நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 29 அக்டோபர், 2022

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு

சீனாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென 
உச்சம் தொட்டது. 
இதன் காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் 2 மாதங்கள் வரை 
அமலில் இருந்தன. 
இதன் காரணமாக அங்கு பொருளாதார சீர்குலைவு, உணவு தட்டுப்பாடு போன்ற சிக்கல்கள் எழுந்தன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. 
இந்த நிலையில் ஷாங்காய் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட யாங்பூ மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
இதையடுத்து அந்த மாவட்டத்தில் .28-10-2022.நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் பேரும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
மேலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்
 நபர்கள் முடிவுகள் வெளியாகும் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட உகான் நகரில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து, அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>ஞாயிறு, 23 அக்டோபர், 2022

பரிதாப நிலையில் 120 இலங்கையர்கள் பிரித்தானியாவின் முடிவால்

தாய் நாட்டிற்கு தன்னிச்சையாக திரும்ப மறுத்தால், அவர்களை இடம் மாற்ற பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் 
வெளியாகியுள்ளது.
சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் புகலிடக்கோரிக்கையாளர்களை இன்னொரு மூன்றாவது நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், எந்த நாட்டிற்கு என உறுதியான தகவலை வெளியிட பிரித்தானிய நிர்வாகம் மறுத்துள்ளது.
தற்போது சாகோஸ் தீவுக்கூட்டங்களில் உள்ள டியாகோ கார்சியாவில் சுமார் 120 இலங்கையர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
தற்போது சாகோஸ் தீவில் தான் இலங்கையர்கள் 120 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தஞ்சமளிக்க பிரித்தானியா மறுப்பதுடன் மூன்றாவது நாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் தற்போது விவாதத்தை 
ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, விவாதத்திற்குரிய சாகோஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த 60 இலங்கையர்கள் தன்னிச்சையாக சொந்த நாடு திரும்பியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலக அமைச்சர் ஜெஸ்ஸி நார்மன் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>