நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 10 அக்டோபர், 2020

நியூசிலாந்து அரசு அறிவிப்பு கொரோனாவின் 2 வது அலையையும் தோற்கடித்துவிட்டோம்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதில், வெற்றி பெற்ற நாடுகளில் முதல் இடத்தில் நியூசிலாந்து உள்ளது.
அந்நாட்டில் பிப்ரவரி மாதத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்ட உடனே நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு,
 கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதால், ஊரடங்கு தளர்பட்டது.ஆனால், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்நாட்டின் தலைநகர் ஆக்லாந்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே ஆக்லாந்தில் பகுதியில் மீண்டும் ஊரடங்கு
 பிறப்பிக்கப்பட்டது.
கொரோனாவின் இரண்டாவது அலையினை கட்டுப்படுத்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான அரசு தீவிரமாக களத்தில் இறங்கி பணி செய்தது.அதன் காரணமாக தற்போது கடந்த 12 நாட்களில் ஆக்லாந்து நகரில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. 50 லட்சம் பேர் கொண்ட நியூசிலாந்தில் இதுவரை 1,855 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது.கொரோனாவிலிருந்து 1790 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக 40 பேர் சிகிச்சை பெற்று
 வருகின்றனர். கொரோனாவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.12 நாட்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பரவாததையடுத்து, அங்கு விதிக்கப்பட்டிருந்த 
ஊரடங்கு தளர்த்தப்படுவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய 
பிரதமர் ஜெசிந்தா, இந்த ஆண்டு மிக நீண்ட ஆண்டாகவே உள்ளது போன்ற உணர்வு உள்ளது. எது எப்படியோ, 
நியூசிலாந்து மக்கள் சரியாக சமூக இடைவெளியினை பின்பற்றி உள்ளதால், இரண்டவாது முறையும் கொரோனா வைரசை மீண்டும் தோற்கடித்துள்ளோம் என பெருமையுடன் கூறினார் பிரதமர் ஜெசிந்தா.ஆர்டெர்ன் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக