நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 30 நவம்பர், 2021

மியாமில் விமானத்தை இறக்க உதவும் சக்கரத்தில் பதுங்கியிருந்த மர்ம நபர்

விமானத்தின் தரையிறங்கும் கியரில் மர்ம நபர் ஒருவர் பதுங்கிருந்ததும், அவர் அந்த கியரில் வெளியாகும் அதிகப்படியான வெப்பத்தை எவ்வாறு தாங்கினார் என்பது பெரும் அதிர்ச்சியை 
ஏற்படுத்தியுள்ளது.
26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் விமானத்தின் தரையிறங்கும் கியரில் மறைந்திருந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் 27-11-2021.அன்று  Guatemala வில் இருந்து மியாமிக்கு சென்றது. காலை 10 மணிக்கு மியாமி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
அப்போது விமானத்தின் லேண்டிங் கியருக்குள் (விமானத்தை இறக்க உதவும் சக்கரம்) Guatemala-வைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க நபர் பதுங்கியிருப்பது அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டார்.
இவற்றையெல்லம் தாண்டி குறித்த நபர் எப்படி வந்தார் என்று அதிகாரிகளுக்கே வியப்பாக இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக வைத்தியர்களை அழைத்து அவரை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு காயங்கள் 
எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து அவர் உள்ளூர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் பிடிபட்ட நபர் யார்? அவர் எப்படி பதுங்கியிருந்தார் என்பது குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை 
வெளியாகவில்லை.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


 

புதன், 17 நவம்பர், 2021

தொடர்மழையால் கனடாவில் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்

னடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த அடைமழையால் நிலச்சரிவு ஏற்பட்டமையின் காரணமாகப் பலபகுதிகளில் வீதிகள் மூடப்பட்டுள்ளது.
அங்கு ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் ஒரு நகர மக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன் அப்பகுதியினூடாக செல்லும் எண்ணைக் குழாய்களும் மூடப்பட்டுள்ளன
வான்கூவருக்கு வடகிழக்கே உள்ள மெரிட் நகரத்திலேயே அங்கு வசிக்கும் 7100 பேரும் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 22 அக்டோபர், 2021

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன சிறுமியைக் கண்டுபிடித்து தருவோருக்கு ஒரு மில்லியன் டொலர்

அவுஸ்திரேலியாவில் காணாமற்போன 4 வயதுச் சிறுமியைக் கண்டுபிடிக்கத் தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வெகுமதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் பொழுதுபோக்கிற்காக முகாமில் தங்கும் இடத்திலிருந்து கிளியோ ஸ்மித் ( Cleo Smith) என்ற
 அந்தச் சிறுமி
சென்ற சனிக்கிழமை (16) கடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சிறுமி காணாமல்போன அன்று, கிளியோவின் ( Cleo Smith) தாயார், அன்று காலை 6 மணிக்கு எழுந்தபோது, அவர்கள் தங்கியிருந்த கூடாரம் திறந்திருந்தபோதுதான், கிளியோவைக் காணவில்லை என்பதை அவர்
 உணர்ந்தார்.
இந்நிலையில் சுறுமியை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.கிளியோ, கூடாரத்திலிருந்து கடத்தப்பட்டார் என்று நம்புவதாக தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், சிறுமியின் பாதுகாப்புக் குறித்து அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமியை உயிரோடு மீட்கமுடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 21 அக்டோபர், 2021

இலங்கைத் தமிழ் குடும்பம் பிரிட்டனால் கடத்தப்படும் நிலையில் நடந்தது என்ன

பிரித்தானியாவில் இருந்து தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றது. டாக்டர் நடராஜா முகுந்தன் – வயது 44 ஒரு விஞ்ஞானி ஆவார். இவருடைய மனைவி சர்மிளா. மூன்று பிள்ளைகள். முகுந்தன் புலமை பரிசிலுக்காக 2018 இல் வந்தார். இவரின் மனைவி மருத்துவ 
பராமரிப்பாளர்.
நோயாளியான அம்மாவை பார்க்க 2019 இல் இலங்கைக்கு வந்த முகுந்தன் கைது செய்யப்பட்டு குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார். ஆனால் இவர் ஒருவாறு தப்பி பிரிட்டனுக்கு திரும்பி சென்றார். இவருக்கான இரண்டு வருட கால புலமை பரிசில் 2020 முடிந்து விட்டது. அதன் பின் இவரோ மனைவியோ வேலை செய்ய அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
இவருடைய அரசியல் புகலிட கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சு அலுவலகம் கடந்த மாதம் 20 ஆம் திகதி மின்னஞ்சல் மூலம் அறிவித்தது. ஆனால் இவரின் கோரிக்கையை நிராகரித்து உள்ளதாக ஒக்டோபர் 11 ஆம் திகதி இன்னொரு மின்னஞ்சல் அனுப்பினர். அதில் வேடிக்கை என்னவென்றால் இவரின் கோரிக்கை ஓகஸ்ட் 23 ஆம் திகதி நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதில் உள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 10 அக்டோபர், 2021

கூகுள் விடுத்த எச்சரிக்கை செய்தி தொலைபேசியினை பயன்படுத்துவர்களுக்கு

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த ஆயிரக்கணக்கான செயலிகள், மக்களிடம் தனிப்பட்ட தரவுகளை திருடும் அபாயம் ஏற்பட்டதால் அனைத்தையும் கூகுள் அகற்றியுள்ளது.மேலும் இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், பயனர்களை சிக்க வைக்க முடியும் மற்றும் மோசடிக்கு ஆளாகலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டது.
இந்த செயலிகள் குறித்து கூகுள் (Google) மேற்கொண்ட விசாரணையில் ஆபத்து இருக்கிறது என தெரியவந்ததை அடுத்து, அந்த செயலிகளை கூகுள் தடை செய்துள்ளது.ஆன்ட்ராய்டு சாதனங்களில் (Android devices) ஆப்ஸைப் பதிவிறக்குவதற்கு கூகுள் ப்ளே ஸ்டோர் பாதுகாப்பான
 ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால் உங்கள் மொபைல் போன் மற்றும் கணினியை ஆபத்தில் சிக்க வைக்கும் சில செயலிகள் 
பட்டியலிடப்பட்டுள்ளன.
அவ்வப்போது பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை குறித்து கூகுள் விசாரிக்கும். அப்போது ஆபத்தான தீம்பொருள் சாப்ட்வேர் கொண்ட தீங்கிழைக்கும் செயலிகளை கண்டறிந்து அதனை பிளே ஸ்டோரிலிருந்து அகற்றிவிடுகிறது.
பயர்பேஸ் தரவுத்தளம்:பயனர்கள் பயன்படுத்தும் 19,300 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளில் (Android apps) பயர்பேஸ் தரவுத்தளம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது என அவாஸ்ட் கூறியது. 
பயர்பேஸ் என்பது பயனர் தரவை சேமிக்க ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகும். அதாவது பயர்பேஸ் (Firebase) என்பது கூகிள் மொபைல் மற்றும் வலை பயன்பாடுகளை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும்.
பெயர், முகவரி, இருப்பிடத் தரவு மற்றும் சில சமயங்களில் கடவுச்சொற்கள் போன்றவற்றை ஆப் மூலம் சேகரிக்கப்பட்டு இருந்தால், அதாவது தனிப்பட்ட அடையாளம் எனக்கூறக்கூடிய நமது தகவல்கள் (PII) திருடப்படலாம் என கூகுள் நிறுவனத்துக்கு அவாஸ்ட் தெரிவித்தது.
தரவு திருட்டு எப்படி நடக்கும்:நீங்கள் பயன்படுத்தும் 
செயலில் உங்கள் தரவு, பெயர்கள், பிறந்த தேதி, முகவரிகள், தொலைபேசி எண்கள், இருப்பிடத் தகவல் உட்பட பல்வேறு தகவல்கள் சேமிக்கப்படுகிறது.ஒருவேளை 
ஆப் டெவலப்பர் சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றால், உங்கள் கடவுச்சொற்கள் உட்பட அனைத்து தரவுகளும் 
 திருடப்படலாம்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 9 அக்டோபர், 2021

தென்னாப்பிரிக்காவுக்கு தமிழகத்திலிருந்து செல்ல முயன்ற இலங்கையர் கைது

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக,  தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி அதில் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம்.
இந்நிலையில் மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினராம். மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்காவுக்கு 
சொந்தமானதாக உள்ளது.
அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. எனினும் இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் இருந்து 64 அகதிகள் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு தப்ப முயன்றதாக வந்த தகவலையடுத்து க்யூ பிரிவு பொலிஸாா், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் , தற்போது வரை இந்த 64 போ் யாா் என்பதை உளவுத்துறை பொலிஸாரால் உறுதி செய்ய முடியவில்லை. அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படும் 64 நபா்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழக பொலிஸார் சா்வதேச பொலிஸாா் உதவியை நாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 22 செப்டம்பர், 2021

ஸ்பெயினில் காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு

 ஸ்பெயினை சேர்ந்த ஒரு நிறுவனம் காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் கருவியை தயாரித்துள்ளது.வெப்பக்காற்றை குளிரூட்டினால் உறைவு மூலம் உருவாகும் நீர் துளிகளை சேகரிக்கும், மின்சாரத்தில் இயங்கும், இந்த கருவியை, அக்வேயர் என்னும் நிறுவனம்
 தயாரித்துள்ளது.
இதற்கமைய பஞ்சம் அதிகம் இருக்கும் நமீபியா மற்றும் லெபனானில் அமைந்துள்ள அகதிகள் முகாம்களில் இந்த கருவிகள் தற்போது 
பயன்பாட்டில் உள்ளன.
1990-களில் ஸ்பெயினை வாட்டிய கடுமையான வறட்சி காலத்தில் இந்த கருவியை உருவாக்கியதாக 82 வயதுடைய பொறியாளர் என்ரிக் வெய்கா தெரிவித்துள்ளார்
மேலும் நாளொன்றுக்கு 50 முதல் 75 லிட்டர் குடிநீர் தயாரிக்கும் இந்த கருவிகள் நீர் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு பயனுள்ளதாக
 அமைந்ததுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 16 செப்டம்பர், 2021

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக யாழ் தமிழ் பெண் தேர்வு

யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து
 போட்டியிட்டார்.
அவர், 21 அக்டோபர் 2015 அன்று ஒஸ்லோவின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 14-09-2021-அன்று  நடந்த தேர்தலில் நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக கம்ஷாஜினி குணரட்னம் 
தெரிவாகியுள்ளார்.
கம்ஷாஜினி குணரத்தினத்திற்கு இந்த இணையத்தின் 
நல்வாழ்த்துக்கள் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>


ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

வட்ஸ்அப் நிறுவனம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு செயற்பாடுகள் நிறுத்தம்

எதிர்வரும் 01-11-2021. நவம்பர் மாதம் முதல் 43 வகையான தொலைபேசிகளில் WHATSAPP பயன்படுத்தினவர்களுக்கு அதிர்ச்சி தகவல்43 வகையான ஸ்மாட்போன்களுக்கு வட்ஸ்அப் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.உலகின் அதிகளவான 
ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வட்ஸ்அப் நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இருப்பினும், எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக நிறுவனம் 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

நோர்வே நாட்டில் யாழ் பல்கலைக்கழக மாணவியின் திறமைக்கு கிடைத்த வாய்ப்பு

யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த உதவி இரசாயன விரிவுரையாளர் நோர்வே நாட்டின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சிக்காக அங்கு சென்றுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி இராசாயன விரிவுரையாளராக கடைமையாற்றியவர் தான் சுகுமார் – ரவீனா பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் உயர் புள்ளிகளை பெற்று சாதனை
 புரிந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவி சுகுமார்-ரவீனா நோர்வே நாட்டில் உள்ள அக்டர் பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்று ஆராய்ச்சிக்காக நோர்வே நாட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் அக்டர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ள ரவீனா பொதுபட்டமளிப்புவிழாவில் மூன்று விஷேட தங்கபதக்கங்களைப் பெற்றுள்ளார் என்பதோடு இவரது ஆய்வுகட்டுரை கடந்த ஆண்டு இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றினால் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 4 செப்டம்பர், 2021

வெடித்து சிதறிய ஃபயர் ஃபிளை விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட்

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட் நடு வானில் வெடித்துச் சிதறியது என விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ருவிட்டரில் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள வன்டன்பெர்க் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து ‘ஆல்பா’ என்ற ரொக்கெட், விண்ணுக்கு ஏவப்பட்டு 2 நிமிடங்கள் 30 வினாடிகளில் வெடித்து சிதறியுள்ளது.DAMIKA 01 கலிபோர்னியா கடல் பகுதியில் பசுப்பிக் பெருங்கடலுக்கு மேலான வான்பரப்பில் இந்த ரொக்கெட் வெடித்து சிதறியதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விண்ணுக்கு ஏவப்பட்டு சிறிது நேரத்தில் ரொக்கெட் முதல் சுற்றுப்பாதையை அடைய முயன்றபோது அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது வெடித்துச் சிதறியுள்ளது எ னவும் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

ஓமானில் இருக்கும் இலங்கை பெண் பாரிய மனித கடத்தலில் ஈடுபட்டுவந்தார்

ஓமானில் உள்ள இலங்கை பெண் ஒருவர், பாரிய மனித கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர் என்று குற்றம் 
சுமத்தப்பட்டுள்ளார்.
இந்திய உத்தர பிரதேசத்தில் உள்ள காவல்துறையினர், பல நாடுகளில் பரவியிருக்கும் ஒரு, பாரிய மனித கடத்தல் தொடர்பை 
கண்டுபிடித்துள்ளனர்.
இதன்மூலம், ஓமன், கட்டார் போன்ற வளைகுடா நாடுகளில் நல்ல வேதனத்துடன் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி 24 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் என்று பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற பகுதிகளான பஞ்சாப், கோவா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து சென்றவர்கள்.
அதேநேரம் இலங்கை, நேபாளம், பங்காளதேஷ் , பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்தும் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

இத்தாலியில் வீடொன்று ஒரு யூரோவுக்கு விற்பனை (இலங்கை நாணயம் 232 ரூபா)

இத்தாலியில் வீடொன்று 232 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரிலேயே இவ்வாறு ஒரு யூரோவுக்கு (இலங்கை நாணய மதிப்பில் 232 ரூபா) வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன
1968 ஆம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். இதனால் மென்சோ நகரத்தில் மக்கள் தொகை கணிசமான 
அளவு குறைந்துள்ளது.
இதையடுத்து இந்த நகரில் மீண்டும் மக்கள் அதிகளவில் குடியேற வேண்டும் என்பதற்காக, இத்தாலி அரசாங்கத்தினால் அங்குள்ள வீடுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அந்நகரின் மேயர் கிளாடியோ ஸ்பெர்டி தெரிவிக்கையில், ”வீடுகளின் விற்பனைக்கான விண்ணப்பங்கள் 28 ஆம் திகதியுடன் முடிவடையும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
நகரில் இருக்கும் கைவிடப்பட்ட அல்லது எவரும் குடியேறாத பல வீடுகள் எதிர்காலத்தில் விற்பனை செய்யப்படும்
எனக் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>




செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கம் விலை சில தினங்களாக குறைந்துவந்த நிலையில் திடீரென மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதன்படி சர்வதேச சந்தையில் கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து தங்கம் விலையானது ஏற்றத்தினை கண்டு வருகின்றது
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை.18-08-2021. இன்று 1794.10 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது.
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை கடந்த வார இறுதியில் 1763.50 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி முடிவடைந்திருந்தது.
இதேவேளை 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று யாழ்ப்பாணத்தில் ரூபா.123,000 வரையில் விற்பனையாகி வருகின்றது.
அத்துடன் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூபா.112,000 வரையில் விற்பனையாகி உள்ளமை கூறத்தக்கது.
எவ்வாறாயினும் நீண்ட கால நோக்கில் தங்கம் விலையானது அதிகரிக்கலாம் என்ற நிலையிலேயே இருந்து வருகின்றது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



கபூல் விமானத்தில்இருந்து இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலிருந்து பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து இருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான டுவிட்டர் காட்சிகள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், அது கபூல் விமான நிலையத்திலிருந்து விமானமொன்று உயர எழும்போது, அதிலிருந்து இருவர் தவறுதலாக வீழ்வதை 
வெளிக்காட்டியுள்ளது
தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற, காபூலில் அமைந்துள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.விமான நிலையத்தின் வளாகத்தில் மக்கள் திரண்டதால், அமெரிக்கப் படைகள் வான் நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பெரும் ஆபத்தாம் இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி எரிமலை வெடித்ததால்


இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற எரிமலை அடுத்தடுத்து 7 தடவை வெடித்துள்ளதால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற ஆபத்தான எரிமலை ஜாவா தீவில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவில் 120 எரிமலைகள் 
இருக்கின்றன.
அதில் இது முக்கியமானதாகும். இந்த எரிமலையில் கடந்த சில நாட்களாக புகை கிளம்பி வந்தது. 08-08-2021.அன்று  திடீரென வெடித்து சிதறியது.
அடுத்தடுத்து 7 தடவை எரிமலை லாவா குழம்புகள் 
வெடித்து வெளியேறின.
இதனால் ஒரு கிலோ மீட்டர் உயரத்துக்கு புகை மூட்டமாக காட்சி அளித்தது. அருகில் உள்ள கிராமங்களுக்குள் சாம்பல்கள் புகுந்தன.
இதனால் எந்த நேரத்திலும் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
2010-ம் ஆண்டு இந்த எரிமலை வெடிப்பில் 350 பேர் பலியானார்கள். இதன் அருகே பழங்கால நகரம் யோக்யாத்ரா இருந்தது.
இந்த எரிமலை வெடித்து அந்த நகரமே அழிந்த போனதும் 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 4 ஆகஸ்ட், 2021

செக்க சிவந்த நிலா அமெரிக்க வானில் தோன்றிய அதிசயம்

அமெரிக்காவில் செக்கச் சிவந்த நிறத்தில் தோன்றிய நிலவை அதிகளவிலான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர் வாஷிங்கடனில் உள்ள வானுயர 
கட்டிங்களுக்கு பின் தோன்றிய நிலா சிவந்த நிறத்தில் காட்சி அளித்தது. முழு நிலவை பார்த்து ரசித்த மக்கள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் 
எடுத்து மகிழ்ந்தனர்
மேலும் ஒரு தரப்பினர் பற்றி எரியும் காட்டுத் தீயை பிரதிபலிக்கும் பிம்பமாக முழு நிலா சிவந்து காட்சியளித்ததாக 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>




செவ்வாய், 13 ஜூலை, 2021

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1800 டொலர் என்ற வரம்பை மீறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கோவிட் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஆண்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,000 டொலர்களை தாண்டக்கூடும் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.
இதேவேளை, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தால் நாட்டின் தங்கத் தொழில் சரிந்துவிட்டதாக, தங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தாம் கடுமையான சிக்கலில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
இந்த தொழிலைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அரசாங்கத்தை கோரியுள்ளனர். நாட்டில் இன்று ஒரு பவுண்டு தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சத்து பதினெட்டாயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள உள்ளூரை சேர்ந்த திறமையானவர்கள் இந்த தொழில்துறையை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர்.இதனால், தரமற்ற நகைகள் இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 27 மே, 2021

கொரோனாவால் கத்தாரில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

  கத்தார் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சற்று குறைவடைந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 881 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதோடு 1,556 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் என பொது சுகாதார அமைச்சகம்27-05-2021., இன்று
 அறிவித்துள்ளது, இது கத்தார் மாநிலத்தில் 
மீட்கப்பட்ட மொத்த 
நோயாளிகளின் எண்ணிக்கை 68,319 ஆக
 அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான  4 மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில், வைரஸ் தொற்றுக்கு இலக்கனா 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 221 பேர்  தீவிர சிகிச்சையில் பிரிவில் சிகிச்சை 
பெற்றுவருகின்றனர்.
இன்று உயிரிழந்தவர்கள்  37, 55, 61 மற்றும் 69 வயதுடையவை என்றும் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

புதன், 26 மே, 2021

இந்தோனேசியா- ஆஸ்திரேலியா கடல்பகுதியில் ரோந்து நடவடிக்கை

இந்தோனேசிய- ஆஸ்திரேலிய கடல் எல்லையில் ஐந்தாவது ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையை ஆஸ்திரேலிய எல்லைப்படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, கடல்சார் மற்றும் மீன்வளக் கண்காணிப்புக்கான இயக்குநரக ஜெனரல், ஆஸ்திரேலிய மீன்வள மேலாண்மை ஆணைக்குழு இணைந்து மேற்கொண்டிருக்கிறது. 
கடந்த 2018ம் ஆண்டு முதல், இந்தோனேசியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான கடல் பகுதியில் நிகழக்கூடிய சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் விதமாக OPERATION GANNET எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
“கொரோனா பெருந்தொற்று சூழல் எங்களிடையேயான ஒன்றிணைவைப் பாதிக்கவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவின் கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகளின் வலிமையைத் திறனை ஐந்தாவது ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையில் காண முடிந்தது,” எனத் தெரிவித்திருக்கிறார் இந்தோனேசிய கடலோர காவல்படையின் தலைமை
 அதிகாரி A’an Kurnia. 
இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவால் முன்னெடுக்கப்படும் GANNET நடவடிக்கை அந்நாடுகளுக்கு இடையிலான பாதுகாக்கும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என்பது சட்டவிரோத, கட்டுப்பாடற்ற மீன்பிடி செயல்களை 
தடுப்பது, ஆட்கடத்தல், மனிதக் கடத்தல் முயற்சிகளைத் தடுப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, நாடுகடந்த குற்றங்களைக் கட்டுப்படுத்துவதாகும். 
ஆஸ்திரேலியாவுடன் எல்லையைப் பகிரக்கூடிய இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி இந்நடவடிக்கையின் கீழ் வரும் 
பகுதியாக உள்ளது. 
“ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட கடல் பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கண்காணிப்பதில் ஆஸ்திரேலியா விழிப்புடன் உள்ளது. அதே சமயம், இந்த அச்சுறுத்தல்கள் ஆஸ்திரேலியாவை மட்டுமல்ல சுற்றியுள்ள பிரதேசத்தையும் பாதிக்கக்கூடியது,” என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை உறுதிச்செய்யும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய கடல்சார் எல்லைக் கட்டளையின்
 தளபதி Mark Hill. 
இந்தோனேசியா- ஆஸ்திரேலியா இடையிலான கடல் பகுதி வழியே கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் உள்படப் பல நாடுகளின் அகதிகள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாகத் தஞ்சமடைந்திருக்கின்றனர்
. இவ்வாறான தஞ்ச முயற்சிகளை ஆட்கடத்தல் 
நிகழ்வுகளாகக் கருதும் ஆஸ்திரேலிய அரசு அவ்வாறு தஞ்சமடைய முயல்பவர்களை நாடுகடத்தி வருகின்றமை இங்கு 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>