம் சகோதர்துதுவ அமைப்பு நிறுத்திகொள்ள வேண்டும் என்று அந்நாட்டுடு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தொலைக்காட்சி பேட்டியில் பாதுகாப்பு மந்திரி ஜெனரல் அப்டெல்-படா-எல்- சிசி தெரிவித்ததாவது,
நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் அழிவை பார்த்துக்கொண்டு இனி நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம். சொத்துக்களை கொளுத்தி மக்களை அச்சுறுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிகாரத்தை கையில் எடுத்துக்கொள்ளும் உள்நோக்கம் இராணுவத்திற்கு இல்லை. ஆனால், எகிப்தை ஆளுவதை காட்டிலும் மக்களின் உரிமையை பாதுகாப்பதையே குறிக்கோளாய் பெறுகிறோம்.
பிரச்சினையை அமைதியாக முடித்துக்கொள்வதற்கு நிறைய வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்கியுள்ளோம். நாட்டை அழித்து மோதலில் ஈடுபடுவதை கைவிட்டு முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினர் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.
மோர்சி ஆதரவாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவதை விட்டு இஸ்லாமியவாதிகள் அரசியலில் ஈடுபட வேண்டும் என ஜெனரல் சிசி குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் நடந்த ஹோஸ்னி முபாரக் ஆட்சியின் போது இந்த முஸ்லிம் சகோதர்துவ இயக்கமானது தடைசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக