அமெரிக்காவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது மாணவியைக் குடிநுழைவு அதிகாரிகள் சுமார் 32 மணிநேரம் தடுத்து வைத்திருந்தனர்.அமெரிக்கக் கடவுசீட்டை கொண்டிருந்தாலும் அச்சிறுமியின் பதில்கள் சரிவர இல்லாததால் அவர் தடுத்துவைக்கப்பட்டதாக
அதிகாரிகள் கூறினர்.
தனியாகத் தடுத்து வைக்கப்பட்டதால் தான் பயந்துவிட்டதாக ஜூலியா இஸ்ஸபெல் அம்பாரோ மெதினா (Julia Isabel Amparo) கூறினார்.
Huffpost தகவல்கள்படி மெதினா, அவருடைய 14 வயது அண்ணன், இரு சிறுவர்கள் அனைவரும் மெக்சிகோவின் டியோவானா (Tijuana) நகரிலிருந்து அமெரிக்க நகரான சென் இசிடுரோவிலிருக்கும் (San Ysidro) தங்கள் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
தினமும் ஆயிரக்கணக்கானோர் பள்ளிக்கும் வேலைக்கும் டியோவானா-சென் இசிடுரோ எல்லையைக் கடப்பது வழக்கம்.
எல்லைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் வாகனத்தை ஓட்டிச்சென்ற மெதினாவின் நண்பருடைய தாயார் சிறுவர்களை நடந்து செல்லச் சொல்லியிருக்கிறார்.
வழியில், கடவுசீட்டு இருக்கும் படம் பார்க்க அவரைப் போல இல்லாததால் மெதினா தடுத்துவைக்கப்பட்டார்.
மெதினாவின் அண்ணனும் தடுத்து வைக்கப்பட்டார். அவர் ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் முதலில் குற்றஞ்சாட்டியதாகக்
கூறப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக