நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 31 மார்ச், 2019

டாக்கா நகரில் தீ விபத்து இலங்கையர் உட்பட பலர் உடல் கருகி பலி

கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சு
 உறுதிப்படுத்தியுள்ளது.
பங்களாதேஷ் டாக்கா நகரில் மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீவிபத்தில் மேலும் ஒரு இலங்கையர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீயை கட்டுப்படுத்த 17 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தீயில் இருந்து தப்பிக்க அதில் சிக்கியுள்ளவர்கள் கட்டிடத்தில் இருந்து கீழே குதிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள 19 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வரும்.புதிய தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில்

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
 உறிஞ்சு குழல்கள், முள்கரண்டிகள், காது குடையும் குச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களில் அடங்கும்.
 2021ஆம் ஆண்டிலிருந்து தடை உத்தரவு
 நடப்புக்கு வரும்.
 அந்த முடிவு, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மான்ஸ் (Frans Timmermans) நம்பிக்கை தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 27 மார்ச், 2019

இளம்பெண் செய்த வேலை விமானம் பாதி வழியிலேயே தரையிறக்கம்

விமானத்தில் குடித்துவிட்டு தகராறு செய்த இளம்பெண்ணை பொலிசார் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர்.
இங்கிலாந்தில் இருந்து ஸ்பெயினிற்கு ,26,03,2019, விமானம் ஒன்று புறப்பட்டு சென்ற நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த இளம்பெண் ஒருவர் போதையில் சக பயணிகளுடன்
 தகராறில் ஈடுபட்டார்.
விமான ஊழியர்கள் அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயற்சி செய்தும் அவர் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் விமானம் பாதி வழியிலேயே 
தரையிரக்கப்பட்டது. அங்கு வந்த பொலிசார் குறித்த இளம்பெண்ணை தரதரவென இழுத்து விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனர்.
இதனால் விமானத்தில் சற்று
 நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </

தங்கப்புதையல் பிரான்சில் தோண்டதோண்ட கிடைத்தது

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதி பிராந்தியங்களான பிரிட்டானி மற்றும் நார்மண்டியில், கைவிடப்பட்ட நிலப்பகுதியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் பள்ளம் தோண்டியபோது ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் கிடைத்தன.
அதனை தொடர்ந்து, கூடுதல் ஆராய்ச்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 
தோண்ட தோண்ட புதையல் கிடைத்துக்கொண்டே இருந்தது. இதில் ஒட்டுமொத்தமாக, ரோமானியப் பேரரசு காலத்தைச் சேர்ந்த 70 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களும், பல தங்க நகைகளும் கண்டெடுக்கப்பட்டன. இந்தப் புதையலின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


திங்கள், 25 மார்ச், 2019

அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்ற 9 வயது சிறுமி தடுத்துவைக்கப்பட்டார்

அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது மாணவியைக் குடிநுழைவு அதிகாரிகள் சுமார் 32 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர்.அமெரிக்கக் கடவுசீட்டை கொண்டிருந்தாலும் அச்சிறுமியின் பதில்கள் சரிவர இல்லாததால் அவர் தடுத்துவைக்கப்பட்டதாக 
அதிகாரிகள் கூறினர்.
தனியாகத் தடுத்து வைக்கப்பட்டதால் தான் பயந்துவிட்டதாக ஜூலியா இஸ்ஸபெல் அம்பாரோ மெதினா (Julia Isabel Amparo) கூறினார்.
Huffpost தகவல்கள்படி மெதினா, அவருடைய 14 வயது அண்ணன், இரு சிறுவர்கள் அனைவரும் மெக்சிகோவின் டியோவானா (Tijuana) நகரிலிருந்து அமெரிக்க நகரான சென் இசிடுரோவிலிருக்கும் (San Ysidro) தங்கள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்கும் வேலைக்கும் டியோவானா-சென் இசிடுரோ எல்லையைக் கடப்பது வழக்கம்.
எல்லைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனத்தை ஓட்டிச்சென்ற மெதினாவின் நண்பருடைய தாயார் சிறுவர்களை நடந்து செல்லச் சொல்லியிருக்கிறார்.
வழியில், கடவுசீட்டு இருக்கும் படம் பார்க்க அவரைப் போல இல்லாததால் மெதினா தடுத்துவைக்கப்பட்டார்.

மெதினாவின் அண்ணனும் தடுத்து வைக்கப்பட்டார். அவர் ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் முதலில் குற்றஞ்சாட்டியதாகக்


 கூறப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் சீனவில் 44 பேர் பலி

சீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது.
இதில், வேகமாகப் பரவிய தீயை தீயணைப்பு வீரர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை.
பலமணி நேரப் போராட்டத்திற்குப் பின் இன்று அதிகாலை தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் தற்போதுவரை, 44 பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதில் 30க்கும் மேற்பட்டோரின் நிலை மிகவும், கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


…ரஷ்யாவில் விபத்தில் சக்கரத்தை இழந்த வானுக்கு மரக்கட்டையில் வாகனத்தை செலுத்திய சாரதி

ரஷ்யாவில் சக்கரத்திற்கு பதிலாக மரக்கட்டையை வைத்து டூரிஸ்ட் வேனை இழுத்துச் செல்லும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவலை இந்தப் பதிவில் காணலாம்.வாகனங்களை வித்தியாசமாக உருமாற்றி பயன்படுத்தும் பல
 காட்சிகளை நாம் இணையத்தில் பார்த்து 
ரசித்திருப்போம். அதேபோன்று, அதிர்ச்சியான முறையில் வாகனங்களில் சாகசம் செய்வதையும் நாம் கண்டிருப்போம். ஆனால், இங்கு ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் தனது வாகனத்தை இழுத்துச் செல்கிறார். இதுகுறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், கியர் லிவருக்கு பதிலாக மூங்கில் குச்சியை பொருத்தி தனியார் பள்ளி பஸ் இயக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உத்தரப்பிரேதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியது. பிஎம்டபுள்யூ கார்மீது மோதிய அந்த பள்ளி வேன், நிற்காமலேயே சென்றுள்ளது. இதில், அதிர்ச்சியடைந்த காரின் உரிமையாளர் நீண்ட தூரம் விரட்டிச் சென்று வேனை இடைமறைத்து
 நிறுத்தியுள்ளார்.
அப்போது, வேனில் கியர் லிவருக்கு பதிலாக மூங்கிள் கட்டைப் பயன்படுத்தியது தெரிவந்தது.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிஎம்டபிள்யூ காரின் உரிமையாளர், போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வாகன ஓட்டியைக் கைது செய்தனர். மேலும், அவர் இயக்கி வந்த வேனையும் பறிமுதல் செய்து காவல்நிலையம்
 எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவிலும் இதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், இங்கு வீலுக்கு மாற்றாக மரக்கட்டைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை 
அவ்வழியாகச் சென்ற சக பயணி ஒருவர், அவரது கைப்பேசி மூலம் பதிவு செய்துள்ளார். மேலும், அதனை யுடியூபிலும் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
இந்த வீடியோ காட்சியானது ஒரு பக்கம் வியப்பை ஏற்படுத்தினாலும், மறு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.அந்த வகையில், பின் பக்க சக்கரத்தை இழந்த அந்த மினி வேன் மரக்கட்டை மூலம் 
சாலையில்
 பயணிக்கின்றது. அதனை மிகப்பெரிய டிரக் லாரி டோவ் செய்து இழுத்துச் செல்கிறது. ஆனால், இதில் ஆச்சரியமாக அந்த சுற்றுலா வான் எந்தவொறு அலுங்கல் குலுங்கலும் இல்லாமல், மிகவும் சீரான நிலையில் சாலையில் பயணிக்கிறது.பின் பக்கத்தில் இணைக்கப்பட்ட அந்த மரக்கட்டை
 சாலையில் உராய்கின்ற காரணத்தால், அதிலிருந்து சற்று லேசாக புகை வெளியேறுகிறது. ஆபத்தை உணராத வாகன ஓட்டி, மிகவும் பொறுமையாக, அந்த வாகனத்தை இழுத்துச் செல்கிறார். ஆனால், இதற்கு பதிலாக ஏதேனும் மெக்கானிக்கை அழைத்து வந்து பழுதை நீக்கியிருக்கலாம் என்பதே பலரின்
 குரலாக இருக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ரொரன்டோவில் காணாமல் போயுள்ள தமிழர்

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர்.
நேற்று முன்தினம் Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50 மணியளவில் காணப்பட்டுள்ளார்.
பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அபராதம் கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி யூரோக்கள்

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தேடுதல் நிறுவனமான கூகுள் தனது தளங்களில் போட்டி நிறுவனங்களின் விளம்பரதாரர்களை தடை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அபராதமாக 
ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்தின் மீது 1.49 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 11,700 கோடியாகும். ஆன்லைன் வர்த்தகச் சந்தையில்
 கூகுள் நிறுவனம்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>சனி, 23 மார்ச், 2019

மக்கள் உலகில் வாழ்வதற்கு குறைந்த செலவே ஆகும் முதல் 10 நாடுகளின்

உலகில் மக்கள் குறைந்த செலவில் வாழ்வதற்கான நாடுகளின் பட்டியலில் வெனிசுலா முதல் இடத்தை பிடித்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் நகரங்கள் மற்றும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் நாடுகளின் தகவல்கள் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும்.
அந்த வகையில் Worldwide Cost of Living Survey பணத்தின் மதிப்பு, உணவுகள், வாழ்வதற்கு இருப்பிடம் போன்றவற்றின் 
அடிப்படையில் குறைந்த அளவே செலவு ஆகும் நாடுகளின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் வெனிசுலாவின் Caracus நகரம் முதலிடத்தையும், சிரியாவின் Damascus இரண்டாவது இடத்தையும், உஸ்பேகிஸ்தானின் Tashkent மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

உலகில் மக்கள் வாழ்வதற்கு குறைந்த செலவே ஆகும் நாடுகளின் டாப் 10 பட்டியல்:

1. Caracus, Venezuela

2. Damascus, Syria

3. Tashkent, Uzbekistan

4. Almaty, Kazakhstan

5. Bangalore, India

6. Karachi, Pakistan

6. Lagos, Nigeria

8. Buenos Aires, Argentina

8. Chennai, India

10. New Delhi, India

அதிக செலவு ஆகும் நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர், பிரான்ஸ், சினா போன்ற நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதிக செலவு ஆகும் நாடுகளின் டாப் 10 பட்டியல்:

1. Singapore, Singapore

1. Paris, France

1. Hong Kong, China

4. Zurich, Switzerland

5. Geneva, Switzerland

5. Osaka, Japan

7. Seoul, South Korea

7. Copenhagen, Denmark

7. New York, US

10. Tel Aviv, Israel

10. Los Angeles, US

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 22 மார்ச், 2019

தொலைபேசிக்கு அடிமையான நான்கு வயதுக் குழந்தைக்கு நேர்ந்த கதி

தாய்லாந்தை சேர்ந்த 4 வயது குழந்தை தனது கண் பார்வையை இழந்துள்ளது. குழந்தையின் பார்வை பறிபோனதற்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பயன்பாடுதான் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்டிற்கு அடிமையாகிப் போன 4 வயதுக் குழந்தையின் பார்வை பறிபோயுள்ளது. உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிஞ்சு குழந்தைகளின் கவனத்தைத் திருப்பும் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களின் பின்னால் உள்ள விபரீதம் பற்றிப் பெற்றோர்கள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் 
தெரிவித்துள்ளனர்.
பல பெற்றோர்கள் குழந்தைகளின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும், குழந்தைகளின் சேட்டைகளைக் குறைப்பதற்காகவும் அவர்களின் கைகளில் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் ஒன்றை பெற்றோர்கள் கொடுத்துவிடுகின்றனர்.முக்கியமாய் பெற்றோர்கள் வேலை செய்யும் நேரங்களில் குழந்தைகளின் தொந்தரவு இல்லாமல் இருக்கப் பல பெற்றோர்கள், இந்த செயலின் ஆபத்தை உணராமல் 
செய்துவருகின்றனர்.
ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் போன்ற மொபைல் சாதனங்களைக் குழந்தைகள் நேரடியாக அணுகுவதனால் அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆபத்துடன் சேர்த்து உடலின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் என்பவற்றின் 4 வயதுக் குழந்தைக்குத் தான், ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் அதிகம் பயன்படுத்தியதனால் கண் பார்வை பறிபோயுள்ளது. தனது குழந்தைக்கு 2 வயதில் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட்களை பயன்படுத்த அனுமதித்தது 
இன்று விபரீதத்தில் போய் முடிந்துள்ளதென்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து அதிகப்படியான நேரம் ஸ்மார்ட்போன் மற்றும் ஐபேட் பயன்படுத்தியதனால் குழந்தையின் கண் பார்வை மோசம் அடைந்துள்ளது என்றும், குழந்தையின் கருவிழியில் அதிகப்படியான சேதாரம் ஏறப்பட்டுள்ளதென்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் கண் பார்வையை மீண்டும் பெறுவதற்கு மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்ட கண்களில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையின் பார்வை கோளாறை சரி செய்துள்ளனர்.ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் சாதனங்களில் ஏற்படும் டைஸ்க்கினியாஸ் தான் முக்கிய காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டைஸ்க்கினியாஸ் என்பது மயோபியா, ஃபோர்சைடுட்னிஸ், அசிஸ்டிமடிசம், சிதைந்துபோகும் பிரதிபலிப்பு, சிதைந்த சிதைவு போன்ற பலவிதமான காரணங்களால் உருவாகுவதாகும்.இரண்டு கண்களிலும் மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பின் குழந்தையின் பார்வை 80 சதவீதம் குணப்படுத்தப்பட்டுள்ளதாகத்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இனி ஸ்மார்ட்போன், டேப்லெட், கணினி, டிவி போன்ற சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுமாறு குழந்தையின் பெற்றோருக்கு அறிவுரையும் 
வழங்கப்பட்டுள்ளது.
தான் குழந்தைக்கு நேர்ந்த சோகம் போல் மற்ற குழந்தைக்கு நேரிட வேண்டாம் என்று குழந்தையின் தகப்பரான தச்சர் நியூஸ்டிக்கர் சூயிடுங் அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் மனதிற்கும் ஆபாத்து விளைவிக்கும் மொபைல் சாதனங்களை அதிகம் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று உலக பெற்றோர் அனைவரையும்
 எச்சரித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 17 மார்ச், 2019

ஓர் அரிய வாய்ப்பு கனடா வாழ் மக்களுக்கு

கனடா நாட்டின் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெறுமதிமிக்க கற்கள் மற்றும் அணிகலன்கள் என்பன ஏலத்தில் விடப்படவுள்ளன.
நாளைய தினம்(17ஆம் திகதி ) இந்த அரிய வாய்ப்பினை கனடா வாழ் மக்களுக்கு அந்நாட்டு வருவாய் துறையினர் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளனர்.
நாளை பகல் 02.00 மணியளவில் குறித்த அணிகலன்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக தகவல்கள் 
வெளிவந்துள்ளன.
இதன்போது பெறுமதியான ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் மிகக் குறைவான விலையில் ஏலத்திற்கு விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், டெல்டாஹோட்டல், ஸ்கேர்போரூக்ஹ், டொரண்டோ (Delta Hotel in 2035 Kennedy Road, Scarborough, Toronto) என்ற இடத்தை அணுக முடியும்.
இதில், பெண்களுக்கான ரோலக்ஸ் 18kt மற்றும் துருப்பிடிக்காத எஃகு வகைகள், பல சிறப்பம்சங்களுடன் Rolex (ரோலக்ஸ்), Cardier (கார்டியர்), Audemarspiguet, patakphilippe, Tiffany & Co. அத்துடன் வைரமோதிரம், வளையல்கள், கை செயின்கள், கழுத்தணிகள் மற்றும் உயர் ஆபரணங்கள் அனைத்து பொருட்களும் தனித்தனியாக அதி உயர் 
ஏலத்தில் விற்கப்படவுள்ளன.
இதில் கலந்து கொள்பவர்கள் தங்களது அடையாள அட்டையைக் காட்டி தங்களது பெயரை ஏல அட்டையில் பதிவு செய்து கொள்வதன் மூலம் ஏல பொருட்களின் பட்டியலை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
சனி, 16 மார்ச், 2019

நியூஸிலாந்து பள்ளிவாசல் படுகொலை இலங்கையர்களுக்கும் பாதிப்பா

நியூசிலாந்தின் – கிரிஸ்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக
 அதிகரித்துள்ளது.
மேலும், 48 பேர் காயமடைந்துள்ள நிலையில், அதில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், பெண்ணொருவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் 
தெரிவிக்கின்றன.
இதில், அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் அனர்த்தத்தின்போது பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பங்களாதேஷ் கிரிகெட் வீரர்கள் மயிரிழையில்
 உயிர்தப்பியுள்ளனர்.
நியூசிலாந்தின் Christchurch பகுதியிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த பள்ளிவாசலினுள் கறுப்பு நிற ஆடையுடன் நுழைந்த துப்பாக்கிதாரி அங்கிருந்தோர்மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
ஆகவே, நியுசிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை பிரஜகைள் எவருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கையின் பிரதி தூதுவர் செனரத் திசநாயக்க 
தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜைகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக துப்பாக்கி பிரயோகம் குறித்த தகவல்கள் அனைத்தையும் ஆராய்ந்து வருகின்றோம் என அவர் 
தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 12 மார்ச், 2019

நடு வானில் விமானத்தை திருப்பும்படி கண்ணீா்விட்டு கதறிய தாய்

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டு வந்து விட்டதாக கூறி மீண்டும் விமானத்தை திருப்பும்படி கதறியுள்ளார்.சவுதி கிங் 
அப்துல் அசிஸ் விமான நிலையத்திலிருந்து – கோலாலம்பூருக்கு நோக்கி சவுதி அரேபியன் (Saudi arabian SV832), ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.
அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் திடீரென்று அதிர்ச்சியில் அங்கிருந்த விமான 
ஊழியரிடம் பதற்றத்துடன் ,”நான் என் குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டு வந்து விட்டேன்அழுதபடி மீண்டும் விமானத்தை விமான நிலையத்திற்கு திருப்புங்கள் என்று கூக்குரலிட்டுள்ளார். இத்தகவல் விமானிக்கு தெரிவிக்கப்பட்டதால் விமானி கட்டுபாட்டு அறைக்கு( ATC ) தொடர்பு கொண்டு 
விவரத்தை கூறியுள்ளார்.
பின்னர் மற்ற பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் வேறு விமானம் தரை இறங்கும் நேரம் என அனைத்தையும் சிறிது நேரம் மாற்றி அமைத்து ஒருமாதிரி விமானத்தை தரையிறக்க அனுமதி கொடுத்து உள்ளனர். முடிவில் தாயும் சேயும் ஒன்று சேர்ந்தனர்.விமானி கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய வீடியோ தற்போது வெளியாகி பரவலாகி இருக்கிறது. பொருட்களை மறந்து வைத்து விட்டு வருவார்கள். ஆனால், பெற்ற குழந்தையை யாராவது மறந்து விட்டு வருவார்களா?
என பலரும் முகம் சுளிக்கத் தொடங்கி விட்டனர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 10 மார்ச், 2019

கொலம்பிய விமான விபத்தில் பயணித்த அனைவரும் பலி

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மத்திய பகுதியில் நிகழ்ந்த விமான விபத்தில் விமானி உட்பட அதில் பயணித்த 12 பேரும் பலியாகியுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரைக்கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்த குறித்த விமானம், வில்லாவிசென்சியோ எனும் நகரத்தின் தென்கிழக்கே 89 கிலோ மீற்றர் தொலைவில்
 விபத்துக்குள்ளாகியுள்ளது.
இறந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் 
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கடந்த-1930 ஆம் ஆண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்டு வரும் டக்ளஸ் டி.சி-3 எனும் ரகத்தைச் சேர்ந்த மேற்படி விமானத்தில் அதிகபட்சம் 30 பேர் பயணிக்க முடியும் என்பதும் 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>இலங்கை தாதியர் 3,000 பேருக்கு அமெரிக்காவில் பணியாற்ற சந்தர்ப்பம்

அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர்
 பயணமாகியுள்ளார்.
இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தவிர மேலும் 25 தாதியர்கள் அமெரிக்கா செல்வதற்கான பயிற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளதுடன், American company, 
Michigan-based Karma Services நிறுவனத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சமீபத்தில் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 3,000 பேருக்கு இந்த வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகச்செய்திகள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இலங்கை இளைஞர் பிரான்ஸ்சில் வெட்டிக்கொலை

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தொழில் போட்டி காரணமாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கொலயுடன் யார் யார் தொடர்புபட்டுள்ளார்கள் என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து
 வருகின்றனர்.
அத்துடன், இவரது கொலையுடன் தமிழர்கள் சிலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தற்போது வரை சடலம் உறவினரக்ளிடம் கையளிக்கப்படவில்லை எனவும் பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 8 மார்ச், 2019

அமெரிக்கா இலங்கைப் பெண்ணுக்கு கொடுத்த சர்வதேச விருது

அமெரிக்க ராஜாங்க திணைக்களம் உலகம் முழுவதும் 10 பெண்களை தெரிவு செய்து வழங்கும் பெண்களை ஊக்குவிக்கும் சர்வதேச விருது இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் 07,03,2019,நேற்று இந்த விருதை வழங்கியுள்ளார். மெரினித லிவேரா என்ற இலங்கை பெண்ணுக்கே இந்த விருது
 வழங்கப்பட்டுள்ளது.
குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறார்களுக்காக பணியாற்றி வரும் லிவேரா தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.இலங்கையை
 சேர்ந்த இந்த பெண்ணுடன் பங்களாதேஷ், பர்மா, எகிப்து, ஜோர்தான், அயர்லாந்து, மொண்டினீக்ரோ, பெரு, தன்சானியா, ஜிப்போட்டா ஆகிய நாடுகளின் பெண்களும் இந்த விருதை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 7 மார்ச், 2019

சீனாவில் இரவிலும் ஒளிதர ஆயத்தமாகும் சூரியன்

இந்த ஆண்டின் இறுதிக்குள் சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் செயற்கை சூரியன் ஒளிரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரவிலும் ஒளிதரும் விதத்தில் செயற்கை சூரியனை உருவாக்கும் பணிகளில் சீனா மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பின்னர் செயற்கை சூரியனின் உருவாக்கப்பணிகள் நிறைவுபெறும் நிலையிலுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச்.எல்.2 எம் என்ற அந்த சூரியன் அணு சக்தி மூலம் உயிரூட்டப்படுகிறது. 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை இது வழங்கும் என எதிர்பார்க்கபபடுகின்றது.
இந்த செயற்கை சூரியனின் மையக்கரு எலக்டரான்கள் மற்றும் அயனிகளால் உருவாக்கப்பட்டது.
இதன் ஒளி மூலம் சூரிய சக்தி தகடுகளை சக்தி பெறச்செய்ய முடியும் என சீன அரசு செய்தி இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>புதன், 6 மார்ச், 2019

அனுமதிப்பத்திரம் இன்றி 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டிய விமானி

தென்னாப்பிரிக்காவில் பொறியலாளர்ஒருவர் விமானி என ஏமாற்றி 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர் வில்லியம் சாண்ட்லர். இவர் தென்னாப்பிரிக்க அரசுக்கு சொந்தமான சவுத்
 ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தில் விமானி ஆகப் பணிபுரிந்துள்ளார்.சம்பவத்தன்று தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு விமானம் பயணம் செய்தது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை தொடருக்கு மேல் பறந்த போது அதிர்வு ஏற்பட்டது.
அப்போது விமானத்தை வினோதமாக இயக்கிய விதம் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவரிடம் விசாரணை
 நடத்தப்பட்டது.அதில் அவர் விமானி இல்லை. அதற்கான அனுமதிபத்திரம் அவர் பெறவில்லை என தெரியவந்தது. இவர் விமானி ஆவதற்கு முன்பு இவர் விமான பொறியலாளர் பணியாற்றியுள்ளார்.
அந்த அனுபவத்தில், அவர் கடந்த 20 ஆண்டுகளாக விமானம் ஓட்டி வந்த தகவல் தெரிய வந்துள்ளது.எனவே, பணி நீக்கம் செய்யப்பட்ட அவரிடம் இருந்து இழப்பீடாக பெரும் தொகையை விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>