நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 22 மார்ச், 2022

அமெரிக்க துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு வருகின்றார்

 

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் (Victoria Nuland) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு
 தெரிவித்துள்ளது.
அவர் இன்று மற்றும் நாளை(23) வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்புக் கொள்கை விவகாரங்களை துணைச் செயலாளர் நுலாண்ட் மேற்பார்வையிடுகிறார். 
குறித்த வருகையின் போது, ​​அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை 
சந்திக்கவுள்ளார்.
துணைச் செயலாளர் நுலாண்ட் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்று வர்த்தகத்தை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 23 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சில் நடைபெறும் இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் 04 ஆவது அமர்வுக்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆகியோர் இணைத் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


செவ்வாய், 8 மார்ச், 2022

டிக்டொக் செயலி நிறுவனம் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்திய நிறுவனம்

டிக்டொக் செயலி நிறுவனம் ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், “போலி செய்திகளுக்கு” 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
இந்த சட்டத்தின் மூலம், இராணுவத்தைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும், அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி செய்திகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்கும்.
இந்தநிலையில், ரஷ்யாவின் புதிய ‘போலி செய்தி’ சட்டத்தினால் எங்கள் வீடியோ சேவையின் நேரடி ஒளிபரப்பை நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என டிக்டொக் செயலி நிறுவனம் 
தெரிவித்தது.
இதுதொடர்பாக டிக்டொக் செயலி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பெரும் சோகத்தையும் தனிமைப்படுத்தலையும் எதிர்கொள்ளும் போரின் போது நிவாரணம் மற்றும் மனித தொடர்பை வழங்கக்கூடிய படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு பங்காக இருக்க விரும்புவதாகவும், மேலும் செயலியின் ஊழியர்கள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கூறியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>செவ்வாய், 1 மார்ச், 2022

மார்ச் மாதத்தில் பிரான்சில் வரும் முக்கிய மாற்றங்கள்

பிரான்சில் மார்ச் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்…
புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று அறிமுகம்
பிரான்சில் மார்ச் மாதம் முதல் வாரத்தில், Novavax நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அரசு அறிவித்திருந்தது. இந்த தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் இரண்டு டோஸ்களுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.பணவீக்க போனஸ்
மாதம் ஒன்றிற்கு 2,000 யூரோக்களுக்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோர், இந்த பணவீக்க போனஸை பெறத் தகுதியுடையவர்கள். இந்த போனஸ் மார்ச் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படும் என எத்ரிபார்க்கப்படுகிறது.
சிகரெட்கள் விலை அதிஉணவக வவுச்சர் திட்டம் நீட்டிப்புகரிப்பு
சிகரெட் உற்பத்தியாளர்கள் மீதான வரிகளை அரசு உயர்த்த இருப்பதால் சிகரெட் பாக்கெட்களின் விலை மார்ச் 1, அதாவது, இன்று முதல் கணிசமாக உயர உள்ளது.உணவக வவுச்சர் திட்டம் நீட்டிப்பு
மார்ச் 1, அதாவது இன்றுடன் உணவக வவுச்சர் திட்டம் முடிவுக்கு வர இருந்த நிலையில், அதை ஜூன் வரை நீட்டிக்க பிரான்ஸ் அரசு 
முடிவு செய்துள்ளது.
விவாரத்துக்குப் பின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பணம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க ஒரு புதிய
 அமைப்பு அறிமுகம்
தம்பதியர் விவாகரத்து செய்யும் நிலையில், அவர்களது பிள்ளைகளுக்கான உணவு, உடை, தங்குமிடம் முதலானவற்றை வழங்குவது பெற்றோரின் கடமை. அப்படி யார் பிள்ளைகளுக்கான தேவைகளை சந்திக்கவேண்டும் 
என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோ, 
அந்த பணம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக Agence de recouvrement et d’intermédiation des pensions alimentaires என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் திகதி முதல், பிள்ளைகளுக்குச் சேரவேண்டிய பணத்தை பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்கவேண்டியது இந்த புதிய அமைப்பின் பணியாகும்.
வாக்களிப்பதற்கு முன்பதிவு செய்வதற்கான நேரம்
பிரெஞ்சுக் குடிமக்கள், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒன்லைனில் முன்பதிவு செய்ய மார்ச் 2தான் கடைசி நாள். தபால் வாக்குகளுக்கு பதிவு செய்ய மார்ச் 4ஆம் திகதி கடைசி நாள்.
பாரீஸில் பள்ளி விடுமுறைகள் முடிவுக்கு வருகின்றன
C மண்டலத்தில், அதாவது பாரீஸ், Créteil, Versailles, Montpellier மற்றும் Toulouseஇல் வாழும் பள்ளிப்பிள்ளைகள், மார்ச் 7ஆம் திகதி, பள்ளிக்குத் திரும்பவேண்டும்.
கொரோனா விதிகளுக்கு முடிவு
மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வாக்கில், கொரோனா தடுப்பூசி பாஸ் முதலான கொரோனா விதிகள் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Daylight saving time துவக்கம்
மார்ச் 27, ஞாயிற்றுக்கிழமை காலை 2.00 மணிக்கு Daylight saving time துவங்க உள்ளது. அப்போதிலிருந்து கடிகார முட்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். மாலையில் நீண்ட நேரம் வரை வெயில் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த மாற்றம் பின்பற்றப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரம் துவக்கம்
மார்ச் 28 முதல் பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்குகிறது.
பிரெக்சிட்டுக்குப் பிந்தைய திருமண விதிகள்
பிரித்தானியர்களின் ஐரோப்பிய ஒன்றிய துணைவர்கள் அல்லது துணைவிகள் பிரித்தானியாவுக்கு குடிபெயர விரும்பினால், அவர்கள்
 மொழி, தொழில் திறன் மற்றும் நிதி ஆதாரம் முதலான விசா நடைமுறைக்கான 
முழுமையான தகுதிகளை சந்திக்கக்கூடியவர்களாக இருந்தாகவேண்டும். இந்த தகுதி நிலைகளுக்கு உட்படாதவர்கள், மார்ச் 31 முதல், அவர்கள் பிரித்தானியரை மணந்திருந்தாலும் கூட, பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேக்ரான் போனஸ்
மார்ச் 31தான் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு மேக்ரான் போனஸ் என்னும் போனஸ் வழங்க கடைசி நாள் ஆகும்.
Trêve hivernale முடிவுக்கு வருகிறது
பிரான்சைப் பொருத்தவரை, la trêve hivernale என்பது, ஒரு காலகட்டம். அந்த காலகட்டத்தில், வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்ற முடியாது. அந்த காலகட்டம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>