நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 31 மார்ச், 2018

பதின் மூன்று நாட்களில் லண்டனில் 11 பேர் கொலை

லண்டனில் கடந்த 13 நாட்களில் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு காரணங்களுக்கான தனிப்பட்ட முறையில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறித்த கொலைகள் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகளை இனங் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 18 மார்ச், 2018

நாடு கடத்தப்படுவதிலிருந்து நொடிப் பொழுதில் காப்பாற்றப்பட்ட தமிழ்க் குடும்பம்

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த தமிழ் குடும்பம் ஒன்று கடைசி நொடியில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ளனர். சட்டரீதியான நடவடிக்கையின் மூலம் வியத்தகு விதத்தில் அக்குடும்பம் நாடுகடத்தப்படுவதிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.‘நடேசலிங்கம்- பிரியா’
 என்ற இணையரும் அவர்களின் இரண்டு குழந்தைகளுமே இதிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். பிரியாவின் இணைப்பு நுழைவு-விசா(டீசனைபiபெ ஏளைய) காலாவதியான நிலையில், 
கடந்த மார்ச் 5ம்  திகதி  அதிகாலை குயின்ஸ்லாந்த்-ல் உள்ள அவர்களது வீட்டிலிருந்து ஆஸ்திரேலிய எல்லைப்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2012 யில் படகு
 வழியாக ஆஸ்திரேலிய வந்த நடேசலிங்கமும், 2013 யில் வந்த பிரியாவும் ஆஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டு, பிலோயலா  என்ற நகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து 
வந்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தமிழ் அகதிகள் கவுன்சிலின் பேச்சாளர் பென் ஹில்லர் ‘எல்லைப்படை எடுத்த நடவடிக்கை கொடூரமான, கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும். அக்குடும்பத்தின் மனு மீண்டும் மீளாய்வு செய்யப்பட வேண்டும். தருணிகா மற்றும் கோபிகா ஆஸ்திரேலியாவிலேயே பிறந்தவர்கள்.
இதுவே அவர்களது இல்லம். அவர்கள் இலங்கைக்கு சென்றதோ அவர்களிடம இலங்கைக் குடியுரிமையோ கிடையாது. இலங்கையிலிருந்து 2000ம் ஆண்டு வெளியேறிய பிரியா, கடந்த 5 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் உள்ளார். அவர் இலங்கையைவிட்டு வெளியேறி 18 ஆண்டுகளாகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்த நடேசலிங்கமும் இலங்கையில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறார்’ என 
அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக அக்குடும்பம் சிறை வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை விடுவிக்கக் கோரிய இணைய மனுவில் 62,000த்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இம்மனுவை தயார் செய்த ஏஞ்சிலா பிரிடெரிக்ஸ் ‘குற்றவாளிகளைப் போல அவர்கள் கைவிலங்கிடப்பட்டிருந்தனர்.
கைக்குழந்தையைக் கூட அவர்களிடமிருந்து பிரித்திருந்தனர். ஆஸ்திரேலியா தன்னுடைய வரலாற்றிலிருந்து ஏதாவது கற்றுக்கொண்டுள்ளதா? ஆஸ்திரேலிய அரசு என்ன செய்துக் கொண்டிருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். இக்குடும்பம் நாடுகடத்தப்படுவதிலிருந்து மீட்கப்பட்டதன் நினைவாக பிலோயலா நகரில் மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வும்
 நடைபெற்றுள்ளது.
அதே சமயம், பல தமிழ் தஞ்சக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருப்பதாகவும்
 தெரிய வருகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




வியாழன், 8 மார்ச், 2018

சர்க்கு கப்பல் நடுக் கடலில் பற்றி எரிந்தது மாலுமிகளின் கதி என்ன?

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சர்க்கு கப்பல் ஒன்று இந்தியாவின் Lakshwadeep அருகே விபத்துக்குள்ளாகி கொழுந்து விட்டெரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கிய 23 மாலுமிகளில் 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் எஞ்சியவர்களை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.கப்பலில் தீவிபத்து ஏறபட்டதாக தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினரின் முயற்சிகள் அனைத்தும் வீணானதாக குறித்த கப்பல் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தீயை கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் கப்பலை மீட்பது கடினம் என நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.கப்பலில் கொண்டு செல்லப்பட்ட சரக்கு பெட்டகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தே மொத்த கப்பலுக்கும் வியாபித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள்
 தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குள்ளான கப்பலில் 13 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.விபத்தின் போது சுற்றுவட்டாரத்தில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு உதவி கேட்டு கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் அவர்கள் எந்த பதிலும் தரவில்லை எனவும் விபத்துக்குள்ளான கப்பல் மாலுமிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 4 மார்ச், 2018

கடும் புயல் காற்று காரணமாக அமெரிக்காவில் 5 பேர் பலி

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வீசிய கடும் புயல் காற்று காரணமாக 5 பேர் பலியாகினர். அந்த பிராந்தியத்தில் மணிக்கு 129 கிலோமீற்றர் வேகத்தில் புயல் வீசிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது வானூர்தி சேவைகள் மற்றும் தொடருந்து சேவைகள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளநிலை பலர் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>