இத்தாலியில் வீடொன்று 232 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தாலியின் தலைநகர் ரோமில் இருந்து 70 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மென்சா என்கிற நகரிலேயே இவ்வாறு ஒரு யூரோவுக்கு (இலங்கை நாணய மதிப்பில் 232 ரூபா) வீடுகள் விற்பனை செய்யப்படுகின்றன
1968 ஆம் ஆண்டு பெலிஸ் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு பின் மக்கள் மென்சோ நகரில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர். இதனால் மென்சோ நகரத்தில் மக்கள் தொகை கணிசமான
அளவு குறைந்துள்ளது.
இதையடுத்து இந்த நகரில் மீண்டும் மக்கள் அதிகளவில் குடியேற வேண்டும் என்பதற்காக, இத்தாலி அரசாங்கத்தினால் அங்குள்ள வீடுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து அந்நகரின் மேயர் கிளாடியோ ஸ்பெர்டி தெரிவிக்கையில், ”வீடுகளின் விற்பனைக்கான விண்ணப்பங்கள் 28 ஆம் திகதியுடன் முடிவடையும். தற்போது ஒரு சில வீடுகள் மட்டுமே விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
நகரில் இருக்கும் கைவிடப்பட்ட அல்லது எவரும் குடியேறாத பல வீடுகள் எதிர்காலத்தில் விற்பனை செய்யப்படும்
எனக் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக