நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 28 செப்டம்பர், 2017

குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸ்

அதிக பணம் பெற்று கொண்டு குறைந்த சதுர அடி இடத்தை வாடகைக்கு தரும் மோசமான நகரங்களின் பட்டியலில் பாரீஸும் இணைந்துள்ளது
ரெண்ட் கேப் என்னும் ஓன்லைன் வலைதள நிறுவனம் $1,500 வாடகைக்கு எவ்வளவு சதுர அடி கொண்ட அடுக்குமாடி 
வீடுகள் உலகின் முக்கிய நகரங்களில் தரப்படுகிறது என்ற ஆய்வை நடத்தியது.
இதில் பிரான்ஸின் பாரீஸ் நகரம் 25வது இடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 30m² இடம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தான் கிடைப்பதாக தெரியவந்துள்ளது
இந்த பட்டியலில் தாராளமான இடம் கிடைக்கும் நகரமாக துருக்கியின் இஸ்தான்புல் முதலிடத்தில் உள்ளது. இங்கு $1,500 வாடகைக்கு 176m² அளவிலான இடம் தரப்படுகிறது
அதாவது பாரீஸை விட ஐந்து மடங்கு அதிகமாகும், பட்டியலில் இரண்டாமிடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரம் உள்ளது.
மூன்றாமிடத்தில் ஜெர்மனியின் பெர்லின் 139m² அளவிலான இடத்துடன் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது
இந்த விடயத்தில் பாரீஸை விட மோசமாக சான் பிரான்ஸிஸ்கோ, ஸ்விட்சர்லாந்தின் சூரிச், லண்டன் ஆகிய 
நகரங்கள் உள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 26 செப்டம்பர், 2017

கத்தியால் மனநல மருத்துவரை குத்திக் கொன்ற நோயாளி

அமெரிக்காவில் தெலங்கானாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் அச்சுதா ரெட்டியை நோயாளி ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த அச்சுதா ரெட்டி, அமெரிக்காவில் குடியேறி மனநல மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் நடத்தி வந்த கிளினிக்கில் யோகப் பயிற்சிகள் மூலம் மனநல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் அவர் நோயாளி ஒருவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அச்சுதா ரெட்டியை கொலை செய்தவரை கான்சாஸ் காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், புதன்கிழமை இரவு 7 மணியளவில்
 நோயாளி ஒருவர் அச்சுதா ரெட்டி கிளினிக்கிற்கு வந்துள்ளார். வந்த வேகத்தில் ரெட்டியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். ரெட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மேலாளர் நோயாளியை தடுக்க 
முயற்சித்தார்.
அப்போது ரெட்டி அங்கிருந்து ஓடி தப்ப முயற்சித்துள்ளார். ஆனால் அந்த நோயாளி விடாமல் ரெட்டியை துரத்தி பிடித்து மீண்டும் வெறிதனமாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரெட்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ 
இடத்திலே உயிரிழந்தார். 
மேலும் காவல்துறையினர் கொலை செய்த நோயாளியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மரக்கறிகள் வீதியில் விற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிஷ்டம்!

பிலிப்பைன்ஸில் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் சிறுவனை பாடசாலையில் சேர்க்க தான் விரும்புவதாக பிலிப்பைன்ஸ் நடிகை ஷரோன் குனெட்டா கூறியுள்ளார்.
பொருளாதார சிக்கலால் பார்க்கவே அனுதாபப்படும் வகையில் ஒரு சிறுவன் பிலிப்பைன்ஸ் வீதியில் காய்கறி விற்றுக் கொண்டிருக்கும் படம் ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது
இதை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அந்நாட்டின் பிரபல நடிகையும், பாடகியுமான ஷரோன் குனெட்டா, சிறுவன் விற்கும் அனைத்து காய்கறிகளையும் தான் வாங்கி கொள்ள 
விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதோடு, குறித்த சிறுவனை பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்ப தான் நினைப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸில் வறுமை அதிகளவில் தலைவிரித்து ஆடுவதால் அந்நாட்டு சிறுவர்கள் பலர் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் குழந்தை தொழிலாளியாக வேலைக்கு செய்து
வருகிறார்கள்.
இந்நிலையில் குறித்த நடிகையின் இந்த செயல் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 13 செப்டம்பர், 2017

பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தில் தவகல்கள் திருடிட்டு!

பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற Equifax நிறுவனத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய ஹேக்கர் 44 மில்லியன் மக்களின் தவகல்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் போது பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்களினதும் தகவல் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் 
வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த தகவல் விபரங்கள் திருடப்பட்டுள்ள நிலையில், உங்களது பெயர் பொருட்கள் கொள்வனவு செய்தல் மற்றும் கிரெடிட் கார்ட் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் வேறொருவர் ஈடுபடலாம்.
எனவே, இந்த விடயத்தில் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Equifax நிறுவனமானது பிரித்தானியாவில் உள்ள பலரதும் தகவல்களையும் சேமித்து 
வைத்துள்ளது.
பெயர், முகவரி, கடன் பெற்றுள்ள விபரங்கள், அந்த கடனை எவ்வாறு செலுத்துகின்றனர் போன்ற விபரங்களை சேகரித்து வைத்துள்ள நிலையில், அதனை வங்கிகளுக்கும் Equifax நிறுவனம் 
வழங்குகின்றது.
இந்நிலையில், நேற்று முன்தினம் குறித்த நிறுவனத்தின் இணையத்தளத்தை ஊடுருவிய ஹேக்கர்ஸ் தகவல்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 11 செப்டம்பர், 2017

பேனா மூலம் இலண்டன் பல்கலைக் கழகத்தில் பரீட்சை எழுதத் தடை

இலண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 800 ஆண்டுகள் பழைமை கொண்டது. 
இங்கு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி 
பயில்கின்றனர்.
இப் பல்கலைக்கழத்தில் பரீட்சைகள் வினாத்தாள்களில் பேனா மூலம் கைகளினால் எழுதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்சமயம் அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
மாணவர்களது கையெழுத்து சரிவர புரியாத நிலையில் இருப்பதாலும் பாடத்திட்டங்கள் யாவும் கணினி மூலம் பதிவு செய்து கற்பிக்கப்படுவதாலும் இம்முறைமை தடைசெய்யப்பட்டுள்ளது.
மாணவர்களது கையெழுத்து சரிவர புரியாத நிலையில் தேர்வுகளில் விடைத்தாள்களைத் திருத்தும் பேராசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இந் நிலைமை மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆகவே, பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை விதிக்கப்பட்டு கணினியில் தட்டச்சு( (Type) மூலமாக பரீட்சைகள் யாவும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
எனினும், இலண்டனிலுள்ள எடின்பேர்க் (Edinburgh) பல்கலைக்கழகத்தில் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே இத்தகைய முறைமை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




ஈராக்கில் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் பிணமான இளைஞன்

ஈராக்கில் இளைஞரொருவர் வானிலிருந்து விழுந்த மர்ம பொருளால் நொடி பொழுதில் வீதியில் விழுந்து பிணமான சம்பவம் தொடர்பிலான வீடியோ வெளியாகி மக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிசிரிவி வீடியோவில், வீதியில் வரும் தன் நண்பரின் காருக்கு அருகே சென்ற இளைஞன், காருக்குள் இருக்கும் நண்பரிடம் குனிந்து கண்ணாடி வழியாக பேசிக்கொண்டிருக்கும் வேளையில், ஏதோ வானத்திலிருந்து இளைஞரின் தலை உச்சியில் பாய, வீதியில் சரிந்த இளைஞர் எந்தவித அசைவில்லாமல் கிடக்கிறார்.
இதை கண்டு அதிர்ச்சிடைந்த அங்கிருந்த மக்கள் ஓடி வந்து இளைஞரை தூக்கி நண்பரின் காரில் ஏற்றி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.எனினும், இளைஞர் முன்னதாகவே உயிரிழந்துவிட்டதாக இளைஞரை சோதனை செய்த வைத்தியர்கள் 
தெரிவித்துள்ளனர்.
வானிலிருந்து விழுந்த துப்பாக்கி குண்டு தலையில் பாய்ந்தமையாலே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 9 செப்டம்பர், 2017

இலங்கை தமிழ் இளைஞன் கனடாவில் குத்திக் கொலை

கனடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர்,  பலனின்றி உயிரிழந்தார்.  இந்தச் சம்பவம் தொடர்பாக 18 வயது இளைஞர் மீது டொராண்டோ பொலிசார் கொலை வழக்கு பதிந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில் Eglinton அவென்யூ பகுதியில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குற்றுயிராக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 
விரைந்த பொலிசார் குறித்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். குறித்த நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் தாக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் 
உறுதி செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குகப்பிரியன் மகேந்திர ராஜா(33) கடந்த புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிசார் நேற்று அறிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் Prosper Jean Laurent(18) என்பவரை
 பொலிசார் கைது செய்துள்ளனர்.
டொராண்டோவில் மட்டும் இந்த ஆண்டில் இதுவரை 37 நபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புரூஸ் லீ மனைவியின் துரோகத்தால் மாண்ட வெளியான உண்மைகள!


உலகின் மாபெரும் கராத்தே மன்னன் புரூஸ் லீ இறப்புக் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தாலும் அவரது மரணம் 
என்பது இன்னமும் மர்மமாகவே 
இருந்து வருகிறது.
ஆனாலும் அவரது மரணம் குறித்த இரகசியக் குறிப்புக்கள் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கை மூலம் கசிந்துள்ளது.
அதன்படி அவர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்பதே அதன் முக்கிய குறிப்பாகும். இந்தக் காெலைக்கு முக்கியமான காரணம் அவரது மனைவி என்பது தான் பேரதிா்ச்சிக்குரிய விடயமாகும்.
அன்று நடந்தது என்ன?
புரூஸ்லீ உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் தனது இல்லத்திலிருந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். அப்பொழுது அவர் வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிப்படைந்திருந்தார். உடனடியாக அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அந்த நிலைமைக்கான காரணம், பெருமூளை 
வீக்கம் என கண்டறிந்தனர்.
மானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தைக் குறைக்க முடிந்தாலும் மீண்டும் தலைவலி ஏற்பட்டவண்ணமேயிருந்தது. இதனால் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டது. தொடர்ந்தும் சிகிச்சையளித்துவந்த மருத்துவா்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.சிகிச்சைகள் பலனின்றி பரிதாப மரணத்தைத் தழுவினாா் புரூஸ்லீ.
இந்த நிலையில், "புரூஸ் லீ மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை, அது, ஒரு மனைவியின் மிகப்பெரிய துரோகத்தால் நடத்தப்பட்ட ஒரு படுகொலை தான்" என்று மருத்தவா்கள் கூறிய டைரி குறிப்புகள் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அப்படி என்னதான் சொல்லப்பட்டிருந்தது?
புரூஸ்லீயின் மரணத்துக்கான காரணம் திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். அதாவது, ஆஸ்பிரின் மருந்து கூல்பானத்துடன் அதிக அளவில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதே அவரது மரணத்தை 
விரைவுபடுத்தியது.
சாகும் விளிம்பில் இருந்தபோது, புரூஸ் லீ எதோ சொல்ல முற்பட்டார், ஆனால் அவர் எதையும் சொல்வதற்கு அவரது மனைவி அனுமதிக்கவில்லை. இதனால் அவரது மனைவியை வெளியே அனுப்ப முயன்றோம், ஆனாலும் அவர் செல்ல மறுத்துவிட்டார்.
அம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போது 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக ஆஸ்பிரின் கரைசல் அவர் வாயில் புகட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் புரூஸ் லீயின் மனைவி சொன்ன காரணத்தையே மருத்துவமனை நிர்வாகம் திருப்பிச் 
சொல்ல முற்பட்டது.
லீ இறப்பதற்கு முன்பே அவர் இறந்து விட்டதாக ஒரு வதந்தி செய்தி வெளியே பரவியது. இதில் மருத்துவமனை நிர்வாகமும் சம்மந்தப்பட்டிருந்தது. ஏனெனில் மருத்துவமனை நிர்வாகமும் புரூஸ் லீ மரணிப்பதையே ஆவலுடன் எதிர் பார்த்தது.
எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே உலகின் அபாரத் திறமையாளன் வீழ்ந்தான். புரூஸ் லீ இறந்த சில நாட்களிலேயே அவருடைய மனைவி அமெரிக்காவுக்குப் பறந்தார்.
ஒரு மோசமான மனைவியின் துரோகத்தால் தூய வீரன் சிதைக்கப்பட்ட வரலாறு இதுதான்!

வெள்ளி, 8 செப்டம்பர், 2017

இலங்கை யுவதியின் மனிதாபிமான செயற்பாடுக்கு நியூசிலாந்தில் பாராட்டு

நியூசிலாந்தில் வாழும் இலங்கையை சேர்ந்த யுவதி ஒருவரின் செயற்பாடு பலரின் வரவேற்பை பெற்றுள்ளது. 23 வயதான விதுஜனா விக்னேஸ்வரன் என்ற யுவதி தலைமுடியை, தானமாக 
வழங்கியுள்ளார்.
புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த அரிய செயற்பாட்டை விதுஜனா செய்துள்ளார். அகதி அந்தஸ்து கோரி நியூசிலாந்தில் குடியேறி விதுஜனா, பட்டப்படிப்பை
 படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது இளம் வயதில் தனது நீண்ட தலைமுடியை தானமாக வழங்கியுள்ளார். சமகாலத்தில் பொறுப்பற்ற ரீதியில் கலாச்சார சீரழிவில் இளைய தலைமுறை சிக்கி வருகிறது.
இவ்வாறான நிலையில் விதுஜனாவின் செயற்பாடு பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 4 செப்டம்பர், 2017

புலம்பெயர் மாணவி.ஜெ.அபிராமி சிறுவர் இனிய வாழ்வு இல்லத்திற்கு அன்பளிப்பு

 இலண்டன் புலம்பெயர் 13 வயதான மாணவி அபிராமி ஜெகதீசன் 
சிறிது சிறிதாக 
 சேமித்த ஐம்பது ஆயிரம்(50000.00) ரூபாவை ஈழத்து வன்னியின் மாற்றுத் திறனாளிகள் சிறுவர் இல்லமான இனிய வாழ்வு 
இல்லத்திற்கு அளித்தார்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த அபிராமி அண்மையில் தாயகம் வந்தபோது தனது அன்பினை இவ்விதம் வெளிப்படுத்தினார். இப்பணத்தை அவர் சில மாதங்களாக சிறுகச்சிறுக சேமித்தமை
 குறிப்பிடத்தக்கது
இளம் வயதில் இவர் காருண்ணியம் பாராட்டுக்குரியது போர் காலத்தில் புனிதர்களாக வாழ்ந்த இல்லத்துப்பிள்ளைகள்
இப்போது மிக கஸ்ரநிலையில் வாழ்வது ஏற்றுக்கொள்ளப்பாடாத ஒன்று, அதையறிந்த இந்தச்சிறுமியின்செயல் பாரட்டுக்கு உரியது மட்டுமல்ல இந்தச் செய்தியை பார்பவர்கள் இல்லத்து பிள்ளைகளுக்கு நல்லதை செய்ய துண்டுதலானதாகும்  இவர்பணி வாழ்க
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிராங்க்பேர்ட் நகரின் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் அண்மையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு இன்றைய தினம் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அதன் பொருட்டு அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகத் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குண்டானது 2ம் உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்து விமானப் படையினரால் வீசப்பட்டதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>