நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் நியூஸிலாந்து பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி

நியூஸிலாந்து பொதுத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
77 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆர்டெர்னின் இடது சாரி தொழிற்கட்சி 49 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
தொழிற்கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான
 மத்திய-வலது தேசியக் கட்சி 27 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.இதன்போது, தேசியத் தலைவர் ஜூடித் காலின்ஸ், தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, ஆர்டெர்னை வாழ்த்தினார்.முடிவுகள் இன்னும் கணக்கிடப்படுகின்றன. சிறப்பு வாக்குகள், வெளிநாடுகளில் வசிக்கும் நியூசிலாந்தர்கள் அளித்த வாக்குகள் உட்பட அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு மூன்று வாரங்களில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான ஜெசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 சதவீத
 வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஆளும் கட்சி கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டென் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.வெற்றி குறித்து
 ஜெசிந்தா கூறும்போது, “அடுத்த மூன்று
 ஆண்டுகளில் நிறைய பணிகள் உள்ளன. கொரோனா நெருக்கடியிலிருந்து நாட்டைச் சிறப்பாகக் கட்டமைப்போம்” என்றார்.இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற ஜெசிந்தாவுக்குப் பல்வேறு
 தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து
 பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் சிறப்பாகச் செயால்பட்டதன் காரணமாக சர்வதேச நாடுகளால் பாராட்டப்பட்டார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக ஜெசிந்தா மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக
 ஜெசிந்தா ஆர்டென் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.தொழிற்கட்சி 
கடந்த தேர்தலில் 37 சதவீதம் பெற்றிருந்தது. அதே நேரத்தில் அதன் தற்போதைய 
கூட்டணி பங்காளியான பசுமைக் கட்சி 7.6 சதவீதத்தினை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 6.3 சதவீதத்தை பெற்றது.தொழிற்கட்சி தனியாக ஆட்சி செய்ய முடியுமா அல்லது பசுமைவாதிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமா என்பது குறித்த இறுதி முடிவுகள் வரும் வரை இது
 தெளிவாக இருக்காது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக