நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 29 அக்டோபர், 2020

நிலநடுக்கம் துருக்கி, கிரீஸ் நாடுகளில் 7 ரிக்டர் அளவில் 14 பேர்உயிரிழப்பு

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில்,30-10-20. இன்று மதியம் இடம்பெற்ற நில அதிர்வில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 419 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் பல கட்டங்கள் இடிந்துள்ளன. மீட்பு பணி நடைபெற்று 
வருகின்றது.
இந்த நிலநடுக்கம் துருக்கி கடற்கரையில் சமோஸ் தீவின் வடக்குப் பகுதியில் நியான் கார்லோவேசனுக்கு வடகிழக்கில் 8.5 மைல் தொலைவில் ஏஜியன் கடல் மத்தியில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் 
கூறுகின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




வியாழன், 22 அக்டோபர், 2020

பிரீசரில் ஒரு வருடத்திற்கு வைத்த நூடுல்ஸ்சை சாப்பிட்ட 9 பேருக்கு நேர்ந்த சோகம்

சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் மாகாணம் ஜிக்சி நகரில் ஒரு வீட்டில் புளித்த சோள மாவு கலந்த வீட்டில் தயாரித்த நூடுல்ஸ் உணவானது கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 
பிரீசரில் பாதுகாக்கப்பட்டு வந்து உள்ளது. அந்த உணவை குடும்பத்தினர் அக்டோபர் 10 ஆம் திகதி அன்று சமைத்து 
சாப்பிட்டு உள்ளனர். இதில் 8 பேர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.இன்னொருவர் மருத்த்துவ சிகிச்சையில் குணமடைவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த 
நிலையில்,19-10- 20. திங்களன்று மரணமடைந்துள்ளார்.சூடோமோனாஸ் கோகோவெனான்கள் என்ற பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் சுவாச 
நச்சுத்தொகையான போங்க்ரெக்கிக் அமிலத்தின் அதிக செறிவு சோள நூடுல்ஸிலும், நோய்வாய்ப்பட்டவர்களின்
 இரைப்பை 
திரவத்திலும் கண்டறியப்பட்டதாக மாகாண சுகாதார ஆணையம் அக்டோபர் 12 அன்று தெரிவித்துள்ளது.போங்க்ரெக்கிக் அமிலத்தால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட 
வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும்.ஆனால், சம்பவத்தன்று, அந்த நூடுல்ஸ் உணவை சாப்பிட மறுத்த மூன்று குழந்தைகள், அதிர்ஷ்டவசமாக
 உயிர் தப்பியுள்ளது.பொதுவாக சோள மாவில் தயாரிக்கப்படும் நூடுல்ஸ் உணவானது, குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு ஒருவகை ரசாயனத்தால் கெட்டுப்போகும் எனவும், அது சீனாவில் அடிக்கடி நடப்பது தான் எனவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கெட்டுப்போன சோள மாவு நூடுல்ஸ் சாப்பிட்டதும் வயிற்று வலியில் தொடங்கி 24 மணி நேரத்தில் மரணம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்தோனேசியாவில் இதுபோன்ற 
உடல் உபாதைகளால் 1951 முதல் 1975 வரை ஆண்டுக்கு
 288 பேர் பாதிப்புக்கு உள்ளானதாகவும், அதில் 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 
கூறப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>



பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஒருவர் மரணம்

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட ஒருவர் உயிழந்துள்ளதாக 
பிரேசிலின் சுகாதார ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,தொடர்ந்து தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெறும் என 
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது.உயிரிழந்த அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை பரிசோதனை செய்யப்பட்ட நபர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் என்று சாவோபோலோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த அந்த நபர் வயது 28 என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆபிரிக்கா போன்ற 
நாடுகளில் நடைபெற்று
 வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.அஸ்ட்ராசெனிகா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் சோதனைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் ரகசியத்தன்மையை சுட்டிக்காட்டி பிரேசிலிய சுகாதார ஆணையாளர் மேலும் விவரங்களை
 வழங்கவில்லை, ஆனால் இது தொடர்பான 
விசாரணையில் இருந்து 
தரவைப் பெற்றதாகக் கூறினார்.இதற்கிடையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிரேசிலில் ஒரு கொரோனா
 வைரஸ் தடுப்பூசி சோதனை செய்யப்பட்ட நபரின் மரணம் குறித்த மதிப்பீட்டைத் தொடர்ந்து, மருத்துவ பரிசோதனை குறித்து எந்த கவலையும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது
.பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் 5,300,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு,155,459 பேர் உயிரிழந்துள்ளார்கள்.அதன்படி, பிரேசில் கொரோனா வைரஸ் உயிரிழப்பில் மெரிக்காவிற்கு 
அடுத்தபடியாக உலகில் இரண்டாவது இடத்திலுள்ளது. அதேவேளை, கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா 
மற்றும் இந்தியாவுக்கு அடுத்தபடியாக உலகின்ல் மூன்றாவது இடத்திலுள்ளது.இங்கிலாந்தில் ஒரு 
நோயாளி கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் பரிசோதனைகளை அமெரிக்கா
 நிறுத்தியுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் தடுப்பூசி குறித்த மறுஆய்வு நிலுவையில் உள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

 நிலாவரை.கொம் செய்திகள் >>>





செவ்வாய், 20 அக்டோபர், 2020

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பில் நடைபெறவிருக்கும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து 
கொள்ளவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 28ம் திகதி 
கொழும்பில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தையிலேயே அவர் 
கலந்துகொள்ளவுள்ளார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 19 அக்டோபர், 2020

நிலச்சரிவில் சிக்கி வியட்நாமில் 22 இராணுவ வீரர்கள் மாயம்

வியட்நாமில் நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


குவாங் திரியில் இராணுவ முகாம் அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இராணுவ வீரர்கள் 22 பேர் மாயமாகியுள்ளனர்.


இந் நிலையில் அண்டை மாகாணமான துவா தியென் ஹியூ மாகாணத்தில் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலச்சரிவில் இராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.¨

நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 18 அக்டோபர், 2020

பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி

நியூஸிலாந்து பொதுத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
77 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆர்டெர்னின் இடது சாரி தொழிற்கட்சி 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
தொழிற்கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான
 மத்திய-வலது தேசியக் கட்சி 27 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.இதன்போது, தேசியத் தலைவர் ஜூடித் காலின்ஸ், தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, ஆர்டெர்னை வாழ்த்தினார்.முடிவுகள் இன்னும் கணக்கிடப்படுகின்றன. சிறப்பு வாக்குகள், வெளிநாடுகளில் வசிக்கும் நியூசிலாந்தர்கள் அளித்த வாக்குகள் உட்பட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு மூன்று வாரங்களில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத
 வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.வெற்றி குறித்து
 ஜெசிந்தா கூறும்போது, “அடுத்த மூன்று
 ஆண்டுகளில் நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம்” என்றார்.இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல்வேறு
 தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து
 பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் சிறப்பாகச் செயால்பட்டதன் காரணமாக சர்வதேச நாடுகளால் பாராட்டப்பட்டார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக ஜெசிந்தா மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக
 ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.தொழிற்கட்சி 
கடந்த தேர்தலில் 37 சதவீதம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் அதன் தற்போதைய 
கூட்டணி பங்காளியான பசுமைக் கட்சி 7.6 சதவீதத்தினை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 6.3 சதவீதத்தை பெற்றது.தொழிற்கட்சி தனியாக ஆட்சி செய்ய முடியுமா அல்லது பசுமைவாதிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்த இறுதி முடிவுகள் வரும் வரை இது
 தெளிவாக இருக்காது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 14 அக்டோபர், 2020

நீங்கள் பழைய ஆடைகளை எவ்வாறு அப்புறப்படுத்த வேண்டும்?

ஆடைகளை எந்த மறுசுழற்சி தொட்டியில் இடுகிறீர்கள் எங்கள் இல்லத்தில், பழைய துணிகளை அவை கிழியும் வரை நாங்கள் அப்புறப்படுத்திடுவதில்லை. அவை கிழிந்தால், அவை அரதக் கந்தல் ஆகும் வரை, அவற்றை வீட்டைத் தூய்மை செய்யப் பயன் படுத்துகிறோம். அரத்தக் கந்தல் ஆனதும் அவற்றை எரித்துவிடுகிறோம். தேவையின்றித் துணிகளை 
வாங்குவதே இல்லை.
தொடர்புடைய கேள்விகள்
சரியான மற்றும் நேர்த்தியான முறையில் உடை அணிவது எப்படி என ஆண்களுக்கு சொல்ல முடியுமா?
ஆடையை நேர்த்தியாக மடிப்பது எப்படி?
பெண்களின் ஆடை‌ உடல் பாகங்களை வெளிக்காட்டும் விதமாக வடிவமைக்கப்படுகிறதே, ஏன்?
ஆடை வடிவமைப்பு பற்றிய புத்தகங்களை பெறுவது எப்படி?
வெள்ளை மற்றும் பிரகாசமாக தோற்றமளிக்க உட்புற ஆடைகளை எப்படி கழுவ வேண்டும்? ஏதாவது சிறப்பு சோப்பு தூள் அல்லது சோப்பு கிடைக்குமா? (பனியன் வெள்ளை நிறமாக தோற்றமளிக்க)
அழகைக் கூட்டும் ஆடைகளைத் தேர்வு செய்வது எப்படி?
பைகள் கொண்ட ஆடைகள் அதிகமாக 
இருப்பதில்லை ஏன்?
பருத்தி (cotton) துணிகளால் செய்யப்பட்ட ஆடைகள் எப்படி 100 ரூபாய்கும் கிடைகின்றது 10,000 ரூபாய்கும் கிடைக்கின்றது? பருத்தியில் 
பல வகைகள் உள்ளதா?
நீங்கள் அணிந்துக் கொண்டிருக்கும் ஆடையைப் பற்றிய எதை விரும்புகிறீர்கள்?
அணிவதற்குக் குறைவாக கவனத்தைக் கவர்கிற நிற ஆடை எது?
உங்களுக்குப் பிடித்த ஆடை முறை எது?
ஆண்கள் அவர்களின் பழைய ஆடைகளை என்ன செய்கிறார்கள்?
மாநிறமாக உள்ள பெண்களுக்கு எந்த நிற 
ஆடைகள் எடுப்பாக இருக்கும்?
பெண்களுக்கு எந்த ஆடைகள் மிகவும் அசௌகரியமாக இருக்கின்றன?
ஆண்கள் எந்த உடை அணிந்தால் பெண்களுக்கு பிடிக்கும்? பெண்கள் எந்த உடை அணிந்தால் ஆண்களுக்கு பிடிக்கும்?

நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 10 அக்டோபர், 2020

நியூசிலாந்து அரசு அறிவிப்பு கொரோனாவின் 2 வது அலையையும் தோற்கடித்துவிட்டோம்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதில், வெற்றி பெற்ற நாடுகளில் முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது.
அந்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்ட உடனே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு,
 கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதால், ஊரடங்கு தளர்பட்டது.ஆனால், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்நாட்டின் தலைநகர் ஆக்லாந்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே ஆக்லாந்தில் பகுதியில் மீண்டும் ஊரடங்கு
 பிறப்பிக்கப்பட்டது.
கொரோனாவின் இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான அரசு தீவிரமாக களத்தில் இறங்கி பணி செய்தது.அதன் காரணமாக தற்போது கடந்த 12 நாட்களில் ஆக்லாந்து நகரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 50 லட்சம் பேர் கொண்ட நியூசிலாந்தில் இதுவரை 1,855 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது.கொரோனாவிலிருந்து 1790 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 40 பேர் சிகிச்சை பெற்று
 வருகின்றனர். கொரோனாவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.12 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பரவாததையடுத்து, அங்கு விதிக்கப்பட்டிருந்த 
ஊரடங்கு தளர்த்தப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய 
பிரதமர் ஜெசிந்தா, இந்த ஆண்டு மிக நீண்ட ஆண்டாகவே உள்ளது போன்ற உணர்வு உள்ளது. எது எப்படியோ, 
நியூசிலாந்து மக்கள் சரியாக சமூக இடைவெளியினை பின்பற்றி உள்ளதால், இரண்டவாது முறையும் கொரோனா வைரசை மீண்டும் தோற்கடித்துள்ளோம் என பெருமையுடன் கூறினார் பிரதமர் ஜெசிந்தா.ஆர்டெர்ன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 7 அக்டோபர், 2020

ஒரே நாளில் பிரித்தானியாவில் 14,500 பேருக்கு கொரோனா தொற்று

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணாக இதுவரை சுமார் 42,500 பேர் வரையில் இறந்துள்ளார்கள். 530000 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 42,542 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்துள்ளது.
பிரித்தானிய அரசாங்கமும் இறுக்கமான கட்டுப்பாடுகள், விதிமுறைகளை நடைமுறைப்படுத்தினாலும், எப்படி கொரோனாவை பரப்புகின்றார்கள் என்று பார்க்கின்றீர்களாபெரும்பாலான மக்கள் அந்த
 விதிமுறைகளை மீறும் செயல்களில் ஈடுபடுவதை பரவலாகக் காணக்கூடியதாகவே இருக்கின்றது.
குறிப்பாக Nottingham என்ற இடத்தில் நேற்று இரவு 10 மணியளவில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை ஒரு ஊடகம் 
வெளியிட்டுள்ளது.
இளைஞர்கள், யுவதிகள் முகக்கவசங்கள் இல்லாமல், சமூக இடைவெளியைப் பேனாமல், குடித்து. கும்மாளமிட்டு, ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும் வீதிகளில் வலம் வருகின்ற காட்சிகளை அவர்கள் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்கள்.
இரவு 10 மணிக்கு பின்னர் மதுபான 
சாலைகள், உணவு விடுதிகள் மூடப்பட்டதாக இறிவிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் இவ்வாறு நடந்துகொள்வதும், காவல்துறையினரின் கண்முன்பாகவே அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
Nottingham என்ற இந்தப் பிரதேசத்தில் கடந்த 7 நாட்களில் சுமார் 400 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>